"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.

விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...(புகைப்படங்கள்)

உங்களோடு பகிர்ந்துக்கொண்ட...
ஆ.ஞானசேகரன்







2 பின்னூட்டங்கள்:

Thamizhan

மனமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழ்ப் பணியில் வரும் இன்பம் வேறெதிலும் வ்ராது.
புரட்சிக் கவிஞர் சொன்ன

கனியிடை ஏரிய சுவையும்
முற்றல் கழையிட யேரிய பாகும்...

எல்லாம் சுவைகள் ஆனால் தமிழ் உயிர் என்றாரே!

ரோஸ்விக்

புகைப்படங்கள் அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது நண்பரே!

நன்றிகளும் அன்பும்... :-)

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP