"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

நடந்தது, கேட்டதில் உண்மை...

நடந்தது, கேட்டதில் உண்மை...




மணற்கேணி 2009 சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி


டிரிங் டிரிங் டிரிங்....... அலைபேசியின் ஓசை ஒலிக்கின்றது..

நான்: "ஹெலோ சொல்லரசன் நான் ஞானசேகரன் பேசுரேன்ங்க"

சொல்லரசன்: "யாரு சாமானியன் ஞானசேகரனா? வணக்கம் ஞானசேகரன் எப்படி இருக்கிங்க? சிங்கபூர் வாழ்க்கை எப்படி போகுது?"

நான்: "ம்ம்ம் நல்லா இருக்கேன் சொல்லரசன் என்ன பதிவு பக்கம் ஆளே காணாம்..? சமிபத்தில் சாதியை பற்றி நல்லாவே எழுதியிருந்தீங்க சொல்லரசன். பாரதி பாட்டை மாற்றில்லவா எழுதியிருந்தீங்க ஞாயமான ஆதங்கம்தான் நண்பா. "

சொல்லரசன்: "ஆமங்க எல்லாம் என் பையனை பள்ளியில சேர்க்கும்போது ஏற்பட்ட மன உழச்சல்தான்ங்க."

நான்: "எங்க போனாரு ஆதவா ஏன் பதிவை தொடராம வச்சு இருக்காரு? நான் கேட்டேனு சொல்லுங்க நண்பா. "

சொல்லரன்: "ஆதவா ஒரே குழப்பத்தில் இருக்காராம், அதுதான் கொஞ்ச நாள் பதிவை நிறுத்தி வச்சுயிருக்கார். அப்பறம் தேவன் சார் மற்றும் கார்த்திகைப் பண்டியனை பார்த்தேன் நண்பா, நாங்க எல்லாம் சிங்கபூர் வரலாமுனு இருக்கோம். நீங்களேல்லாம் உதவியா இருக்கமாட்டீங்களா? நீங்க,. கோவி கண்ணன் எல்லாம் இருக்காங்க அதுதான் ஒரு திட்டம் இருக்கு என்ன சொல்லுரீங்க ஞானசேகரன்"

நான்: "ஓ தாராளமா வாங்க நண்பா, நாங்க இருக்கோம். நாங்களே இல்லாடியும் சிங்கபூர் சுற்றிப்பார்க்க எந்த வித குழப்பங்கள் வராது நண்பா. அந்த அளவிற்கு MRT (Mass Rapid Transit ) சிஸ்டம் வச்சுயிருக்காங்க. அதனால தாரளமா வாங்க நாங்க இருக்கின்றோம். "

சொல்லரசன்: "அப்படிங்களா! இங்க சென்னை
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் (Channai Mass Rapid Transit System, MRTS) இன்னும் திட்டத்திலேயே இருக்கு, அதலெல்லாம் பார்க்க எத்தனை நாட்கள் ஆகுமோ.."

நான்: " அதல்லாம் காலத்தின் கட்டாயம் கூடிய விரைவில வந்துவிடும் நண்பா. இங்குள்ள MRT பற்றி ஒரு MMS அனுப்புறேன் பாருங்களே"



சொல்லரசன்: " வாவ்வ்வ் நல்லா அழகா இருக்கே இப்பவே வரவேண்டும் போல இருக்கே நண்பர் வாசு கூட சிங்கபூர் வரனும் சொன்னாரு, அப்பறம் நையாண்டி நைனா, சக்கரை சுரேஷ் , ராம், தம்பிஅன்பு, அன்புமணி எல்லாருகிட்டையும் கேட்கனும் நண்பா"

நான்: "ஆமா ஆமா நண்பர் உழவன், ரம்யா அக்கா, தமிழரசி,சக்தி, நண்பர் சுரேஷ் குமார் இப்படி எல்லோரும் வந்தா நல்லாதான் இருக்கும் சொல்லரசன். அப்பறம்
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி நடக்குதே கலந்துகிட்டு வெற்றி பெறும் மூன்று பேருக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்.. நீங்களும் கலந்து கொள்ளுங்க நண்பா, தமிழ் மேல் ஆர்வமுள்ள அணைவரும் கலந்துகொள்ளலாம். "

சொல்லரசன்: "ஓ ஆமா நானும் பார்த்தேன் இதெல்லாம் ஒரு அரசியலுனு நினைக்கின்றேன் ஞானசேகரன்"

நான்: "நண்பா அப்படியெல்லாம் இல்லங்க பதிவர்களின் ஒரு சவாலாக எடுத்து செய்கின்றோம். பொது ஊடகங்களுக்கு பதிவர்களின் படைப்புகள் கொண்டு செல்லவேண்டும் என்ற முதல் முயற்சி தான் நண்பா. இத பத்தி நானும் என் பதிவில் எழுதி இருக்கேன் பாருங்க(
வென்றிடுவீர் எட்டு திக்கும்!.... ) நீங்களெல்லாம் கலந்துகொள்ளதான் வேண்டும். நமது நண்பர்களிடமும் எடுத்து சொல்லுங்க நண்பா. போட்டியை பற்றி முழு விவரங்களை மணற்கேணி 2009 ல் பாருங்க நண்பா..."

Manarkeni 2009


சொல்லரசன்:" நீங்க இவ்வளவு அழகா சொன்னபிறகு கலந்துகொள்ளாம இருந்துடுவோமா? இதோ அதற்கான செய்திகளை சேகரிக்க போகின்றேன் நண்பா"

நான்: "ரொம்ப மகிழ்ச்சி சொல்லரசன் சிங்கபூரில் சந்திக்கலாம் அலைபேசி பில்லு எகிர்ருது நான் கட் பன்னிகிறேன் நண்பா......"

சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்

36 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன்

சோதனை ஓட்டம்

கோவி.கண்ணன்

அருமையாக சொல்லி இருக்கிங்க.

நமக்குத்தான் கலந்து கொள்ள முடியாதபடி விதி அமைச்சு சதி செய்துட்டாங்க.

:)

ஜெகதீசன்

சோதனை ஓட்டம் 2

ச.பிரேம்குமார்

//அப்படிங்களா! இங்க சென்னை சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் (Channai Mass Rapid Transit System, MRTS) இன்னும் திட்டத்திலேயே இருக்கு, அதலெல்லாம் பார்க்க எத்தனை நாட்கள் ஆகுமோ.."
//
எத்தனை வருசத்துக்கு முந்திய பதிவு இது? சென்னையில் MRTS ஆரம்பிச்சு பல வருசம் ஆச்சுங்களே :)

ச.பிரேம்குமார்
This comment has been removed by the author.
ஜோசப் பால்ராஜ்

கோவியார் ரொம்ப ஃபீலிங் ஆவுறாரு.
வெற்றி பெற்று சிங்கை வர்றவங்களோட சேர்த்து இவருக்கும் ஒருவாரம் சிங்கை சுற்றுலா செல்ல அனுமதி குடுத்துருவோம். அவங்களுக்கும் ஊரச் சுத்திக்காட்ட நல்ல விவரம் தெரிஞ்ச ஒரு ஆளு கூட இருந்தமாதிரி இருக்கும். அதுவுமில்லாம இவரு எங்க போனாலும் புகைப்பட கருவியோடத்தான் போவாரு. அதுனால எல்லாருக்கும் புகைப்படம் எடுக்கிற வேலையும் மிச்சமாயிரும்ல.

சிறந்தப் பதிவு. வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி

உரையாடல் அமைத்து விசயத்தை விளக்கியிருப்பது அருமையாக உள்ளது நண்பா.எல்லாரும் முயற்சி செய்யுங்க. வெற்றிபெற வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி

உரையாடல் அமைத்து விசயத்தை விளக்கியிருப்பது அருமையாக உள்ளது நண்பா.எல்லாரும் முயற்சி செய்யுங்க. வெற்றிபெற வாழ்த்துகள்.

Suresh Kumar

அருமையாக சொல்லியிருக்கீங்க நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பதிவர்கள் கலந்து கொள்வார்கள் .

சொல்லரசன்

இந்த MRTS பற்றி நான் பேசவேயில்லையே,
நையான்டி குரூப்பில் நீங்களும்
சேர்ந்துவிட்டீர்களா?
நடத்துங்க நடத்துங்க........


உங்க‌ சிங்க‌ப்பூர் குழ‌ம‌த்திற்கு வாழ்த்துக‌ள்,அனைவ‌ரும் க‌ல‌ந்துகொள்வார்க‌ள்.

ஆ.ஞானசேகரன்

நன்றி கோவி.கண்ணன்..
நன்றி ஜெகதீசன்..

ஆ.ஞானசேகரன்

// ச.பிரேம்குமார் said...

//அப்படிங்களா! இங்க சென்னை சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் (Channai Mass Rapid Transit System, MRTS) இன்னும் திட்டத்திலேயே இருக்கு, அதலெல்லாம் பார்க்க எத்தனை நாட்கள் ஆகுமோ.."
//
எத்தனை வருசத்துக்கு முந்திய பதிவு இது? சென்னையில் MRTS ஆரம்பிச்சு பல வருசம் ஆச்சுங்களே :)//

வணக்கம் ச.பிரேம்குமார்... என்னங்க ரொம்பநாளா காணோம்...
கண்டிப்ப போட்டியில் கலந்துகங்க நண்பா ம்ம்ம்ம்ம்... நண்பர் ஆ.முத்துராமலிங்கம் அவர்களிடமும் சொல்லிருங்க அவரையும் ஆள பார்க்கல...
நண்பா சிங்கபூர் மாதிரி பறக்கும் பாலம் MRT சிஸ்டம் திட்டதில் உள்ளதாக படித்தேன் அதுதான்.. சிறிய சொற்பிழைக்கு மன்னிக்களாம்.. இது ஒரு நையாண்டி செய்தி பதிவு நன்றி நண்பா......

ஆ.ஞானசேகரன்

// ஜோசப் பால்ராஜ் said...

கோவியார் ரொம்ப ஃபீலிங் ஆவுறாரு.
வெற்றி பெற்று சிங்கை வர்றவங்களோட சேர்த்து இவருக்கும் ஒருவாரம் சிங்கை சுற்றுலா செல்ல அனுமதி குடுத்துருவோம். அவங்களுக்கும் ஊரச் சுத்திக்காட்ட நல்ல விவரம் தெரிஞ்ச ஒரு ஆளு கூட இருந்தமாதிரி இருக்கும். அதுவுமில்லாம இவரு எங்க போனாலும் புகைப்பட கருவியோடத்தான் போவாரு. அதுனால எல்லாருக்கும் புகைப்படம் எடுக்கிற வேலையும் மிச்சமாயிரும்ல.

சிறந்தப் பதிவு. வாழ்த்துக்கள்.//

கோவி கண்ணனுக்க சிறப்பு சலுகையோட சுற்றுலா அனுமதி.....

நன்றி ஜோசப் பால்ராஜ்

ஆ.ஞானசேகரன்

// குடந்தை அன்புமணி said...

உரையாடல் அமைத்து விசயத்தை விளக்கியிருப்பது அருமையாக உள்ளது நண்பா.எல்லாரும் முயற்சி செய்யுங்க. வெற்றிபெற வாழ்த்துகள்.//

நன்றி நண்பா.. உங்களை சிங்கபூரில் சந்திக்கின்றேன்..

ஆ.ஞானசேகரன்

// Suresh Kumar said...

அருமையாக சொல்லியிருக்கீங்க நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பதிவர்கள் கலந்து கொள்வார்கள் .//

நன்றி சுரேஷ் குமார்.. உங்களை சிங்கபூரில் சந்திக்கின்றேன்..

ஆ.ஞானசேகரன்

//சொல்லரசன் said...
இந்த MRTS பற்றி நான் பேசவேயில்லையே,
நையான்டி குரூப்பில் நீங்களும்
சேர்ந்துவிட்டீர்களா?
நடத்துங்க நடத்துங்க........


உங்க‌ சிங்க‌ப்பூர் குழ‌ம‌த்திற்கு வாழ்த்துக‌ள்,அனைவ‌ரும் க‌ல‌ந்துகொள்வார்க‌ள்.//


வணக்கம் சொல்லரசன்... இன்றைய பதிவுக்கு நீங்கள்தான் கிடைத்தீர்கள்.... நன்றி நண்பரே
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன்

விரைகணை போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.... அடுத்து மணற்கேணி 2009 ல் வெற்றிபெற சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாக வாழ்த்துகள்

வெற்றி-[க்]-கதிரவன்

//கோவி.கண்ணன் said...
அருமையாக சொல்லி இருக்கிங்க.

நமக்குத்தான் கலந்து கொள்ள முடியாதபடி விதி அமைச்சு சதி செய்துட்டாங்க.
//

ரிப்பீட்டு

நையாண்டி நைனா

அண்ணே படா... படா... பதிவர்கல்லாம் பங்கு பெறுகிறார்கள்.. வாழ்த்துக்கள்.

ரவி

கலக்குங்க..............

ச.பிரேம்குமார்

வேலைப்பளுவும் சோம்பேறித்தனமும் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு தலைவரே. விரைவில் மீண்டும் களத்தில் குதிக்கலாம்.

மன்னிப்பா? ஏன் இந்த கொலவெறி ?!!! நீங்கள் சென்னை மெட்ரோ ரயிலை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது வர சில காலம் பிடிக்கும் என்பது நெசம் தான்


சிங்கை பதிவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். தூள் கெளப்புங்க :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி

நல்லா இருக்கு ஞானம் பதிவு!

காணொளியும் அருமை!

ஆ.ஞானசேகரன்

//பித்தன் said...
//கோவி.கண்ணன் said...
அருமையாக சொல்லி இருக்கிங்க.

நமக்குத்தான் கலந்து கொள்ள முடியாதபடி விதி அமைச்சு சதி செய்துட்டாங்க.
//

ரிப்பீட்டு//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன்

//நையாண்டி நைனா said...
அண்ணே படா... படா... பதிவர்கல்லாம் பங்கு பெறுகிறார்கள்.. வாழ்த்துக்கள்.//

நன்றி நைனா... கட்டுரை தயாராயிட்டதா?

ஆ.ஞானசேகரன்

// செந்தழல் ரவி said...
கலக்குங்க..............//

நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன்

//ச.பிரேம்குமார் said...
வேலைப்பளுவும் சோம்பேறித்தனமும் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு தலைவரே. விரைவில் மீண்டும் களத்தில் குதிக்கலாம்.

மன்னிப்பா? ஏன் இந்த கொலவெறி ?!!! நீங்கள் சென்னை மெட்ரோ ரயிலை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது வர சில காலம் பிடிக்கும் என்பது நெசம் தான்


சிங்கை பதிவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். தூள் கெளப்புங்க :-)//


இருக்கட்டும் நண்பா,... அப்பறம் கட்டுரைக்கு ஏற்பாடு பன்னுங்கோ

ஆ.ஞானசேகரன்

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்லா இருக்கு ஞானம் பதிவு!

காணொளியும் அருமை//


நன்றிங்க ஜோதிபாரதி

குறை ஒன்றும் இல்லை !!!

present Sir..

"உழவன்" "Uzhavan"

இன்னமும் அலைபேசியில டிரிங் டிரிங்.. ரிங் டோன் தான் வச்சிக்கிட்டு இருக்கீங்களா? :-)
நல்ல நகைச்சுவையான உரையாடல் மூலம் போட்டிக்கான தகவல்களைத் தந்துள்ளீர்கள். அதுல என்னய வேற அழைத்துள்ளீர்கள். மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன்

// குறை ஒன்றும் இல்லை !!! said...

present Sir..//

வணக்கம் நண்பா,
மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன்

//" உழவன் " " Uzhavan " said...

இன்னமும் அலைபேசியில டிரிங் டிரிங்.. ரிங் டோன் தான் வச்சிக்கிட்டு இருக்கீங்களா? :-)
நல்ல நகைச்சுவையான உரையாடல் மூலம் போட்டிக்கான தகவல்களைத் தந்துள்ளீர்கள். அதுல என்னய வேற அழைத்துள்ளீர்கள். மகிழ்ச்சி//

வாங்க நண்பா,...
பழச மறக்க வேண்டாமுனு அந்த டிரிங்... போட்டிக்கு தயாராயிட்டீங்கா நண்பா.. வாங்க சிங்கபூரில் சந்திக்கலாம்... மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன்

மணற்கேணிக்காக அலைபேசியில் அழைத்து வாழ்த்துகளும்.. தாங்கள் கண்டிப்பாக கலந்துக்கொள்கின்றோம் என்று சொல்லி மகிழ்வூட்டிய நண்பர்கள் பொன்.வாசுதேவன் மற்றும் சுரேஷ் குமார் அவர்களுக்கு சிங்கை தமிழ் பதிவர்கள் குழு சார்பாகவும்,தமிழ்வெளி சார்பாகவும் நன்றி நன்றி

நேசமித்ரன்

நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்
பதிந்திருக்கும் விதமும் அழகு..!

ஆ.ஞானசேகரன்

//நேசமித்ரன்

நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்
பதிந்திருக்கும் விதமும் அழகு..!//

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே... போட்டிக்கு தயாராக இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

நட்புடன் ஜமால்

இரசிக்கும்படியாக சொல்லியிருக்கீங்க

:)

ஆ.ஞானசேகரன்

//நட்புடன் ஜமால்

இரசிக்கும்படியாக சொல்லியிருக்கீங்க

:)//

நன்றி நண்பா..

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP