"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

இன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2009 போட்டிதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2009 ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2009 நிர்வாக குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

சேரனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அம்பு !

நேற்று சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்களின் 2009 கவிதைத் தொகுப்பு விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தேறியது. அது பற்றியப் புகைப்படத் தொகுப்புகளையும் விவரங்களையும் வலைப்பதிவர் மற்றும் கவிஞர் பாண்டித்துரை எழுதுவார்.விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் வரவழைக்கப்பட்டு இருந்தார். பெரும்பான்மை, நடுத்தரவர்கத்தினரின் ஏக்கங்களைச் சாடியும், அறிவுரை கூறியும் படமெடுக்கும் சேரன் இலக்கிய விழாக்களுக்கு பொருத்தமானவராக என்பதை என்னால் சரியாக முடிவு செய்து சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றவேண்டியவை என்ன என்ன என்பதைப் பற்றி அவரைப் பேசச் சொல்லி இருந்தார்கள், அவர் பேச்சில் இருந்து அது பற்றிப் பேச அவர் பொருத்தமானவர் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது. சேரன் திரைப்பட தமிழ் பட இயக்குனர் என்பதைத் தாண்டி தமிழ் பற்றாளர் என்பது போல் அவரது படங்கள் எதிலும் அவர் தமிழ் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியவர் இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்ததால் திரைத்துறையில் நுழைந்த காலகட்டங்களில் தான் நிராகரிக்கப்பட்டதாகச் சொன்னார்,

அது போல் தமிழ் மட்டும் தெரிந்ததால் தனது சிந்தனைகள் எப்படிப் பட்டதாக இருந்தது என்பதாகச் சொன்னார். தமிழ் தொடர்ந்து வாழ எதாவது சொல்லுவார் போல என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம். 'தமிழ் மொழி அழிந்துவிடாமல் இருக்க, உறவுகளைத் தமிழில் இருக்கும் பெயரைச் சொல்லியே அழைத்துப் பழகுங்கள், அம்மா அப்பா என்பதை மம்மி டாடி ஆக்கிவிடாதீர்கள்' என்று கூறி தமிழ் குறித்த தனது எண்ணங்களை மிகவும் எளிமையாக முடித்துக் கொண்டார். ஒரு இயக்குனராக தமிழ் திரைப்படங்கள் வளர்ச்சிகளை பிற மொழிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசி இருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும், தமிழ் மொழியின் தேவை உணர்த்த வேண்டிய இடத்தில் தமிழுக்கு எதிராக பேசாவிட்டாலும் தமிழ் மட்டுமே தெரிந்ததால் தான் அவமானப்பட்டதாகக் கூறியதெல்லாம் மறைமுகமாக தமிழ் பற்றாளர்களை துவண்டுவிடச் செய்யும் பேச்சுகளாக அமைந்தது. உண்மையைச் சொல்கிறேன், உள்ளதைச் சொல்கிறேன் என்பது பேச வேண்டிய பொருள் குறித்துப் பேசும் போது கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் அழைத்தவர்கள் முகம் சுளிக்காமல் இருப்பார்கள். ஒன்றைப் பற்றி உயர்வாகவும் அது பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருவார் என்ற நம்பிக்கையில் பேச்சாளர்களாக அழைப்பவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வண்ணம் அதற்கு எதிராகப் பேசினால் அங்கு உண்மை, உள்ளம் எல்லாம் வீணாகப் போய்விடுகிறது. சேரன் இலக்கிய விழாக்களுக்குப் பொருத்தமானவரா இல்லையா என்பதைவிட தமிழ் கூறும் நல்லுலகு மேம்படக் கருத்துக் கூறும் தகுதி பெற்றவர் அல்ல என்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.


நிற்க.

நிகழ்ச்சியின் இறுதியில் தன்னிடம் கேள்வி எழுப்புவர்கள் எழுப்பலாம் என்று சேரன் கூற ஒருசிலர் ஆவலுடன் முன்வந்தனர். அதில் பார்வையாளராக வந்திருந்த சசிகுமார் என்பவர்,

"தமிழகத்தில் இருந்து இங்குவருபவர்கள் அனைவருமே (சிங்கையில்) இங்குள்ள சுத்தம் சுகாதாரம் ஊழலின்மையைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூரை புகழ்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவை மிக மோசமாக பலர் மத்தியில் விமர்சனம் செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார்கள்...கைத்தட்டல் பெற வேண்டும் என்பதற்காக மிக மட்டமாகக் கூட விமர்சனம் செய்கிறார்கள், நீங்களும் இங்கே அதைச் செய்தீர்கள்" என்று குற்றச் சாட்டாகக் கூற சேரன் பொங்கி விட்டார், கேள்வி எழுப்பியவரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்

"நம்ம ஊர் குப்பதான், அதை ஒப்புக் கொள்கிறேன், அந்தக் குப்பையில் தானே நீங்களும் இருந்தீர்கள், அதைச் சொன்னால் ஏன் கோபப்படனும், உங்க வீட்டுக்கு லெட்டர் போடும் போது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்துங்க....வெளி நாட்டுக்குச் செல்வதை விட அதை உழைப்பைக் காட்டினால் உள் நாட்டில் முன்னேராலாம் என்று வெற்றிக் கொடி கட்டு படம் எடுத்தேன், கோவையில் அதைப் பார்த்துவிட்டு வெளி நாடு செல்ல பணம் கட்டிய இளைஞர்கள் திரும்பப் பெற்று சொந்த தொழில் தொடங்கினார்கள்.....என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டு வெளிநாட்டில்......இந்தியாவைப் பற்றி மட்டமாகப் பேசுகிறேன் என்று தெரிகிறது இல்லையா ஏன் கைதட்டுறிங்க....அதை ஏன் அங்கீகரிக்கிறிங்க... இந்தியாவைப் பற்றி சீனரிடம் சொல்லவில்லையே, மலாய்காரர்களிடம் சொல்லவில்லையே...உங்களிடம் தானே சொல்கிறேன்..." என்பது போல் கேள்வி கேட்டவரையே குற்றவாளி ஆக்கிவிட முனைந்தார்.

சேரன் மட்டுமல்ல, இந்தியாவை மட்டமாக விமர்சனம் செய்யும் பேச்சாளர்கள் சிங்கையில் கைதட்டல் பெறுகிறார்கள், இதில் பேசுபவர்களைவிட அதற்கு கைத்தட்டுபவர்கள் ஏராளம் என்பதும் உண்மை. நாம வந்திருப்பது பிழைக்க, அதில் நாம் செல்லும் ஒரு நாடு நம் கண்ணுக்கு முன்பு சுத்தமாக இருப்பதில் நமக்கு தனிப்பட்ட பெருமையாக நினைக்க என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. சேரன் மட்டமாகப் பேசியதும் உண்மை, அது குறித்து கேள்வி எழுப்பியதும் அதை அவர் சமாளித்து கேள்விக் கேட்டவரை மடக்கியது அவர் பேசிய உண்மையை விடக் கசப்பானது.

*****

இதைவிட முதன்மையானத் தகவல், சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கட்டுரைகள் பெருவதற்கு இன்னும் 28(இன்று), 29 (நாளை), 30(நாளை மறுநாள்) என மூன்றே நாட்கள் உள்ளன. ஏற்கனவே எழுதி வைத்திருந்து இன்னும் முழுமை அடையாமல் இருந்து, நிறைவு செய்யாமல் இருந்தால் உடனே நிறைவு செய்து அனுப்புங்கள்.

இன்னும் 2 - 3 நாட்கள் இருப்பதால் புதிதாக எழுதி அனுப்புவதைப் பற்றி கட்டுரையாக்கங்கள் எழுதி அனுப்பாதோர் முயற்சிக்கலாம்.

Moon Cake Festival

சிங்கையைப் பதிவர்களுடன் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளும் அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் மூன்றே நாட்கள் மீதம் உள்ளன.

ஞான பித்தன், ஜோதி பாரதி, முகவை இராம்குமார் மற்றும் பாண்டித்துரை

முழுவிவரங்களுக்கு : மணற்கேணி - 2009

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP