அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி
அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி
தமிழ் மொழி விழா 2010
(தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்)
வளர்தமிழ் இயக்கம் ஆதரவில்
நடைபெறும் தமிழ் மொழி விழா 2010
:: தமிழால் ஒன்றுபட்டோம் ::
அனைத்துலக தமிழ் பேச்சுப்போட்டி
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 4/09/2010 01:55:00 PM 5 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் சிங்கப்பூர், தமிழ், நிகழ்ச்சிகள்
வணக்கம் !
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 4/09/2010 09:37:00 AM 1 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் சிங்கப்பூர், தமிழ்
சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்தியமணற்கேணி 2009, அரசியல்/சமூகம் பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.
வெளியிட்டவர்: குழலி / Kuzhali நாள்/நேரம் 3/22/2010 09:01:00 PM 11 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் அரசியல் / சமூகம் முடிவுகள், மணற்கேணி 2009
சிட்டி ஹால், சிங்கப்பூர்
நேரம்:மாலை 04:30
நாள் : 13-03-2010 (சனிக்கிழமை)
வெளியிட்டவர்: அறிவிலி நாள்/நேரம் 3/13/2010 12:45:00 AM 6 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் singai பதிவர்கள், அறிவிப்புகள், பதிவர் சந்திப்பு
சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்திய மணற்கேணி 2009, இலக்கிய பிரிவின் வெற்றியாளர் உறுதி செய்யப்படுள்ளார்.
இலக்கியப் பிரிவுக்கும் 10 கட்டுரைகள் வந்திருந்தன, அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன, இருந்தாலும் மிகவும் சிறப்பான கட்டுரை என்று தமிழார்வள நடுவர்களால்
தமிழர் இசை பற்றிய கட்டுரை எழுதிய திரு பிரபாகர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் 'மணற்கேணி' சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி குழுவினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இலக்கிய கட்டுரை வரைவாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழர் இசை குறித்த திரு பிராபகர் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்
- மணற்கேணி 2009 ஒருங்கிணைப்பாளர்
ஜோசப் பால்ராஜ்
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 2/12/2010 10:19:00 AM 12 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் சிங்கப்பூர் பதிவர்கள், தமிழ்வெளி, மணற்கேணி -2009, வெற்றியாளர்
தலைப்பு: நவீனகால நுண்ணோக்கிகள்
எழுதியவர்: இரா.இரஞ்சித்
வலைதள முகவரி: http://kaiyedu.
வெற்றி பெற்ற இரஞ்சித் அவர்களுக்கு சிங்கைப் பதிவர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளியிட்டவர்: ஜோசப் பால்ராஜ் நாள்/நேரம் 2/10/2010 08:00:00 AM 23 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் அறிவியல் பிரிவு, முடிவுகள்
மணற்கேணி முடிவுகள் வருமா ? வராதா ? போட்டி நடக்கிறதா ? இல்லையா ? என்று தத்தமுக்குள் பதிவர்கள் பந்தயம் கட்டிய தாக அறிந்தோம், இன்னும் சிலர் மணற்கேணி 2009 என்கிற தலைப்பையே கூட மறந்திருப்பார்கள். பதிவர்கள் அனைவரிடத்திலும் இதன் காலம் தாழ்த்துதல் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் தாழ்ந்தற்கு சில காரணங்கள் உண்டு, குறிப்பாக சிறப்பான நடுவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் ஒப்புதல் பெறவும் காலம் நீண்டது.
மணற்கேணி போட்டிக்கு 50 கட்டுரைகள் வரையில் வந்தது. 90 விழுக்காடு கருத்து செறிவுடன் எதிர்பார்த்ததை விட சிறப்பான உழைப்பை எழுத்தில் காட்டி இருந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குழு மின் அஞ்சலுக்கு வந்த மின் அஞ்சல்களுக்கு, பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் கூற முடியவில்லை, அந்த மின் அஞ்சல்களை நாள் தோறும் தொடர்பில் இருக்கும் மற்ற மின் அஞ்சல்களுடன் இணைத்திருக்காததால் உடனடியாக மின் அஞ்சல்களை வாசிக்க முடியாமல் போய் விட்டது. வருந்துகிறோம்.
மணற்கேணி போட்டி குறித்து கேள்வி எழுப்பிய பின்னூட்டங்கள் தானாகவே வெளியாகி இருந்ததால் கேள்விகளை உடனுக்குடன் படிப்பதற்கு வாய்பில்லாமல் போய் விட்டிருந்தது. மட்டுறுத்தல் வைத்திருந்தால் வெளி இடும் போதே அதற்கான பதிலும் சொல்லி இருக்க முடியும். இந்த போட்டியை நடத்தும் அனைவருமே பகுதி நேரமாக செய்வதாலும், முதல் முறையாக இவ்வாறான போட்டி நடத்துவதாலும் போதிய துய்ப்புகளை இதில் தான் கற்றுக் கொள்கிறோம். அடுத்து நடத்தும் போட்டிகளில் இந்த குறைகளை களைந்துவிட்டு சிறப்பாக செயல்படுவோம் என்கிற உறுதி கூறுகிறோம்.
போட்டி முடிவுகள்:
அரசியல், அறிவியல் மற்றும் இலக்கியம் இவற்றில் அறிவியல் பிரிவு நடுவர்களால் அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகளில் பரிசு பெரும் கட்டுரை முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் போட்டியில் வெற்றியாளர் பற்றிய முடிவு வரும் புதன் கிழமை 10/பி/2010 (தேதி குறிப்பிட்டாகவிட்டது சத்தியமாக சொல்லிவிடுவோம்)
அறிவிக்கப்படும்
இலக்கியப் போட்டியின் முடிவு வரும் 12/பிப்/2010 அன்று அறிவிக்கப்படும்
அரசியல் பிரிவு பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு
வெளியிட்டவர்: கோவி.கண்ணன் நாள்/நேரம் 2/08/2010 04:19:00 PM 2 பின்னூட்டங்கள்
குறிசொற்கள் அறிவியல் பிரிவு, சிங்கபூர், சிங்கப்பூர் பதிவர்கள், போட்டி, மணற்கேணி -2009
Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.