"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்

Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்

பாஸ் நாங்கள்லாம் சைதாப்பேட்டை வந்தா கேபிள் அண்ணண் வீட்ல தான் பாஸ் சாப்புடுவோம்.

மணற்கேணி 2010 - நினைவுத் துளிகள்


மணற்கேணி 2010 இனிதே நிறைவுற்றது, போட்டி முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்ட போட்டித் தொடர்பானவற்றில் சில தொய்வுகள் ஏற்பட்டிருந்தாலும், எடுத்துக் கொண்டதை இனிதே முடிப்போம் என்று முனைந்து சிங்கைப்பதிவர்கள் செயல்பட்டு முடித்திருக்கின்றனர். சென்ற ஆண்டைப் போல் தன்னார்வப் பதிவர்கள் தாமாக முன்வரவில்லை, மேலும் போதிய உற்சாகம் குழுவுக்குள்ளேயே கிடைக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள நேரிடுகிறது, அது குறித்து காரணங்களை ஆய்ந்து அடுத்தக்கட்ட மணற்கேணி நகர்வு பற்றி முடிவுகள் எடுக்கப்படும். அதுவரை மணற்கேணி 2011 பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளி வராது. எனக்கு தெரிந்து வெளிப்படையான அரசியல்கள், தனிப்பட்ட ஆளுமைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன். நடந்தவைப் பற்றிய தொகுப்பிற்காக.

வெற்றியாளர் வருகை :

வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லாதனந்த், செல்வி வே.பத்மாவதி மற்றும் செல்வன் லியோ ப்ராங்கிளின் ஆகியோர் தத்தம் உறவுகளோடு இருவர் இருவராக சென்ற சனிக்கிழமை 27 ஆகஸ்ட் 2011, சிங்கை திட்ட விமான நிலையத்திற்கு (பட்ஜெட் டெர்மினல்) காலை 6:30 மணியளவில் வந்து சேர்ந்தனர், வந்தவர்களுக்கு வரவேற்பு அளித்து, அருகில் இருந்த விமான நிலையம் முனையம் இரண்டிற்குச் சென்று அவர்களுகான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு, மற்ற விமான நிலைய முனையங்கள் சுற்றிக்காட்டப்பட்டன, அதன் பிறகு மகிழுந்துவில் அவர்களுக்காக பதிவு செய்திருந்த லிட்டில் இந்தியாவில் அமைந்திருந்த விடுதி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைப்பாறியதுடன் அன்று மாலையே பறவைகள் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு செல்லும் முன் பூன்லே பகுதியில் அமைந்த அஞ்சப்பர் உணவகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது, மாலை பறவைப் பூங்கா சுற்றுலா முடிந்ததும், மீண்டும் குட்டி இந்தியாவில் அவர்களுக்கான இரவு உணவும் தரப்பட்டது.

வாசகர் வட்டம் :

மறுநாள் பதிவர் நண்பர்கள் சிலர் (குறிப்பாக பிரியமுடன் பிரபு, ரோஸ்விக்) ஆகியோர் வெற்றியாளர்களை நகரப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காடினர், மாலையில் அங்க்மோ கியோ நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வாசகர் வட்ட நிகழ்ச்சியில் அனைவருக்கு தேனீர் வழங்கப்பட்டு, பின் அவர்களுடைய ஆக்கங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,  இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட பொறுப்பாளர் திருமதி சித்ரா ரமேஷ் மற்றும் நூலகப் பொறுப்பாளர் ஏற்பாடு செய்து நன்றாக அமைத்துக் கொடுத்தனர், நிகழ்ச்சியின் நிறைவில் மணற்கேணி 2010 வெற்றியாளர் சான்றாவணமாக செதுக்கிய பட்டயங்கள் வழங்கப்பட்டன, அவற்றை வெற்றியாளர்களுக்கு திருமதி சித்ரா ரமேஷ், திரு பாலுமணிமாறன் மற்றும் திரு ஷாநவாஸ் ஆகியோர் வழங்கினர்.

மேலும் விபரங்களுக்கும் படங்களுக்கும் ...
*
செந்தழல் உணவு கூடல் :

மறுநாள் திங்கள் கிழமை வெற்றியாளர்கள் தன்னிச்சையாக செந்தோசா தீவுற்கு சென்று வந்தனர். நேற்றைய (30/ஆகஸ்ட்/2011) நிறைவு நிகழ்ச்சி சாங்கி கடற்கரை பூங்காவில் 'செந்தழல் உணவும்' பாராட்டு மற்றும் நன்றி அறிவித்தலும் நடந்தேறியது, சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் சைவ அசைவ உணவுவகைகள் செந்தழலில் சுடப்பட்டு வழங்கப்பட்டது, பின்னர் வெற்றியாளர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றனர். வெற்றியாளர்கள் தாங்கள் செய்து கொண்ட முன்னேற்பாட்டின் படி மலேசியாவிற்கும் சென்று பின்னர் தாயகம் திரும்புவர்.
 (குழலி  & பிரியமுடன் பிரபு )

 (govikannan)

 (giri,Joseph Paulraj,Jegadeesan )



(senthil nathan(singai nathan) 




(rosevic,vetrikathiravan,karunakarasu)


மணற்கேணி 2010 நிகழ்ச்சியில் பெரும்பங்காற்றிய, நன்கொடை வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றியையும் பாராடுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக ரொஸ்விக் மற்றும் பிரியமுடன் பிரபு ஆகியோர் வெற்றியாளர்களுக்கு நல்வழிகாட்டியாக வழிநடத்தினர், நண்பர் ஜோசப் பால்ராஜ் வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட விருந்து வைத்தார், நிதி நிர்வாகங்களை முகவை இராம் கவனித்துக் கொண்டதுடன், வெற்றியாளர்கள் தங்கும் இடம் மற்றும் விமான பயண முன்பதிவுகளை கவனித்துக் கொண்டார், திரு ஜெகதீசன் மணற்கேணி 2010 குழுமப் பொறுப்புகளை வகித்து பல்வேறூ கூட்டங்களை தலைமைத்தாங்கி நடத்தினார், போட்டியின் முடிவுத் தேர்வுகளை பாஸ்கர் மற்றும் குழலி ஆகியோர் வழிகாட்டினர்.

நிகழ்ச்சியில் கட்டுரை அனுப்பி கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி, வெற்றியாளர்கள் தவிர்த்து ஏனையோருக்கு பங்கெடுத்ததற்காக ஊக்கப்பரிசாக நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் படங்களுக்கும் ...
அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

மணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ...

மணற்கேணி 2010 - ன் வெற்றியாளர்கள் திரு லதானந்த்,செல்வன் ஜெ லியோ ப்ராங்களின், செல்வி வே.பத்மாவதி ஆகிய மூவரும் கடந்த சனி கிழமை (27 /08/2011) காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள் . கடந்த முன்று நாட்களாக அவர்கள் சிங்கப்பூரில் பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தார்கள் .இவற்றின் இடையே ஞாயிறு அன்று மாலை சிங்கை அன்-மோ-கியோ நுலகத்தில் உள்ள தக்காளி அறையில் (tomoto room ) "வாசகர் வட்டம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . அங்கு வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள் .பின் காலங்க் சமூக மன்றத்தில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


புகைப்படங்கள்

குழலி (எ) பொ.புருஷோத்தமன்

லதானந்த் தம்பதியினர் மற்றும் ரோஸ்விக்

கோவியார், பாதிரியார் பிலிப் சுதாகர் மற்றும் லியோ ப்ராங்க்ளின்
சிங்கப்பூர் எழுத்தாளர் சித்ரா ரமேஷ்
பாண்டித்துரை (எ) நீதிப்பாண்டி மற்றும் 'தங்கமீன்' பாலு மணிமாறன்

எழுத்தாளர் மற்றும் கவிஞ்ர் ஷாநவாஷ்
ஜோசப் பால்ராஜ் மற்றும் குழலி

பரிசுபெரும் வெற்றியாளர் செல்வி வே.பத்மாவதி


அங்க்மோக்கியோ நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சி

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கை வருகை


மணற்கேணி 2010 ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கும் இத்தருணத்தில் அதன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது, மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் திரு லதானந்த் , செல்வன் ஜெ லியோ ப்ராங்களின் மற்றும் செல்வி வே.பத்மாவதி ஆகியோர் இன்று காலை சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தை அடைந்தனர், வெற்றியாளர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்...

சிங்கை வலைப்பதிவர்கள் அவர்களை இன்று காலை சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தில் வரவேற்றனர்.


வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ;
நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்

வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்

குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ;

நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை


இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்

நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை,
நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)

பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்

நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

மணற்கேணி 2010 - வெற்றியாளர் நிகழ்ச்சிகள்.

மணற்கேணி 2010 முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் வரும் 27 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வர இருக்கின்றன.

வெற்றியாளர்கள்

தமிழ் அறிவியல் பிரிவு : திரு லதானந்த்
அரசியல் / சமூகம் : செல்வன் ஜெ லியோ ப்ராங்களின்
தமிழ்மொழி இலக்கியம் : செல்வி வே.பத்மாவதி

வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்
வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்

குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை

இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்

நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை, நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)
பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்

நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

மணற்கேணி-2010 அரசியல்/சமூகம் பிரிவில் வென்ற கட்டுரை - திரு லியோ பிராங்க்ளின் - சமச்சீர் கல்வி



மணற்கேணி - 2010 போட்டியின் அரசியல்/சமூகம் பிரிவில் சமச்சீர் கல்வி என்ற தலைப்பில் சிறந்த கருத்தாக்கத்தில் அமைந்த கட்டுரையை எழுதி அனுப்பிய திரு லியோ பிராங்க்ளின் அவர்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.




மணற்கேணி-2010 அரசியல்/சமூகம் பிரிவில் நடுவர்களின் மதிப்பீட்டின் படி வெற்றியாளராகத் தேர்வு பெற்று மணற்கேணி அமைப்பினுடைய அழைப்பினை ஏற்று ஒரு வார கால சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திரு லியோ ப்ராங்ளின் அவர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். போட்டியில் பங்குபெற திரு லியோ பிராங்க்ளின் அவர்கள் எடுத்துக்கொண்ட கட்டுரைத் தலைப்பு “சமச்சீர் கல்வி”. தற்சமயம் தமிழ் நாட்டு அரசியலில், கல்வித் துறையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சொல். சமச்சீர் கல்வியைப் பற்றி பல்வேறு கோணத்தில் அலசும் அவரது கட்டுரையை இங்கு வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.




சமச்சீர் கல்வி - திரு லியோ பிராங்க்ளின்





இன்றைய பயனற்ற கல்வியும் மாற்றத்திற்கான சமச்சீர் கல்வியும்

கல்வியில் மாற்றம் சமுதாய மாற்றத்திற்கான அடிப்படை. கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியாவிலும் தமிழகத்திலும் வழங்கப்படும் கல்வி குழந்தைகளின் வளமையான எதிர்காலத்திற்கேற்றதாக இல்லை. ஆள்வோருக்கும் சுரண்டுவோருக்கும் ஏற்றதாகவும் ஏற்றத்தாழ்வைப் பேணி வளர்ப்பதாகவும் அமைந்து விட்டது. எல்லோருக்கும் கல்வி, சமச்சீர் கல்வி, சிந்தனைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி என்பனவெல்லாம் எட்டாக்கனியாக உள்ளன. கல்விதான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. ஆனால் தமிழகத்தில் கல்வி மலட்டுக்கல்வியாகவும் வறட்டுக் கல்வியாகவும் சிந்திக்கும் திறனற்றவர்களை உற்பத்தி   செய்வதாகவும் உள்ளது. நமக்கான கல்வி எது என்ற தேடலில் நாம் இருக்கிறோம். நம்முடைய குழந்தைகளுக்கான சிறப்பான கல்வியை நாம் கொடுப்பது அடுத்து வரும் தலைமுறைக்கு நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த பணி. கற்போரின் ஆற்றல்களை மேம்படுத்தவும் கற்கும் அனுபவத்தை இனிமையானதாக்கவும் ஆக்குவதற்கான எளிய முயற்சிதான் திருப்புமுனை. முதலில் நம் குழந்தைகள் நன்கு எழுதவும் வாசிக்கவும் வேண்டிய தேவை உள்ளது. பள்ளியிலும் வாழ்விலும் அனைத்துக் குழந்தைகளும் வெற்றியடைய வேண்டும். மொழி என்பது மனிதரை சமூகமயமாக்குவதற்கான கருவியாக உள்ளது. தாய்மொழிக் கல்வியில்தான் சிந்தனை வளர்கிறது என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டு தத்தம் தாய்;மொழியிலேயே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையில் வழங்குகின்றன. அது மட்டுமின்றி நமது பண்பாட்டை அடுத்து வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதும் மொழியறிவுதான்.
  நம் பண்பாட்டின் மிகச் சிறந்த ஆற்றல்களை நம் குழந்தைகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதே சரியான கல்வி. குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சரியான கல்வியில்தான் ஒரு தேசத்தின் நம்பிக்கை மையம் கொள்கிறது என்பார் எராசுமுசு. நமது வகுப்பறைகளில் குழந்தைகளின் உணர்வுகளையும் ஊக்கங்களையும் கனவுகளையும் குழிதோண்டிப் புதைத்து விடுகின்றன. சமுதாயத் தளத்திலும் உணர்வுத்தளத்திலும் குழந்தைகள் தங்களை தக்க வைத்துக் கொள்வதற்கு சில திறன்களும் புரிதல்களும் அடிப்படை. உணர்வுத் தளத்தில் கீழிறங்கும் குழந்தைகளால் சமுதாயத் தளத்தில் எப்படி முன்னுக்கு வர முடியும்? தங்களைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் சரியான புரிதலைக் கொண்டிருக்கும் குழந்தைகளால் நாளைய சமுதாயத்திற்குள் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்க முடியும். மற்றவர்களின் உணர்வுகளையும் கண்ணோட்டங்களையும் புரிந்து கொள்வதும் வேறுபாடுகளை மதிப்பதும் ஆழ்ந்து கவனிப்பதும் கேள்விகளை எழுப்புவதும் உறவுகளை வளர்ப்பதும் சேர்ந்து செயலாற்றுகிற சிக்கல்களைத் தீர்க்கிற கலைகளை வளர்க்கவும் கல்வி துணை நிற்க வேண்டும். வாழ்க்கைதான் நாம் எழுதிப் பார்க்கும் கடைசித் தேர்வு என்பது கற்போரின் ஆழ்மனதில் பதிய வேண்டும். குடியோ போதையோ அடிதடியோ ரகளையோ வன்முறையோ சமுதாயத்தை நாசப்படுத்தும்போது அவற்றிலிருந்து மீள்வதற்கான வழியை நம்மால் கண்டடைய முடியும் என்றால் கல்வி நம்மை உருவாக்கியுள்ளது எனலாம். நமக்குள் எழும் சீற்றங்களையும் அச்சங்களையும் பதட்டங்களையும் நம்மால் மிகச் சரியாகக் கையாள முடிகிறதென்றால் கல்வி நமக்குள் நிலவிய கசடுகளை அகற்றியுள்ளது எனலாம். மற்றவர்களை வெறுக்கவும் பிறரின் வேறுபடும் தனித்தன்மைகளைக் கேலி செய்யவும் என்னையே நான் அழித்தொழிக்கும் பண்புகளையும் குணங்களையும்தான் கல்விக்கூடத்திலி;ருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் சரியான கல்வி கிடைக்கவில்லை என்றாகிறது. நாம் பெற்ற கல்வி சரியானதுதான் என்பதை வாழ்க்கை என்ற உரைகல்லில்தான் உணர்ந்து கொள்ள முடியும்.
2. பள்ளியில் குழந்தை தனது தன்மதிப்பை வளர்த்தெடுக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகிற்குள் நுழைவதற்கான முன்தயாரிப்பாக பள்ளி நாட்கள் அமைகின்றன. பள்ளி நாட்கள் பயனுள்ளதாக அமைந்திட தேவையற்ற தேவைகளின் மீதான அக்கறைகள் அகற்றப்பட வேண்டும். தங்களின் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டிருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்புணர்வையும் வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் இவற்றை வளர்க்கும் போது அவை அடுத்து வரும் முன் இளமைப் பருவத்தில் தோன்றும் தாறுமாறான பாலியல் உணர்வுகள், குடி, போதை, புகைப்பது உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் அடித்தளமிடுகின்றன. நட்பின் ஆழங்களையும் தன்னம்பிக்கையையும் இந்தப் பருவத்தில் அடைய முடியும். தன்விழிப்பு, உறவுகள் வளர்ப்பு, சொந்தமாக முடிவெடுத்துப் பழகுதல் போன்றவற்றிற்கான அடிப்படைக் கல்வியை குழந்தையாக இருக்கும்போதே கற்றுவிடுகின்றனர். முதல் வகுப்புக் குழந்தைகளால் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். உணர்வுகளையும் அவற்றை வெளிப்படுத்தும் சொற்களையும் ஒன்று சேர்த்து வெளிப்படுத்த முடியும். நான்காம், அய்ந்தாம் வகுப்புகளில் அவர்கள் கருணை, இரக்கம், கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, உணர்வுகளுக்கு இரையாகாமல் இருப்பது போன்றவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளும் போது பின்னால் உருவாகும் நட்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அடிப்படைகளாகவும் அவை விளங்குகின்றன. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பிற்குள் குழந்தைகளுக்கு சமூகத் தீய பழக்கங்கள் அறிமுகமாகிவிடுகின்றன.
3. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிக்கை (பிரிவு 26): “ கல்வி உரிமை ஒவ்வொருக்குமானது. தொடக்க நிலைகளில் கல்வி இலவயமானது. தொடக்கக் கல்வி கட்டாயமானதுஎன்கிறது. அனைத்துலக நாடுகளின் பொது அவையால் ஏற்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த ஆவணத்தில் 191 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. அதில் சமவாய்ப்பு அடிப்படையில் குழந்தைக்கான கல்வி உரிமையை முன்னேற்ற வழியில் அடைவதற்காக நாடுகள் தொடக்கக் கல்வியை கட்டாயமானதாகவம் இலவயமாகவும் வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. 2015க்குள்   அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வியை உலகம் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துலக நாடுகள் அவை உறுதி மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 45 கட்டாய இலவயக்கல்வியை பதினான்கு வயதிற்குட்பட்ட அனைவருக்கும் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று கால வரையறை செய்துள்ளது. அரசின் பல்வேறு கல்விக் குழுக்களும் இதை வலியுறுத்துகின்றன. எனினும் அரசுகள் இதில் அக்கறையோ ஆர்வமோ பொறுப்போ காட்டவில்லை. அறுபதுகளிலேயே எட்டிப் பிடித்திருக்க வேண்டிய ஒன்று அறுபதாண்டுகளைக் கடந்த பிறகும் வெறும் கனவாகவே உள்ளது. தொடக்கக் கல்வி நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை இலவயமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.   (மோகினி செயின் எதிர் கர்நாடக அரசு, 1993). அரசமைப்புச் சட்டத்தின் 86ஆவது திருத்தத்தின்படி, பிரிவுகள் 32, 226ன்படி, தொடக்கக் கல்வி உரிமை கோரி ஒருவர் நீதிமன்றம் செல்ல முடியும். இராதாகிருட்டிணன் குழு (1949), கோத்தாரி குழு (1966) உள்ளிட்ட இந்தியஅரசு அமைத்த கல்விக் குழுக்கள் தொடக்கக் கல்வியின் இன்றியமையாத தேவையை வலியுறுத்தியுள்ளன. அனைவருக்குமான தரமான கல்வியில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு முறைசாராக் கல்வியிலும் மாற்றுக் கல்வி மையங்களிலும் அக்கறை செலுத்துகிறது. இதனால் தரமற்ற, போதிய பயிற்சியற்ற அரைகுறை ஆசிரியர்களும் தரமற்ற கல்வியும் புற்றீசலைப் போன்று தோன்றியுள்ளன. அரசின் இந்த முயற்சி ஏற்கெனவே நிலவும் ஏற்றத்தாழ்வான சமுதாய அமைப்பை மேலும் நிறுவனமாக்கியுள்ளது. ஏழைகள், தலீத்துகள், பழங்குடியினர், சமய, பண்பாட்டு சிறுபான்மையினரின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. கிராமப்புற ஏழைகளுக்கும் தலீத்துகளுக்கும் பழங்குடியினருக்கும் ஏனைய விளிம்பு மக்களுக்கும் தரமான கல்வி எட்டாக்கனியாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கையும் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. மழலையருக்கான கல்வியும் மையங்களும் அரசினால் புறக்கணிக்கப்படுவதால் ஆறு வயதிற்குட்பட்ட 16 கோடி மழலையரின் கல்வி உரிமையும் பறிக்கப்படுகிறது.
பள்ளிக்கு முந்தைய கல்வியினால் பணக்காரர்களின் குழந்தைகள் பயனடைகின்றனர். ஏழைக் குழந்தைகள் கைவிடப்படுகின்றனர். அனைத்துலகக் குழந்தைகளுக்கான அமைப்பு கட்டாய இலவயக் கல்விக்கான வயது வரம்பைப் 18ஆகக் கொண்டுள்ளது. ஆனால் அரசு 14 வயது என்றாக்கியுள்ளது. இது கிராமப்புற மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கிறது. அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் பயனடையாமல் போக நேரிடுகிறது. அரசின் புதிய கல்விக் கொள்கை (1993) அனைவருக்குமான பொதுப் பள்ளியை வலியுறுத்துகிறது. கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டத்தை 2000ல் உருவாக்கியுள்ளது. எனினும் அரசமைப்புச் சட்டத்தின் 86ஆவது திருத்தம் உலக நிதியம், உலக வங்கியின் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற கல்வித் திட்டத்தையே கொண்டுள்ளது. நமது நாட்டுக் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி வழங்குவதற்குக்கூட அரசு வெளிநாட்டு நிதியுதவியை நாடுவது நாட்டிற்கும் அரசிற்கும் பெருத்த அவமானம். தொடக்கக் கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடும் தொடர்ந்து குறைவது கவலையளிக்கிறது. குறைவான நிதியிலும் 90 மூ ஆசிரியர்களின் ஊதியத்திற்காகச் செலவிடப்படுகிறது. எஞ்சிய தொகையில் தொடக்கக் கல்வியை செழுமைப்படுத்த முடியுமா? தொடக்கக் கல்வி என்றில்லாமல் உயர்கல்விக்கும்கூட எண்ணற்ற நிதியுதவிகளைப் பல்வேறு நாடுகளும் அளித்து கல்வியின் மீதான தங்களின் அக்கறையையும் பொறுப்பையும் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் நமது அரசுகள் காட்டும் மெத்தனமும் பொறுப்பற்ற போக்கும் நமக்கு அதிர்;ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவயக் கல்விச் சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. குழந்தைகள் நீண்ட தூரம் அலையத் தேவையில்லாமல் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகளைக் கட்ட வேண்டும். அவற்றில் வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள வசதியான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று எந்தக் குழந்தைக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. கட்டணம் கிடையாது. நுழைவுத் தேர்வு கிடையாது. யாரையும் தேர்ச்சியின்மைக்குத் தள்ளிவிடக்கூடாது. நிர்வாகக் குழுவில் பெற்றோர் 75 விழுக்காடு இடம் பெற்றிருக்க வேண்டும். குழு ஒப்புதலுடன்தான் ஆசிரியர்களை நியமிக்க முடியும். குறைபாடுள்ள குழந்தையையும் தவிர்க்கக்கூடாது. தனியார் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்க வேண்டும். இச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் இவற்றை கடந்த அறுபதாண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்தியாவின் நிலையில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தொடக்கக் கல்வி ஒரு முன்தேவை. சமூக-பொருளியல் வளர்ச்சிக்கும் மக்களின் அரசியல் பங்கேற்பிற்கும் கல்வி அடிப்படைத் தேவை. நிலவும் சமூக அமைப்பைக் கட்டிக் காப்பாற்றும் அடிமைக்கூலிகளையே தற்போதைய கல்வி மறுவுற்பத்தி செய்கிறது. எனினும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஊதியத்திற்காகவும் இக் கல்வியைப் பெற வேண்டியுள்ளது.
உலகமயமாதல், தனியார்மயமாதல் +ழலில் கல்வியை அளிக்கும் தனது முதன்மைப் பொறுப்பிலிருந்து அரசு கழன்று கொள்கிறது. தரமான கல்விக்காக அதிக நிதியும் மான்யமும் ஒதுக்க வேண்டிய அரசு குறைக்கிறது. கல்விக்குச் செலவிடுவதை சுமையாகவும் செலவினமாகவும் நட்டமானதாகவும் கருதுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை அரசு காற்றில் பறக்க விடுகிறது.
அரசின் மெத்தனத்தால் பெரும்பாலான கல்விக்கூடங்களில், குறிப்பாக, கிராமப்புறங்களில், பள்ளிகள் இரங்கத்தக்க நிலையில் உள்ளன. கட்டிடங்கள், விளையாட்டு திடல்கள், இருக்கைகள், கரும்பலகைகள், ஆசிரியருக்கான கற்பித்தல் கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், நூலகம், வாசிப்பறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் எண்ணற்ற பள்ளிகள் இயங்குகின்றன. சிறுமியரின் பள்ளியிடை நிறுத்தத்திற்கு கழிப்பறை வசதியின்மை முக்கியக் காரணமாக உள்ளது. மரத்தடிகளிலும் கூரை அல்லது ஓட்டுக் கட்டிடங்களிலும் பல பள்ளிகள் நடைபெறுகின்றன. கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் நூற்றுக்கணக்கான பிஞ்சு உயிர்கள் பலியான பேரவலம் நெருஞ்சி முள்ளாய் நம் நெஞ்சை இன்னும் நெருடுகிறது. அரசும் படித்தவர்களும் நாட்டை வஞ்சிப்பதன் அடையாளமாக அது காலாகாலத்திற்கும் இருக்கும்.
நம் குழந்தைகள் போதிய அளவு பள்ளிகளில் கற்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இயற்கையான, பண்பாட்டுச் சமூக சூழலிலிருந்து குழந்தைகளைப் பள்ளிகள் விலக்கிவிட்டன. எட்டாம் வகுப்பை எட்டிப் பிடிக்கும் மாணவர்களுக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியவில்லை. சாதாரணக் கணக்கும் தெரியவில்லை. அடிப்படைத் திறன்களும் ஆற்றல்களும்கூட அவர்களுக்குக் கைகூடவில்லை. படைப்பாற்றல் குறித்து சொல்லவே வேண்டியதில்லை. தூண்டலும் துலங்கலும் இலக்கும் நோக்கும் எதுவுமின்றி ஒரு இளைய தலைமுறை உருவாகிறது. இது குறித்தெல்லாம் ஆசிரியர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. செயல்வழிக் கல்வியை இழுத்து மூடும் சமூகவிரோதிகளாக ஆசிரியர்கள் மாறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பலமாக எழுந்துள்ளது.
6-14 வயதுக் குழந்தைகள் ஆறு கோடிப் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை. இதில் பாதிக்கு மேல் 59 விழுக்காட்டினர் சிறுமிகள். தாழ்த்தப்பட்ட-பழங்குடியினச் சிறுமிகளில் 50-56 விழுக்காட்டினர் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். பெற்றோரும் ஊராரும் கல்வித் திட்டத்தில், செயல்பாட்டில் பங்கேற்பதில்லை. சாதியம் புரையோடியுள்ளது. தொடக்கக் கல்வியைப் பொருத்தவரையில் நிதி, நிர்வாகம், கட்டுமான அமைப்பு அனைத்தும் கவலைக்கிடமாகி விட்டன. அரசியல் உறுதியின்றி தரமான கல்வியை எட்டிப்பிடிப்பது கானல் நீரே.
4. பீகார், சார்கண்ட் மாநிலங்களைவிட தொடக்கக் கல்வியின் நிலை தமிழகத்தில் மிக மோசம். 1,2,3 என எண்களை எண்ணக்கூடத் தெரியாத 2ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். இந்தியா முழுக்க 7இலட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மும்பையிலிருந்து செயல்படும்பிரதம்என்ற அமைப்பு ஆண்டு தோறும் இந்தியக் கல்விச் சூழல் குறித்து நாடு தழுவிய ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்த ஆண்டு இந்தியக் கிராமப்புற தொடக்கக் கல்வி குறித்து இந்தியா முழுவதும் 564 மாவட்டங்களில் 16,198 கிராமங்களைச் சேர்ந்த 7 இலட்சம் குழந்தைகளிடம் மிக விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 870 கிராமங்களைச் சேர்ந்த 31 ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் தமிழகப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். முனைவர்.வசந்தி தேவி. ‘ அய்ந்து ஆண்டுகள் பள்ளிக்குப் போகிற ஒரு மாணவனுக்கு ஒன்று, இரண்டு சொல்லத் தெரியவில்லை. 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனால் 5ஆம் வகுப்புத் தமிழ் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் 3 முதல் 5 வரையிலான வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஒன்றாம் வகுப்புப் புத்தகத்தைக்கூட வாசிக்கத் தெரியாதவர்கள் 54.3 விழுக்காட்டினர். இதுதான் தமிழகக் கிராமப்புறப் பள்ளிகளின் உண்மை நிலைஎன்று வேதனையோடு தெரிவிக்கிறார்.
     உளவியல்ரீதியாக ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தொடக்கக் கல்விக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. மக்குப் பிள்ளைதான் தனிப்பயிற்சிக்குப் போகும் என்ற நிலை மாறி இரண்டாம் வகுப்பு குழந்தைகூட தனிப்பயிற்சிக்கு அனுப்பப்படுகிறது.
     கல்வி முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்டது. இத்தனை பாகுபாடுள்ள கல்வி முறை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அய்ரோப்பிய நாடுகளில் தனியார் பள்ளி என்ற அமைப்பே இல்லை. உலகின் முன்னேறிய நாடுகளில் பள்ளிக் கல்வி எப்போதும் அரசின் பொறுப்புதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காட்டை இராணுவத்திற்கு ஒதுக்கும் அரசு 2 முதல் 4 விழுக்காட்டை மட்டுமே கல்விக்கு ஒதுக்குகிறது. பள்ளியில் பாடச் சுமை அதிகம் இருப்பதும் நம் நாட்டில்தான். அமெரிக்காவில் 10ஆம் வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் இங்கு 7ஆம் 8ஆம் வகுப்புகளிலேயே நடத்தப்படுகின்றன.
     தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்பது உலகில் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகள் தமிழில் பேசினாலே தண்டனை தருகின்றன. வசதியானவர்கள் தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கூடப் படிக்கவில்லை. இவர்களே அரசுப் பள்ளியின் தேவை அறியாத இவர்கள்தான் அரசின் கொள்கைகளை வகுக்கின்றனர்.; 80 விழுக்காடு குழந்தைகள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஆனால் கல்வி அமைப்பு அவர்களுக்கு எதிரானதாக உள்ளது. பெரும்பான்மையினரை வெளியேற்றும் இக் கருணையற்ற கல்வி ஒழிக்கப்பட்டாக வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே விதமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்விமுறை கொண்டு வரப்படவேண்டும்.
     கல்வி என்பது ஒரு மனிதனை வாழ்வுக்குத் தகுதிப்படுத்துவது, வாழ்விற்குப் பொருள் தருவது என்ற நிலை மாறிவிட்டது. கல்வி வாழ்க்கைக்காகவும் இல்லாமல் வேலைக்காகவும் இல்லாமல் வீணானதாக ஆகிவிட்டது. பத்துப் பதினைந்து ஆண்டுப் படிப்பில் ஒரு மாணவன் சில கேள்விகளுக்கு விடையளிக்க மட்டுமே கற்றுள்ளார். எந்த வேலைக்கும் தகுதியற்றவராக அவர் உருவாக்கப்பட்டுள்ளார். ஒரு நாளில் நடைபெறும் 10 குற்றங்களில் இரண்டு மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் தொடர்புடையதாக உள்ளது.
  மாற்றத்திற்கான சமச்சீர் கல்வி
கல்வியில் நாம் காண வேண்டிய அவசர, அவசிய மாற்றத்தை சமச்சீர் கல்வி வலியுறுத்துகிறது. தரமான கல்வியை வழங்குவதன் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் எது சரியான கல்வி என்பதை எடுத்துரைக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழு வகையான கல்விமுறைகள்
1.        மாநில வாரியக் கல்வி முறை
2.        மழலையர் பள்ளிக் கல்வி முறை
3.        பதின்மநிலை (மெட்ரிக்) கல்வி முறை
4.        ஆங்கிலோ-இந்தியக் கல்வி முறை
5.        கீழ்த்திசைப் பாடத்திட்டக் கல்வி முறை
6.        நடுவண் பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎசி)
7.        கல்வி, ஆராய்ச்சி, மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் (என்சிஆர்டி)

முதல் அய்ந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் கடைசி இரண்டும் நடுவணரசின் கட்டுப்பாட்டிலும் இயங்குகின்றன. மாநில அரசேகூட தில்லி நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி இந்திரா அம்மையார் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை நடுவணரசின் அதிகாரத்திற்கு மாற்றினார். இதனால் மாநிலங்களின் கல்வி உரிமை வெகுவாகப் பாதிப்பிற்குள்ளாகியது. மாநிலத்தின் உரிமைகளைப் படிப்படியாக விட்டுக் கொடுத்து விட்டு மாநில சுயாட்சி என்று பேசுவது நம் காதில் பூசுற்றுவதுதான். தமிழகத்தில் அனைவருக்குமான ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவர அதிகாரம் இருந்தும் மாநில அரசு அதை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுகிறது. பயிற்றுமொழி, பாடத்திட்டம், பள்ளிச் +ழல், மாணவர் உடல்-மன வளர்ச்சி, பொருளியல் நிலைமை போன்றவற்றில் இக் கல்வி முறைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று மிகவும் வேறுபடுகின்றன. இது பயனற்ற சமச்சீரற்ற கல்வி முறை. வசதிபடைத்தவர் - வசதியற்றோர் இடைவெளியை அதிகரிக்கிறது. அரசுகளும் அரசமைப்புச் சட்டமும் கல்வித் துறையும் இப் பிளவினையும் ஏற்றத்தாழ்வையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
சமச்சீர் கல்வி முறை தமிழகம் முழுக்க ஒரே பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறது. மாணவர்களின் வாழ்நிலை, கற்கும் திறன், சூழல் அடிப்படையிலான பாடங்கள், தாய்மொழித் தமிழில் கல்வி, ஆசிரியர் - மாணவர் தகவு 1:15, போதிய ஆசிரியர், கரும்பலகை, சீருடை, எழுதுபொருள் உள்ளிட்ட கல்விப் பொருட்களை மாணவர்களுக்கு இலவயமாக வழங்கல், நூலக-ஆய்வக வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள், நன்கொடை வாங்காமலிருப்பது, கல்வி உதவித் தொகை, தேர்வு, மதிப்பீடு ஆகியவற்றில் மாற்றம் போன்ற பல நல்ல கூறுகளை சமச்சீர் கல்வி உள்ளடக்கியுள்ளது.
பார்ப்பனர், முன்னேறிய சாதியினர், மேட்டுக்குடியினர், தரகு முதலாளிகள், பன்னாட்டுத் தரகர்கள் போன்றோருக்கு உகந்ததாக உள்ள கல்வியை அனைவருக்குமான தரமான கல்வியாக, குறிப்பாக, இன்றையக் கல்வியால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பெரும்பான்மை ஏழைக்குழந்தைகள் பயன்பெறக்கூடிய கல்வியாக மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தமிழ்க் குமுகத்தின் பெரும்பான்மை மக்களுக்கேற்ற வேளாண்மை, தொழில், கைவினைகள் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற வேண்டும். தன்னலம், போட்டி, பொறாமை, குமுக அக்கறையின்மை, அயல் நாட்டு- பண்பாட்டு பித்து, தனியார்-நகர்மயத்தால் ஊர்களின் அழிவு, நுகர்வு வெறி போன்றவற்றை நாளும் வளர்க்கும் இன்றைய கேடுகெட்ட, படைப்புத் திறனற்ற, மலட்டுத்தனமான, மனப்பாடக் கல்வியை மாற்றி வாழ்க்கைக் கல்வியைக் கொண்டுவரப் பாடுபட வேண்டியது நம் அனைவரின் உடனடிக் கவனிப்பாக உள்ளது.
பாடச் சுமைகள் குறைக்கப்பட வேண்டும். சமூக அநீதிகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் போக்குவதற்குக் கல்வி துணை நிற்க வேண்டும். சமூக மாற்றங்களை உருவாக்குவதற்குக் கல்வி ஒரு கருவி. கல்வித் திட்டத்தில் உள்ள கோளாறின் காரணமாகவே ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். மறுபடியும் இக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவருவதற்கும் தொடக்கக் கல்வியில் கவனம் செலுத்துவதற்கும் அரசியல் உறுதி தேவை. ஏழைகளின் கல்வித் தேவையை அடுத்தடுத்து வந்த அரசுகள் காற்றில் பறக்கவிட்டுள்ளன. பள்ளிக்கு வெளியில் வாழ்க்கையோடு அறிவைப் பொருத்திப் பார்க்கும் திறனை மாணவர்கள் பெற வேண்டும்.   மனப்பாடக் கல்வி மாணவரின் மண்டைச் சுரப்பையே வற்றிப் போகச் செய்து விட்டது. கணக்கு அறிவியல் இயற்பியல் விதிகளைக்கூட மனனம் செய்யும் அவலத்தில் மாணவர்கள் இருப்பது ஆரோக்கியமான கல்வி முறையாகாது. மனப்பாடக் கரையான் கற்றுக் கொள்ளும் முறையை அடியோடு நாசமாக்கி விட்டது. பெருங்கேடாக ஆசிரியர்களும் மாணவரின் மனப்பாடத் திறனை ஊக்குவிக்கின்றனர். சொந்தமாக மாணவர்கள் சிந்தித்து அறிவைப் பெறுதல் என்பது மனனம் அணை போட்டுத் தடுத்து விட்டது. எனவே   கற்றுக் கொள்தல் என்பதை வலியுறுத்துவது இன்றைய காலத்தின் அவசியத் தேவை.   பள்ளி வளாகத்திற்குள்ளும் பாடத்திட்டத்திற்குள்ளும் மாணவர்களை முடக்கிவிடாமல் அவர்களின் படிப்பைச் செழுமைப்படுத்தும் வகையில் அவர்கள் வெளிப்புறச் சூழலுக்குத் தங்களை முழுமையாகத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.    கறாரான தேர்வு முறைகளை மாற்றியமைக்க வேண்டும். வகுப்பறைப் பாடங்களோடும் அன்றாட படிப்போடும் தேர்வினை தொடப்புபடுத்தும் போது தேர்வு என்பது   மாணவரை ஆண்டிறுதியில் அச்சுறுத்திக் கொல்கிற பூச்சாண்டியாக மாறிவிடாமலிருக்கும். எனவே   தேர்வு முறையை முற்றாக மாற்றியமைப்பதின் தேவையை நாம் அதிகமாக உணர வேண்டும். இத்தகைய புதிய அணுகுமுறைகளைக் கல்விக்   குழு அரசிற்குப்   பரிந்துரை செய்துள்ளது.அறிவ எப்படி மனிதருக்குள் ஊற்றெடுக்கிறது என்பதையும் குழு தெளிவுபடுத்தியுள்ளது. தகவல்களைச் சேகரிப்பது என்பது அறிவாகாது. குழந்தை தனது படைப்பாற்றல் அனுபவங்களிலிருந்துதான் அறிவை உருவாக்குகிறது. குழந்தையின் உலகத்தில் செயல்பாடே மையம் என்பதை நாம் உணர்தல் வேண்டும். குழந்தை தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடவும் பொருட்களைக் கையாளவும் அவற்றின் இயல்புத் தன்மையையும் சமூகத் தன்மையையும் கண்டறியவும் நமது மூலாதாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த அறிவைக் குழந்தைகள் பெறுவதிலும் கற்றலின் இனிமையை உணரும் வகையில் பாடச் சுமையை அகற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உள்ளுர் அறிவும் மரபார்ந்த திறன்களும் பாடத்திட்டத்திற்குள் வரவேண்டும். தாய்மொழிக் கல்வியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். அவரவர் தாய் மொழியிலும்   ஆங்கிலத்திலும்   எழுதவும் பேசவும் போதிய பயிற்சிகள் தேவை. பாடச் சுமையைக் குறைப்பதுடன் இது வரை புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் சேர்க்கப்படவும் வேண்டும். எடுத்துக்காட்டாக இதுவரையில் சமூக அறிவியலில் பாலியல் நீதி பழங்குடியினர் தலீத்துகள் சிறுபான்மையினர் குறித்த அக்கறை போன்றவை இடம் பெறாமலிருக்கின்றன. வரலாறு என்பது குழந்தைகளின் கடந்த காலம் குறித்த நினைவையும் கருத்தையும் செழுமைப்படுத்துவதாக அமைய வேண்டும். சமூக அறிவில்களைத் தரக் குறைவாகவும் இயற்கை அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை முக்கியமானவைகளாகவும் கருதும் போக்கும் களையப்பட வேண்டும். இந்தப் போக்கு நீடித்தால் நாம் எதைக் கற்க வேண்டும் என்பதைச் சந்தையே தீர்மானிக்கும் என்பதை   நாம் ஒப்புக்கொள்வதாகிவிடும்.

அமைதி சார்ந்த மதிப்பீடுகளான விடுதலை நீதி பன்முக வாழ்க்கைப் போக்குகள் மீதான மரியாதை போன்றவற்றை உருவாக்குவதிலும் விரிவாக்குவதிலும் சமூக அறிவியலின் பங்கு கணிசமானது. ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமாகச் சிந்திக்கவும் இம் மதிப்பீடுகளைத் தகர்த்தெறியும் சமூகத் தீய சக்திகளை எதிர்த்துப் போராடவும் தனது தனித் தன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்குத்   தேவையான அறிவு ஒழுக்க ஆற்றல்களை வழங்குவது சமூக அறிவியல் என்பதை நாம் மறந்து விடாதிருக்க வேண்டும். கற்றுக் கொடுக்கும் முறையிலும் மாற்றம் வேண்டும். ஆசிரியர் பேசுவதும் மாணவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதுமாகிய வகுப்பறைச் சூழல் உரையாடல் வடிவமெடுக்க வேண்டும். வெளியிலுள்; கல்வி சார்ந்த குழுக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எல்லாத் தரப்பினரையும் மதிக்கக்கூடிய குணம் மாணவர்களிடம் உருவாகும். சமூகச் சிக்கல்கள் குறித்த பன்முகப்பார்வையும் ஏற்படும். சமூகச் சிக்கல்கள் எப்படித் தங்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் அவர்கள் கண்டறிய வேண்டும். தலீத் மக்கள் பழங்குடியினர் ஊனமுற்ற குழந்தைகள் பெண் குழந்தைகள் சிறுபான்மையினர்   குறித்த தவறான கருத்துக்களும் முற்சார்பு எண்ணங்களும்   மாணவர்களிடம் உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
  அரசியல் சாசனம் சுட்டிக்காட்டுகிற சமத்துவம் கட்டிக்காக்கப்பட வேண்டுமானால் ஆசிரியர்கள் எல்லாக் குழந்தைகளையும் சரிசமமாக நடத்துவதற்குப் பயிற்சி பெற வேண்டும். மாணவர்களைப் புரிந்து கொள்ள அவர்கள் தங்களுடன் பள்ளிக்குக் கொண்டுவரும் பன்முகக் கலாச்சார-சமூக- பொருளாதாரப் பின்புலங்கள் பற்றிப் போதிய தெளிவும் அறிவும் ஆசிரியர்களுக்குத் தேவை. ஒரு குழந்தை எத்தகைய சூழலிலிருந்து வந்தாலும் சமத்துவம் சகோதரித்துவம் மதச்சார்பற்ற தன்மை போன்றவற்றை அதனிடம் உருவாக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. மோசமாக சமூகச் சூழ்நிலைகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. அவற்றை மாற்றியமைப்பதற்குத்தான் ஆசிரியரின் முயற்சியும் உழைப்பும் தேவைப்படுகிறது. மாணவரிடம்; உருவாக்கப்பட   வேண்டியது ஒற்றைப் பரிமாணப் பார்வையல்ல. அவர்களின் தேவை பன்முகப் பார்வை. உள்ளுரில் தொடங்கி உலகளாவிய வகையில் அறிவுச் செழுமையை மாணவர்கள் பெறுவதை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இராசசுதான் என்றாலே ஒட்டகமும் பாலைவனமும் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கூட்டிக் கொண்டு போய் அங்கு நிறுத்தும் போதுதான் பசும் சோலைகளும் அங்கு உள்ளன என்பது அவர்களுக்குப் புரியும்.; அதிக வெப்பமான அந்தப் பகுதி மக்கள் எதற்காக அதிக ஆடைகள் உடுத்துகின்றனர் என்ற கேள்வி சூழலின் தாக்கத்தினால் அவர்களிடம் எழவேண்டும். கணிதப்பாடத்தையும் கூட தர்க்கம் சரியாகச் சிந்தித்தல் என்ற அடிப்படைகளில் மாற்றியமைக்க வேண்டும். எந்திரத்தனமான அணுகுமுறை கைவிடப்படவேண்டும். அறிவியலை மனனம் செய்வதை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும். தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி வளர்ந்து வரும் இன்றையச் சூழ்நிலையில் அறிவியல் அறிஞர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும்   சுற்றிப் புனித வட்டம் எழுப்புவதை நிறுத்த வேண்டும்.

கல்வியின் மீதும் மாணவர்களின் மீதும் உண்மையான அக்கறையோடு கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவோரின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் உள்வாங்கிக் கொண்ட வகையில் அணுகுமுறை கல்வியில் பின்பற்றப்பட்டிருக்குமேயானால் இந்தியச் சமூகத்;தில்   மாபொரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். காலந்தாழ்;த்தியேனும் இத்தகைய கருத்துகள் முகிழ்த்துள்ளதை கண்டு நாம் மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் இவற்றை அரசு ஏற்று எப்போது நடைமுறைப்படுத்துமோ அப்பொழுதான் கல்வி என்பது மாணவர்களின் அறிவையும் மனதையும் உணர்வையும் மழுங்கடிக்கிற கருவியாக இல்லாமல் அவர்களை உருவாக்குகிற அவர்களுக்குப் பன்முகப்பார்வையளிக்கிற ஒன்றாக இருக்கும். கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் வேறுபட்ட மாற்றுக் கல்விக்கான இப்பரிந்துரைகள் முழமையாக ஏற்கப்படவும் நடைமுறைப்படுத்தவும் பாடுபட வேண்டியது அவசரக் கடமை. சரியான கல்வியே சரியான மாணவர்களை உருவாக்கும். சரியான மாணவர்களே சரிந்து கொண்டிருக்கும் சமூகத்தைச் சரி செய்யவும் முடியும். எனவே சரியான கல்வி சரியான சமூகத்தைச் சென்றடைவதற்கான சரியான   முகவரி. முகவரியைத் தொலைத்துவிட்டு நமது இலக்குகளை அடைந்துவிட முடியாது. வெறுமனே ஊதியப் பெருக்கத்திற்காக மட்டும் போராடிப் போராடி ஊதிப்பெருத்துப்போன சமூக அக்கறையற்ற ஒரு கூட்டத்திற்குப் பெயர்தான் ஆசிரியச் சமுதாயம் என்கிற தீராப் பழியைத் துடைத்தெறியும் வகையில் ஆசிரியர்கள் கல்விக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முனைப்போடு களம் நிற்க வேண்டும். உண்மையில் இந்தப் பரிந்துரைகள் ஆசிரியர்களிடமிருந்து வந்திருக்க வேண்டும். இப்பொழுதுகூட ஆசிரியர்கள் உரத்த குரல் எழப்பிப் போராட முன்வராவிட்டால் இப் பரிந்துரைகள் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருக்கும். சரியான முறையான சத்தான முழமையான கல்வி நம அனைவரின்   உரிமை நாம் நமது குழந்தைகளுக்காகக் கீழ்க்கண்டவைகளைக் கடைப்பிடிப்போம்.

1.        குழந்தைகள் அவர்களுக்குள்ளும் தங்களின் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் என்ன பேசுகின்றனர் என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

2.        வகுப்பறை வீடு போன்ற மாறுபட்ட சூழல்களில் குழந்தைகள்   எப்படி இருக்கிறார்கள் எனக் கவனிக்க வேண்டும்.

3.        அவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எனக் கவனிக்க வேண்டும். குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

4.        குழந்தைகள் எப்போதும் தங்களோடு ஒரு குறிப்பேட்டை வைத்திருக்கப் பழக்க வேண்டும். அவர்கள் எங்கெங்கு சென்றார்கள் என்னன்ன பார்த்தார்கள் எதையெதை விரும்பினார்கள் என்று எழுதி வைக்கச் சொல்ல வேண்டும்.

5.        அடிக்கடி குழந்தைகளை நேர்முகம் கண்டு அவர்களின் விருப்பு வெறுப்புகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பற்றி என்ன கருதுகிறார்கள்; என்று கவனிக்க வேண்டும்.

6.        தங்களின் பள்ளி பற்றியும் வாழும் சூழல் குறித்தும் மனதில் எத்தகைய பிம்பங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள   வேண்டும்.



7.        குழந்தைகள் சேமிக்கவும் சேமிப்பின் ஒரு பகுதியை ஏழ்மையில் வாடும் மனிதருக்குச் செலவிடப் பழக்கவும் வேண்டும். அப்போதுதான் தங்களாலும் பிறருக்குச் சிறிய அளவிலேனும் உதவ முடியும் என்பது அவர்களுக்குப் புரியும். நல்ல பயனுள்; பணிகளுக்காகவும் தேவைப்படும் மனிதருக்காகவும் தங்களின் பணம் பயன்பட்டதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி கொள்வர்.

ஏன்ன அடுத்த முறை உங்கள் பிள்ளைகளைச் சற்றேனும் வேறுபாடாக நடத்துவீர்களா? பெரிய பூனை சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த தாய்ப்பூனையும் தகப்பன் பூனையும் நீங்கள் சொல்வதின்படிதான் எங்கள் குழந்தைகளை நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றனர். பிறகு ஏன் உங்கள் போக்கினை   மாற்றிக் கொண்டீர்கள் என்று பெரிய பூனை கேட்டது. எல்லாம் இந்த மனிதர்களைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்டதன் விளைவுதான். அவர்களைப் போல நாங்களும் அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்று கருதினோம். அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்று எண்ணினோம். ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளையாகச் திரும்பச் சொல்லித் திரிந்தோம். அடியாத மாடு படியாது என்று எந்த நேரமும் கையில் குச்சியோடு அலைந்தோம். ஏங்கள் குழந்தைகளை மனிதர்களைப் போலவே மிரட்டினோம். உருட்டினோம். திட்டினோம். கண்ணை நோண்டுவோம் சாக்கிரதை என்றோம். அடித்துத் துவைக்கிற ஆசிரியர்களாகப் பார்த்து எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். துணியைக் கூடக் கிழிந்து போய்விடக் கூடாது என்று பார்த்துப்   பார்த்துத் துவைக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளைக் கண்மண் தெரியாமல் அடிக்கிறார்கள். எங்கள் முயற்சிகள்   ஏல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது. இப்போதுதான் எங்களுக்கும் உண்மைகள் புரிகின்றன. இனி ஒருக்காலும் நாங்கள் மனிதர்களைப் பின்பற்றிப் பிள்ளை வளர்க்க மாட்டோம் என்று இரண்டு பூனைகளும் சூளுரைத்தன. அனுபவங்களிலிருந்து பூனைகள் கூடப் பாடம் கற்றுக் கொள்கின்றன. தேவைப்பட்டால் புலியாகவும் மாறிவிடுகின்றன.
  நாம்? ..?. .?

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP