"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

I. புகுமுன் உங்களோடு ...

ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.

ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.

மேலும் படிக்க>>>>>>>

எழுதியவர்: டாக்டர் முனியப்பன் ( முனியப்பன் பக்கங்கள்)

மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

நவீன கால நுண்ணோக்கிகள் (அறிவியல்) !

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)
(தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு அறிவியல் கட்டுரை)

நவீன கால நுண்ணோக்கிகள் - மணற்கேணி2009 - பகுதி 1

நவீனகால நுண்ணோக்கிகள்
(Modern day Microscopes)

முன்னுரை:

மனிதயினம், தனது சிந்தனைத்திறன் மூலம் காண்பவை அனைத்தின் மீதும் கேள்விகளைத் தொடுத்து தனது தேடல்களை விரிவாக்கிக்கொண்டிருந்தது, தற்போதும் விரிவாக்கிக் கொண்டிருக்கிருக்கிறது. அப்படி மனிதன் வியந்து போகும் மற்றும் வியந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைகளுள் ஒன்று “வானவியல்”. தன்னால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அடைய முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவில், பெரிதாயிருந்ததுவும், மனிதன் வானவியலை வியந்து நோக்கியதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று. ஆனால், மேலே வானில் விரிகின்ற அதிசயங்களுக்கு இணையாகவும் அல்லது அதற்கு மேலும் ஆச்சர்யமூட்டும் ஒரு உலகு மனிதனின் கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிரிகள், அணுக்கள் மற்றும் அணுக்கருத் துகள்களின் உலகம். இப்படி எளிதாக மனிதக் கண்களுக்குப் புலனாகாத உலகம் குறித்த தேடலில் விளைந்த ஒரு அரிய கண்டுபிடிப்பே நுண்ணோக்கிகள் (microscopes). மேலும் படிக்க ...


நவீன கால நுண்ணோக்கிகள் - பகுதி 2

ஈ. நவீன நுண்ணோக்கிகள்

20ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்கள் நவீன இயற்பியலில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆண்டுகாலம் எனலாம். பொருண்மை, ஆற்றல், அணு எனப் பல விடைதெரியா புதிர்களுக்கு விடைகள் கிடைத்த காலம் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் எனலாம். இன்றைக்கு இயற்பியலில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பிந்து சித்தாந்தத்தின் (Quantum Theory) துவக்க காலங்கள் அவை. மேலும், அறிவியலின் தேடல், நுணுகிய பொருட்களுக்குள் புகுந்து அவற்றின் உலகைக் கண்டு இரசிக்கத் துவங்கியிருந்த காலம். அணுவே உலகின் மிகச்சிறிய துகள் என்று மனிதன் எண்ணியிருந்தது உடையத் துவங்கிய காலம். அணுவிற்குள்ளும் அதனினும் சிறிய துகள்கள் உண்டு எனப் புரியத் துவங்கியது. மேலும் படிக்க ...


எழுதியர் கையேடு

*****

பதிவர் திரு கையேடு அவர்களுக்கு மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

மணற்கேணி - 2009 அடுத்தது என்ன ?

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய "மணற்கேணி - 2009" கருத்தாய்வுப் போட்டியில் மிக ஆர்வமுடன் பங்கேற்று கட்டுரைகள் அனுப்பிய அனைவரையும் மணற்கேணிக் குழு மிகவும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது

இன்று முதல் கட்டுரை அனுப்பியவர்கள் அந்தக் கட்டுரைகளை தங்களது வலைத்தளத்தில் வெளி இடலாம்.

போட்டி முடிவுகள் நவம்பர் திங்கள் இறுதிக்கு முன் வெளி ஆகிவிடும். கிடைத்திருப்பது அனைத்துமே சிறப்பான கட்டுரைகள் ஆகையால் அவற்றை சீர்த்துக்கிப் பார்த்து மதிப்பீடு செய்யும் தகுதியானவர்கள் மூலம் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பெண்கள் இடப்படும்.

போட்டியின் முதல் மூன்று பரிசுகள் தவிர்த்து அனைத்துக் கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்க மணற்கேணிக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதை இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

50 கட்டுரைகள் வரை கிடைத்த அனைத்துமே மிகவும் தரமானவை என்பதால் போட்டியின் நோக்கம் மிகச் சரியாக நிறைவேறி இருப்பதுடன், பங்கேற்றப் பதிவர்களின் உழைப்பும் அதில் அடங்கி இருந்ததிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம்.

இந்த வரவேற்பு எங்கள் குழுவை அடுத்த ஆண்டு மேலும் மற்றொரு மாறுபட்ட போட்டி நடத்த ஊக்கப்படுத்தி இருப்பதையும் இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டியில் இணைந்து செயல்பட்ட தமிழ்வெளி இணையதளம் மூலம் கிடைத்த விளம்பரங்கள் போட்டி பற்றி மிக முழுமையான தகவல்களை பரப்புவதற்கு வழிவகை ஏற்படுத்தி நல்ல பயனளித்துள்ளது. பல்வேறு திரட்டிகள் இது போல் பதிவர்களுடன் இணைந்து செயல்படும் போது திரட்டிகளுக்கும் பதிவர்களுக்குமிடையேயான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் மேலும் வளரும் என்பது மெய்ப்பட்டு இருக்கிறது.

மணற்கேணி - 2009 தொடர்பான விளம்பரங்களை வெளியிட்ட அனைத்துத் திரட்டிகள், இணைய இதழ்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், அந்த விளம்பரங்கள் தமிழ்வெளி மூலம் தங்கள் பதிவுகளில் இணைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட பதிவர்கள் பலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணித் தொடர்பான தகவல்கள், செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பாராட்டியவர்கள், படித்தவர்கள் மற்றும் இது பற்றிய இடுகைகள் வெளிட்டவர்கள் அங்கு பின்னூட்டமிட்டு ஆதரித்த அனைவருக்கும் நன்றிக் கூறிக் கொள்கிறோம்.

கேட்டவுடன் மணற்கேணி - 2009 இலச்சினை செய்து கொடுத்த பதிவர் நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் அறிவித்தப் பிறகு.....அடுத்தப் போட்டி அறிவுப்பு உங்களுக்காக, உங்களைத் தேடி வரும்.

போட்டியில் பங்கு பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த அறிவிப்புகளில் வெளிவரும்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !

சிங்கையில் லேசான நில அதிர்வு !

ஐந்து நிமிடங்களுக்கு முன் சிங்கையில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. எனது இருக்கை லேசாக அசைய .... அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சீனப் பெண் 'ஷேக்கிங்க்....ஷேக்கிங்க்' என்று குரல் எழுப்பினாள்.

ரிக்டர் அளவு விவரம் தெரியவில்லை.

கிட்டதட்ட அது பற்றிய தகவல் இங்கே


இந்தோனிசியா சுமத்திரா தீவு அருகில் அடிக்கடி நில நடுக்கம் / அதிர்வு ஏற்படும், அது சற்று பெரியதாக இருக்கும் போது சிங்கையிலும் உணரப் படும். சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்கிற தகவல் இனிமேல் தான் வெளியாகும்.

எதற்கும் தமிழக கடற்கரைப் பகுதிக்கு செல்பவர்களை தவிர்க்கச் சொல்லுவோம்.

முழுத்தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது

இன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2009 போட்டி



தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2009 ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2009 நிர்வாக குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

சேரனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அம்பு !

நேற்று சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்களின் 2009 கவிதைத் தொகுப்பு விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தேறியது. அது பற்றியப் புகைப்படத் தொகுப்புகளையும் விவரங்களையும் வலைப்பதிவர் மற்றும் கவிஞர் பாண்டித்துரை எழுதுவார்.



விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் வரவழைக்கப்பட்டு இருந்தார். பெரும்பான்மை, நடுத்தரவர்கத்தினரின் ஏக்கங்களைச் சாடியும், அறிவுரை கூறியும் படமெடுக்கும் சேரன் இலக்கிய விழாக்களுக்கு பொருத்தமானவராக என்பதை என்னால் சரியாக முடிவு செய்து சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றவேண்டியவை என்ன என்ன என்பதைப் பற்றி அவரைப் பேசச் சொல்லி இருந்தார்கள், அவர் பேச்சில் இருந்து அது பற்றிப் பேச அவர் பொருத்தமானவர் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது. சேரன் திரைப்பட தமிழ் பட இயக்குனர் என்பதைத் தாண்டி தமிழ் பற்றாளர் என்பது போல் அவரது படங்கள் எதிலும் அவர் தமிழ் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியவர் இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்ததால் திரைத்துறையில் நுழைந்த காலகட்டங்களில் தான் நிராகரிக்கப்பட்டதாகச் சொன்னார்,

அது போல் தமிழ் மட்டும் தெரிந்ததால் தனது சிந்தனைகள் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதாகச் சொன்னார். தமிழ் தொடர்ந்து வாழ எதாவது சொல்லுவார் போல என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம். 'தமிழ் மொழி அழிந்துவிடாமல் இருக்க, உறவுகளைத் தமிழில் இருக்கும் பெயரைச் சொல்லியே அழைத்துப் பழகுங்கள், அம்மா அப்பா என்பதை மம்மி டாடி ஆக்கிவிடாதீர்கள்' என்று கூறி தமிழ் குறித்த தனது எண்ணங்களை மிகவும் எளிமையாக முடித்துக் கொண்டார். ஒரு இயக்குனராக தமிழ் திரைப்படங்கள் வளர்ச்சிகளை பிற மொழிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசி இருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும், தமிழ் மொழியின் தேவை உணர்த்த வேண்டிய இடத்தில் தமிழுக்கு எதிராக பேசாவிட்டாலும் தமிழ் மட்டுமே தெரிந்ததால் தான் அவமானப்பட்டதாகக் கூறியதெல்லாம் மறைமுகமாக தமிழ் பற்றாளர்களை துவண்டுவிடச் செய்யும் பேச்சுகளாக அமைந்தது. உண்மையைச் சொல்கிறேன், உள்ளதைச் சொல்கிறேன் என்பது பேச வேண்டிய பொருள் குறித்துப் பேசும் போது கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் அழைத்தவர்கள் முகம் சுளிக்காமல் இருப்பார்கள். ஒன்றைப் பற்றி உயர்வாகவும் அது பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருவார் என்ற நம்பிக்கையில் பேச்சாளர்களாக அழைப்பவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வண்ணம் அதற்கு எதிராகப் பேசினால் அங்கு உண்மை, உள்ளம் எல்லாம் வீணாகப் போய்விடுகிறது. சேரன் இலக்கிய விழாக்களுக்குப் பொருத்தமானவரா இல்லையா என்பதைவிட தமிழ் கூறும் நல்லுலகு மேம்படக் கருத்துக் கூறும் தகுதி பெற்றவர் அல்ல என்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.


நிற்க.

நிகழ்ச்சியின் இறுதியில் தன்னிடம் கேள்வி எழுப்புவர்கள் எழுப்பலாம் என்று சேரன் கூற ஒருசிலர் ஆவலுடன் முன்வந்தனர். அதில் பார்வையாளராக வந்திருந்த சசிகுமார் என்பவர்,

"தமிழகத்தில் இருந்து இங்குவருபவர்கள் அனைவருமே (சிங்கையில்) இங்குள்ள சுத்தம் சுகாதாரம் ஊழலின்மையைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூரை புகழ்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவை மிக மோசமாக பலர் மத்தியில் விமர்சனம் செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார்கள்...கைத்தட்டல் பெற வேண்டும் என்பதற்காக மிக மட்டமாகக் கூட விமர்சனம் செய்கிறார்கள், நீங்களும் இங்கே அதைச் செய்தீர்கள்" என்று குற்றச் சாட்டாகக் கூற சேரன் பொங்கி விட்டார், கேள்வி எழுப்பியவரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்

"நம்ம ஊர் குப்பதான், அதை ஒப்புக் கொள்கிறேன், அந்தக் குப்பையில் தானே நீங்களும் இருந்தீர்கள், அதைச் சொன்னால் ஏன் கோபப்படனும், உங்க வீட்டுக்கு லெட்டர் போடும் போது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துங்க....வெளி நாட்டுக்குச் செல்வதை விட அதை உழைப்பைக் காட்டினால் உள் நாட்டில் முன்னேராலாம் என்று வெற்றிக் கொடி கட்டு படம் எடுத்தேன், கோவையில் அதைப் பார்த்துவிட்டு வெளி நாடு செல்ல பணம் கட்டிய இளைஞர்கள் திரும்பப் பெற்று சொந்த தொழில் தொடங்கினார்கள்.....என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டு வெளிநாட்டில்......இந்தியாவைப் பற்றி மட்டமாகப் பேசுகிறேன் என்று தெரிகிறது இல்லையா ஏன் கைதட்டுறிங்க....அதை ஏன் அங்கீகரிக்கிறிங்க... இந்தியாவைப் பற்றி சீனரிடம் சொல்லவில்லையே, மலாய்காரர்களிடம் சொல்லவில்லையே...உங்களிடம் தானே சொல்கிறேன்..." என்பது போல் கேள்வி கேட்டவரையே குற்றவாளி ஆக்கிவிட முனைந்தார்.

சேரன் மட்டுமல்ல, இந்தியாவை மட்டமாக விமர்சனம் செய்யும் பேச்சாளர்கள் சிங்கையில் கைதட்டல் பெறுகிறார்கள், இதில் பேசுபவர்களைவிட அதற்கு கைத்தட்டுபவர்கள் ஏராளம் என்பதும் உண்மை. நாம வந்திருப்பது பிழைக்க, அதில் நாம் செல்லும் ஒரு நாடு நம் கண்ணுக்கு முன்பு சுத்தமாக இருப்பதில் நமக்கு தனிப்பட்ட பெருமையாக நினைக்க என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. சேரன் மட்டமாகப் பேசியதும் உண்மை, அது குறித்து கேள்வி எழுப்பியதும் அதை அவர் சமாளித்து கேள்விக் கேட்டவரை மடக்கியது அவர் பேசிய உண்மையை விடக் கசப்பானது.

*****

இதைவிட முதன்மையானத் தகவல், சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கட்டுரைகள் பெருவதற்கு இன்னும் 28(இன்று), 29 (நாளை), 30(நாளை மறுநாள்) என மூன்றே நாட்கள் உள்ளன. ஏற்கனவே எழுதி வைத்திருந்து இன்னும் முழுமை அடையாமல் இருந்து, நிறைவு செய்யாமல் இருந்தால் உடனே நிறைவு செய்து அனுப்புங்கள்.

இன்னும் 2 - 3 நாட்கள் இருப்பதால் புதிதாக எழுதி அனுப்புவதைப் பற்றி கட்டுரையாக்கங்கள் எழுதி அனுப்பாதோர் முயற்சிக்கலாம்.

Moon Cake Festival

சிங்கையைப் பதிவர்களுடன் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளும் அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் மூன்றே நாட்கள் மீதம் உள்ளன.

ஞான பித்தன், ஜோதி பாரதி, முகவை இராம்குமார் மற்றும் பாண்டித்துரை

முழுவிவரங்களுக்கு : மணற்கேணி - 2009

மணற்கேணி - 2009 மறுதேதி அறிவிப்பு !

மணற்கேணி -2009 போட்டி ஆக்கங்கள் அனுப்ப நிறைவு நாள் என்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி என முடிவு செய்து அறிவித்து இருந்தோம். சில பல தவிர்க்க முடியாத காரணங்களினால் கட்டுரையை பதிவர்கள் அனுப்பும் நிறைவு நாளாக செப்டம்பர் 30, 2009 மாற்றிய அமைக்கப் படுவதாக மணற்கேணி -2009 குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல நண்பர்களிடமிருந்து கட்டுரை பெறும் நிறைவு நாளை நீட்டிக்கச் சொல்லி வேண்டுகோள் மின் அஞ்சல் வந்ததாலும், பல நண்பர்கள் ஆக்கங்களுக்கு தேவையான தகவல் திரட்டுவதில் முனைந்திருந்ததாலும் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை, ஆக்கங்கள் பெறும் நிறைவு தேதியை மறுபரீசீலனை பண்ணுமாறு கேட்டு இருந்தார்கள்.

மேலும் தேதி மாற்றம் எதுவும் இல்லை என்று உறுதியாக முடிவு செய்து, கருத்தாய்வு (கட்டுரை) ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய நிறைவு நாள் 30 செப்டம்பர் 2009 என்று ஒரு மனதாக இறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் நினைவு படுத்துகிறோம்,

மொத்தம் 29 தலைப்புகளில் உள்ள மூன்று பிரிவுகளிலும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் தலைப்புக்கு ஒன்றாக 29 ஆக்கங்கள் வரை ஒருவரே அனுப்பலாம்.

ஒரே தலைப்புக்கு ஆக்கங்கள் அனுப்பினாலும் அனுப்பலாம். சிறந்தது தேர்ந்தெடுக்கப்படும்.

போட்டித் தொடர்பான சுட்டிகள் :

போட்டி குறித்த விரிவான அறிவிப்பு

போட்டி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

போட்டி விதிமுறைகள்

போட்டித் தலைப்புகள்

போட்டித் தொடர்பில் தகவல் பெற


விரைவில் ஆக்கங்களை அனுப்பி நல் ஆதரவு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

மணற்கேணி -2009 சிங்கைப் பதிவர்கள் குழு சார்பாக,
கோவி.கண்ணன்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP