"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி 2009 அரசியல்/சமூகம் பிரிவு வெற்றியாளர் அறிவிப்பு

சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்தியமணற்கேணி 2009, அரசியல்/சமூகம் பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.

அரசியல் / சமூகம் பிரிவுக்கும் மற்ற பிரிவுகளை விட அதிக கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, பல்வேறு பட்ட தலைப்புகளிலிருந்து ஆக சிறந்த ஒரு படைப்பை தேர்ந்தெடுக்க நடுவர்கள் மிகுந்த முயற்ச்சியை மேற்கொண்டனர்.

மணற்கேணி போட்டியின் அடிப்படை நோக்கமே இணைய எழுத்துகள் மேம்போக்கானவை அல்ல இதிலிருந்து சிறந்த படைப்புகள் கொண்டுவர இயலும் என்பதும் ஒரு கருத்தை கட்டுரையாக எழுதும்போது அதற்கான ஆழந்த அறிதலையும், புரிதலையும் மேலும் அது தொடர்பான சரியான தரவுகளையும் கொண்டிருக்க வேண்டும். 50 கட்டுரைகள் என்ற அளவில் வந்திருந்தாலும் ஒவ்வொரு கட்டுரையிலும் மிக சிறப்பான உழைப்பும் தரவுகளையும் கொண்டிருந்தன, எந்த ஒரு கட்டுரையும் மிக மேலோட்டமான கட்டுரை என்று சொல்லும் அளவிற்க்கு இல்லாமல் மிகுந்த ஆர்வத்துடனும் உழைப்புடனும் எழுதப்பட்டுள்ளது இந்த அளவில் மணற்கேணி போட்டியின் நோக்கம் நிறைவேறியுள்ளது, இதற்காக சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி தமது நன்றியை மணற்கேணி போட்டியில் பங்கெடுத்த அத்தனை கட்டுரையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

கடும் போட்டிகளுக்கிடையில் திரு.தருமி அவர்களின் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் - தருமி என்ற கட்டுரை பரிசுக்குறிய கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது...

அறிவியில் பிரிவில் முதலிடம் பெற்ற திரு.கையேடு அவர்கள் தன் சொந்த காரணங்களால் சிங்கப்பூர் வந்து செல்ல இயலாததால் போட்டிவிதிகளின் படி அறிவியல் பிரிவில் அடுத்த இடத்தில் இருந்த திரு.தேவன்மாயம் அவர்களை பரிசுக்குறியவராக அறிவிக்கின்றோம். திரு.தேவன் மாயம் அவர்களின் கட்டுரையை படிக்க‌ ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம்

மணற்கேணி 2009 போட்டிக்கான அனைத்து கட்டுரைகளின் தொகுப்பை கான‌ இங்கே அழுத்தவும்

சிறப்பு பதிவர் சந்திப்பு - சிங்கப்பூர்

சிங்கப்பூர் பதிவர்களின் சிறப்பு கூட்டம்

மர்ர்ச் 12 (வெள்ளி): குட்டி இந்தியாவில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோவிலில் "தினம் ஒரு திருமந்திரம்" என்ற தலைப்பில் சீரும் சிறப்புமாக ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு நடைபெற்றது.பின்னர் வழங்கப்பட்ட கேசரி, சுண்டல் மற்றும் புளியோதரை பிரசாதங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிங்கைப் பதிவர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் சி.ஈ.ஓ. ஜோஸப் பால்ராஜ் மற்றும் எங்கள் அனைவரின் அன்பு அண்ணண் திரு.கோவி கண்ணண் அவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (சனிக்கிழமை,மார்ச்-13,2010) மாலை 04:30 மணியளவில் சிட்டி ஹால் (பழைய சுப்ரீம் கோர்ட்) எதிரில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சிறப்பு பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

சிங்கைப் பதிவர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


சிறப்பு விருந்தினர்கள்


கேபிள் ஷங்கர்


ஸ்வாமி ஓம்கார்


சிட்டி ஹால், சிங்கப்பூர்

நேரம்:மாலை 04:30
நாள் : 13-03-2010 (சனிக்கிழமை)

மணற்கேணி - 2009 இலக்கிய பிரிவு வெற்றியாளர் !

சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்திய மணற்கேணி 2009, இலக்கிய பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.

இலக்கியப் பிரிவுக்கும் 10 கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, இருந்தாலும் மிகவும் சிறப்பான கட்டுரை என்று தமிழார்வள நடுவர்களால்
தமிழர் இசை பற்றிய கட்டுரை எழுதிய திரு பிரபாகர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் 'மணற்கேணி' சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி குழுவினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இலக்கிய கட்டுரை வரைவாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழர் இசை குறித்த திரு பிராபகர் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

- மணற்கேணி 2009 ஒருங்கிணைப்பாளர்
ஜோசப் பால்ராஜ்

மணற்கேணி - 2009 அறிவியல் பிரிவு வெற்றியாளர் அறிவிப்பு.

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் சிங்கைப் பதிவர்கள் சார்பாக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டிக்கு வந்திருந்த ஒவ்வொரு படைப்பும், போட்டியாளர்களின் தீவிர உழைப்பை பறைசாற்றியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அந்தளவுக்கு அத்தனை படைப்புகளும் சிறப்பாக இருந்தன. இத்தனை கடினப்பட்டு போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு நாங்கள் செய்யும் பெரிய மரியாதை,அந்தப் படைப்புகளை தகுதிவாய்ந்த நடுவர்களிடம் கொடுத்து மதிப்பிடுவது தான் என்பதில் சிங்கைப் பதிவர்கள் அனைவரும் உறுதியாய் இருந்தனர்.

அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகள் அனைத்தும் சிங்கையில் அறிவியல் ஆராய்சியாளர்களாக பணிபுரியும் தமிழார்வம் மிக்க நடுவர்களால் மதிப்பிடப்பட்டது. மொத்தம் ஐந்து ஆராய்சியாளர்கள் தங்களது கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவில் இந்தப் பணியை செய்து முடித்துள்ளார்கள். இதுவே காலதாமதத்திற்கான மிக முக்கிய காரணம். போட்டியாளர்களையும், மற்றவர்களையும் மிக நீண்ட காலம் காக்க வைத்தமைக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணி 2009 போட்டியின் அறிவியல் பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்பு

தலைப்பு: நவீனகால நுண்ணோக்கிகள்

எழுதியவர்: இரா.இரஞ்சித்

வலைதள முகவரி: http://kaiyedu.blogspot.com


வெற்றி பெற்ற இரஞ்சித் அவர்களுக்கு சிங்கைப் பதிவர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலக்கிய பிரிவின் வெற்றியாளர் அறிவிப்பு வரும் வெள்ளியன்று வெளியாகும்.


வராது ஆனால் வரும் !

மணற்கேணி முடிவுகள் வருமா ? வராதா ? போட்டி நடக்கிறதா ? இல்லையா ? என்று தத்தமுக்குள் பதிவர்கள் பந்தயம் கட்டிய தாக அறிந்தோம், இன்னும் சிலர் மணற்கேணி 2009 என்கிற தலைப்பையே கூட மறந்திருப்பார்கள். பதிவர்கள் அனைவரிடத்திலும் இதன் காலம் தாழ்த்துதல் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் தாழ்ந்தற்கு சில காரணங்கள் உண்டு, குறிப்பாக சிறப்பான நடுவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் ஒப்புதல் பெறவும் காலம் நீண்டது.

மணற்கேணி போட்டிக்கு 50 கட்டுரைகள் வரையில் வந்தது. 90 விழுக்காடு கருத்து செறிவுடன் எதிர்பார்த்ததை விட சிறப்பான உழைப்பை எழுத்தில் காட்டி இருந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குழு மின் அஞ்சலுக்கு வந்த மின் அஞ்சல்களுக்கு, பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் கூற முடியவில்லை, அந்த மின் அஞ்சல்களை நாள் தோறும் தொடர்பில் இருக்கும் மற்ற மின் அஞ்சல்களுடன் இணைத்திருக்காததால் உடனடியாக மின் அஞ்சல்களை வாசிக்க முடியாமல் போய் விட்டது. வருந்துகிறோம்.

மணற்கேணி போட்டி குறித்து கேள்வி எழுப்பிய பின்னூட்டங்கள் தானாகவே வெளியாகி இருந்ததால் கேள்விகளை உடனுக்குடன் படிப்பதற்கு வாய்பில்லாமல் போய் விட்டிருந்தது. மட்டுறுத்தல் வைத்திருந்தால் வெளி இடும் போதே அதற்கான பதிலும் சொல்லி இருக்க முடியும். இந்த போட்டியை நடத்தும் அனைவருமே பகுதி நேரமாக செய்வதாலும், முதல் முறையாக இவ்வாறான போட்டி நடத்துவதாலும் போதிய துய்ப்புகளை இதில் தான் கற்றுக் கொள்கிறோம். அடுத்து நடத்தும் போட்டிகளில் இந்த குறைகளை களைந்துவிட்டு சிறப்பாக செயல்படுவோம் என்கிற உறுதி கூறுகிறோம்.

போட்டி முடிவுகள்:

அரசியல், அறிவியல் மற்றும் இலக்கியம் இவற்றில் அறிவியல் பிரிவு நடுவர்களால் அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகளில் பரிசு பெரும் கட்டுரை முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் போட்டியில் வெற்றியாளர் பற்றிய முடிவு வரும் புதன் கிழமை 10/பி/2010 (தேதி குறிப்பிட்டாகவிட்டது சத்தியமாக சொல்லிவிடுவோம்)
அறிவிக்கப்படும்

இலக்கியப் போட்டியின் முடிவு வரும் 12/பிப்/2010 அன்று அறிவிக்கப்படும்

அரசியல் பிரிவு பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.

போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு

2009 ஆண்டு நிறைவு சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009

அன்புடையீர்…!

2009 ல் முதல் பதிவர் சந்திப்பை முதலில் வைத்த நாம், மறுபடியும் ஆண்டிறுதியில் கடைசி நாளில் சந்திக்கிறோம். ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு முக்கிய பிரபலம், ஆண்டிறுதியில் நடக்கும் எமது இந்த சந்திப்புக்கும் வந்து கலந்து கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, ”அழகிய சிங்கர்” என செல்லமாக அழைக்கப்படும் “அப்துல்லா” அண்ணர் அவர்கள்தான்.

[IMG_4872.jpg]


இடம்: Bishan Park, (Near Bishan MRT)

திகதி: வியாழன் 31.12.2009

நேரம்: மாலை 4 – 7 வரை


Map picture

Google map link இங்கே.


Bishan MRT ல் இருந்து நடக்கும் தூரம். எப்படியும் முன்கூட்டியே செல்லும் ஜெகதீசனை தொடர்பு கொண்டு சரியான இடத்தை கண்டடையவும். மழைக்காலம் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவும்.

யாராவது Marina Bay Countdown க்கு செல்வதாக இருந்தால் அப்படியே 2010ன் முதல் சந்திப்பைக் கூட நடத்தலாம்.:-)

நன்றி…


இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !

நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)

கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திட்ட முடியும்.

இணைப்பைச் சுட்டி பெயர்பெற்ற இந்தியர் நிறுவனம் சிங்கப்பூர் முஸ்தபாவை கண்டு களியுங்கள்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP