24,25,26,27,28,29,30,31
மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

:: தமிழால் ஒன்றுபட்டோம் ::
மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 12/23/2010 09:42:00 AM 3 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் சிங்கப்பூர், மணற்கேணி 2010
என்னதான் வலைப்பூன்னு வலைபதிவைக் குறிப்பிட்டாலும் வெளம்பரம் இல்லை என்றால் காகிதப்பூ தான். தமிழ்மணம் விருதில் பலர் பதிவுகளை பரிந்துரைத்திருப்பீர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு 1500 பதிவர்களுக்கு மேல் பங்கு பெறும் நிகழ்வாக அமைந்திருக்கிறது தமிழ்மணம் 2010 போட்டி, குழுவாக இயங்கும் பதிவர்களுக்குள் அந்த குழுவின் தலைகளுக்கு எப்படியேனும் வாக்குகள் கிடைத்துவிடும், எந்தக் குழுவிலும் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் ஏனெனில் பதிவின் உள்ளடக்கத்தின் தரத்திற்குக் கிடைக்காத வாக்குகள் 'இவர்' எழுதி இருக்கிறார் என்பதற்காகக் கிடைப்பது உண்டு. இது சமுகக் குறைபாடு இல்லை, நடைமுறைதான். போட்டியில் கலந்து கொள்ளும் 1500 இடுகைகளையும் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு.
போட்டிகள் கலந்து கொள்வது வெற்றிப் படிகட்டில் ஏறுவதன் முயற்சி, கலந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கை நழுவி விடும், பரிசு சீட்டு வாங்கியவரில் யாரோ ஒருவருக்கு முதல்பரிசு, பரிசு சீட்டே வாங்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது இல்லையா ? வெற்றியாளவர்கள் அனைவரும் முயற்சி செய்து அதை அடைந்தவர்கள், வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாது முயற்சி செய்வது வெற்றியின் படிநிலை.
நீங்கள் தமிழ்மணம் 2010 போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதைத் தெரியப்படுத்தி, உங்கள் போட்டி இடுகையை சுட்டிக்காட்டி வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம், பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கப் போகிறார்கள். விளம்பரம் இல்லாமல் விற்பனைகள் இல்லை. இது எந்த ஒரு போட்டிக் களத்திற்கும் பொருந்தும்.
முதல்படியாக தமிழ்மணம் 2010 போட்டில் கலந்து கொண்டவர்கள், அடுத்தபடி ஏற வாக்களிக்கக் கேட்கலாமே.
*********
சிங்கைப் பதிவர்கள் / தமிழ்வெளி இணையதளம் சார்பாக நடத்தபடும் மணற்கேணி - 2010 தேதி நீட்டிக்கப்பட்டு வரும் டிசம்பர் 31 வரை கட்டுரைகள் பெறப்படுகின்றன. சென்ற ஆண்டு மூன்று பதிவர்களைத் தேர்ந்தெடுத்து சிங்கைக்கு அழைத்து சிறப்பு செய்தோம். இந்த ஆண்டு அப்படி வரப்போகிறவர்கள் நீங்களாகக் கூட இருக்கலாம். போட்டி முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. இதுவரை அறிந்திடாவிடில் போட்டிப் பற்றிய முழு விவரமும் இங்கே இருக்கிறது. கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.
அன்புடன்
மணற்கேணி - 2010
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 12/17/2010 10:55:00 AM 3 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் சிங்கப்பூர், மணற்கேணி 2010
*********
மணற்கேணி 2010 போட்டிக் கட்டுரைகள் அனுப்ப இன்னும் 17 நாட்களே உள்ளன.
விவரங்களுக்கு சிங்கைப் பதிவர்களின் இணைய தளம்,
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 12/13/2010 10:43:00 PM 8 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் சிங்கபூர், மணற்கேணி 2010
களப்பிரர் காலம் மிகுந்த புதிர்களை உள்ளடக்கிய காலம், தமிழகத்திலே சங்க கால பேரரசுகள் வீழ்ந்த பின் உருவானதே களப்பிரர்கள் ஆட்சி, களப்பிகளப்பிரர்காலத்தை இருண்டகாலமாக கூறுபவர்களும் உண்டு, களப்பிரர்காலத்தை விளிம்புநிலை மக்களின் குடியாட்சி என்று உரைப்பவர்களும் உண்டு.
நிறைய புதிர்களை உள்ளடக்கிய இந்த களப்பிரர்கள் காலம் பற்றிய ஆர்வமும் தேடுதலும் உங்களுக்கு இருக்கிறதா? சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010ல் அரசியல் / குமுகாயம் என்ற பிரிவின் கீழ் "களப்பிரர் காலம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி டிசம்பர் 31க்கு முன் அனுப்புங்கள் போட்டியில் உங்கள் கட்டுரை வென்றால் பரிசாக சிங்கப்பூருக்கு ஒருவார சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்...
மேலும் விபரங்களுக்கு மணற்கேணி 2010 தளத்தை பாருங்கள்
எழுதுங்கள்! வெல்லுங்கள்!! சிங்கப்பூர் செல்லுங்கள்!!!
வெளியிட்டவர்: குழலி / Kuzhali நாள்/நேரம் 12/09/2010 06:41:00 PM 2 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் களப்பிரர் காலம்
உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 22 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்
22 நாட்கள்
வெளியிட்டவர்: மீனாட்சி சுந்தரம் நாள்/நேரம் 12/09/2010 05:19:00 PM 0 பின்னூட்டங்கள்
இணையத்தில் நடத்தப்படும் மிகப்பெரியதொரு கருத்தாய்வு போட்டி இது... தமிழகத்தில் இதழ்களோ தொலைக்காட்சிகளோ கூட இப்படியானதொரு போட்டியும் அதற்கான பரிசாக மூவரை சிங்கப்பூர் அழைத்து செல்லுவதையும் செய்ததில்லை இதுவரை... முழுக்க முழுக்க சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் உழைப்பிலும் பொருளாலும் நடத்தப்படும் ஒரு முயற்சி இது...
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிடக்கோரி பல்வேறு அச்சு ஊடகங்களில் கேட்டிருந்தோம், இணையத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அப்படி என்னதான் ஒரு மாமியார் - மருமகள் பிரச்சினையோ தெரியவில்லை சென்ற ஆண்டு மணற்கேணி அறிவிப்பு எந்த அச்சு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை... மேலும் நெருங்கி கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறினார்கள், மணற்கேணி அமைப்பா புதுசா இருக்கே யாரு இவங்க, சொல்றதை செய்வாங்களா? ஒழுங்கா போட்டி நடத்தி சிங்கப்பூர் அழைத்து போவாங்களா என்பதில் ஆரம்பித்து நிறைய பதில்கள் கிடைத்தன... சில பத்திரிக்கைகளில் எடிட்டர் மேசை வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டது, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அச்சு ஊடகத்தில் மணற்கேணி போட்டி பற்றிய அறிவிப்பை மேற்கொண்ட எமது பத்திரிக்கை நண்பர்கள்,பதிவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்...
இந்த ஆண்டு முதன்முறையாக எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருக்கும் "புதிய தலைமுறை" பத்திரிக்கையில் மணற்கேணி போட்டி அறிவிப்பு வெளியிடக்கோரியிருந்தோம், விரைவாக அடுத்த இதழிலேயே "புதிய தலைமுறை" இதழில் மணற்கேணி போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவினார்கள். ஆசிரியர் மாலனுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் நிருபர் யுவகிருஷ்ணாவுக்கும் மணற்கேணி அமைப்பின் சார்பாகவும் தமிழ்வெளி நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...
மறந்துடாதிங்க மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31,2010
வெளியிட்டவர்: குழலி / Kuzhali நாள்/நேரம் 12/08/2010 03:04:00 PM 1 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் புதியதலைமுறை, மணற்கேணி 2010
உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 24 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்
24 நாட்கள்
வெளியிட்டவர்: மீனாட்சி சுந்தரம் நாள்/நேரம் 12/07/2010 05:33:00 PM 5 பின்னூட்டங்கள்
Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.