"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

உடும்பு........பிடி........பிடி....!









*********

மணற்கேணி 2010 போட்டிக் கட்டுரைகள் அனுப்ப இன்னும் 17 நாட்களே உள்ளன.

விவரங்களுக்கு சிங்கைப் பதிவர்களின் இணைய தளம்,

களப்பிரர் காலம்

களப்பிரர் காலம் மிகுந்த புதிர்களை உள்ளடக்கிய காலம், தமிழகத்திலே சங்க கால பேரரசுகள் வீழ்ந்த பின் உருவானதே களப்பிரர்கள் ஆட்சி, களப்பிகளப்பிரர்காலத்தை இருண்டகாலமாக கூறுபவர்களும் உண்டு, களப்பிரர்காலத்தை விளிம்புநிலை மக்களின் குடியாட்சி என்று உரைப்பவர்களும் உண்டு.

நிறைய புதிர்களை உள்ளடக்கிய இந்த களப்பிரர்கள் காலம் பற்றிய ஆர்வமும் தேடுதலும் உங்களுக்கு இருக்கிறதா? சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010ல் அரசியல் / குமுகாயம் என்ற பிரிவின் கீழ் "களப்பிரர் காலம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி டிசம்பர் 31க்கு முன் அனுப்புங்கள் போட்டியில் உங்கள் கட்டுரை வென்றால் பரிசாக சிங்கப்பூருக்கு ஒருவார சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்...

மேலும் விபரங்களுக்கு மணற்கேணி 2010 தளத்தை பாருங்கள்

எழுதுங்கள்! வெல்லுங்கள்!! சிங்கப்பூர் செல்லுங்கள்!!!

22 நாட்கள் !!!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 22 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


22 நாட்கள்

புதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்

இணையத்தில் நடத்தப்படும் மிகப்பெரியதொரு கருத்தாய்வு போட்டி இது... தமிழகத்தில் இதழ்களோ தொலைக்காட்சிகளோ கூட இப்படியானதொரு போட்டியும் அதற்கான பரிசாக மூவரை சிங்கப்பூர் அழைத்து செல்லுவதையும் செய்ததில்லை இதுவரை... முழுக்க முழுக்க சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் உழைப்பிலும் பொருளாலும் நடத்தப்படும் ஒரு முயற்சி இது...

சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிடக்கோரி பல்வேறு அச்சு ஊடகங்களில் கேட்டிருந்தோம், இணையத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அப்படி என்னதான் ஒரு மாமியார் - மருமகள் பிரச்சினையோ தெரியவில்லை சென்ற ஆண்டு மணற்கேணி அறிவிப்பு எந்த அச்சு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை... மேலும் நெருங்கி கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறினார்கள், மணற்கேணி அமைப்பா புதுசா இருக்கே யாரு இவங்க, சொல்றதை செய்வாங்களா? ஒழுங்கா போட்டி நடத்தி சிங்கப்பூர் அழைத்து போவாங்களா என்பதில் ஆரம்பித்து நிறைய பதில்கள் கிடைத்தன... சில பத்திரிக்கைகளில் எடிட்டர் மேசை வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டது, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அச்சு ஊடகத்தில் மணற்கேணி போட்டி பற்றிய அறிவிப்பை மேற்கொண்ட எமது பத்திரிக்கை நண்பர்கள்,பதிவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்...



இந்த ஆண்டு முதன்முறையாக எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருக்கும் "புதிய தலைமுறை" பத்திரிக்கையில் மணற்கேணி போட்டி அறிவிப்பு வெளியிடக்கோரியிருந்தோம், விரைவாக அடுத்த இதழிலேயே "புதிய தலைமுறை" இதழில் மணற்கேணி போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவினார்கள். ஆசிரியர் மாலனுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் நிருபர் யுவகிருஷ்ணாவுக்கும் மணற்கேணி அமைப்பின் சார்பாகவும் தமிழ்வெளி நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...


மறந்துடாதிங்க மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31,2010

கடைசி 24 நாட்கள் !!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 24 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


24 நாட்கள்

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

10. சுகாதாரம்: சிங்கப்பூரில் தண்ணீர் பாட்டில், வாட்டர் ஃபில்டர் விற்பதும் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும் ஒன்றுதான். சாதாரணமாக குழாயில் வரும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது. ஏனைய பெரு நகரங்களில் இருக்கும் பிரச்சினையான வாகனப் புகைகளால் காற்று மாசு படுவது என்பது இங்கு அறவே கிடையாது. அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம்.

9. உணவு: எந்த நாட்டினர் வந்தாலும் சிங்கப்பூரில் மிகவும் விரும்பும் ஒரு அம்சம், எல்லா இடங்களிலும் கிடைக்கும் அனைத்து விதமான உணவு வகைகள்தான்.இந்திய, சீன, மலேய, காண்டினென்டல், தாய்லாந்து, ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் உணவகங்கள் கூட உண்டு.

நம்ம ஊர் அன்னலஷ்மி, கோமள விலாஸ், சரவண பவன், அஞ்சப்பர் தவிர சிங்கப்பூர் முழுவதும் பெரும்பாலான ஃபுட் கோர்ட்களில் பரோட்டா, தோசை, பிரியாணி போன்ற உணவுகள் எளிதில் கிடைக்கும்.

8. சாலைகள்: சிங்கப்பூரின் அனைத்து சாலைகளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம்(ஆனா, விட மாட்டாங்க). அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் மேடு பள்ளங்களோ, குழிகளோ, பாதாள சாக்கடை மூடிகளையோ காணக் கிடைக்காது.அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் நிச்சயம் உண்டு.

7. சுத்தம்: ரெயில் வண்டி நிறுத்தமோ, பேருந்து நிலையமோ அல்லது எந்த ஒரு அரசு அலுவலகமோ கழிவறைகள் எல்லாம் அத்தனை சுத்தமாக இருக்கும்."சே..ச்சே... இங்கியா உச்சா போறது" அப்படின்னு நமக்கே வெக்கமா இருக்கும். பேருந்து, கார் நிறுத்துமிடம், வீடுகளுக்கு வெளியில் இருக்கும் பொதுவிடங்கள் மற்றும் புல் தரைகள் ஆகிய அனைத்துமே தும்பு, தூசி இல்லாமல் இருக்கும்.

6. நேர்மை : டாக்ஸி காரர்களில் ஆரம்பித்து, கடைக்காரர்கள்,அரசு அலுவலர்கள் வரை எவரிடமும் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு.தைரியமாக டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து முகவரியை சொன்னால் போதும், நிச்சயமாக அவர் ஊரையெல்லாம் சுற்றி காண்பிக்காமல் சரியான வழியில், சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்துவிடுவார். மீட்டரில் காண்பிக்கும் தொகையை கொடுத்தால் போதும்.

5. பொது போக்குவரத்து: சிங்கப்பூரின் எம்.ஆர்.டி (மாஸ் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் மெட்ரோ ட்ரெயின் சேவையை சிங்கப்பூரின் முதுகெலும்பு என்று கருதலாம். அனைத்து இடங்களுக்கும் எளிதாக, முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட செல்ல முடியும். இந்த எம்.ஆர்.டி நிலையங்களில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் இடங்களுக்கு செல்ல அங்கிருந்தே எல்.ஆர்.டி (லைட் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் சிறிய ட்ரெயின்களோ அல்லது பேருந்துகளோ நிச்சயம் இருக்கும்.

4. பாதுகாப்பு: திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற விஷயங்களை கேள்விப்படுவதே அரிதான விஷயம். இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.அது மட்டுமல்ல தொடர் வண்டி (ட்ரெயின்), பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை.

3. மொழி: சிங்கப்பூரில் மொழி ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆங்கிலம் ஒரளவாவது புரிந்து கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு இடத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் நின்றால் நிச்சயம் ஒரு தமிழரையாவது சந்தித்து விட முடியும். அது மட்டுமல்ல தமிழ் சிங்கப்பூரின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. ஆகவே அரசு சம்பந்தப்பட்ட அறிக்கைகள், தகவல் பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கும்.

2. சுற்றுலா தலங்கள் : சிறிய ஊராக இருந்தாலும் பார்க்க வேண்டியவை ஏராளம். பறவைகள் பூங்கா,மாபெரும் ராட்டினம், மிருகக்காட்சி சாலை, சீனத்தோட்டம், சைனா டவுன், புத்தர் பல் கோவில், நம்ம ஊரு கோவில்கள், லிட்டில் இந்தியா மற்றும் பல. இதைத் தவிர செந்தோசான்னு ஒரு தீவு உண்டு. இங்கே அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்ஃபின் ஷோ, 4 டைமென்ஷன் சினிமா, லேசர் ஷோ ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய விஷயங்கள். முக்கியமாக இரவு 7 மணிக்குமேல் நடக்கும் லேசர் கதிர் காட்சியுடன் கூடிய ம்யூசிகல் பவுண்டன் பார்ப்பவர்கள் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.கீழே ஒரு சாம்பிள்.



1. சிங்கைப் பதிவர்கள்: தமிழே மூச்சு, தமிழே உணவு, தமிழே உயிர் என்று தமிழ் இலக்கியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி இன்ன பிறவற்றை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பல அற்புதமான படைப்புகளை வலைப்பூக்களில் தந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். (சே.. ச்சே.. என்ன அப்படி பாக்கறீங்க? மத்தவங்கல்லாம் நல்லா எழுதுவாங்கங்க). விருந்தோம்பல் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்.

அடடே.. எங்க வேகமா கெளம்பிட்டீங்க.சிங்கப்பூருக்கு டிக்கட் வாங்கத்தானே? கொஞ்சம் பொறுங்க. செலவே இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்து மேல சொன்ன விஷயங்கள பாக்கவும் அனுபவிக்கவும் முடியும்.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்க

சிங்கப்பூர் உங்கள் வீட்டில்

இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !

நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)

கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திரட்ட முடியும்.

நேரில் சிங்கையை காண மணற்கேணியில் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்..இலவசமாக சிங்கை வாங்க

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP