"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator
Showing posts with label வெற்றியாளர். Show all posts
Showing posts with label வெற்றியாளர். Show all posts

மணற்கேணி - 2010 இலக்கியப் பிரிவு வெற்றியாளர் !

மணற்கேணி - 2010 இலக்கியப் பிரிவு வெற்றியாளர் !

மணற்கேணி - 2010 போட்டியின் இலக்கியப் பிரிவின் வெற்றியாளர் குறித்து அறிவிக்கிறோம். இந்தப் பிரிவில் 'நாட்டுப்புற இலக்கியம்' என்ற தலைப்பில் சிறந்த கருத்தாக்கத்தில் அமைந்த கட்டுரையை எழுதி அனுப்பிய திருவாட்டி, கவிஞர் 'வே.பத்மாவதி' வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கவிஞர் வே.பத்மாவதி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் பிரிவின் வெற்றியாளரான மூன்றாம் வெற்றியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

அன்புடன்
மணற்கேணி 2010 குழு,
சிங்கப்பூர்.

சிங்கையில் சிங்கங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன...

சிங்கையில் பதிவர்கள் சேர்ந்து இயங்கி வரும் மணற்கேணி குழுமம் நடத்திய கட்டுரைப் போடடிகளின் வெற்றியாளர்கள் சிங்கை வந்து சேர்ந்தனர். 


வெற்றி சிங்கங்கள் தற்சமயம், சிங்கைப் பதிவர்களுடன் மேற்குக் கடற்கரைப் பூங்காவில் சந்தித்து இந்த மாலை வேளையை இனிதாகக் கழித்து வருகின்றனர். இதைப் பற்றிய விரிவான பதிவு விரைவில் வெளிவரும். அதற்கு முன்பு இங்கு நாங்கள் மகிழ்வதை, புகைப்படங்கள் மூலம் உலகத் தமிழ் வலைப் பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.



தருமி ஐயா




 பிராபகர்


தேவன்மாயம்



மணற்கேணி - 2009 வெற்றியாளர்கள் சிங்கை வருகை !

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய மணற்கேணி - 2009 கருத்தாய்வு போட்டிகளின் வெற்றியாளர்களான திரு தருமி, திரு தேவன்மாயம் மற்றும் திரு பிரபாகர் ஆகியோர் வரும் சனிக்கிழமை அன்று சிங்கை வந்து போட்டியின் நிறைவை துவங்குகிறார்கள்.

நிறைவு நிகழ்ச்சியாக

1. நூல் வெளியிடு
2. கலந்துரையாடல்
3. பதிவர் சந்திப்பு

ஆகியவை நடை பெற இருக்கின்றன, இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நாளை முதல் வெளிவரும்.

மணற்கேணி - 2009 இலக்கிய பிரிவு வெற்றியாளர் !

சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்திய மணற்கேணி 2009, இலக்கிய பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.

இலக்கியப் பிரிவுக்கும் 10 கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, இருந்தாலும் மிகவும் சிறப்பான கட்டுரை என்று தமிழார்வள நடுவர்களால்
தமிழர் இசை பற்றிய கட்டுரை எழுதிய திரு பிரபாகர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் 'மணற்கேணி' சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி குழுவினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இலக்கிய கட்டுரை வரைவாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழர் இசை குறித்த திரு பிராபகர் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

- மணற்கேணி 2009 ஒருங்கிணைப்பாளர்
ஜோசப் பால்ராஜ்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP