"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

என் கேள்விக்கென்ன பதில்? - மணற்கேணி அகேகே FAQ

கருத்தாய்வு போட்டி குறித்த கட்டுரையாளர்களின் சில கேள்விகளுக்கான விளக்கங்கள் !
போட்டி குறித்த அறிவிப்பின் தொடர்பில், போட்டி விதிமுறைகளின் படி போட்டியின் தலைப்புகளுக்கு கட்டுரை அனுப்புவது பற்றி சில கேள்விகள் மின் அஞ்சலுக்கு வந்திருக்கிறது.

1. போட்டி விதிமுறைகளின் படி ஒருவர் எத்தனை கருத்தாய்வு கட்டுரைகளை அனுப்ப முடியும் ?
சமூகம் மற்றும் அரசியல், அறிவியல், தமிழ் என்று மூன்று பிரிவுகளில் மொத்தம் 29 தலைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது, கட்டுரையாளர்கள் 29 தலைப்புகளிலும் தலைப்புக்கு ஒன்றாக 29 கட்டுரைகள் அனுப்பலாம். பிரிவுகள் தலைப்புகளை வகைப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருக்கிறது. உதாரணம் 'பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்' - இந்த தலைப்பில் ஒன்று, 'இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள் ' - இதில் ஒன்று என உங்களுக்கு எத்தனை தலைப்புகளில் எழுதும் ஆர்வம் இருக்கிறதோ, தலைப்புக்கு ஒன்றாக போட்டியில் கொடுத்திருக்கும் 29 தலைப்புகளிலும் எழுதலாம். போட்டியாளர் ஒரே ஒரு தலைப்பில் மட்டும் எழுத விருப்பம் கொண்டிருத்தால் அந்த தலைப்பில் ஒரே ஒரு கட்டுரை எழுதி அனுப்பலாம்.

2. போட்டிக் கட்டுரையை எழுதி அனுப்பிய பிறகு பதிவில் வெளி இடலாமா ?
போட்டி கட்டுரையை அனுப்ப முடிவு நாள் விதி முறையில் சொல்லப்பட்டு இருக்கிறது. போட்டி நடத்தும் அமைப்பு போட்டி குறித்த செயல்பாடுகள்
அ) போட்டி இறுதி நாள் வரை கட்டுரைகளைப் பெறுதல்
ஆ) கட்டுரையாளர்கள் அனுப்பி வைத்த கட்டுரைகளை தொகுத்து மூன்று பிரிவுகளுக்குமான தனித் தனி நடுவர் குழுக்களுக்கு அனுப்பி வைத்தல்.
இ) போட்டி முடிவுகளை அறிவித்தல்
ஈ) பரிசளிக்கும் நிகழ்வு.

போட்டிக்கு கட்டுரை அனுப்பும் இறுதி நாளுக்கு பிறகு கட்டுரையாளர்கள் போட்டிக்கு எழுதிய கட்டுரைகளை தங்கள் தளங்களில் வெளி இடலாம். போட்டிக்கு கட்டுரைகளைப் பெறும் காலக் கெடுவிற்குள் கட்டுரைகளை வெளி இட்டால், எழுத ஆர்வம் இருப்பவர்கள் அதே தலைப்பில் எழுதும் போது வெளி இடப்பட்ட கட்டுரைகளின் தகவலை ஒட்டி எழுத நேரிடலாம், அல்லது மேலும் மாறுபட்ட வகையில் எழுதி முன்பு எழுதியவரின் கட்டுரைகளின் தகவல்கள் ஒன்றுமே இல்லை என்பது காட்டிவிட்டால், வெளி இட்டவருக்கு தேவையற்ற மனச் சோர்வு ஏற்படும். கட்டுரைகளின் தரம் என்பது அது உள்ளடக்கிய தகவல் பொருள் தன்மையில் இருக்கிறது என்பதால் பலவேறுபட்ட தகவல்களைப் பெற வேண்டும் என்பதே போட்டி நடத்துபவர்களின் நோக்கம். போட்டி அமைப்பின் ஆ) செயல்பட்டின் போது கட்டுரைகளை இணைய தளங்களில் / வலைப்பதிவுகளில் வெளி இடலாம் .

3. போட்டிக்கு எழுதும் போது எந்த எழுத்துருவை பயன்படுத்தி கட்டுரைகளை அனுப்புவது ?
தமிழ் இணையப்பக்கங்களின் 90 விழுக்காடு ஒருங்குறி எனப்படும் யுனிகோடு எழுத்துருவுக்கு மாறி இருக்கிறார்கள், தமிழ் எழுத்துருவை பொதுப்படுத்துவது இணைய தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று என்ற கருத்தியலுக்கு ஊக்கம் கொடுக்கும் வண்ணம் ஒருங்குறியில் எழுதுவதற்கு பரிந்துரை செய்கிறோம். ஒருங்குறியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த வலியுறுத்தலும் இல்லை. சிலர் மற்ற எழுத்துருக்களை பயன்படுத்திப் பழகி இருப்பார்கள், அவர்களுக்கு கட்டுரை எழுதும் ஆர்வம் இருந்து ஒருங்குறியில் எழுதத் தெரியாவிட்டாலும், அவர் அறிந்திருக்கும் எழுத்துருவிலேயே தட்டச்சு செய்து அனுப்பினால் போதுமானது. கட்டுரை அனுப்பும் அனைவரும் என்ன வகையான எழுத்துரு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை கட்டுரையின் கடைசி பத்திக்கு பிறகு குறிப்பிட்டால் கட்டுரைகளை ஒழுங்கு படுத்த போட்டிக் குழுவிற்கு பயனாக இருக்கும்.

4. இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் இருக்கும் பதிவர்கள் கலந்து கொள்ளலாமா?

சிங்கப்பூர் தவிர வேறு எந்த நாட்டில் இருப்பவர்களும் போட்டி விதிமுறைகளுக்குட்பட்டு கலந்து கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம்.

7 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி

பயனுள்ள பதிவு...


அனைவரும் பங்கெடுங்கள்...

உண்மைத் தமிழன்(15270788164745573644)

29 தலைப்புகளிலும், 29 பக்கங்கள் என 841 பக்கங்களில் நான் கட்டுரை எழுத அனுப்பத் தயார்..!

ஆனால் பரிசு கிடைப்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா..?

பரிசு கிடைக்காது எனில் பக்கத்துக்கு 15 ரூபாய் என்று பிச்சையாவது போடுவீர்களா.. மாட்டீர்களா..?

பதில் சொன்னால்தான் எழுதவே துவங்குவேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644)

இது பாலோ கமெண்ட்ஸ் கிடைப்பதற்காக..!

குசும்பன்

//மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம்.//

நடுவர்கள் யார் யார்? அவர்களை சரிகட்டுவது எப்படி? கடலமுட்டாய் கொடுத்து மேட்டரை முடிக்கும்படி யாரேனும் இருக்கிறார்களா?:)

எப்பூடி!

//பதில் சொன்னால்தான் எழுதவே துவங்குவேன்..!//

தயவு செய்து பதில் சொல்லிவிடாதீர்கள்! கடைசி நாள் வரை பதில் சொல்லாமலே இருங்க!

Anonymous

மணற்கேணி நண்பர்களுக்கு
வணக்கங்கள
தங்களின் கருத்தாய்வுப் போட்டி முடிவுகள் வெளிவந்து விட்டனவா
விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்

palaniappan

மணற்கேணி நண்பர்களுக்கு
வணக்கங்கள
தங்களின் கருத்தாய்வுப் போட்டி முடிவுகள் வெளிவந்து விட்டனவா
விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்

மு. பழனியப்பன்

மணற்கேணி நண்பர்களுக்கு
வணக்கங்கள
தங்களின் கருத்தாய்வுப் போட்டி முடிவுகள் வெளிவந்து விட்டனவா
விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP