சிங்கை தமிழ் பதிவர்கள் – இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம்.
சிங்கைவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு இன்றைய நாள் மிக இனிய நாளாக அமைந்தது என்றால் மிகையாகாது. சிங்கைப் பதிவர்கள் வாராந்திர, மாதாந்திர கூட்டங்களைக் கூட்டி, பல முக்கிய முடிவுகளை எடுத்து, மணற்கேணி, சிங்கை நாதன் அண்ணுக்கான உதவி போன்றவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்ததே…
அந்த வரிசையில் சிங்கையில் வெகுசிறப்புடன் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய ஆரவலர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நமது பதிவுலகத்தினை அறிமுகம் செய்து அவர்கள் அனைவரையும் பதிவர்களாக்கி, தமிழ் வலையுலகினை மென்மேலும் சீர்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்றைய (23 ஆகஸ்ட்) கூட்டத்தினை ஏற்பாடு செய்து, பதிவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பாலமாக இருந்தார் பதிவர் பாண்டித்துரை அவர்கள். மிகச்சரியாக மாலை மணி 4.30க்கு அங் மோ கியோ வட்டார நூலகத்தில் உள்ள தக்காளி அறை (TOMOTTO ROOM)-யில் கூட்டம் களைகட்ட ஆரம்பித்தது. கூடி இருந்த மக்களுக்கு முதலில் சுவையான சூடான வடை மற்றும் தேநீர் பரிமாறப்பட்டு அனைவரையும் இருக்கையில் அமரவைத்து கூட்டம் ஆரம்பமானது.
முதலில், கூட்டத்திற்கு இடஉதவி கொடுத்ததோடு மற்றுமில்லாமல் கூட்டம் முடியும் வரை உடனிருந்து உதவிகள் புரிந்த, இணை நூகலர் நிர்மலா அவர்களுக்கு நன்றி தெரிவித்தபின், பதிவர்களின் அறிமுகம் ஆரம்பமானது.
குழலி, கோவிகண்ணன், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, முகவை ராம், ஜெகதீசன், பித்தன் ஜி, ராம் சி.எம், ஞானசேகரன் தங்களையும், தங்களின் பதிவுகளையும் தாங்கள் விரும்பி எழுதும் தலைப்புகளைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.
இலக்கிய ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அனைத்து பதிவர்களாலும் தங்களின் அனுபங்களையே விளக்கமாக கொடுத்ததும் அனைவரின் முகத்திலும் இலக்கிய ஆர்வத்திற்கும் மேல் இணைய ஆர்வம் முளை விட்டதை கண்கூடாக் கண்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்களிலேயே சிங்கையிலிருந்து இன்னும் பல தரமான பதிவர்கள் நம் உலகினில் நுழையப்போவது உறுதி.
டிஸ்கி 1:
டிஸ்கி 2:
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திரு பாண்டித்துரை மற்றும் சிங்கை வாசகர் வட்டக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.