"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator
Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

செந்தில்நாதனுக்கு இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது !

நல்லிதயம் கொண்ட அன்பானவர்களே,


நமக்கு நன்கு அறிமுகம் ஆகியுள்ள சிங்கை செந்தில் நாதனுக்கு, இன்று காலை சிங்கை நேரப்படி 10.00 மணிக்கு (இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு) இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நுண்கிருமி (வைரஸ்) காய்சலால் நலிவுற்ற செந்திலின் இதயம், துடிப்பு எண்ணிக்கையைக் குறைக்க மூச்சு திணறலில் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துக் கொண்டிருந்தார், பிறகு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் வரை சமாளித்து வந்தார், பின்பு பேஸ் மேக்கரிலும் இதயச் செயல்பாடுகள் குறைய ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, மாற்று இதய சிகிச்சை தான் ஒரே வழி மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால் தற்காலிகத் தீர்வாக மின்கலம் மூலம் இயங்கும் செயற்கைக் கருவி வழியாக இதயம் செய்யும் இரத்த ஓட்ட செயல்பாடுகள் சீராக்கப்பட்டது. உடல் நிலையும் நன்கு தேறி வர ஒராண்டுகாலமாக பகுதி நேரமாக பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து செந்திலைத் தொடர்பு கொண்டு மாற்று இதயம் கிடைத்துள்ளதாகவும், இன்று காலை 10:00 மணிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை ஏழுமணிக்கு மருத்துவமனையில் செந்தில் சேர்ந்துள்ளார், முதல் நிலை மருத்துவ சோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளது. 10: 00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.

நல்லிதயங்களே, செந்திலின் இதய சிகிச்சை நல்லமுறையில் நடந்து, விரைவில் நலம் பெற உங்களுக்கு தெரிந்த வகையில் வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் செய்யுங்கள்.

கூடவே செந்திலின் இதயமாகச் செயல்படப் போகின்ற அந்த முகம் தெரியாத (மூளைச் சாவு) கொடையாளியின் ஆன்ம சாந்திக்கும், அவரின் இல்லத்தினரின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.

இணைய போட்டிகள் / நிகழ்ச்சிகள் பணால் ஆவது ஏன் ?

போட்டி நடத்துவதன் மூலம் நாங்கள் கற்றவை :

1. போட்டி நடத்தும் குழுவினர்களும் அவர்களை ஊக்குவிக்கும் சில நண்பர்கள் தவிர்த்து போட்டியை எல்லோருமே ஊக்கப்படுத்த முயற்சிக்கமாட்டார்கள். ஊக்கப்படுத்த நினைக்கும் சிலர் முயற்சியும் எடுக்க மாட்டார்கள். இது பொதுவான நடைமுறைதான், போட்டி நடத்தும் குழுக்குள் இதைக் கருத்தில் கொண்டு போட்டியை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும், இணையத்தில் எழுத்துவழியான இலக்கிய போட்டி என்பது கமல்/ரஜினி படங்கள் ரிலிஸ் ஆவதைப் போல் எல்லோரும் பேசுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எந்த ஒரு போட்டிக் குழுவும் ஏற்படுத்திக் கொண்டால் போட்டி நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுவிடும்

2. போட்டி அறிவித்தாகிவிட்டது, இனி ஆக்கங்கள் வந்துவிடும் என்று இருந்துவிட்டால் கிடைக்கும் போட்டி ஆக்கங்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கும், போட்டி குறித்த அறிவிப்புகளையும், அதன் தொடர்பிலான சுவையான தகவல்களையும் தருவதன் மூலமே போட்டியில் கலந்து கொள்ள தூண்டமுடியும். எந்த ஒரு நிகழ்ச்சியும் விளம்பரம் இல்லாமல், அதுபற்றிப் பேசப்படமால் பரவலாக எல்லோரையும் சென்று சேராது.

3. போட்டி நடத்தும் குழுவினர் அனைவரும் இயன்றவரை போட்டிக்குரிய பணிகளை பிரித்துக் கொண்டு தன்னார்வத்துடன் செய்தால் மட்டுமே போட்டியின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து வெற்றியாளர்களை மனநிறைவு அடையச் செய்யும்

4. கவர்ச்சியான பரிசு அறிவிப்புகள் மிகுதியான போட்டியாளர்களை ஈட்டித்தரும் என்பதைவிட சிறுகதை / கதை / கவிதை போன்ற சிற்றிலக்கிய போட்டிகளுக்கே மிகுதியானவர்கள் பங்குபெறுகிறார்கள்.

5. நல்ல கட்டுரைகளை எழுதவேண்டும் அதன் மூலம் தம்மை வெற்றிகரமான சமூகப் பார்வையாளனாக / எழுத்தாளனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுவோர்கள் எழுத்தை நேசிப்பவர்களில் இரண்டு விழுக்காடு கூட இல்லை

6. ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் வெற்றிப் பெறாவிட்டாலும், அவர்கள் கலந்து கொண்டதற்கு ஒரு மின் அஞ்சல் கூட நன்றி சொல்லிப் போடவில்லை என்றால் அடுத்த முறை அவர்கள் கலந்து கொள்ளவே யோசிப்பார்கள் அல்லது புறக்கணித்துவிடுவார்கள்

7. போட்டி நடத்துவது குறித்து போட்டி நடத்தும் குழு முன்கூட்டிய திட்டவரைவை தமக்குள் விவாதிக் கொள்ளாவிட்டாலோ, முழுமையான திட்ட வரைவை கொண்டிருக்காவிட்டாலோ போட்டியை வழி நடத்துவதில் பல இடையூறுகள் வரும்


8. போட்டியிடுபவர்களில் சிலர் ஏற்கனவே வெளியானதை இணையத்தில் இருந்து அப்படியே எடுத்தும் அனுப்புகிறார்கள், இவற்றை சரியாக கவனிக்காமல் ஒருவேளை அந்த போட்டியாளர் வெற்றியாளர் ஆனால் பின்னர் பெரிய சர்சையே ஏற்படும்

9. போட்டியின் வெற்றியாளர்கள் பரிசு பெற வர இயலாத நிலையில் மாற்று ஏற்பாடுகளாக அடுத்த ஒருவருக்கு வெற்றியாளர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்கூட்டிய திட்டங்கள் வைத்திருக்க வேண்டும்


10. போட்டியை வழி நடத்த ஒரு தலை மிகவும் தேவை, ஆனால் அந்த தலை தலையாரியாகவோ நாட்டாமையாகவோ மாறியானால் பிறர் தன்னார்வத்தால் வேலை செய்ய முன்வரமாட்டார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் பொறுமையானவரே போட்டியை நடத்தும் குழுவிற்கான தலையாக இருப்பது போட்டியை வெற்றியாக்கும். போட்டி நடத்தும் குழுவிற்குள் ஒருவர் டாமினேசன் செய்ய நினைத்தால் அந்த அமைப்பே அடுத்தக் கட்டத்திற்குள் செல்லாமல் களைந்துவிடும்


இவற்றில் ஒரு சில எங்கள் குழு சந்திக்க நேரிட்டது, பிற குழுவிலும் இவை நடந்தேறி உள்ளன. போட்டி நடத்துபவர்களும், போட்டியில் கலந்து கொள்வோரும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக தொகுத்து இருக்கிறோம், இங்கு போட்டி போட்டி என்று ஒரு குறியீடாகத்தான் கொடுத்து இருக்கிறோம், இணைய வெளி சார்பாக ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளும் இது பொதுவானது தான்

*****

அன்பான வலைப்பதிவர்களே, எழுத்தாளர்களே, மாணவ/மணிகளே மற்றும் வாசகர்களே, எங்களது (சிங்கை தமிழ் வலைப்பதிவ்ர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம்) மணற்கேணி - 2010 போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர நாளை இரவு 12:00 மணி (இந்திய நேரப்படி) வரை மட்டுமே நேரம் உள்ளது, எழுதி அனுப்பாமல் வைத்திருந்தால் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள், கடைசி நேரத்தில் அனுப்பலாம் என்று வைத்திருந்தால் ஒருவேளை மின்வெட்டின் காரணமாக இணைய இணைப்பு கிடைக்காமல் போகலாம், கணிணி செயல்படாமல் போகலாம் அல்லது வேறு ஏதோ முதன்மையான வேலை இடையூறு வரலாம். எனவே காலவிரயம் செய்யாமல் முடிந்தவரையும் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் அனுப்பி வைத்துவிடுங்கள்.

போட்டிக் குறித்த அனைத்து தகவல்களுக்கான இணைய தளம் சுட்டி

அன்புடன்
மணற்கேணி - 2010
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
மற்றும் தமிழ்வெளி இணைய தளம்

24,25,26,27,28,29,30,31

மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


மணற்கேணி போட்டித் தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரப் போகும் வெற்றியாளர்களை வரவேற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளமான மெரீனா பே சாண்ட் காணப் போகும் வெற்றியாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.



போட்டி நிறைவுற இன்னும் எட்டே நாட்கள் உள்ளன, எளிமையான போட்டித் தலைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம், சமூகத்திற்கும் சிந்தனைகளுக்கு உடையவர் நீங்கள் என்றால் அதைக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்பலாமே.

போட்டிப் பற்றி அனைத்து விவரங்களுக்குமான சுட்டி :



தமிழ்மணம் 2010 போட்டி வெற்றிக்கு- சில குறிப்புகள் !

என்னதான் வலைப்பூன்னு வலைபதிவைக் குறிப்பிட்டாலும் வெளம்பரம் இல்லை என்றால் காகிதப்பூ தான். தமிழ்மணம் விருதில் பலர் பதிவுகளை பரிந்துரைத்திருப்பீர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு 1500 பதிவர்களுக்கு மேல் பங்கு பெறும் நிகழ்வாக அமைந்திருக்கிறது தமிழ்மணம் 2010 போட்டி, குழுவாக இயங்கும் பதிவர்களுக்குள் அந்த குழுவின் தலைகளுக்கு எப்படியேனும் வாக்குகள் கிடைத்துவிடும், எந்தக் குழுவிலும் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் ஏனெனில் பதிவின் உள்ளடக்கத்தின் தரத்திற்குக் கிடைக்காத வாக்குகள் 'இவர்' எழுதி இருக்கிறார் என்பதற்காகக் கிடைப்பது உண்டு. இது சமுகக் குறைபாடு இல்லை, நடைமுறைதான். போட்டியில் கலந்து கொள்ளும் 1500 இடுகைகளையும் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு.

போட்டிகள் கலந்து கொள்வது வெற்றிப் படிகட்டில் ஏறுவதன் முயற்சி, கலந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கை நழுவி விடும், பரிசு சீட்டு வாங்கியவரில் யாரோ ஒருவருக்கு முதல்பரிசு, பரிசு சீட்டே வாங்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது இல்லையா ? வெற்றியாளவர்கள் அனைவரும் முயற்சி செய்து அதை அடைந்தவர்கள், வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாது முயற்சி செய்வது வெற்றியின் படிநிலை.

நீங்கள் தமிழ்மணம் 2010 போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதைத் தெரியப்படுத்தி, உங்கள் போட்டி இடுகையை சுட்டிக்காட்டி வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம், பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கப் போகிறார்கள். விளம்பரம் இல்லாமல் விற்பனைகள் இல்லை. இது எந்த ஒரு போட்டிக் களத்திற்கும் பொருந்தும்.
முதல்படியாக தமிழ்மணம் 2010 போட்டில் கலந்து கொண்டவர்கள், அடுத்தபடி ஏற வாக்களிக்கக் கேட்கலாமே.

*********

சிங்கைப் பதிவர்கள் / தமிழ்வெளி இணையதளம் சார்பாக நடத்தபடும் மணற்கேணி - 2010 தேதி நீட்டிக்கப்பட்டு வரும் டிசம்பர் 31 வரை கட்டுரைகள் பெறப்படுகின்றன. சென்ற ஆண்டு மூன்று பதிவர்களைத் தேர்ந்தெடுத்து சிங்கைக்கு அழைத்து சிறப்பு செய்தோம். இந்த ஆண்டு அப்படி வரப்போகிறவர்கள் நீங்களாகக் கூட இருக்கலாம். போட்டி முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. இதுவரை அறிந்திடாவிடில் போட்டிப் பற்றிய முழு விவரமும் இங்கே இருக்கிறது. கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்
மணற்கேணி - 2010

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

சிங்கப்பூர் வந்து சென்றவர்களுக்கு பசுமைமாறா நினைவுகளாக இருப்பது பல இருந்தாலும். என்றுமே அவர்களின் நினைவிக்குள் வருவது சுற்றியுள்ள பசுமைகள்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், பச்சை பாய் விரித்தது போன்ற புள்வெளிகளும். இந்த பசுமைக்கு காரணங்கள் இங்குள்ள இயற்கை சூழல்கள் ஒரு புறமிருக்க அரசும் அதன் கடமையை செய்கின்றது. இங்குள்ள பூக்களை பறிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல பராமிப்பின்றி வளரும் புல் புதர்களுக்கும் அனுமதியும் இல்லை. அப்படி வளரும் இடத்தின் நிர்வாகதிற்கு அபராதம் (தண்டம்) வசூலிக்கப்படும். சிங்கப்பூர் ஏரிக்கரை (Lake side) என்ற இடத்தின் சுற்றியுள்ள இடங்களை சுட்டுதள்ளிய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்......


























மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க
...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket


அன்புடன் (சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)
ஆ.ஞானசேகரன்.

எழுதுங்கள்! வெல்லுங்கள்!......

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது (மறுபதிப்பு)

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா (மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

மணற்கேணி - 2009 வெற்றியாளர்கள் சிங்கை வருகை !

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய மணற்கேணி - 2009 கருத்தாய்வு போட்டிகளின் வெற்றியாளர்களான திரு தருமி, திரு தேவன்மாயம் மற்றும் திரு பிரபாகர் ஆகியோர் வரும் சனிக்கிழமை அன்று சிங்கை வந்து போட்டியின் நிறைவை துவங்குகிறார்கள்.

நிறைவு நிகழ்ச்சியாக

1. நூல் வெளியிடு
2. கலந்துரையாடல்
3. பதிவர் சந்திப்பு

ஆகியவை நடை பெற இருக்கின்றன, இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நாளை முதல் வெளிவரும்.

அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி

அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி

வணக்கம்
நாள் = 10 / 04 / 2010 ,
கிழமை = சனிக்கிழமை ,
நேரம் = பிற்பகல் 1 . 30 ,
இடம் = அடித்தளமன்றம் ,
(grasroots club)
நிகழ்ச்சி = அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி ,
நிகழ்வு = சிங்கப்பூரில் செயல்படும் நான்கு தமிழ்ப் பேச்சாளர் /
சொல்வேந்தர் மன்றங்களிலிருந்து எட்டு பேச்சாளர்களும்
பள்ளி மாணவர்கள் மூவரும் வெவ்வேறு தலைப்புகளில்
பேசும் விறுவிறுப்பான பேச்சுப்போட்டி நடைபெறும் ,
சிறப்புரை = திரு . பொன் மகாலிங்கம் ஒலி 96 . 8 ,
தலைப்பு = "மேடையில் சுவையாக பேசுவது எப்படி" ,
.
ஏற்பாடு = சிங்கப்பூர்த் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் ,
தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தமிழ்ப் பேச்சாளர் மன்றம் ,
நற்பணித் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் ,
லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும்
மரபுடைமைச்சங்கம் ஆகியவை
குறிப்பு = அனுமதி இலவசம் , நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர்
அழைப்பிதழ் பெற அழைக்க வேண்டிய அலைபேசி எண்கள் :-
திரு பாலா 91078907 , திரு ஹரிகிருஷ்ணன் 97913001 ,
நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புவோர் இயோ சு காங் எம் ஆர் டி அல்லது
இயோ சு காங் பேருந்து நிலையம் , ஆங் மோ கியோ அவென்யு 6 சாலை
வழி பேருந்து எண்கள் :- 13 , 45 , 70 , 72 , 76 , 86 , 162 , 825 , 851 , 852 , 853 .
சிங்கப்பூரில்

தமிழ் மொழி விழா 2010

(தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்)

வளர்தமிழ் இயக்கம் ஆதரவில்
நடைபெறும் தமிழ் மொழி விழா 2010
இந்த செய்தியை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ,
மேலும் உங்களுடைய நிகழ்வுகள் , நீங்கள் பங்குபெரும் அல்லது
உங்களுக்கு தெரிந்த தமிழ் நிகழ்வுச் செய்திகளை என்னுடன்
எனது மின்னஞ்சல் முகவரி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி .
வேண்டுகோள் :- குடும்பத்தோடும், நண்பர்களோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் நன்றி !.

குறிப்பு :- மேலும் பல தமிழ் நிகழ்வு செய்திகள் விரைவில் ...... !.

இவன் :- உங்கள் நண்பன் கலைகுமார் (அ . சோ. ராஜ்குமார் ).
எனது மின்னஞ்சல் முகவரி :- kalaikumar1025@yahoo.com
எனது அலைபேசி எண்கள் :- 98134132 - 93729364 .

"தமிழால் இணைவோம் " நன்றி , வணக்கம் !.

சிங்கையில் தமிழ் கணினிப் பயிலரங்கு !

வணக்கம் !

சிங்கப்பூர் கணித்தமிழ் சங்கம் கணினி வழி இணையத்தில் தமிழ் என்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது .
கணினியை தமிழில் பயன் படுத்தவும் , தமிழில் மின்னஞ்சல் அனுப்பவும் , தமிழில் இணையபக்கங்களை படிக்கவும் ,
தமிழில் வலைப் பதிவுகள் செய்யவும் , டிவிட்டர் போன்ற விரைவுச்செய்திகளை கணினிவழி தமிழில் அனுப்புவது போன்ற
பல நுட்பங்களை கற்றுக்கொடுக்கிறது . பயிலரங்கில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் பதிவுசெய்துகொள்ள கீழே
கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது அலைபேசி வழி தொடர்புகொள்ளவும் நன்றி வணக்கம் .
மின்னஞ்சல் முகவரி :- kanithamizh@gmail.com , அலைபேசி எண்:- 97312715 .
தேதி :- 10 / 04 / 2010 , நேரம் :- பிற்பகல் மணி 01 .௦30 முதல் மலை மணி 5 .00 வரை,
இடம் :- எம்.டி.ஐ.எஸ் வளாகம் (MDIS) (குயின்ஸ்டவுன் எம் ஆர் டி அருகில்).
இவன் ,
உங்கள் நண்பன் , எனது மின்னஞ்சல் : - kalaikumar1025@yahoo.com
கலைக்குமார் , kalaikumar1025@gmail.com
(அ சோ ராஜ்குமார்).
" தமிழால் இணைவோம் "
அலைபேசி எண்:- 98134132 , 93729364 .
வேண்டுகோள் :- நண்பர்களோடும் , குடும்பத்தோடும் கலந்துகொள்ள வேண்டுகிறோம் நன்றி !
குறிப்பு :- மேலும் பல தமிழ் நிகழ்வுத் தகவல்கள் விரைவில், நன்றி வணக்கம் !

சிங்கையில் லேசான நில அதிர்வு !

ஐந்து நிமிடங்களுக்கு முன் சிங்கையில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. எனது இருக்கை லேசாக அசைய .... அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சீனப் பெண் 'ஷேக்கிங்க்....ஷேக்கிங்க்' என்று குரல் எழுப்பினாள்.

ரிக்டர் அளவு விவரம் தெரியவில்லை.

கிட்டதட்ட அது பற்றிய தகவல் இங்கே


இந்தோனிசியா சுமத்திரா தீவு அருகில் அடிக்கடி நில நடுக்கம் / அதிர்வு ஏற்படும், அது சற்று பெரியதாக இருக்கும் போது சிங்கையிலும் உணரப் படும். சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்கிற தகவல் இனிமேல் தான் வெளியாகும்.

எதற்கும் தமிழக கடற்கரைப் பகுதிக்கு செல்பவர்களை தவிர்க்கச் சொல்லுவோம்.

முழுத்தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது

சேரனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அம்பு !

நேற்று சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்களின் 2009 கவிதைத் தொகுப்பு விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தேறியது. அது பற்றியப் புகைப்படத் தொகுப்புகளையும் விவரங்களையும் வலைப்பதிவர் மற்றும் கவிஞர் பாண்டித்துரை எழுதுவார்.



விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் வரவழைக்கப்பட்டு இருந்தார். பெரும்பான்மை, நடுத்தரவர்கத்தினரின் ஏக்கங்களைச் சாடியும், அறிவுரை கூறியும் படமெடுக்கும் சேரன் இலக்கிய விழாக்களுக்கு பொருத்தமானவராக என்பதை என்னால் சரியாக முடிவு செய்து சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றவேண்டியவை என்ன என்ன என்பதைப் பற்றி அவரைப் பேசச் சொல்லி இருந்தார்கள், அவர் பேச்சில் இருந்து அது பற்றிப் பேச அவர் பொருத்தமானவர் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது. சேரன் திரைப்பட தமிழ் பட இயக்குனர் என்பதைத் தாண்டி தமிழ் பற்றாளர் என்பது போல் அவரது படங்கள் எதிலும் அவர் தமிழ் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியவர் இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்ததால் திரைத்துறையில் நுழைந்த காலகட்டங்களில் தான் நிராகரிக்கப்பட்டதாகச் சொன்னார்,

அது போல் தமிழ் மட்டும் தெரிந்ததால் தனது சிந்தனைகள் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதாகச் சொன்னார். தமிழ் தொடர்ந்து வாழ எதாவது சொல்லுவார் போல என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம். 'தமிழ் மொழி அழிந்துவிடாமல் இருக்க, உறவுகளைத் தமிழில் இருக்கும் பெயரைச் சொல்லியே அழைத்துப் பழகுங்கள், அம்மா அப்பா என்பதை மம்மி டாடி ஆக்கிவிடாதீர்கள்' என்று கூறி தமிழ் குறித்த தனது எண்ணங்களை மிகவும் எளிமையாக முடித்துக் கொண்டார். ஒரு இயக்குனராக தமிழ் திரைப்படங்கள் வளர்ச்சிகளை பிற மொழிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசி இருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும், தமிழ் மொழியின் தேவை உணர்த்த வேண்டிய இடத்தில் தமிழுக்கு எதிராக பேசாவிட்டாலும் தமிழ் மட்டுமே தெரிந்ததால் தான் அவமானப்பட்டதாகக் கூறியதெல்லாம் மறைமுகமாக தமிழ் பற்றாளர்களை துவண்டுவிடச் செய்யும் பேச்சுகளாக அமைந்தது. உண்மையைச் சொல்கிறேன், உள்ளதைச் சொல்கிறேன் என்பது பேச வேண்டிய பொருள் குறித்துப் பேசும் போது கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் அழைத்தவர்கள் முகம் சுளிக்காமல் இருப்பார்கள். ஒன்றைப் பற்றி உயர்வாகவும் அது பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருவார் என்ற நம்பிக்கையில் பேச்சாளர்களாக அழைப்பவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வண்ணம் அதற்கு எதிராகப் பேசினால் அங்கு உண்மை, உள்ளம் எல்லாம் வீணாகப் போய்விடுகிறது. சேரன் இலக்கிய விழாக்களுக்குப் பொருத்தமானவரா இல்லையா என்பதைவிட தமிழ் கூறும் நல்லுலகு மேம்படக் கருத்துக் கூறும் தகுதி பெற்றவர் அல்ல என்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.


நிற்க.

நிகழ்ச்சியின் இறுதியில் தன்னிடம் கேள்வி எழுப்புவர்கள் எழுப்பலாம் என்று சேரன் கூற ஒருசிலர் ஆவலுடன் முன்வந்தனர். அதில் பார்வையாளராக வந்திருந்த சசிகுமார் என்பவர்,

"தமிழகத்தில் இருந்து இங்குவருபவர்கள் அனைவருமே (சிங்கையில்) இங்குள்ள சுத்தம் சுகாதாரம் ஊழலின்மையைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூரை புகழ்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவை மிக மோசமாக பலர் மத்தியில் விமர்சனம் செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார்கள்...கைத்தட்டல் பெற வேண்டும் என்பதற்காக மிக மட்டமாகக் கூட விமர்சனம் செய்கிறார்கள், நீங்களும் இங்கே அதைச் செய்தீர்கள்" என்று குற்றச் சாட்டாகக் கூற சேரன் பொங்கி விட்டார், கேள்வி எழுப்பியவரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்

"நம்ம ஊர் குப்பதான், அதை ஒப்புக் கொள்கிறேன், அந்தக் குப்பையில் தானே நீங்களும் இருந்தீர்கள், அதைச் சொன்னால் ஏன் கோபப்படனும், உங்க வீட்டுக்கு லெட்டர் போடும் போது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துங்க....வெளி நாட்டுக்குச் செல்வதை விட அதை உழைப்பைக் காட்டினால் உள் நாட்டில் முன்னேராலாம் என்று வெற்றிக் கொடி கட்டு படம் எடுத்தேன், கோவையில் அதைப் பார்த்துவிட்டு வெளி நாடு செல்ல பணம் கட்டிய இளைஞர்கள் திரும்பப் பெற்று சொந்த தொழில் தொடங்கினார்கள்.....என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டு வெளிநாட்டில்......இந்தியாவைப் பற்றி மட்டமாகப் பேசுகிறேன் என்று தெரிகிறது இல்லையா ஏன் கைதட்டுறிங்க....அதை ஏன் அங்கீகரிக்கிறிங்க... இந்தியாவைப் பற்றி சீனரிடம் சொல்லவில்லையே, மலாய்காரர்களிடம் சொல்லவில்லையே...உங்களிடம் தானே சொல்கிறேன்..." என்பது போல் கேள்வி கேட்டவரையே குற்றவாளி ஆக்கிவிட முனைந்தார்.

சேரன் மட்டுமல்ல, இந்தியாவை மட்டமாக விமர்சனம் செய்யும் பேச்சாளர்கள் சிங்கையில் கைதட்டல் பெறுகிறார்கள், இதில் பேசுபவர்களைவிட அதற்கு கைத்தட்டுபவர்கள் ஏராளம் என்பதும் உண்மை. நாம வந்திருப்பது பிழைக்க, அதில் நாம் செல்லும் ஒரு நாடு நம் கண்ணுக்கு முன்பு சுத்தமாக இருப்பதில் நமக்கு தனிப்பட்ட பெருமையாக நினைக்க என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. சேரன் மட்டமாகப் பேசியதும் உண்மை, அது குறித்து கேள்வி எழுப்பியதும் அதை அவர் சமாளித்து கேள்விக் கேட்டவரை மடக்கியது அவர் பேசிய உண்மையை விடக் கசப்பானது.

*****

இதைவிட முதன்மையானத் தகவல், சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கட்டுரைகள் பெருவதற்கு இன்னும் 28(இன்று), 29 (நாளை), 30(நாளை மறுநாள்) என மூன்றே நாட்கள் உள்ளன. ஏற்கனவே எழுதி வைத்திருந்து இன்னும் முழுமை அடையாமல் இருந்து, நிறைவு செய்யாமல் இருந்தால் உடனே நிறைவு செய்து அனுப்புங்கள்.

இன்னும் 2 - 3 நாட்கள் இருப்பதால் புதிதாக எழுதி அனுப்புவதைப் பற்றி கட்டுரையாக்கங்கள் எழுதி அனுப்பாதோர் முயற்சிக்கலாம்.

Moon Cake Festival

சிங்கையைப் பதிவர்களுடன் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளும் அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் மூன்றே நாட்கள் மீதம் உள்ளன.

ஞான பித்தன், ஜோதி பாரதி, முகவை இராம்குமார் மற்றும் பாண்டித்துரை

முழுவிவரங்களுக்கு : மணற்கேணி - 2009

சிங்கை வாசகர் வட்டம் மற்றும் பதிவர்கள் ஒன்று கூடல் அறிவிப்பு !

சிங்கை நூலக வாசகர் வட்டம் (கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள்) மற்றும் சிங்கைப் பதிவர்கள் ஒன்று கூடல் இந்த ஞாயிற்றுக் கிழமை (23/ஆகஸ்ட்/2009) நடக்க இருக்கிறது,

நிகழ்சிக்கு தலைமை ஏற்பு கவிஞர் பாண்டித்துரை.
நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கை வாசகர் வட்டம்.

நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள்:

இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்

நாள்: 23.08.2009 (ஞாயிறு)

நேரம்: மாலை 4.30மணிக்கு

இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம்



தக்காளி அறை (இரண்டாவது தளம்)

இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது.

இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை…..

சிங்கைவாழ் பதிவர்களான

கோவி.கண்ணன் அவர்கள்

குழலி அவர்கள்

அப்பாவி முருகேசன் அவர்கள்

முகவை ராம் அவர்கள்

ஜோசப் பால்ராஜ் அவர்கள்

பதிவர் உலகம், வலைப்பதிவுகள், திரட்டிகள், பதிவர் வட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர்.

அனுமதி இலவசம், பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் அழைப்பது,

சிங்கை நூலக வாசகர் வட்டம் நண்பர்கள் மற்றும்
சிங்கைப் பதிவர்கள்

ரஜினி ரசிகர்கள் இணைய தளத்திற்கு நன்றி !

நம் சிங்கைப் பதிவர் செந்தில் நாதனுக்கு, ரஜினி ரசிகர்களிடையே தகவலை எடுத்துச் என்று உதவி பெற முயற்சிக்கும் rajinifans.com இணைய தள நண்பர்களுக்கும், அறிவிப்பை வெளி இட்ட திரு ஜெய.கிருஷ்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி.

சிங்கைப் பதிவர்கள் குழு சார்பாக
கோவி.கண்ணன்

சிங்கப்பூர் தேசிய தின விழா காட்சிகள்

சிங்கப்பூர் 44வது தேசியதின விழா காட்சி புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

























நேரடி ஒளிபரப்பு - சிங்கப்பூர் தேசிய நாள் கொண்டாட்டம் !





மேலே பெட்டியில் எதுவும் தெரியவில்லை என்றால்,

இங்கே கிளிக்குங்கள் !

நமீதாவை பார்க்கலாமா? நமீதா உயரமென்ன?

நமீதா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்?
1. வாரணம் ஆயிரம்
2. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
3. பிரம்மாண்டம்

தமிழின் உயரமான நடிகை யார்?
1. நயன்தாரா
2. நமீதா
3. நதியா

நமீதாவின் உயரம் என்ன?
பதிவின் கடைசியில் இதற்கு பதில் இருக்கு... ஹலோ ஸ்க்ரோல் பாரை பிடிச்சி இழுக்க போனிங்க அவ்ளோதான் சொல்லிப்புட்டோம் பதிவை படிச்சுப்புட்டு போகனும்.

ஹல்லோ இதென்ன சிங்கை வலைப்பதிவர் குழும வலைப்பதிவா இல்லை நமீதா ஜொள்ளர் வலைப்பதிவா? கேள்விகேட்குறாங்களாமுள்ள கேள்வி, இம்புட்டு வரிகளை படிச்சிட்டோம் இன்னும் ஒரு நமீதா படம் கூட போடாம ராஸ்கல்ஸ் என்ன இது சின்ன புள்ளதனமா..



மீண்டும் மீண்டும் காண தூண்டும் ஒரு சுற்றுலா இடமென்றால் பெரும்பாலும் அவைகள் திருப்பதி, பழனி போன்ற புனித தலங்களாகவே இருக்கும், அடுத்தபடியாக மீண்டும் மீண்டும் காண தூண்டும் இடங்களாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களாகவும் இருந்தாலே மீண்டும் மீண்டும் போக தூண்டும்.

75 ஆண்டுகால தமிழ் திரை வரலாற்றில் கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரி, சில்க் ஸ்மிதா, என்ற பட்டியல் இன்று நயன்தாரா, நமீதா வென்று நீண்டு கொண்டே இருக்கின்றது, கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரி எல்லாம் அந்தகால அட்ராக்ஷன்ஸ் தான் ஆனால் இப்போதும் அதே கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரியை படத்தில் காண்பித்தால் அடபோங்கப்பா என்று போய் கொண்டே இருப்பார்கள்.

நவநாகரிக நகரத்தை ஒரு முறை பார்த்து முடித்துவிட்டால் சலித்துவிடும், புதுப்புது அட்ராக்ஷன்கள் இருக்க வேண்டும், அதுவே சுற்றுலா விரும்பிகளை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கும். சிங்கப்பூர் ஒரு நவ நாகரிக நகரம், நீங்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் அது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும், "உலகம் சுற்றும் வாலிபன்" மஞ்சுளா காலத்தில்(எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மன்னிக்க) பெரிய சுடுமண் பொம்மைகளாலான டைகர் பாம் கார்டன் என்னும் ஹாப்பர் விலா ஒரு முக்கிய அட்ராக்ஷன் என்றால் நமீதா காலத்தில் சிங்கப்பூரின் கடைக்குட்டியாம் சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation Wheel ஒரு முக்கியமான சுற்றி பார்க்கும் இடம்.




சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான(150 மீட்டர் விட்டம், கட்டித்தோடு சேர்த்து 165 மீட்டர் உயரம்) சக்கரம், சிங்கப்பூரின் மெரினா சென்டரில் (Marina Center) உள்ளது... பலருக்கும் உயரமான ஜெயண்ட் வீல் சக்கர ராட்டினத்தில் ஏறி கர கரவென சுற்றுவதற்கு பயந்து கொண்டே இதற்கு வரமாட்டோம் என்பார்கள், ஆனால் இது கர கரவென வேகமாக சுற்றாது, ஒரு சுற்று சுற்றி முடிக்க 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.




சிங்கப்பூர் ப்ளையரில் ஏறுவதற்கு போவதே ஒரு வானூர்தி பயனத்தை நினைவு படுத்துவது போல இருக்கும், இந்த சக்கரத்தில் மொத்தம் 28 குளிர்சாதன வசதியுடைய உருளைகள்(capsuels) உள்ளன ஒவ்வொரு உருளையிலும் 28 பேர் வரை பயணிக்கலாம்.






சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறிய பின் சில நிமிடங்களில் ஒரு பெரிய வியப்பு உங்களுக்காக காத்திருக்கும், சிங்கப்பூர் நகரின் எழில் மிகு தோற்றம் உயரத்திலிருந்து பார்க்கும் போது சொர்க்கமாக தோன்றும், ஒரு பக்கம் சிங்கப்பூர் நகரின் நெடிந்துயர்ந்த கட்டிடங்கள், இன்னொரு புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் அந்த கடலில் ஆங்காங்கே தீவுகள் கடலெங்கும் மிதக்கும் கப்பல்கள் என புதிய உலகு அங்கே விரிந்திருக்கும். மேலிருந்து பார்க்கும் போது அருகில் உள்ள ஒரு மேம்பாலம் தெரியும், அந்த மேம்பாலம் எத்தனை அடுக்குகளாக எத்தனை சாலைகளை இணைக்கிறது என்று பார்த்தால் நிச்சயம் அது உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

சிங்கப்பூர் ப்ளையரிலிருந்து 45 கிலோமீட்டர் தூரம் வரை பார்க்க இயலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவை காணலாம்.

இந்தியாவை இங்கே இணை வைத்து பேசுகிறேன் என்பதற்கு மன்னிக்கவும், நண்பரின் திருமணத்திற்கு வந்து பின் நானும் நண்பர்களும் சென்னையில் உள்ள MGM ற்கு சென்றோம், அங்கிருந்த ஒரு குடை ராட்டினத்தில் ஏறினே, ஒரு இரும்பு சங்கிலி தொங்குகிறது, அதில் ஒரு தட்டு மாதிரி இணைக்கப்பட்டுள்ளது, எந்த விதமான பாதுகாப்பும் அதில் இல்லை, ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல் ஆர்வமாக போய் அதில் ஏறிகொண்டேன், அதி வேகத்தில் சுற்ற ஆரம்பிக்க அந்த இரும்பு சங்கிலி மட்டுமே ஒற்றை ஆதாரம், அதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டியது தான், கொஞ்சம் தவறினாலும் அங்கிருந்து தூக்கியெறியப்படுவது நிச்சயம், குடலே புரண்டு வாய் வழியாக வருவது போலிருந்தது, உயிரை கையில் பிடித்துகொண்டு என்பதை அன்று அனுபவித்தேன். அடுத்த ஒரு வாரத்தில் இம்மாதிரியான ராட்டினத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு ஒருவர் காயம் என்று பத்திரிக்கையில் படித்தேன், சில மாதங்களுக்கு முன்பு கூட இம்மாதிரி நடந்து ஒரு பெண் மரணமடைந்தார் என்றும் அறிந்தேன்.

சிங்கப்பூரில் பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது, லாப நட்ட கணக்கெல்லாம் அதன் பின் தான், வேலையிடத்திலிருந்து விளையாட்டு வரை பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது. பாதுகாப்பிற்காக என்ன விலையையும் தர தயாராக உள்ளது சிங்கப்பூர்.

2008 டிசம்பர் 23ம் நாள் சிங்கப்பூர் ஃப்ளையர் சுற்றுவது நின்று விட்டது, 173 பேர் அப்போது உருளைகளில் இருந்தனர், இதில் குளிர்சாதன வசதி நின்று போனது, சில மணி நேரங்களில் பிரச்சினை சரி செய்யப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், அந்த நேரத்தில் உள்ளிருந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது, ஆனால் அதன் பின் சிங்கப்பூர் ப்ளையர் நிறுத்தப்பட்டது, மாற்று ஏற்பாடுகள் எல்லாம் செய்யபட்டு ஜனவரி 26 2009 அன்று தான் மீண்டும் சிங்கப்பூர் ப்ளையர் தன் சேவையை தொடங்கியது.

உபரி ஜெனரேட்டர், பிற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு செலவான தொகை மூன்று மில்லியன் சிங்கப்பூர் டாலர், அதாவது முப்பது இலட்சம் டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்பில் 93 கோடிகள், அதன் பின்பே சிங்கப்பூர் ஃப்ளையர் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ப்ளையர் சென்று பார்க்க சரியான நேரம் 6.00 லிருந்து 7.00 மணி வரை, இந்த நேரத்தில் நீங்கள் பகல் பொழுதையும் இருட்டும் பொழுதையும் உயரத்திலிருந்து ரசிக்கலாம்.

ஒருவருக்கு அனுமதி சீட்டின் விலை 28 சிங்கப்பூர் வெள்ளிகள் என நினைக்கிறேன். சிங்கப்பூர் ப்ளையரின் இணைய தளம் இங்கே

என்னங்க சிங்கப்பூர் நமீதாவை பார்க்கனுமா? சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

மச்சான் நமீதாவின் உயரம் 5 அடி 11 அங்குலம்...

ஹல்லோ மிஷ்டர் எங்களுக்கு எதுக்கு நமீதா மச்சான் ஒசரம், நீங்க நமீதா ஒசரத்தை மட்டும் சொல்லுங்க, அவங்க மச்சான் ஒசரமெல்லாம் எங்களுக்கு தேவையில்லை...

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP