"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 மறுதேதி அறிவிப்பு !

மணற்கேணி -2009 போட்டி ஆக்கங்கள் அனுப்ப நிறைவு நாள் என்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி என முடிவு செய்து அறிவித்து இருந்தோம். சில பல தவிர்க்க முடியாத காரணங்களினால் கட்டுரையை பதிவர்கள் அனுப்பும் நிறைவு நாளாக செப்டம்பர் 30, 2009 மாற்றிய அமைக்கப் படுவதாக மணற்கேணி -2009 குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல நண்பர்களிடமிருந்து கட்டுரை பெறும் நிறைவு நாளை நீட்டிக்கச் சொல்லி வேண்டுகோள் மின் அஞ்சல் வந்ததாலும், பல நண்பர்கள் ஆக்கங்களுக்கு தேவையான தகவல் திரட்டுவதில் முனைந்திருந்ததாலும் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை, ஆக்கங்கள் பெறும் நிறைவு தேதியை மறுபரீசீலனை பண்ணுமாறு கேட்டு இருந்தார்கள்.

மேலும் தேதி மாற்றம் எதுவும் இல்லை என்று உறுதியாக முடிவு செய்து, கருத்தாய்வு (கட்டுரை) ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய நிறைவு நாள் 30 செப்டம்பர் 2009 என்று ஒரு மனதாக இறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் நினைவு படுத்துகிறோம்,

மொத்தம் 29 தலைப்புகளில் உள்ள மூன்று பிரிவுகளிலும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் தலைப்புக்கு ஒன்றாக 29 ஆக்கங்கள் வரை ஒருவரே அனுப்பலாம்.

ஒரே தலைப்புக்கு ஆக்கங்கள் அனுப்பினாலும் அனுப்பலாம். சிறந்தது தேர்ந்தெடுக்கப்படும்.

போட்டித் தொடர்பான சுட்டிகள் :

போட்டி குறித்த விரிவான அறிவிப்பு

போட்டி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

போட்டி விதிமுறைகள்

போட்டித் தலைப்புகள்

போட்டித் தொடர்பில் தகவல் பெற


விரைவில் ஆக்கங்களை அனுப்பி நல் ஆதரவு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

மணற்கேணி -2009 சிங்கைப் பதிவர்கள் குழு சார்பாக,
கோவி.கண்ணன்

சிங்கை தமிழ் பதிவர்கள் – இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம்.

சிங்கைவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு இன்றைய நாள் மிக இனிய நாளாக அமைந்தது என்றால் மிகையாகாது. சிங்கைப் பதிவர்கள் வாராந்திர, மாதாந்திர கூட்டங்களைக் கூட்டி, பல முக்கிய முடிவுகளை எடுத்து, மணற்கேணி, சிங்கை நாதன் அண்ணுக்கான உதவி போன்றவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்ததே…

அந்த வரிசையில் சிங்கையில் வெகுசிறப்புடன் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய ஆரவலர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நமது பதிவுலகத்தினை அறிமுகம் செய்து அவர்கள் அனைவரையும் பதிவர்களாக்கி, தமிழ் வலையுலகினை மென்மேலும் சீர்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்றைய (23 ஆகஸ்ட்) கூட்டத்தினை ஏற்பாடு செய்து, பதிவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பாலமாக இருந்தார் பதிவர் பாண்டித்துரை அவர்கள்.


மிகச்சரியாக மாலை மணி 4.30க்கு அங் மோ கியோ வட்டார நூலகத்தில் உள்ள தக்காளி அறை (TOMOTTO ROOM)-யில் கூட்டம் களைகட்ட ஆரம்பித்தது. கூடி இருந்த மக்களுக்கு முதலில் சுவையான சூடான வடை மற்றும் தேநீர் பரிமாறப்பட்டு அனைவரையும் இருக்கையில் அமரவைத்து கூட்டம் ஆரம்பமானது.

முதலில், கூட்டத்திற்கு இடஉதவி கொடுத்ததோடு மற்றுமில்லாமல் கூட்டம் முடியும் வரை உடனிருந்து உதவிகள் புரிந்த, இணை நூகலர் நிர்மலா அவர்களுக்கு நன்றி தெரிவித்தபின், பதிவர்களின் அறிமுகம் ஆரம்பமானது.












குழலி, கோவிகண்ணன், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, முகவை ராம், ஜெகதீசன், பித்தன் ஜி, ராம் சி.எம், ஞானசேகரன் தங்களையும், தங்களின் பதிவுகளையும் தாங்கள் விரும்பி எழுதும் தலைப்புகளைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவர்கள் இருக்கும் தமிழ் பதிவுலகத்தையும், பத்திற்கும் மேற்பட்ட திரட்டிகளையும் தமிழ் எழுத்து மென்பொருள்களையும், புதிதாக Blogger, Wordpress போன்றவற்றில் எவ்வாறு தளத்தினை ஆரம்பிப்பது என்பது போன்ற தொழில்நுட்பங்கள் மிக எளிதாக செய்முறையாக குழலி, கோவிகண்ணன் அவர்களால் விளக்கப்பட்டது.













இலக்கிய ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அனைத்து பதிவர்களாலும் தங்களின் அனுபங்களையே விளக்கமாக கொடுத்ததும் அனைவரின் முகத்திலும் இலக்கிய ஆர்வத்திற்கும் மேல் இணைய ஆர்வம் முளை விட்டதை கண்கூடாக் கண்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்களிலேயே சிங்கையிலிருந்து இன்னும் பல தரமான பதிவர்கள் நம் உலகினில் நுழையப்போவது உறுதி.

டிஸ்கி 1:
சிங்கைநாதனின் இதயநோயினைப் பற்றியும், அவரின் தற்போதைய உடல்நலத்தினைப் பற்றியும், அவருக்காக பதிவுலகம் இதுவரை சேர்த்துள்ள தொகையினைப் பற்றியும் முழு விளக்கத்தையும் சகபதிவர் ஜோசப் பால்ராஜ் மிகத்தெளிவாகக் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாது, தயக்கமேதும் இல்லாமல் நம் சிங்கைவாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடமும் உதவியினை கேட்டு, பொருளையும் ஆலோசனைகளையும் பெற்று வெற்றியோடு திரும்பியது நம் பதிவர் குழு.

டிஸ்கி 2:
பதிவுலகை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கிய பதிவர்களுக்கு அன்பளிப்பாய் பொக்கிசங்கள், இலக்கிய ஆர்வலர்களால் வழங்கப்பட்டது ...










நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திரு பாண்டித்துரை மற்றும் சிங்கை வாசகர் வட்டக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.

சிங்கை வாசகர் வட்டம் மற்றும் பதிவர்கள் ஒன்று கூடல் அறிவிப்பு !

சிங்கை நூலக வாசகர் வட்டம் (கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள்) மற்றும் சிங்கைப் பதிவர்கள் ஒன்று கூடல் இந்த ஞாயிற்றுக் கிழமை (23/ஆகஸ்ட்/2009) நடக்க இருக்கிறது,

நிகழ்சிக்கு தலைமை ஏற்பு கவிஞர் பாண்டித்துரை.
நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கை வாசகர் வட்டம்.

நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள்:

இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்

நாள்: 23.08.2009 (ஞாயிறு)

நேரம்: மாலை 4.30மணிக்கு

இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம்



தக்காளி அறை (இரண்டாவது தளம்)

இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது.

இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை…..

சிங்கைவாழ் பதிவர்களான

கோவி.கண்ணன் அவர்கள்

குழலி அவர்கள்

அப்பாவி முருகேசன் அவர்கள்

முகவை ராம் அவர்கள்

ஜோசப் பால்ராஜ் அவர்கள்

பதிவர் உலகம், வலைப்பதிவுகள், திரட்டிகள், பதிவர் வட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர்.

அனுமதி இலவசம், பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் அழைப்பது,

சிங்கை நூலக வாசகர் வட்டம் நண்பர்கள் மற்றும்
சிங்கைப் பதிவர்கள்

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....


உலக நாடுகளிலேயே எந்த நேரமும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் என்றால் அது சிங்கப்பூர் என்றே சொல்லலாம். தற்போழுது நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஏதோ திடீர் என குதித்துவிட்ட நாடு இல்லை. சிங்கப்பூரும் மற்ற நாடுகளை போல பல படிகளை கடந்துதான் இந்த நிலையை தொட்டுயுள்ளது. இந்த புதிய சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை பெரும் பகுதியை முன்னால் பிரதமரும் இன்று மூத்த அமைச்சருமாய் உள்ள திரு. லீ குவான் யூ வை சாரும்.

சிங்கப்பூர் ஒரு தீவு நகரம். ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஒரு மீன் பிடி நகரமாக இருந்தது. சிங்கப்பூர் நதியை ஒட்டி இருக்கும் இடம் மீன் பிடிப்பதற்கு ஏற்றாற்போல் அழகாகவும், அற்புதமாகவும் அமைந்து இருக்கிறது. ஆனால் இன்று ஒரு மிக பெரிய வர்த்தக மையமாக திகழ பிரித்தானியா காலனித்துவமும் ஒரு காரணம். சிங்கப்பூர் ஒரு சிறந்த வர்த்தக மையமாக திகழ்வதற்கு 1889 ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தை (British East India Company) வழிநடத்திய சார் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) ஒரு வர்த்தக மையத்தை சிங்கப்பூரில் நிறுவினார். இதுதான் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது என்றே சொல்லலாம்.

1942 க்கு முன் சிங்கப்பூர் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதற்கு பின் ஏற்பட்ட ஜப்பானியரின் படையெடுப்பால் சிங்கப்பூர் ஜப்பானியரின் வசம் வந்தது. சிங்கப்பூர் பிரித்தானியாஅரசாட்சி அடிபடையாக கொண்டது. அதனால் அதனை அனைவரும் ஆசியாவின் கிப்ரல்டார் (Gibraltar of the East) என்றே அழைத்தனர். அதிர்ச்சி தரும் விதமாக ஜப்பானியர்கள் தங்களின் காலனித்துவ மற்றும் பேரரசு சாம்ராஜியத்தை எட்டு, ஒன்பது நாட்களிலேயே செயல்படுத்தினர். அதாவது, 1942 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ம தேதி முதல் 1942 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ம் நாள் வரை ஆகும். சிங்கப்பூர் யுத்தத்தில் கிழகத்திய நிறுவன இராணுவம் சரணடைந்தது மிக பெரிய தோல்வி என கருதப்பட்டது. பிரித்தானியா வரலாற்றில் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் தொல்வியுற்றதே மிகபெரிய இழப்பு என சர்ச்சில் (Churchill ) கூறினார். அதற்கு பின் சிங்கப்பூர் ஜப்பானியரின் வசம் இருந்தது..

இன்று நாம் பார்க்கும் சிங்கப்பூர் குடியரசு 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறையான்மையுள்ள நாடானது. இந்த நாளைதான் சிங்கப்பூர் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். சென்ற 9ம் தேதியில் சிங்கப்பூர் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடியது நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.


1965 ஆகஸ்ட் 9 ம் நாளுக்கு பிறகு உள்நாட்டு குழப்பகளை எல்லாம் சமாளித்து ஒரு புதிய குடியரசாக உருவாக்கியவர் சிங்கப்பூரின் தந்தை என புகழப்படும் திரு. லீ குவான் யூ . இவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த மந்திரம்தான் இன்றைய அளவில் மிக சிறப்பாகவும் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. நாட்டு மக்களிடம் திரு. லீ குவான் யூ " நீங்கள் மற்றவர்களிடம் கனிவாக பழகுங்கள் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் வார்த்தைகளில் நன்றி (Thank you), தயவுசெய்து (Please). மன்னிக்கவும் (Excuse me) சொல்லுங்கள். அதை இன்றுவரை காரணம் கேட்காமல் சிங்கபூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நல்ல பண்புதான் இன்றைய சிங்கப்பூரை உலகில் சிறந்த வர்த்தக தளமாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.

ஒரு முறை நான் நண்பர்களுடன் பெங்களூர்க்கு சென்றேன். அங்கு சந்தையில் தோல்பை வாங்க வேண்டும் என்று என் நண்பன் கடைக்கு சென்றான். நானும் கூடவே சென்றேன். "தோல்பை என்ன விலை?" என்று என் நண்பன் கடைக்காரனிடம் கேட்டான். விலையை சொன்னதும் தனது தகுதிக்கு விலை அதிகம் என்று நினைத்து விளகினான். ஆனால் கடைக்காரன் விடுவதாய் இல்லை " என்ன விலைக்கு நீ எடுத்துக்கொள்வாய் சொல்லுங்கள்? " என்று வீம்பு பண்ணினான். வேறு வழியின்றி அந்த தோல்பையை வாங்க வேண்டிதாயிற்று. இந்த நிலைமைதான் அனேக இந்திய நகரங்களில் என்று நினைக்கின்றேன். மக்கள் தொகை அதிகமும் மக்களின் தேவைகள் அதிகமும் இருப்பதால்தான் இவர்களின் வியாபாரம் நடந்துக்கொண்டுள்ளது. இவர்களின் நேர்மைக்காகவோ பண்புக்காகவோ இல்லை. அந்த நிலை இன்று மாறி வருகின்றது என்றாலும் இன்னும் முழுவதும் மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் சொல்வதற்கு நிறையவே இருக்கு.

இன்றைக்கும் சிங்கப்பூருக்கு வந்து எல்லா நாட்டவரும் வர்த்தகம் செய்கின்றார்கள் என்றால் இவர்களின் பண்பும் ஒரு காரணம். எந்த ஒரு சிறிய வியபாரமாகட்டும் நன்றி சொல்ல தவறுவதில்லை. அதே போல் விலையில் ஏமாற்றம் என்பது இல்லைவே இல்லை. சிறிய கடையாக இருந்தாலும் விலை வில்லை இருக்கும். ஒரு முறை நான் தங்க செயின் வாங்க சென்றேன். கடையில் உள்ள சீன பெண் என் கழுத்தில் செயினை அவளே போட்டுவிட்டு "உங்களுக்கு அழகாக இருக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள்". என் மனைவி அதை பார்த்துவிட்டு அதிர்ந்தே போய்விட்டாள். அந்த அளவிற்கு வியாபார தந்திரம் என்று சொல்வதைவிட வியாபார கவர்ச்சி என்றே சொல்லலாம். நன்றி சொல்லாத வியாபாரத்தை நான் பார்த்ததே இல்லை.

இந்த பண்புகள் இன்னும் நம் நாடுகளில் வரவில்லை என்பது ஒரு குறைதான் என்றாலும் இதுபோன்ற பழக்கங்களை நாம் இங்கிருந்து எடுத்து செல்வதில் குற்றமில்லையே!.

இப்படிப்பட்ட சிங்கப்பூருக்கு வந்துசெல்ல ஒரு நல்ல வாய்ப்பு மூவருக்கு மணற்கேணி 2009 தருகின்றது. அதைவிட இணைய எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கிகாரம் இருக்கு என்று நிறுபிக்கும் ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றது. நீங்கள் அதற்காக செய்யவேண்டியது ஒரு சிறந்த கருத்தாழமிக்க கட்டுரைகளே!
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

இந்த மணற்கேணி 2009 நண்பர்களின் வேண்டுகோள்கிணங்க கடைசி தேதியும் ஒத்திவைத்துள்ளது. மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பை நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாகவும், தமிழ்வெளி சார்பாகவும் அன்புடன் வேண்டுகின்றேன்...


சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்.
Manarkeni 2009

சிங்கப்பூர் வரலாற்று புகைப்படங்கள் சில கீழேயுள்ளது..










ரஜினி ரசிகர்கள் இணைய தளத்திற்கு நன்றி !

நம் சிங்கைப் பதிவர் செந்தில் நாதனுக்கு, ரஜினி ரசிகர்களிடையே தகவலை எடுத்துச் என்று உதவி பெற முயற்சிக்கும் rajinifans.com இணைய தள நண்பர்களுக்கும், அறிவிப்பை வெளி இட்ட திரு ஜெய.கிருஷ்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி.

சிங்கைப் பதிவர்கள் குழு சார்பாக
கோவி.கண்ணன்

மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...

Manarkeni 2009
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் இன்றாக இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....

இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...

சிங்கப்பூர் தேசிய தின விழா காட்சிகள்

சிங்கப்பூர் 44வது தேசியதின விழா காட்சி புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

























நேரடி ஒளிபரப்பு - சிங்கப்பூர் தேசிய நாள் கொண்டாட்டம் !





மேலே பெட்டியில் எதுவும் தெரியவில்லை என்றால்,

இங்கே கிளிக்குங்கள் !

மணற்கேணி -2009 பதிவர்களை டரியல் ஆக்குகிறதா ?

"மணற்கேணி - 2009" கருத்தாய்வு போட்டியின் நோக்கம் சமூகம் சார்ந்த கருத்தாக்கங்களைப் பற்றிய விவாதங்களை வெளிக் கொணரவேண்டும், அதன் மூலம் பதிவர்களின் எண்ணங்கள் மற்றும் எழுத்துதிறனை மெருகூட்ட வேண்டும் என்கிற எளிதான நோக்கம் தான்.

'கருத்தாய்வுன்னா என்னங்க தலைவரே ?' என்ற கேள்வியை ஒரு வள்ளல் பதிவர் உரையாடியில் துண்டு தகவலாக (Status Message) வைத்திருந்தார், அவருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எளிய விளக்கம் "ஆய்வுக்கு உட்பட்ட கருத்துகள்" கட்டுரையாக எழுதப்பட்டால் அதற்கு "கருத்தாய்வு" என்று மணற்கேணி - 2009 குழுவினர்கள் பெயர் வைத்திருக்கிறோம்


தலைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு பலர் தொடர்ப்பு கொண்டு, 'தலைப்புகளை வைத்துப் பார்த்தால், இது போன்ற கருத்தாய்வுக் கட்டுரைகளை இலக்கிய ஜாம்பவான்களால் தான் எழுத முடியும் என்பது போல் இருக்கிறது... நாங்களெல்லாம் எழுத முடியாது போல இருக்கிறதே !' என்று மின் அஞ்சலிலும் உரையாடியிலும் கருத்து தெரிவித்தனர். திரு சந்தோஷ் அவர்களின் பதிவிலும் சில கேள்விகள், ஐயங்கள் பற்றி எழுதினார் அவர்களுக்கு குழுவினர் விளக்கியவை இவை தான்.



1. தலைப்புகள் அனைத்தும் நடைமுறையில் மிகவும் பேசப்படும், விவாதிக்கப்படும் பொதுவான பிரச்சனை குறித்தது தான்.


2. தலைப்புகளில் எழுத வேண்டியவை இவை என்று குறிப்பிட்டுவிட்டால், அது பற்றி உண்மையிலேயே மாறுபட்ட கருத்து கொண்டோரின் எண்ணங்களை சுருக்கி எல்லை வகுத்தாகிவிடும் என்பதால் விருப்பம் போல் எழுத ஊக்குவிப்போம், என்பதற்காக தலைப்புகளை மட்டுமே பரிந்துரைத்து, எதை எழுதவேண்டும் என்கிற எந்தவித கட்டுபாடோ, முன்குறிப்போ கொடுக்கவில்லை

3. போட்டிக் கட்டுரையின் நீளம் குறித்தும் கேட்கப்பட்டது, நீளம் 1000 சொற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிட்டு இருந்தாலும் கட்டுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சுருக்கமாக சொல்ல நினைப்பதைச் தெளிவாக எழுதி இருந்தாலும் போதுமானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.

4. சில தலைப்புகளில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றே தெரியவில்லை. என்றும் கேட்கப்பட்டது, மேலே (எண் 2) சொல்லப்பட்ட விளக்கம் தான் இதற்கும் பொருந்தும்,


இருந்தாலும் உதாரணத்திற்கு,

அ) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்

- என்ற தலைப்பில் பெண்ணியம் பேசும் ஆண்கள் பெண்ணியத்தை எந்த அளவுக்கு வளர்க்க முயற்சிக்கிறார்கள்? 33 விழுக்காடு பாராளுமன்ற இட ஒதுக்கீடு தேர்தல் தோறும் ஆண் அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது, ஆனால் செயல்படுத்துவது இல்லையே. பொது இடத்தில் பெண் பெருமை பேசுபவர்கள் வீட்டுக்குள் பெண்களை சிறப்பாக நடத்துகிறார்களா ? இல்லறப் பெண்கள் ஆண்களின் அனுமதி இன்றி செயலாற்றவோ, முடிவெடுக்கவோ முடிகிறதா ? பெண்ணியம் புரிந்துணர்வோடு முன்னெடுத்துச் செல்ல முனைய வேண்டியது பெண்களா அல்லது ஆண்களா ? என்பதாக எழுத முனைவார்கள் என்பதற்காக அந்த தலைப்பு கொடுக்கப்பட்டது

ஆ) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்.

ஒருங்கிணைந்த இந்தியாவில் தண்ணீர் தேவைக்காக நடக்கும் அரசியல் கூத்துகளைப் பார்த்தால் மாநிலங்கள் தனி நாடுகளைப் போல் நடந்து கொள்வது கண்கூடு, தேர்தல் காலங்களில் மட்டும் பேசப்படும் ஒன்றாகவே தண்ணீர் தேவை மிகவும் அலட்சியப்படுத்தி, பொதுமக்களுக்கு ஞாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தரவோ, பெற்றுத் தரவோ மாநில அரசுகள் முனையாமல் பொதுமக்களை தூண்டிவிட்டு ஓட்டரசியல் நடத்துவதில் குறியாக இருக்கின்றன என்பதையெல்லாம் சுட்டி புள்ளிவிரங்களுடன் பிரச்சனை தொடங்கிய காலம், அதன் சிக்கல், தீர்வுகளாக எதை முன்மொழியலாம் என்று இந்தத் தலைப்பின் கருத்தாய்வில் எதிர்பார்க்கப்பட்டது

3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்றவர்கள், அந்த சாதியில் பிறந்த மற்ற ஏழைகளுக்கு வழிவிடாமல் வாய்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்திவருவதால் ஏற்படும் இட ஒதுக்கீடு சிக்கல்கள்

4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்
- இது பற்றி நிறையவே எழுதலாம்

5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி

- பெரியார் திராவிட இயக்கம் தோற்றுவித்ததன் தேவைகள், அது இன்றைய திராவிடக் கட்சிகளால் முழுமை அடைந்ததா ? திராவிடக் கொள்கை இன்றும் வலியுறுத்துவதன் சூழல் இருக்கிறதா ? திராவிடக் கட்சிகள் கொள்கைகள் பிறளாமல் சென்று கொண்டி இருக்கிறார்களா ? திராவிட என்ற சொல்லை கட்சிப் பெயராக பயன்படுத்தும் புதிய அரசியல்வாதிகளின் நோக்கம் திராவிடம் பேசுகிறதா ?

6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்

- பிற மாநிலங்களின் வளர்ச்சி வீழ்ச்சிகளை ஒப்பிட்டு எழுதலாம்
.
.
.
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்

- பிற மாநிலங்களின் தலித் மக்களின் வாழ்வியல் உரிமைகள், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை தமிழக தலித்துகளின் இன்றைய நிலைகளோடு ஒப்பிட்டு எழுதலாம். உதாரணத்திற்கு தலித்துகளை முன்னிலைப்படுத்தும் தொல்.திருமாவின் வளர்ச்சி பெற்ற கட்சி, மற்றும் அவர்கள் பல்வேறு துறைகளில் பெற்றிருக்கும் பிரதிநித்துவம்.

இதுபோல் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் கட்டுரையாளர்கள் அவர்கள் புரிந்துணர்வின் அடைப்படையில் தகவல்களை எழுதலாம், எதிர்மறைக்கருத்துகள் இருந்தாலும் அவற்றைப் பட்டியல் இட்டு எதிர்வினைக் கட்டுரையாக எழுதி அனுப்பலாம்.


மீண்டும் கூறிக் கொள்கிறோம், போட்டியின் நோக்கம் சிறுதளவேனும் சமூக சிந்தனைகளுடன் கூடிய நல்லதொரு எழுத்துப் பயிற்சி ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை. அரசியல்வாதிகள், அரசுகள், அதிகாரிகள் இவர்களுக்கு சமூகம் பற்றி இருக்கும் எண்ணங்களைப் போல் பொதுமக்களுக்கும் அவர்களைப் பற்றிய எண்ணங்களும், பொதுவான சமூக எண்ணங்களும், இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும், இவற்றில் தவறுகள் உள்ளன, இவை தேவையற்றது போன்ற சமூகம் சார்ந்த எண்ணங்கள் ஒவ்வொரு குடிமகனிடமும் உண்டு. கணிணியில் எழுதிப் பழகிய நாம், அந்த எண்ணங்களை எழுத்தாக்கி பலர் பார்வைக்கு வைத்தால் அது ஒரு தகவல் பகிர்வாக, தொகுப்பாக இருக்கும்.

என்ன நண்பர்களே... ! பதிவர்களே..... ! வாசகர்களே.... ! விளக்கம் போதவில்லை என்றால் மேலும் கேளுங்கள்.

போட்டிகளை எட்டி இருந்து வேடிக்கைப் பார்பதைவிட கலந்து கொண்டு கடைசியில் வந்தவர்கள், பரிசு பெறவில்லை என்றாலும் போட்டி இடத் தகுதியுடன் இருந்தவர்கள் என்பதாகத் தான் அங்கீகரிக்கப்படுகிறது.

* போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் கொடுப்பதாக போட்டி குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கையில் இருக்கும் பதிவர்கள் தவிர்த்து பிற நாடுகளில் வசிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு இயல்பாக நாம் எழுதுவதையே எழுதலாம், இந்த தலைப்புகளில் வலைப்பதிவுகளிலேயே நிறைய கட்டுரைகள் வெளி வந்துள்ளன, தலைப்புகள் என்பது கோடு மாதிரி, நீங்க ரோடு போடுங்க. அந்த தலைப்பை வைத்து கட்டுரையாளர்கள் அவர்களுடைய கருத்துகளை அவர்கள் இயல்புக்கு ஏற்றவாறு எழுதலாம்.

இன்னும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும் ! இன்றைக்கே.......வேலை இருந்தால் நாளைக்கு அல்லது மறுநாளைக்கே (சனி / ஞாயிறு) கட்டுரைகளை அனுப்புங்கள்.

"மணற்கேணி - 2009" - இது பதிவர்களுக்காக பதிவர்களே நடத்தும் போட்டி என்பதை மறந்துவிடாதீர்கள்.

போட்டி பற்றியும், தலைப்புகள் மற்றும் போட்டிக் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிக்கு சிங்கை பதிவர்களின் இணையத்தளம் இணைப்பு இங்கே

அன்புடன்
மணற்கேணி - 2009 குழுவினர்

கோடீஸ்வரனாகலாம் வாங்க!!!

சிங்கை பதிவர்களும், தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் பதிவர்களுக்கான கட்டுரைப் போட்டியினைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.

போட்டியில் வெல்லும் மூவரை, சென்னையிலிருந்து சிங்கைக்கு ஒரு வார காலம் சுற்றுப்பயணமாக அழைத்து வந்து சிறப்பிக்க இருக்கிறோம் (வடிவேல் பாணியில் சொன்னால், கருப்பா இருப்பவங்களை கூப்பிட்டு வந்து ஒரு வாரம் வச்சு அழகு பார்த்தல்).

இதில் விருந்தினர்களுக்கு சிங்கையின் செயற்கை அழகுகளைச் சுற்றிக்காட்டும் பணியினை சிங்கை பதிவர் அறிஞர் பெருமக்கள் ஏற்றுவிட்டார்கள்.

அப்பாவியானதால் எனக்கு எந்த பொறுப்பையும் சங்கம் கொடுக்கவில்லை. சங்கம் விலக்கினாலும், தனி ஒரு மனிதனாக, தமிழனால் சும்மா இருக்க முடியுமா? பொங்கி எழுகிறேன். தனிப் பொறுப்பை நானாவே எடுத்துக் கொள்றேன்.

அது, அது, கட்டுரைப் போட்டியில் வென்று வரும் மூவரையும், கோட்டீஸ்வரனாக்கும் பெரும் முயற்சியை நான் எடுத்துக் கொள்கிறேன். அதற்கு இந்த இடுகையே சாட்சி!!!

(அது எப்பிடின்னா மக்களே, இங்க சிங்கையில் Singapore Pools –ன்னு ஒரு லாட்டரி கடை இருக்கு. அங்க சிங்கப்பூரின் ஐம்பது காசுக்கு TOTO-ல 1ல இருந்து 45க்குள்ள ஆறு நம்பர் இருக்குற ஒரு வரிசை தருவாங்க.

ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் குலுக்கல் நடக்கும். நாம வாங்கி வச்சிருக்கும் ஆறு நம்பரும், குலுக்கலில் ஆறு நம்பரும் அப்படியே வந்தா, நாம கோடீஸ்வரன் தான். ஆமா, முத பரிசு எவ்வ்வ்வ்வ்ளோன்னு தெரியுமா?, S$650K.(நம்ம இந்திய ரூபாய் மதிப்புல கிட்டத்தட்ட ரெண்டு கோடி)

(இப்ப நான் என்ன பண்ணப் போறேன்னா! மூணு பேருக்கும் தனித்தனியா திங்களுக்கு ஒரு டிக்கெட்டும், வியாழனுக்கு ஒரு டிக்கெட்டும் வாங்கித்தரப் போறேன். முதப் பரிசு நமக்கு தான், நம்பிக்கை தானே வாழக்கை)

(இதுல எனக்கு என்ன லாபம்ன்னா, நான் என்னோட சொந்தக்காசுல ஐம்பது செண்ட்டுக்கு ஒரு டிக்கெட் வாங்கித்தரதால முதப் பரிசு கிடைக்கும் நம்ம விருந்தினர், முதப் பரிசுல பாதி, அட அதாங்க ஒரு கோடி ரூபாய் தராமலா போயிருவாங்க?, எனக்கு நம்பிக்கை இருக்கு)

அதனால், தமிழ் பதிவுல அறிஞர் பெருமக்களே கோடீஸ்வரனாகும் மிக மிக எளிய வழிமுறையை நான் சொல்லியதோடு மட்டுமில்லாது, அதன் முழுச் செலவுகளையும்!? நான் ஏற்றுவிட்டேன்.

என்னோடு இரண்டு கோடியை பங்கிட விரும்புவர்கள், செய்ய வேண்டியது என்ன வென்றால் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க... -ல் கலந்து வெல்ல வேண்டியது மட்டுமே!!!


கோடீஸ்வரனாக
நான் ரெடி – நீங்க ரெடியா!!!

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP