மணற்கேணி 2009 அரசியல்/சமூகம் பிரிவு வெற்றியாளர் அறிவிப்பு
சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்தியமணற்கேணி 2009, அரசியல்/சமூகம் பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.
அரசியல் / சமூகம் பிரிவுக்கும் மற்ற பிரிவுகளை விட அதிக கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, பல்வேறு பட்ட தலைப்புகளிலிருந்து ஆக சிறந்த ஒரு படைப்பை தேர்ந்தெடுக்க நடுவர்கள் மிகுந்த முயற்ச்சியை மேற்கொண்டனர்.
மணற்கேணி போட்டியின் அடிப்படை நோக்கமே இணைய எழுத்துகள் மேம்போக்கானவை அல்ல இதிலிருந்து சிறந்த படைப்புகள் கொண்டுவர இயலும் என்பதும் ஒரு கருத்தை கட்டுரையாக எழுதும்போது அதற்கான ஆழந்த அறிதலையும், புரிதலையும் மேலும் அது தொடர்பான சரியான தரவுகளையும் கொண்டிருக்க வேண்டும். 50 கட்டுரைகள் என்ற அளவில் வந்திருந்தாலும் ஒவ்வொரு கட்டுரையிலும் மிக சிறப்பான உழைப்பும் தரவுகளையும் கொண்டிருந்தன, எந்த ஒரு கட்டுரையும் மிக மேலோட்டமான கட்டுரை என்று சொல்லும் அளவிற்க்கு இல்லாமல் மிகுந்த ஆர்வத்துடனும் உழைப்புடனும் எழுதப்பட்டுள்ளது இந்த அளவில் மணற்கேணி போட்டியின் நோக்கம் நிறைவேறியுள்ளது, இதற்காக சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி தமது நன்றியை மணற்கேணி போட்டியில் பங்கெடுத்த அத்தனை கட்டுரையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
கடும் போட்டிகளுக்கிடையில் திரு.தருமி அவர்களின் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் - தருமி என்ற கட்டுரை பரிசுக்குறிய கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது...
அறிவியில் பிரிவில் முதலிடம் பெற்ற திரு.கையேடு அவர்கள் தன் சொந்த காரணங்களால் சிங்கப்பூர் வந்து செல்ல இயலாததால் போட்டிவிதிகளின் படி அறிவியல் பிரிவில் அடுத்த இடத்தில் இருந்த திரு.தேவன்மாயம் அவர்களை பரிசுக்குறியவராக அறிவிக்கின்றோம். திரு.தேவன் மாயம் அவர்களின் கட்டுரையை படிக்க ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம்
மணற்கேணி 2009 போட்டிக்கான அனைத்து கட்டுரைகளின் தொகுப்பை கான இங்கே அழுத்தவும்