"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மான் கறி சுவைக்க விருப்பமா ?

"இந்தியாவில், தமிழ்நாட்டில், ப்ளூ க்ராஸ் ஆளுங்களிடம் சென்று 'நான் மான் கறி தின்றேன்' என்று உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா ?"

"ஏன் இந்த கொல வெறி ? ஒரு இந்தி நடிகர் மானை சுட்டுவிட்டு, ஒரு ஆண்டு களி திண்ண மாதிரி என்னையும் திங்க வைக்க சதித் திட்டமா ?" ன்னு முந்திக் கொண்டு கேட்காதிங்க.

சிங்கையில் மான் கறி கிடைக்கும், முஸ்தபா பேர் அங்காடியில் மான் கறி விற்கிறார்கள். நம்ம முகவை இராம் குமாரிடம் கேட்டால் அதன் சுவையைச் சொல்லுவார். ஒரு கிலோ மான் கறி சிங்கை வெள்ளி 22 முதல் 30 வெள்ளி வரை விற்குது. நம் இந்திய ரூபாய்க்கு 700ரூபாய் இருக்கும்.



"ஆஹா...! விமானப் பயணச் சீட்டு எடுக்கக் கிளம்பிட்டிங்களா ? கைக் காசை செலவு செய்ய வேண்டாம். நாங்கள் அன்போடு உங்களுக்கு பயணச் சீட்டும் சிங்கையில் ஒருவாரம் தங்கும் இடமும் ஏற்பாடு செய்கிறோம். "


"எதுக்கு அதையெல்லாம் நீங்கள் செய்யனும் ? போன ஜென்மத்து பந்தமா ?"

"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன், அப்படி இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு நாங்கள் சிங்கை சென்று திரும்பும் பயணச் சீட்டும் ஒருவார தங்குமிடம், சிங்கையின் சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும்"

"சிங்கைப் பதிவர்களும் - தமிழ் வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கருத்தாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இருக்கும் மூன்று பிரிவுகளின் வரும் 29 தலைப்புகளில் ஒன்றைப் பற்றி போட்டி வழிகாட்டுதல் படி கட்டுரையை எழுதி அனுப்புங்க"

உங்கள் கட்டுரை சிறப்பானதாக தேர்ந்தெடுக்கப் பட்டால், சிங்கைக்கு வந்து மான் கறி சாப்பிடலாம்"

"மான் கறி கிடைக்கும்னு சொல்றிங்க .......சரி, யார் சமைத்துத் தருவது ?"

"அதுகெல்லாம் ஆளுங்க இருக்காங்க... மான் கறி 65 அறிவிப்புடன் உணவகங்களே இருக்கு கவலைப் படாதிங்க...... அதுமட்டுமா ? ஆமை, முதலைக் கறி கூட கிடைக்கும்.....ஹலோ ஓடாதிங்க.....அப்படியெல்லாம் உங்களை சோதிக்க மாட்டோம்"

***

"அவர் ஓடியதை விடுங்க எனக்கு சொல்லுங்க....நான் உயிர்களிடத்து அன்பு செலுத்தும் ஜீவ காருண்யம் போற்றுபவன்...போட்டியில் கலந்து வெற்றிபெற்றால் நானும் மான்கறி திங்க வேண்டும் என்று வற்புறுத்துவிங்களா ?"

"உங்களை வற்புறுத்த மாட்டோம், உங்க பங்கை சிங்கைப் பதிவர்களே பகிர்ந்து கொள்வாங்க, உங்களுக்காக அறுசுவை சைவ உணவுகளுக்கு கோமளவிலாஸ், ஆனந்தபவன், நம்ம இராஜகோபால் அண்ணாச்சியின் சரவண பவன், முருகன் இட்லி, பெங்களூர் சாகர் இன்னும் பலப் பல சைவ உணவகங்கள் இருக்கிறது."

"நான் கூட சைவம் தாங்க,......நம்புங்க...."

***

"இப்ப சொல்லுங்க... சிங்கை வந்துவிட்டு சென்ற பிறகு இந்தியாவில், தமிழ்நாட்டில், ப்ளூ க்ராஸ் ஆளுங்களிடம் சென்று 'நான் மான் கறி தின்றேன்' என்று உங்களால் தைரியமாக சொல்ல முடியும் தானே ?"


மணற்கேணி - 2009 தொடர்பில்
அன்புடன்
கோவியார் (எ) கோவி.கண்ணன்

35 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali

மான் கறியை நன்கு கழுவிய பின்னர் தயிரில் அரை மணி நேரமாவது ஊறவைக்து பின்னர் சமைக்க வேண்டும்.அப்போது தான் சுவையும், மணமும் திடமாக இருக்கும்.

இந்த டிப்ஸ் கொடுத்தவர் யூசுப் பால்ராஜ்

குழலி / Kuzhali

ஹலோ எக்சூஸ்மி பாம்பு கறி கிடைக்குமா?

Anonymous

I have seen this & the same nite i saw u at Saravana Bhavan. I was trying to approach you and u were on a hurry to leave the place. Arun

நட்புடன் ஜமால்

நல்லா ஊற வைத்தால் தான் மென்மைபடும்

மான் கறி கொஞ்சமல்ல அதிகமாகவே வேக வைக்க வேண்டும்.

ஜோசப் பால்ராஜ்

நான் சமைத்த போது குக்கரில் 14 விசில் வரும்வரை வேக வைத்தேன். மிக நன்றாக இருந்தது.ஒரு மணி நேரம் தயிரில் ஊற வைத்திருந்தேன்.

கோவி.கண்ணன்

செய்முறையெலலம் ஓகே தான், யாரும் சாப்பிட்டு பார்த்திங்களா ?

கோவி.கண்ணன்

//குழலி / Kuzhali said...
ஹலோ எக்சூஸ்மி பாம்பு கறி கிடைக்குமா?

July 20, 2009 12:51 AM
//

தவளை சூப் கிடைக்கும், பாம்பு தவளையைத்தானே சாப்பிடுது !
:)

கோவி.கண்ணன்

//I have seen this & the same nite i saw u at Saravana Bhavan. I was trying to approach you and u were on a hurry to leave the place. Arun//

நீங்க எந்த அருண் ?
எனக்கு தெரிஞ்சு 4 - 5 அருண் இருக்கிறார்கள்

கோவி.கண்ணன்

//ஜோசப் பால்ராஜ்
நான் சமைத்த போது குக்கரில் 14 விசில் வரும்வரை வேக வைத்தேன். மிக நன்றாக இருந்தது.ஒரு மணி நேரம் தயிரில் ஊற வைத்திருந்தேன்.
//

சிங்கைவரும் பரிசு பெற்ற கட்டுரையாளர்களுக்கு ஜோசப் பால் ராஜும் ஜமாலும் மான் கறி சமைத்து தர ஆணை இடுகிறேன் :)

அப்பாவி முரு

// ஜோசப் பால்ராஜ் said...
நான் சமைத்த போது குக்கரில் 14 விசில் வரும்வரை வேக வைத்தேன். மிக நன்றாக இருந்தது.ஒரு மணி நேரம் தயிரில் ஊற வைத்திருந்தேன்.//

அட இது தெரியாம ஆட்டுக்கறியை சமைப்பது போலவே சமைத்து சாப்பிட்டுவீட்டோம்.

ஆனால் ஒரு முறை சீன கடையில் வாங்கி உண்டபோது அதன் சுவையை உணர முடிந்தது.

அப்பாவி முரு

// கோவி.கண்ணன் said...
சிங்கைவரும் பரிசு பெற்ற கட்டுரையாளர்களுக்கு ஜோசப் பால் ராஜும் ஜமாலும் மான் கறி சமைத்து தர ஆணை இடுகிறேன் :)
//

சிங்கை வருபவர் கூட சாப்பிட முருவுக்கு ஆணை கிடைக்குமா?

கோவி.கண்ணன்

//சிங்கை வருபவர் கூட சாப்பிட முருவுக்கு ஆணை கிடைக்குமா?//

ஆமை, முதலை கிடைக்கும் !
:)

அப்பாவி முரு

//கோவி.கண்ணன் said...
//சிங்கை வருபவர் கூட சாப்பிட முருவுக்கு ஆணை கிடைக்குமா?//

ஆமை, முதலை கிடைக்கும் !
:)//

நடுத்துண்டு எனக்கு!!!

:))))

கோவி.கண்ணன்

//அப்பாவி முரு said...
//கோவி.கண்ணன் said...
//சிங்கை வருபவர் கூட சாப்பிட முருவுக்கு ஆணை கிடைக்குமா?//

ஆமை, முதலை கிடைக்கும் !
:)//

நடுத்துண்டு எனக்கு!!!

:))))
//

நடுத்துண்டு என்ன சாப்பிடுகிறேன் என்று சொன்னால் முழுத்துண்டும் உணக்குத்தான்.

ஆ.ஞானசேகரன்

பாம்பு திங்கற ஊருக்கு போனா நடுதுண்டு நமக்கு... அப்படியா கோவியாரே

ஆ.ஞானசேகரன்

மான் கறி நான் சாப்பிட்டதில்லை.. (கறி திங்கரதுனு வந்துடோம் மான் கறி என்ன மனி....... அய்ய்யோ) நான் ஒன்னும் சொல்லலா.... மணிப்புறா கறியும் சாப்பிட வேண்டியதுதான்

துளசி கோபால்

மான் கறி நியூஸியிலிருந்துதான் உங்க ஊருக்கு வருதாம் வெனிசன் என்ற பெயரில்.

ஆமாம்.....முதலைக்கறி வேணுமா? ஆஸிக்குப் போங்க.

குதிரைக்கறி, மான் கறி, கங்காருக் கறி வேணுமா? நியூஸிக்கு வாங்க.

ரவி

எலும்பை கடித்தபோது பல்லு போச்சு...

கோவி.கண்ணன்

//துளசி கோபால் said...
மான் கறி நியூஸியிலிருந்துதான் உங்க ஊருக்கு வருதாம் வெனிசன் என்ற பெயரில்.

ஆமாம்.....முதலைக்கறி வேணுமா? ஆஸிக்குப் போங்க.

குதிரைக்கறி, மான் கறி, கங்காருக் கறி வேணுமா? நியூஸிக்கு வாங்க.
//

துளசி அம்மா, மான் கறி ஆஸி அல்லது நியூசியிலிருந்து தான் வருது. முதலைக் கறிக்கு சிங்கையில் பண்ணை இருக்கு.

வடுவூர் குமார்

இந்த பக்கம் போகும்போதெல்லாம் அதற்கு எதிர் பக்கம் இருக்கும் Bread ஐ பார்த்துவிட்டு கடந்திடுவேன் அதான் கண்ணில் படவில்லை.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற வழக்கு இருந்தாலும் இப்படியாவது சாப்பிடனுமா? என்று மனசுக்கு கஷ்டமாக இருக்கு.

சிநேகிதன் அக்பர்

நமக்கும் ரெண்டு பீஸ் கொடுங்க.

ஜெகதீசன்

:))

அத்திவெட்டி ஜோதிபாரதி

கோவியாரே...!
நீங்களா மான் கறியை புரமோட்டு பண்ணுறது...!
பேசா பண்ணுங்கோ...
நல்லா இருக்கு...
மான் கறி இலல...
உங்க பதிவுதான்...

கோவி.கண்ணன்

//வடுவூர் குமார் said...

இந்த பக்கம் போகும்போதெல்லாம் அதற்கு எதிர் பக்கம் இருக்கும் Bread ஐ பார்த்துவிட்டு கடந்திடுவேன் அதான் கண்ணில் படவில்லை.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற வழக்கு இருந்தாலும் இப்படியாவது சாப்பிடனுமா? என்று மனசுக்கு கஷ்டமாக இருக்கு.//

அண்ணே நமக்குத்தான் (என்னையும் சேர்த்தே) கோமளாஸ், கோமளவிலாஸ் இருக்கே.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு நாக்குக்கு சுவையானது அனைத்தும் ஒன்றுதான். இங்கே ஆடு, கோழி, மான் இன்னும் பலப் பல. நம்ம ஊரில் மயில் கறி கூட கிடைக்கும், தின்று பார்த்தது இல்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி

மான் கறி சமைச்சா என்னைக் கூப்பிடுங்கப்பா...
இன்னும் சாப்பிட்டதில்ல...
எங்க வீட்டுலயும் சமைச்சதில்ல...

அத்திவெட்டி ஜோதிபாரதி

//செந்தழல் ரவி said...
எலும்பை கடித்தபோது பல்லு போச்சு...//

ரவி,

மான் எலும்பு மிருதுவாக இருக்காதோ...
நீங்கள் மான் கறி சாப்பிட்டிருக்கிறீர்களா?

நான் சாப்பிட்டதில்லை.

கோவியார் வைக்கும் மான் விருந்தில் தான் சாப்பிடனும்.

T.V.ராதாகிருஷ்ணன்

கோவி செலவில் சிங்கை வர நான் தயார்...அதற்காக மான் கறியெல்லாம் எனக்காக அவர் செலவழிக்க வேண்டாம்

RATHNESH

தமிழகத்தின் சில ஓட்டல்களில் "மான்கள்" கறி சுவைக்க அந்தக் காட்சிகளை (மான்களை?) விரும்பி இருக்கிறேன்.

கோவி.கண்ணன்

//T.V.Radhakrishnan said...

கோவி செலவில் சிங்கை வர நான் தயார்...அதற்காக மான் கறியெல்லாம் எனக்காக அவர் செலவழிக்க வேண்டாம்//

உங்களுக்கு செலவு ஒண்ணும் தனியாக செய்யப் போவது கிடையாது, இந்த மாதம் என் சென்னைப் பயணத்துக்கு எடுக்கும் பயணச்சீட்டை உங்களுக்கு எடுத்துவிடுவேன். எங்க வீட்டில் தங்கிக் கொள்ளலாம், நீங்களும் சைவம், வேறென்ன செலவு இருக்கு ? :)

கோவி.கண்ணன்

//RATHNESH said...

தமிழகத்தின் சில ஓட்டல்களில் "மான்கள்" கறி சுவைக்க அந்தக் காட்சிகளை (மான்களை?) விரும்பி இருக்கிறேன்.//

அண்ணே,
அண்ணலும் நோக்கிய அவளும் நோக்கியா காட்சிகளா ? நடத்துங்க. அண்ணி இதையெல்லாம் படிக்க மாட்டாங்கங்கிற தைரியம் தானே ?

கோவி.கண்ணன்

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மான் கறி சமைச்சா என்னைக் கூப்பிடுங்கப்பா...
இன்னும் சாப்பிட்டதில்ல...
எங்க வீட்டுலயும் சமைச்சதில்ல...

July 20, 2009 7:34 AM//

லோராங் சுவான் அடுத்த மாதத்துக்கு மேல போனால் விருந்து கிடைக்கும். இப்ப அந்த ஐயா பேச்சிலர் இல்லை.

cheena (சீனா)

சரி சரி எல்லாதெதெயும் துண்ணுட்டு மனுசக் கறியயும் துண்ணப் போறிங்கப்பா - பாத்துக்கங்க

இதுக்காக சிங்கை வரணும் அதுக்காக கத எழுதணும் - ம்ம்ம்ம்ம்

தூக்கம் வரது

கோவி.கண்ணன்

/cheena (சீனா) said...
சரி சரி எல்லாதெதெயும் துண்ணுட்டு மனுசக் கறியயும் துண்ணப் போறிங்கப்பா - பாத்துக்கங்க
//

நீங்களே வருகிறவர்களை பயமுறுத்திவிடுவிங்கப் போல.

அமேசான் காட்டுல தான் மனுசக்கறி சாப்பிடுவாங்களாம்

கிரி

மான் கறியா! எஸ்கேப்பு!

Joe

Somehow trying to promote the contest! ;-)

good luck to everyone!

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP