"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

1. முத்தம்
2. கிஸ்
3. பர்ஸ் / பை

இதற்கான விடையை நாம் கடைசியில் பார்க்கலாம்... ஹலோ எக்சூச்மி பதிவை ஸ்க்ரோளை பிடித்து இழுத்து கீழே போவதற்கு முன் கொஞ்சம் பதிவையும் படியுங்க...






சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம் தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய வானூர்திகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், டூரிஸ்ட் விசா எனப்படும் விசிட் விசா, இது தொடர்பான நடைமுறை விதிகள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர் டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சென்னை 2 சிங்கப்பூர்...

நண்பர்கள் வெளிநாடு செல்லும் பொது ஸ்வெட்டர் எல்லாம் தாங்காது Thermal wear அப்போதே 5000 ரூபாய் கொடுத்து வாங்கியதை பார்த்து ஆனைக்கு அர்ரம்னா பூனைக்கு புர்ரம் அப்படிங்கற மாதிரி மேலாளரிடம் போய் முதன்முதலில் சிங்கப்பூர் அலுவலகவேலையாக வரும் முன் எங்கள் அலுவலக மேலாளரிடம் போய் ஸ்வெட்டர், Thermal wear லாம் எத்தனை வாங்க வேண்டுமென்றேன், ஏற இறங்க பார்த்தார்.

சிங்கப்பூர் சென்னை கிளைமேட் என்றார் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், அடடே நூடுல்ஸ்ன்னவுடனே ஞாபகம் வருது, சிங்கப்பூர்ல விதம் விதமா நூடுல்ஸ் சாப்பிடலாம், ம் நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இங்கே வந்து அதே மாதிரி நூடுல்ஸ் என்று நினைத்தால் அவ்ளோதான்...


நூடுல்ஸ் பத்தி பேசிக்கிட்டே பாருங்க மீனம்பாக்கம் கெளம்ப லேட்டாயிரும், வானூர்தி கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்னாலேயே வானூர்தி நிலையத்தில் இருப்பது நல்லது. மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையத்திலேயே உணவுகிடைக்கும், நிலையத்தின் உள்ளே அடையாறு ஆனந்தபவன் இனிப்பகம் இருக்கு, புத்தகக்கடை இருக்கு ஆனால் எல்லாம் கொள்ளை விலை.

ஹலோ ஹலோ என்ன பாக்கெட்ல, சிகரெட் பாக்கெட்டா?, பேக்கிங்கில எதுவும் சிகரெட் பாக்கெட்டுங்க இருக்கா? ப்ளீஸ் தயவு செய்து எடுத்து வெளியில போட்டுறுங்க, சென்னை 2 சிங்கப்பூர் வானூர்தியில் புகைப்பிடிக்க அனுமதியில்லை, மேலும் சிங்கப்பூரில் வெளியூரிலிருந்து எடுத்து வரும் சிகரெட்டுகளுக்கு அனுமதியில்லை, அதற்கு முறையாக சுங்கவரி கட்டி தான் பயன்படுத்த வேண்டும், அப்படியே ஏமாற்றி கொண்டு வந்தாலும் சிங்கப்பூரின் உள்ளே விற்பனையாகும் அத்தனை சிகரெட்டுகளிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் SDPC என்று அச்சாகியிருக்கும், அப்படியில்லாத சிகரெட்டுகளை புகைப்பதும் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் குற்றம்.

உங்கள் பைகளை சோதனை முடித்து போட்டுவிட்டு கையில் வைத்திருக்க விரும்பும் பையை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பயணச்சீட்டை தந்து போர்டிங் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே ஒரு விண்ணப்ப படிவம் தருவார்கள் அதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..

தெரியாத யாராவது எதையாவது கொடுத்து சிங்கப்பூரில் இதை கொடுத்துடுங்க உங்களுக்கு காசு தரேன், அல்லது ரொம்ப பாவமாக உங்களுக்கு பேக்கேஜ் வெயிட் கம்மியா தானே இருக்கு என் பேக்கேஜை உங்களுடையதில் போட்டுக்கொள்ளுங்க பைசா தரேன் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுங்கள்...

நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...

சிங்கப்பூரில் போதைபொருள் கடத்தலுக்கு மரணதண்டனை, வாய்தா, அப்புறம் வாய்தாவுக்கு வாய்தா முன் ஜாமீன் பின் ஜாமீன் என்றெல்லாம் கிடையாது, போதைப்பொருள் கடத்தினால் விரைவாக கேசை 'முடித்து' விடுவார்கள்... எனவே மிகுந்த எச்சரிக்கை.

ஹலோ அங்கே என்ன பாக்குறிங்க "மெய்புல அறைகூவலர்"னு எழுதியிருப்பதா ஹா ஹா physically chllange என்பதைத்தான் தமிழ்'படுத்தி' இருக்கிறாங்க...

திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...

ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும், நாலு பேர் வந்து நம்ம போற வண்டியில திடீர்னு காத்து பத்தலைன்னா ஆக்சிஜன் மூடியை மூஞ்சில வச்சிக்கிங்க, கடலுக்குள்ள விழபோச்சின்னா இப்புடி தான் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கனும் அதுல இப்படித்தான் காத்து ஊதனும்னு பயமுறுத்துவாங்க...

ஒரு வெள்ளை அட்டை கொடுப்பாங்க, அதை நிரப்பிடுங்க, முக்கியமா எங்க தங்கப்போறிங்க அப்படிங்கறதை நிரப்பிடுங்க, இந்த வெள்ளை அட்டை முக்கியம் திரும்ப சிங்கப்பூரை விட்டு கிளம்பும்போது இந்த வெள்ளை அட்டையை கேட்பாங்க, அப்புறம் வண்டி கிளம்பிய பிறகு கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்துலயே சிங்கப்பூர் வந்துரும்... கொஞ்சம் கண் அசருங்க..

ஓகே சிங்கப்பூர் வந்தாச்சி, நம்ம ரிட்டர்ன் டிக்கெட், வெள்ளை அட்டை, பாஸ்போர்ட் கொடுத்தால் அங்கிருக்கும் அலுவலர் நமக்கு எத்தனை நாள் தங்கலாமென அனுமதி தருவார், அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே விசிட் பாஸ்ல் தங்க இயலும், அவர்கள் கொடுத்திருக்கும் நாட்களை நாம் Immigiration checkpoint Authority என்ற துறையில் நம் தங்கும் அனுமதி நாட்களை நீட்டிக்கொள்ளலாம், நம்ம பேக்கேஜை எடுத்துவிட்டு வாருங்கள் சிங்கப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது, இன்னும் ஏழு நாள்... பல இடங்கள் சிங்கப்பூரில் சுற்றி பார்க்கலாம்... காத்திருங்கள்...

சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்.. சுற்றுலாவோடு தமிழும் தமிழர்களையும் தமிழறிஞர்களையும் சந்திக்கலாம்... போட்டி தொடர்பான விபரங்கள் இங்கே

38 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால்

நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...
\\


நல்லா சூடு வைக்கிறாங்கப்பா மேட்டருக்கு

---------------------------


நல்ல தகவல்கள்.

ஜெகதீசன்

:))
நல்ல தகவல்கள்.

கோவி.கண்ணன்

//ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும்//

இந்திய விமானங்களின் பகல் பயணங்களில் சரக்கு கொடுப்பதில்லை. இரவு நேரப் பயணம் ஹாட்டு, மைல்டு என சிறப்பாக இருக்கும்.

Mahesh

கலக்கிட்டீங்க குழலி !!!

நம்ம போட்டியைப் பத்தி கவர்ச்சியான விளம்பரம்...

குசும்பன்

//சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்//

நெக்ஸ்ட் அங்க மீட் பண்ணுறோம்!

Mahesh

ஆமா... முத்தம், கிஸ் ரெண்டும் வேறயா? :))))))))

கோவி.கண்ணன்

//திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...//

அதென்னவோ சரிதான். யானை பொம்மைகள் கூட உண்மையான யானை விலைக்கு விற்பாங்க.

அப்பாவி முரு

நல்ல விசயம் தான்.

கோவி.கண்ணன்

//Mahesh said...
ஆமா... முத்தம், கிஸ் ரெண்டும் வேறயா? :))))))))
//

அண்ணே, அழுதிக் கொடுத்தால் முத்தம். வெள்ளைக் காரர்களின் கிஸ்ஸு மொத்தமாகக் கொடுப்பது (முத்தத்தைதான் சொல்கிறேன்)

அப்பாவி முரு

// Mahesh said...
ஆமா... முத்தம், கிஸ் ரெண்டும் வேறயா? :))))))))//

கேக்குறாங்கையா டீடைலு...

(விளக்கம் வேண்டுவோர், வசூலராஜா படத்தில் வரும், பத்துக்குள்ள பாடலைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளவும்)

கோவி.கண்ணன்

SDPC - Singapore Duty Paid Cigret.

சிங்கப்பூர் அரசுக்கு வரிச் சுரங்கம்.

4 பாக்கெட் சிகெரெட் ( 80 புகைக் குச்சிகள்) = 1 கிராம் தங்கத்தின் விலை.

கோவி.கண்ணன்

//கேக்குறாங்கையா டீடைலு...

(விளக்கம் வேண்டுவோர், வசூலராஜா படத்தில் வரும், பத்துக்குள்ள பாடலைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளவும்)//

முத்தமா கொடு மொத்தமா கொடு - ரஜினி பாட்டு நினைவு வரலையா ?

குழலி / Kuzhali

//Mahesh said...
ஆமா... முத்தம், கிஸ் ரெண்டும் வேறயா? :))))))))
//
அட நானும் இப்படித்தான் ஒரு மூத்தவர் கிட்ட அப்பாவியா கேட்டேன் அவர் சொல்றாரா டேய் சின்ன பையா முத்தம், கிஸ் மட்டுமில்ல ஒரு ஒரு முத்தமும் ஒரு ஒரு கிஸ்ஸூம் ஒரு ஒரு இடத்துக்கும் ஒரு ஒரு ஆளுக்கும் வேற வேறங்கறார்...

உங்களுக்கு எதுவும் புரிஞ்சதா?

அறிவிலி

நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க..

ஹ்ம்ம்... நானும் 8 தடவ வந்திருக்கேன்.....

Suresh Kumar

நல்ல தகவல் எல்லாத்துக்குமே நயன் தாரா தான் வேணும் போல இருக்கே

முகவை மைந்தன்

கலக்கலான இடுகை. சிறப்பான தகவல்களுடன். அருமை. (ஓட்டுப் போட்டுட்டேன்!!)

ஜோசப் பால்ராஜ்

கலக்கிட்டிங்க போங்க.
சென்னையில சும்மா போயிக்கிட்டு இருக்கவங்கள கூட அப்டியே அள்ளி மீனம்பாக்கத்துல தள்ளி இங்க கொண்டுவந்து இறக்குன மாதிரி இருக்கு.
நான் முதல் முறை சிங்கை வரும் முன்பு என் அண்ணண் என்ன என்ன விவரம் சொன்னாரோ அம்புட்டும் இருக்கு.

உண்மைத்தமிழன்

எனக்கு மூணு வேளையும் தயிர் சாதம்தான் வேணும்.. தொட்டுக்க ஊறுகாய் போதும்..!

ரெடி பண்ணி வைச்சுக்குங்க..

வர்றேன்..!

Sanjai Gandhi

//சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்//

சிங்கப்பூர் பதிவர்கள் ஜெயிச்சாலும் இப்டி தான் வரனுமா தல? :))

வெளிநாட்டு பதிவர்களா இருந்தாலும் சென்னைல இருந்து தான் சிங்கையா?
அப்போ குசும்பன் ஜெயிச்சா எனக்கு தான் சான்ஸா? :))

Unknown

புதுசா சிங்கப்பூர் போறவங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை ரொம்ப எளிமையா சொல்லி இருக்கிங்க குழலி (உங்க பதிவிலே உங்க எழுத்துகள் படிச்சிட்டு இதைப் படிக்கிறப்போ யாரோ மண்டபத்திலே எழுதிக்கொடுத்தது மாதிரி இருக்கு).

சிகரெட், நயன்தாரா மேட்டர் சூப்பர். Airindia Expressல் வந்தால் புளிசாதம் தான் கிடைக்கும்ங்கிறத மறக்காமச் சொல்லிடுங்க ;-).

Sanjai Gandhi

/(உங்க பதிவிலே உங்க எழுத்துகள் படிச்சிட்டு இதைப் படிக்கிறப்போ யாரோ மண்டபத்திலே எழுதிக்கொடுத்தது மாதிரி இருக்கு//

ஆமாங்க.. எனக்கும் இந்த பதிவை படிக்கும் போது இதான் தோனுச்சி..

“ பாரேன்.. இந்த புள்ளைக்குள்ளயும் என்னவோ இருக்கு “

நாமக்கல் சிபி

தலைப்புக்காக அட்டெண்டன்ஸ்!

வெற்றி-[க்]-கதிரவன்

//என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...
//

100% True -:)

அத்திவெட்டி ஜோதிபாரதி

நல்ல இடுகை, பல பயனுள்ள தகவல்களுடன்...

மேல உள்ள அயிட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு...

தொடர்ந்து போடுங்க...

அத்திவெட்டி ஜோதிபாரதி

கோவி.கண்ணன் said...
SDPC - Singapore Duty Paid Cigret.

சிங்கப்பூர் அரசுக்கு வரிச் சுரங்கம்.

4 பாக்கெட் சிகெரெட் ( 80 புகைக் குச்சிகள்) = 1 கிராம் தங்கத்தின் விலை.//

சுங்க வரிங்ளா...
சுரங்க வரிங்ளா...
சிங்கை வரிங்ளா...

குழலி / Kuzhali

//(உங்க பதிவிலே உங்க எழுத்துகள் படிச்சிட்டு இதைப் படிக்கிறப்போ யாரோ மண்டபத்திலே எழுதிக்கொடுத்தது மாதிரி இருக்கு).//

ஆகா எத்தினி பேரு இப்புடி?

குழலி / Kuzhali

//ICQ said...
/(உங்க பதிவிலே உங்க எழுத்துகள் படிச்சிட்டு இதைப் படிக்கிறப்போ யாரோ மண்டபத்திலே எழுதிக்கொடுத்தது மாதிரி இருக்கு//

ஆமாங்க.. எனக்கும் இந்த பதிவை படிக்கும் போது இதான் தோனுச்சி..

“ பாரேன்.. இந்த புள்ளைக்குள்ளயும்
//
யோவ் யாருய்யா அந்த ICQன்னு பார்த்தேன், நீர் தானா அது, பேரை நோண்டிக்கிட்டே இருப்பிங்களா?

நாமக்கல் சிபி

//4 பாக்கெட் சிகெரெட் ( 80 புகைக் குச்சிகள்) = 1 கிராம் தங்கத்தின் விலை.//

இதென்ன சுங்க வரியா அல்லது சுரண்ட வரியா?

Balaji-Paari

அன்பின் குழலி,
ICQ-வை வழிமொழிகின்றேன்.
அடிக்க வராதீங்க....:) :)

குழலி / Kuzhali

//
மேல உள்ள அயிட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு...
//
வெளிச்ச பதிவரே நீங்க எதை சொல்றீங்க?

Anonymous

நல்லா கும்முறாய்ங்கப்பா கும்மிய...
கும்மியடி பெண்ணே கும்மியடி...

குயிலி இப்டிலாம் எழுதுமா?

Mahesh

//அறிவிலி
நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க..

ஹ்ம்ம்... நானும் 8 தடவ வந்திருக்கேன்.....
July 13, 2009 11:11 PM//

ஆசையைப் பாரு :) (ஹ்ம்ம்ம்... நானும் 80 தடவை வந்திருக்கேன்)

சிங். செயகுமார்.

சிங்கப்பூருக்கு ஓர் சிறப்பான வரவேற்பு

கலக்கிட்டீங்க குழலி !!!

Ungalranga

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்!!!!

கலக்கிட்டீங்க.. மேலும் சொல்லுங்க. நன்றி.

தமிழன்-கறுப்பி...

\\
ICQ
/(உங்க பதிவிலே உங்க எழுத்துகள் படிச்சிட்டு இதைப் படிக்கிறப்போ யாரோ மண்டபத்திலே எழுதிக்கொடுத்தது மாதிரி இருக்கு//

ஆமாங்க.. எனக்கும் இந்த பதிவை படிக்கும் போது இதான் தோனுச்சி..

“ பாரேன்.. இந்த புள்ளைக்குள்ளயும் என்னவோ இருக்கு “
\\

ரிப்பீட்டு.. :)

நல்ல தகவல்கள்..!

priyamudanprabu

நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது
///

இது நல்லயிருக்க்கு

Citiinc

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Citiinc

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP