"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ரிசல்ட்! ரிசல்ட்!! ரிசல்ட் !!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்க காலவிரயம் ஆனது போலவே மணற்கேணி போட்டி முடிவுகளின் நடைமுறைகளிலும் சில தடங்கல் ஏற்பட்டது. அவற்றை விளக்குவதை விட, முதற்கட்டமாக அறிவியல் பிரிவு வெற்றியாளரை அறிவிப்பதில் மகிழ்கிறோம். மற்ற இரு பிரிவுகள் இன்னும் இருவாரங்களுக்குள் அறிவித்துவிடுவோம்.

மணற்கேணி அறிவியல் பிரிவு :

வெற்றியாளர் : திரு லதானந்த்

கட்டுரையாக்கத் தலைப்பு : மரபு சாரா ஆற்றல் வளம்.

அறிவியல் கட்டுரைகளுக்குப் பொருத்தமான சீரான நடையும் வடிவமும் இருப்பது இந்தக் கட்டுரையின் பலம். வெற்று வார்த்தை அலங்காரங்கள், தேய்சொற்கள் ஏதும் இல்லாமல் அறிவியல் / தொழில்நுட்பக் கருத்துக்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளின் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் சுட்டியிருப்பது மற்றுமொரு சிறப்பம்சம் என்று நடுவர்களால் பாராட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது திரு லதானந்த் அவர்களின் கட்டுரை.

வெற்றியாளருக்கான ஒருவார சிங்கப்பூர் சுற்றுலாவிற்கான ஏற்பாட்டுடன் கூடிய சென்னை - சிங்கப்பூர்-சென்னை விமான பயணம் குறித்த விவரம் பின்னர் தொடர்பு கொண்டு அளிக்கப்படும்

வாழ்த்துகள் லதானந்த் ஐயா !

மணற்கேணி 2010 போட்டி குழுவினர்
மற்றும்

12 பின்னூட்டங்கள்:

பத்மநாபன்

அன்பு லதானந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்கு பாராட்டுகள்..

cheena (சீனா)

அன்பின் லதானந்திற்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்கும் பாராட்டுகள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கொல்லான்

திரு . லதானந் சாருக்கு எனது வாழ்த்துக்கள் .

கோவி.கண்ணன்

திரு பத்மநாபன், சீனா ஐயா மற்றும் கொல்லான் ஆகியோருக்கு நன்றி

லதானந்த்

மணற்கேணிக்கும், சிங்கைப் பதிவர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் எனது நன்றி.

கி.நாச்சிமுத்து

லதானந்த் வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.வெற்றி மேல் வெற்றி சூடுங்கள்.
கி.நாச்சிமுத்து,புது தில்லி

லதானந்த்

இதற்கு முன் இருந்த வாழ்த்துப் பின்னூட்டங்களும் எனது நன்றியறிவித்தலையும் காணோமே?

ஜெகதீசன்

ப்ளாக்கரில் நேற்று நடந்த பிரச்சனைகளால், கடந்த 3 நாட்களாக இடப்பட்ட பின்னூட்டங்கள் காணாமல் போயிருக்கிறது..
Cache இலிருந்து எடுத்துப் போடுகிறேன்...
நன்றி..

ஜெகதீசன்

பத்மநாபன்

அன்பு லதானந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்கு பாராட்டுகள்..
May 12, 2011 7:35 PM
cheena (சீனா)

அன்பின் லதானந்திற்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்கும் பாராட்டுகள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
May 12, 2011 9:01 PM
கொல்லான்

திரு . லதானந் சாருக்கு எனது வாழ்த்துக்கள் .
May 12, 2011 9:08 PM
govikannan

திரு பத்மநாபன், சீனா ஐயா மற்றும் கொல்லான் ஆகியோருக்கு நன்றி
May 12, 2011 11:19 PM
லதானந்த்

மணற்கேணிக்கும், சிங்கைப் பதிவர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் எனது நன்றி.
May 12, 2011 11:32 PM
கி.நாச்சிமுத்து

லதானந்த் வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.வெற்றி மேல் வெற்றி சூடுங்கள்.
கி.நாச்சிமுத்து,புது தில்லி
May 13, 2011 2:07 AM

லதானந்த்

ஜெகதீசன்! இப்படியெல்லாம் உங்களைப் போன்ற கம்ப்யூட்டர் வல்லுநர்கள் சுவாசித்த காற்றைச் சுவாசிக்கும் சம காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது.

Anonymous

how to add particular label feed only in google reader

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

please forward this to others...d..

தருமி

பரிசு பெற்றவர், பரிசளிக்கும் அமைப்பு இருவருக்கும் என் வாழ்த்துகள்.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP