"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

நீங்க பன்றியா இல்லை குரங்கா?

இப்படி ஒரு கேள்விய நமமள பாத்து கேட்டா நிச்சயமா டென்ஷன் ஆயி உண்மையிலியே நமக்குள்ள இருக்கற மிருகத்த தட்டி எழுப்பிருவோம்.

ஆனா சீனர்களையும் சிங்கப்பூரர்களையும் பாத்து இப்படி கேட்டா, ஆமாம் நான் குரங்குதான் இல்லாட்டி பன்றிதான் அப்படின்னு சந்தோஷமாக சொல்லக்கூடும்.ஏன்னு தெரியணுமா? மேல படிங்க...

கிருஸ்துமஸ்ஸும் ஆங்கில புத்தாண்டும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் சிங்கப்பூரில். மிக அற்புதமான வான வேடிக்கைகளுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
ஆனால் அடுத்த நாளே சீனப் புத்தாண்டுக்கான ஆயத்தங்கள் தொடங்கி விடும். சிங்கப்பூர் மொத்தமும் சிவப்பு சாயம் பூசிக்கொள்ளும். சீனர்களுக்கு சிவப்பு ஒரு புனிதமான நிறம். முன்னொரு காலத்தில் சீனாவை ஒரு ராட்சத மிருகம் (ட்ராகன்) தொந்தரவு செய்து கொண்டிருந்ததாம். அந்த மிருகம் சிவப்பு விளக்கை பார்த்து ஓடி விட்டதால் அந்த வண்ணத்தின் மேல் அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு.







சீன வருடங்கள் எலி, காளை, முயல், பன்றி, பாம்பு, புலி, குதிரை, ஆடு, கரடி, குரங்கு, ராட்சத மிருகம் (Dragon) மற்றும் சேவல் என பன்னிரண்டு பெயர்களுடன் சுழற்சியாக வரும். எலி வருடம் முடிந்து காளை வருடம் நடந்து கொண்டிருக்கிறது.

சீனப்புத்தாண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதகாலத்துக்கு பல்வேறு முக்கியமான நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும்.பல அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு இரண்டு முதல் மூன்று வார காலத்துக்கு விடுமுறை அளித்து விடுவார்கள்.

சைனா டவுனில் நடக்கும் நிகழ்ச்சிகள், சிங்கே ஊர்வலம் மற்றும் மரீனா பேவில் நடக்கும் ஹோங்க்பாவ் நதி விழா (Hong Bao River Festival) ஆகியவை ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடைபெறும் நிகழ்வுகள்.

ஹோங்க்பாவ் நதி விழாவில் மேலே இருக்கும் அனைத்து மிருக பொம்மைகளையும் அழகாக வைத்து அந்தந்த வருடங்களில் பிறந்தவர்களுக்கான இந்த வருட ராசி பலனையும் பக்கத்தில் எழுதி வைத்திருப்பார்கள். குரங்கு வருடத்தில் பிறந்த எனக்கு மண வாழ்வு சுமுமாக இருக்கும் என்றும், முயலான என் மனைவிக்கு மண வாழ்வு பிரச்னைகளை போராடி வெற்றி பெறுவீர்கள் என்றும் எழுதியிருந்தது. (எல்லா ஊர்லயும் இப்பிடித்தானோ...).இபப புரியுதா? ஏன் தங்களை குரங்கு பன்றின்னு ஒத்துக்கறாங்கன்னு. நீங்க என்ன மிருகம்னு தெரிஞ்சிக்க கீழே இருக்கற பட்டியல பாத்துக்கோங்க.



ஒரு பெரிய ராஜா சிலையை நிற்க வைத்து, அதிலிருந்து சிறிது நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கும்படி வைத்திருப்பார்கள். இது மேலே பட வேண்டும் என்பதற்காக பலரும் காத்திருப்பார்கள். வீட்டிலிருந்து வர முடியாதவர்களுக்கு எடுத்துக்கொண்டு போவதற்காக குடை (தலை கீழாக) , பாத்திரம், பக்கெட்டுகளுடன் பலரும் காத்திருப்பார்கள். புனித தண்ணீராம் !!!இதை தவிர சீனாவிலிருந்து வந்திருக்கும் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் தவறாமல் பார்க்க வேண்டியவை.









சிங்கே ஊர்வலமும் மிகவும் பிரசித்தி பெற்ற வருடாந்திர நிகழ்வு. உலகின் பல மூலைகளிலிருந்தும் நாட்டிய மற்றும் பல் வகை திறன் பெற்ற குழுவினர் கலந்து கொள்வார்கள். அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும் வண்ணமிகு ஊர்வலங்களும் இறுதியில் வான வேடிக்கைகளுமாக அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.







இவை தவிர ஆங்காங்கே நடக்கும் சிங்க நடனங்களும், சைனா டவுனில் சாலை அலங்காரங்களும் என ஏகக் கொண்டாட்டம்தான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

பதிவர்கள் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களின் ஒரு நிமிட நேரம் தந்து உதவுங்கள்

பொதுவாக பதிவர்கள், வாசகர்கள் என நாம் அனைவருமே நம் கல்லூரி மற்றும் தொழில் சார்ந்த மின்னஞ்சல் குழுமங்களில்(E-Groups) இருப்போம்...

பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப துறை சார்ந்த கட்டுரைகள் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவே உள்ளன, தொழில்நுட்பம் சார்ந்த குறைந்த பட்ச தகவல்களுடன் கூடிய அறிமுக கட்டுரைகள் கூட மிக குறைவாகவே உள்ளன.

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி (http://www.tamilveli.com/) இணைய தளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு(கட்டுரை) போட்டி மணற்கேணி 2009 என்பது நீங்கள் முன்பே அறிந்திருக்கலாம்...

தமிழில் துறை சார்ந்த எழுத்துகள்(Technical) குறைவாகவே உள்ளன, அதை நீக்கும் பொறுட்டு "தமிழ் அறிவியல்" பிரிவில் ஒரு தலைப்பு "தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்) "...இவை எந்த பிரிவை சார்ந்த தாக வேண்டுமானாலும் இருக்கலாம், கட்டுமான (civil construction) வேலைகளில் இருப்பவர்கள் இது தொடர்பான ஒரு கட்டுரையையோ, Robotics, software, Mechanical, Aerodynamics, space research என எதைப்பற்றி வேண்டுமானாலும் முடிந்த அளவில் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதலாம்...

தரமான பல கட்டுரைகள் இந்த தலைப்பில் வந்தால் நம் தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல பங்களிப்பாக இருக்கும்.

எனவே பதிவர்கள், வாசகர்கள் இந்த பதிவையோ அல்லது கீழ் கண்ட பத்தியையோ உங்களின் கல்லூரி மற்றும் தொழில் சார்ந்த குழும அஞ்சலில் இட்டு இந்த போட்டியை பலருக்கும் தெரிவித்து உதவுங்கள்

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி (http://www.tamilveli.com) இணைய தளம் இணைந்து நடத்தும் மாபெரும் கருத்தாய்வு(கட்டுரை) போட்டி மணற்கேணி 2009, "அரசியல் சமூகம்", "தமிழ் இலக்கியம்", "தமிழ் அறிவியல்" என்ற மூன்று பிரிவுகளில் பல தலைப்புகளில் இந்த போட்டி நடைபெறுகிறது,

இந்த போட்டியில் பிரிவுக்கு ஒன்றாக மூவருக்கு சென்னை 2 சிங்கப்பூர் சென்று ஒருவாரம் தங்கி சுற்றிபார்க்க பரிசு அளிக்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற பல கட்டுரைகள் தமிழின் பிரபலமான இதழ்களில் வெளி வர உள்ளது... யார் வேண்டுமானாலும் போட்டியில் பங்கெடுக்கலாம்...

தமிழில் துறை சார்ந்த எழுத்துகள்(Technical) குறைவாகவே உள்ளன, அதை நீக்கும் பொறுட்டு "தமிழ் அறிவியல்" பிரிவில் ஒரு தலைப்பு "தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்) "...இவை எந்த பிரிவை சார்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம், கட்டுமான (civil construction) வேலைகளில் இருப்பவர்கள் இது தொடர்பான ஒரு கட்டுரையையோ, Robotics, software, Automobile, Mechanical, Aerodynamics, space research, Microprocessor என எதைப்பற்றி வேண்டுமானாலும் முடிந்த அளவில் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதலாம்...

வேளாண்மை, தமிழ் மருத்துவம் என எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்...

அரசியல் சமூகம் சார்பான பல கட்டுரைகள் சுற்று சூழல் பற்றி என எழுதலாம்




தரமான பல கட்டுரைகள் இந்த தலைப்பில் வந்தால் நம் தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல பங்களிப்பாக இருக்கும். போட்டி முடிவு நாளுக்கும் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் நேரம் உள்ளது.(போட்டி முடிவு தேதி ஆகஸ்ட் 30, 2009)

போட்டி தொடர்பான மேலதிக விவரங்கள்
http://www.sgtamilbloggers.com மற்றும் http://www.tamilveli.com மற்றும் போன்ற தளங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!....

கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!....




மணற்கேணி 2009 சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
பள்ளிகூடம் போகும்பொழுது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் உள்ள மாங்காய் மரத்தில் யாரும் பார்க்காவண்ணம் கல்லெறிந்து எடுத்த மாங்காயை பக்குவமாய் கொண்டு வந்த உப்புடன் தொட்டு சாப்பிட்ட ஞாபகம் இல்லாமலா போகும்.

டேய்.. சன்னல் கண்ணாடி இருக்கு பார்த்து கல்லெறிடா என்று சொன்னதும் சரியாக சன்னல் கண்ணாடியை பதம்பார்த்தான் ஒருத்தன். வீட்டுகாரன் விரட்டிவர ஓடி மறைவோம் ஒரு நொடியில்.... அத்தனையும் பால்ய ஞாபகம்.

கல்லெறிந்தது என்னவோ மாங்காவிற்காக ஆனால் உடைந்ததோ கண்ணாடி...

ஆனால் இது அப்படி இல்லை, இன்று உங்களுக்கு கொடுக்கப்படும் கல் மணற்கேணி 2009 (சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி ) .

நீங்கள் எறிய வேண்டியது கருத்தாய்வு மிக்க கட்டுரைகள், கொடுக்கப்பட்ட தலைப்புகளில் நீங்கள் எங்களிடம் எறியவேண்டியது மட்டுமே. மேலும் தொடர்புக்கு அனுகலாம் இங்கே .......


மாங்காய் ஒன்று:
உலகப்படத்தில் பார்த்தால் தெரியும், உலக நடுக்கோட்டில் கச்சிதமாய் அமையப்பெற்ற அற்புதமான சின்ன நாடு சிங்கபூர்.உலகநடுகோட்டின் மத்தியில் இருப்பதால் இயற்கை சீற்றங்களால் எந்த பாதிப்பு இல்லாத அதிசயமான நாடு. சமீபத்தில் வந்த சுனாமி தாக்குதலில் சிறிதும் பாதிக்காத நாடு சிங்கபூர் மட்டுமே என்றால் ஆச்சரியம்தான்.
அதேபோல் 24 மணி நேரமும் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைக்கின்ற ஒரே நாடு சிங்கபூர் என்று சொன்னால் மிகையாகாது. நான் பார்த்த 11 வருடங்களில் ஒரு துளி நேரம் கூட மின் தடை வந்ததே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சுற்றியுள்ள நாடுகளில் பெட்ரோலியம் கிடைத்தாலும் சிங்கபூரில் கிடைக்காதது ஒரு குறைதான். இருப்பினும் இங்கு மின்சாரம் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் 90% எடுக்கப்படுகின்றது. சிங்கபூரில் இயற்கை நதிகள் இல்லை என்றாலும் பக்கத்து நாடுகளில் தண்ணீர் வாங்கியும் மற்றும் கழிவுநீரை குடிநீராக மாற்றும் பிளாண்ட்கள் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்கின்றார்கள்...
சிங்கபூர் சுற்றுலா தளமாக இருக்கும் ஒரு நாடு ஆகவே இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராலம். இந்த கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2009 போட்டியில் வெற்றியடைவதன் மூலம் நிங்கள் அந்த வாய்ப்பை பெறுவீர்கள்....

மாங்காய் இரண்டு:
ஏதோ பொழுதுபோகாமல் இணையத்தில் வெட்டியாக எழுதுபவன் என்ற பார்வைகளிலிருந்து, ஒரு மாற்றம் கொண்டுவரும் வாய்ப்புதான் இந்த மணற்கேணி 2009. இது ஒரு முதல் படி இதன் வெற்றிக்கு பின் பதிவர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் மாங்காய் இரண்டு. வலைப்பதிவு எழுத்தாளர்களால் இப்படிப் பட்ட மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்பதை அலசிய இடுக்கையின் சுட்டி
வென்றிடுவீர் எட்டு திக்கும்!....


Manarkeni 2009


உங்கள் எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமே? ஆகையால் இந்த அறிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம். இதை நீங்களும் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில்

சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்

சிங்கபூர் பற்றிய காணோளி






சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு -2

அன்புடன் அழைக்கிறோம்...!

சிங்கை தமிழ்ப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் மணற்கேணி-2009 போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளுங்கள்...! வெல்லுங்கள்...!


சிங்கப்பூர் சரக்கின் மகத்துவத்தைத் தொடர்வொம்...

சிங்கப்பூர் ஏறத்தாழ 4.8 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடு, இங்கு சீனர்கள் 75.2 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 13.6 விழுக்காடும், தமிழர்கள்(இந்தியர்கள்) 8.8 விழுக்காடும், மற்ற இனத்தவர்கள் 2.4 விழுக்காடும் வசிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இங்கு ஆங்கிலம்,சீனம்,மலாய் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரத்துவ மொழிகள்.

தற்போதைய சிங்கப்பூரின் அதிபராக தமிழரான திரு.எஸ்.ஆர். நாதன் அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். முன்னாள் துணைப் பிரதமர், தற்போதைய மூத்த அமைச்சராக பேராசிரியர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களும், நிதியமைச்சராக திரு.தர்மன் சண்முகரத்தினமும், சட்ட அமைச்சராக திரு.சண்முகம் அவர்களும் இருக்கிறார்கள். இன்னபிற முதன்மையான துறைகளில் அமைச்சர்களாக தமிழர்கள் பங்காற்றுகிறார்கள்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் தலைமைத்துவம் முக்கியப் பங்காற்றி வரும் வேலையில் மக்களும் அதில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவர்களின் தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும், எறும்பைப் போன்ற அயராத உழைப்பும் எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்காக உழைக்கும் அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் சட்டங்களை மக்கள் மதிக்கும் நிலை இருந்து வருகிறது. அதாவது அரசாங்கம்,நாடு,மக்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருப்பது போன்ற உணர்வு(பிரக்ஞை) ஏற்படுகிறது.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க இடங்கள் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு நிறைய இடங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வெண்டும். சுற்றிப் பார்க்கும் இடங்களை விட சாப்பாட்டிற்கு சிறந்த இடங்கள் பல இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஏனென்றால் சிங்கப்பூரர்கள் பொதுவாக சாப்பாட்டுப் பிரியர்கள். சுவையான உணவு எங்கு கிடைத்தாலும், அந்த இடம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அங்கு போய் உணவு உண்பது வழக்கம். அதனால், பல நாட்டு உணவுவகைகளையும் உண்பதற்கு,சுவைப்பதற்கு உகந்த இடமாக இருப்பதில் ஐயமில்லை. இன்னொரு முதன்மையான காரணம், பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கையில் தங்களது தலைமைச் செயலகம் அல்லது கிளைகளை நிறுவியிருக்கிறார்கள். அதுசமயம், இங்கு பணியிலிருக்கும் வெளி நாட்டவர்கள் தங்கள் நாட்டு உணவு வகைகளையும் சாப்பிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நாடுகளின் உணவுகளை வழங்கக்கூடிய உணவகங்கள், நிறைவாய் இருக்கின்றன. பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் பல்வேறு நாடுகளின் உணவுவகைகளை உண்பதற்கு எளிதாகப் பழகிக்கொள்கிறார்கள்.

பொதுவாக நமது இந்திய உணவுவகைகளில் பரொட்டா ரொட்டி இங்கு தமிழர்,சீனர்,மலாய்க்காரர் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்கள் விரும்பி உண்ணும் உணவாகும். இங்கு பெரும்பாலும் சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏறத்தாழ ஒரே அளவு விலையில் தான் விற்கப்படுகின்றன. இதனால் நம்மவர்களில் பல அசைவப் பிரியர்கள், தினமும் அசைவம் சாப்பிடும் சூழலும் இருக்கிறது. அங்காடிக் கடைகளில் நமது இந்திய உணவுக்கென்று ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கு ஓரளவுக்கு இந்திய சுவையை ஒத்த உணவு வகைகள் கிடைக்கின்றன. காலையில் தோசை வகைகள்,ரொட்டி ப்ராட்டா போன்றவைகளும், மதியம் சாப்பார், ரசம்,காய்கறி வகைகள், கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. சீனர்கள் விரும்பிச் சாப்பிடும் இண்டியன் ரோஜாக்கும் இங்குதான் கிடைக்கும். இந்தியன் ரோஜாக்கை இந்தியர்கள் சாப்பிட்டு இதுவரை பார்த்ததாக ஞாபகம் இல்லை. இது பல தரப்பட்ட பலகாரங்களின் கலவை, சரியான காரத்துடன் கொடுப்பார்கள். நம்மவர்கள் செய்யும் மீ கோரிங், நாசி கோரிங் எல்லாம் நன்கு சுவையாகத் தான் இருக்கிறன. மீ என்றால் நூடுல்ஸ், நாசி என்றால் சோறு, கோரிங் என்றால் வறுத்தல் அல்லது பெரட்டுதல். அப்படின்னா, நாசி கோரிங் என்பது பிரைட் ரைஸ் என்பதன் மலாய் சொல். நாசி என்பதை மூக்கோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது வாயோடு சம்பந்தப் பட்ட சோறு.

இது போன்ற அங்காடிக்கடைகள் தவிர நமது இந்திய உணவு வகைகள் சாப்பிடுவதற்கு உகந்த இடம் குட்டி இந்தியா எனப்படும் தேக்காதான். தேக்காவில் பெரும்பகுதி நமது இந்திய உணவகங்களைக் காண முடியும். இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சில பல உணவகங்களின் கிளைகளைக் கூட இங்கு காண இயலும். இங்கெல்லாம் சாப்பிடும் போது நாம் தமிழகத்தில் இருக்கும் உணர்வு ஏற்படும் என்பதை பலரும் உணர்ந்ததாக அறிகிறோம்.

ஒரே வகையான உணவை பல்வேறு வகையான விலைகளில் உணவகத்தின் தரத்திற்கேற்றார்போல் இங்கு பெற முடியும். இந்திய உணவு வகைகளை மேற்கத்திய பாணியில் வடிவம் மாற்றி அதிவிரைவு உணவு என்றும் விற்றுப் பார்க்கிறார்கள்.



பலரும் விரும்பிச் சாப்பிடும் மீன் தலைக்கறி போன்ற உணவு வகைகள் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் உணவகங்களிலும் கிடைக்கின்றன.

தொடரும்...


Manarkeni 2009


நன்றி: மணற்கேணி-2009,சிங்கை பதிவர்கள்,தமிழ்வெளி

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு -2

அன்புடன் அழைக்கிறோம்...!

சிங்கை தமிழ்ப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் மணற்கேணி-2009 போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளுங்கள்...! வெல்லுங்கள்...!


சிங்கப்பூர் சரக்கின் மகத்துவத்தைத் தொடர்வொம்...

சிங்கப்பூர் ஏறத்தாழ 4.8 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடு, இங்கு சீனர்கள் 75.2 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 13.6 விழுக்காடும், தமிழர்கள்(இந்தியர்கள்) 8.8 விழுக்காடும், மற்ற இனத்தவர்கள் 2.4 விழுக்காடும் வசிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இங்கு ஆங்கிலம்,சீனம்,மலாய் மற்றும் தமிழ் மொழிகள் அதிகாரத்துவ

தற்போதைய சிங்கப்பூரின் அதிபராக தமிழரான திரு.எஸ்.ஆர். நாதன் அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். துணைப் பிரதமராக தமிழரான பேராசிரியர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களும், நிதியமைச்சராக திரு.தர்மன் சண்முகரத்தினமும், சட்ட அமைச்சராக திரு.சண்முகம் அவர்களும் இருக்கிறார்கள். இன்னபிற முதன்மையான துறைகளில் அமைச்சர்களாக தமிழர்கள் பங்காற்றுகிறார்கள்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் தலைமைத்துவம் முக்கியப் பங்காற்றி வரும் வேலையில் மக்களும் அதில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவர்களின் தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும், எறும்பைப் போன்ற அயராத உழைப்பும் எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்காக உழைக்கும் அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் சட்டங்களை மக்கள் மதிக்கும் நிலை இருந்து வருகிறது. அதாவது அரசாங்கம்,நாடு,மக்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருப்பது போன்ற உணர்வு(பிரக்ஞை) ஏற்படுகிறது.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க இடங்கள் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு நிறைய இடங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வெண்டும். சுற்றிப் பார்க்கும் இடங்களை விட சாப்பாட்டிற்கு சிறந்த இடங்கள் பல இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஏனென்றால் சிங்கப்பூரர்கள் பொதுவாக சாப்பாட்டுப் பிரியர்கள். சுவையான உணவு எங்கு கிடைத்தாலும், அந்த இடம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அங்கு போய் உணவு உண்பது வழக்கம். அதனால், பல நாட்டு உணவுவகைகளையும் உண்பதற்கு,சுவைப்பதற்கு உகந்த இடமாக இருப்பதில் ஐயமில்லை. இன்னொரு முதன்மையான காரணம், பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கையில் தங்களது தலைமைச் செயலகம் அல்லது கிளைகளை நிறுவியிருக்கிறார்கள். அதுசமயம், இங்கு பணியிலிருக்கும் வெளி நாட்டவர்கள் தங்கள் நாட்டு உணவு வகைகளையும் சாப்பிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நாடுகளின் உணவுகளை வழங்கக்கூடிய உணவகங்கள், நிறைவாய் இருக்கின்றன. பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் பல்வேறு நாடுகளின் உணவுவகைகளை உண்பதற்கு எளிதாகப் பழகிக்கொள்கிறார்கள்.

பொதுவாக நமது இந்திய உணவுவகைகளில் பரொட்டா ரொட்டி இங்கு தமிழர்,சீனர்,மலாய்க்காரர் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்கள் விரும்பி உண்ணும் உணவாகும். இங்கு பெரும்பாலும் சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏறத்தாழ ஒரே அளவு விலையில் தான் விற்கப்படுகின்றன. இதனால் நம்மவர்களில் பல அசைவப் பிரியர்கள், தினமும் அசைவம் சாப்பிடும் சூழலும் இருக்கிறது. அங்காடிக் கடைகளில் நமது இந்திய உணவுக்கென்று ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கு ஓரளவுக்கு இந்திய சுவையை ஒத்த உணவு வகைகள் கிடைக்கின்றன. காலையில் தோசை வகைகள்,ரொட்டி ப்ராட்டா போன்றவைகளும், மதியம் சாப்பார், ரசம்,காய்கறி வகைகள், கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. சீனர்கள் விரும்பிச் சாப்பிடும் இண்டியன் ரோஜாக்கும் இங்குதான் கிடைக்கும். இந்தியன் ரோஜாக்கை இந்தியர்கள் சாப்பிட்டு இதுவரை பார்த்ததாக ஞாபகம் இல்லை. இது பல தரப்பட்ட பலகாரங்களின் கலவை, சரியான காரத்துடன் கொடுப்பார்கள். நம்மவர்கள் செய்யும் மீ கோரிங், நாசி கோரிங் எல்லாம் நன்கு சுவையாகத் தான் இருக்கிறன. மீ என்றால் நூடுல்ஸ், நாசி என்றால் சோறு, கோரிங் என்றால் வறுத்தல் அல்லது பெரட்டுதல். அப்படின்னா, நாசி கோரிங் என்பது பிரைட் ரைஸ் என்பதன் மலாய் சொல். நாசி என்பதை மூக்கோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது வாயோடு சம்பந்தப் பட்ட சோறு.

இது போன்ற அங்காடிக்கடைகள் தவிர நமது இந்திய உணவு வகைகள் சாப்பிடுவதற்கு உகந்த இடம் குட்டி இந்தியா எனப்படும் தேக்காதான். தேக்காவில் பெரும்பகுதி நமது இந்திய உணவகங்களைக் காண முடியும். இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சில பல உணவகங்களின் கிளைகளைக் கூட இங்கு காண இயலும். இங்கெல்லாம் சாப்பிடும் போது நாம் தமிழகத்தில் இருக்கும் உணர்வு ஏற்படும் என்பதை பலரும் உணர்ந்ததாக அறிகிறோம்.

ஒரே வகையான உணவை பல்வேறு வகையான விலைகளில் உணவகத்தின் தரத்திற்கேற்றார்போல் இங்கு பெற முடியும். இந்திய உணவு வகைகளை மேற்கத்திய பாணியில் வடிவம் மாற்றி அதிவிரைவு உணவு என்றும் விற்றுப் பார்க்கிறார்கள்.

பலரும் விரும்பிச் சாப்பிடும் மீன் தலைக்கறி போன்ற உணவு வகைகள் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் உணவகங்களிலும் கிடைக்கின்றன.

தொடரும்...


Manarkeni 2009


நன்றி: மணற்கேணி-2009,சிங்கை பதிவர்கள்,தமிழ்வெளி

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு -2

அன்புடன் அழைக்கிறோம்...!

சிங்கை தமிழ்ப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் மணற்கேணி-2009 போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளுங்கள்...! வெல்லுங்கள்...!


சிங்கப்பூர் சரக்கின் மகத்துவத்தைத் தொடர்வொம்...

சிங்கப்பூர் ஏறத்தாழ 4.8 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடு, இங்கு சீனர்கள் 75.2 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 13.6 விழுக்காடும், தமிழர்கள்(இந்தியர்கள்) 8.8 விழுக்காடும், மற்ற இனத்தவர்கள் 2.4 விழுக்காடும் வசிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

தற்போதைய சிங்கப்பூரின் அதிபராக தமிழரான திரு.எஸ்.ஆர். நாதன் அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். துணைப் பிரதமராக தமிழரான பேராசிரியர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களும், நிதியமைச்சராக திரு.தர்மன் சண்முகரத்தினமும், சட்ட அமைச்சராக திரு.சண்முகம் அவர்களும் இருக்கிறார்கள். இன்னபிற முதன்மையான துறைகளில் அமைச்சர்களாக தமிழர்கள் பங்காற்றுகிறார்கள்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் தலைமைத்துவம் முக்கியப் பங்காற்றி வரும் வேலையில் மக்களும் அதில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவர்களின் தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும், எறும்பைப் போன்ற அயராத உழைப்பும் எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்காக உழைக்கும் அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் சட்டங்களை மக்கள் மதிக்கும் நிலை இருந்து வருகிறது. அதாவது அரசாங்கம்,நாடு,மக்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருப்பது போன்ற உணர்வு(பிரக்ஞை) ஏற்படுகிறது.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க இடங்கள் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு நிறைய இடங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வெண்டும். சுற்றிப் பார்க்கும் இடங்களை விட சாப்பாட்டிற்கு சிறந்த இடங்கள் பல இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஏனென்றால் சிங்கப்பூரர்கள் பொதுவாக சாப்பாட்டுப் பிரியர்கள். சுவையான உணவு எங்கு கிடைத்தாலும், அந்த இடம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அங்கு போய் உணவு உண்பது வழக்கம். அதனால், பல நாட்டு உணவுவகைகளையும் உண்பதற்கு,சுவைப்பதற்கு உகந்த இடமாக இருப்பதில் ஐயமில்லை. இன்னொரு முதன்மையான காரணம், பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கையில் தங்களது தலைமைச் செயலகம் அல்லது கிளைகளை நிறுவியிருக்கிறார்கள். அதுசமயம், இங்கு பணியிலிருக்கும் வெளி நாட்டவர்கள் தங்கள் நாட்டு உணவு வகைகளையும் சாப்பிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நாடுகளின் உணவுகளை வழங்கக்கூடிய உணவகங்கள், நிறைவாய் இருக்கின்றன. பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் பல்வேறு நாடுகளின் உணவுவகைகளை உண்பதற்கு எளிதாகப் பழகிக்கொள்கிறார்கள்.

பொதுவாக நமது இந்திய உணவுவகைகளில் பரொட்டா ரொட்டி இங்கு தமிழர்,சீனர்,மலாய்க்காரர் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்கள் விரும்பி உண்ணும் உணவாகும். இங்கு பெரும்பாலும் சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏறத்தாழ ஒரே அளவு விலையில் தான் விற்கப்படுகின்றன. இதனால் நம்மவர்களில் பல அசைவப் பிரியர்கள், தினமும் அசைவம் சாப்பிடும் சூழலும் இருக்கிறது. அங்காடிக் கடைகளில் நமது இந்திய உணவுக்கென்று ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கு ஓரளவுக்கு இந்திய சுவையை ஒத்த உணவு வகைகள் கிடைக்கின்றன. காலையில் தோசை வகைகள்,ரொட்டி ப்ராட்டா போன்றவைகளும், மதியம் சாப்பார், ரசம்,காய்கறி வகைகள், கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. சீனர்கள் விரும்பிச் சாப்பிடும் இண்டியன் ரோஜாக்கும் இங்குதான் கிடைக்கும். இந்தியன் ரோஜாக்கை இந்தியர்கள் சாப்பிட்டு இதுவரை பார்த்ததாக ஞாபகம் இல்லை. இது பல தரப்பட்ட பலகாரங்களின் கலவை, சரியான காரத்துடன் கொடுப்பார்கள். நம்மவர்கள் செய்யும் மீ கோரிங், நாசி கோரிங் எல்லாம் நன்கு சுவையாகத் தான் இருக்கிறன. மீ என்றால் நூடுல்ஸ், நாசி என்றால் சோறு, கோரிங் என்றால் வறுத்தல் அல்லது பெரட்டுதல். அப்படின்னா, நாசி கோரிங் என்பது பிரைட் ரைஸ் என்பதன் மலாய் சொல். நாசி என்பதை மூக்கோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது வாயோடு சம்பந்தப் பட்ட சோறு.

இது போன்ற அங்காடிக்கடைகள் தவிர நமது இந்திய உணவு வகைகள் சாப்பிடுவதற்கு உகந்த இடம் குட்டி இந்தியா எனப்படும் தேக்காதான். தேக்காவில் பெரும்பகுதி நமது இந்திய உணவகங்களைக் காண முடியும். இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சில பல உணவகங்களின் கிளைகளைக் கூட இங்கு காண இயலும். இங்கெல்லாம் சாப்பிடும் போது நாம் தமிழகத்தில் இருக்கும் உணர்வு ஏற்படும் என்பதை பலரும் உணர்ந்ததாக அறிகிறோம்.

ஒரே வகையான உணவை பல்வேறு வகையான விலைகளில் உணவகத்தின் தரத்திற்கேற்றார்போல் இங்கு பெற முடியும். இந்திய உணவு வகைகளை மேற்கத்திய பாணியில் வடிவம் மாற்றி அதிவிரைவு உணவு என்றும் விற்றுப் பார்க்கிறார்கள்.

பலரும் விரும்பிச் சாப்பிடும் மீன் தலைக்கறி போன்ற உணவு வகைகள் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் உணவகங்களிலும் கிடைக்கின்றன.

தொடரும்...


Manarkeni 2009


நன்றி: மணற்கேணி-2009,சிங்கை பதிவர்கள்,தமிழ்வெளி

மறதமிழர்கள் தேவை!!!

கொஞ்சநாளுக்கு முன்னாடி தமிழரோட வீரத்தை பழிச்சுப் பேசுன ஆளோட நான் செஞ்ச சவாலைப் பத்தி சொல்லுறேன். தெளிவாப் படிச்சு புரிஞ்சுக்கிட்டு, உங்க தெறமைய நிருபிச்சு நம்ம மானத்த காப்பாத்துங்க உலகத் தமிழ் மக்களே.

எங்க ஊருல டாம், டாம்ன்னு வெள்ளையா, தடியா ஒரு ஆளு இருக்காரு. அண்ணாத்த செம அஜால் – குஜால் பார்ட்டி. தெனமும் மூணு நேரமும் கறிக்கஞ்சி தான், நெனச்ச நேரத்துக்கு குளிக்க வீட்டுக்குள்ளயே நீச்சல் குளமும், வாக்கிங் போறதுக்குன்னு வீட்டுக்குள்ளயே பாதை, தனிமை போரடிக்காம இருக்க ’ஜோடி’ ஆளுன்னு சகல வசதியுமா, சுகமா வாழுறாரு நம்ம அண்ணாத்த.

என்ன தான் நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும், அது வெளிய ஓடும்ன்ன கதையா, நம்ம அண்ணாத்தைய சொகுசா வச்சிருந்தாலும் ஒரு நாள் அவரோட வேலையக் காட்டிட்டாரு.

வேலைக்கே போகாத அண்ணாத்தைக்கு தெனமும் ஃப்ரியா சோறு குடுக்குற ஆளு, ஒரு நாள் தெரிஞ்சோ, தெரியாமலோ நம்ம அண்ணாத்தையோட பெட்ரூமுக்குள்ள வந்துட்டாரு. அண்ணாத்தைக்கு கொஞ்சமாவது நன்றி விசுவாசம் இருந்திருக்கலாமா இல்லையா? “அடடா, நமக்கு பசிக்கிறப்ப எல்லாம் கறிக்கஞ்சி ஊத்துன ஆளாச்சே, தடம் மாறி வந்துட்டான் போலிருக்கு. வந்தமாதிரியே வெளிய போகட்டும்”-ன்னு விட்டிருந்தா நல்லவன், நாமலும் பாராட்டலாம்.

ஆனா, இந்த கெட்ட புத்தி புடிச்ச டாம் அண்ணாத்த என்ன பண்ணுனாரு தெரியுமா? சோறு போட்டவனையே கூறு போட்டுட்டான்யா, கூறு போட்டுட்டான். கூட இருந்த கூட்டாளிகளுக்குக் கூட தெரியாம தனியாளாவே ஒக்காந்து சோலிய முடிச்சிட்டுத்தான் எந்திரிச்சுப் போயிட்டானாம்.

ஊர்க்காரங்க எல்லாம் ஓடி வந்து அந்த ஈனங்கெட்ட பயலோட வேலையச் சொல்லி, எங்கிட்ட வந்து அழுகுது. இதைக் கேட்டதும், எனக்கு இருப்புக் கொள்ளல. பச்ச துரோகம் இல்லையா? அசந்த நேரமாப் பாத்து அடிச்சு, அடுப்புல போட்டவனை சும்மா விடலாமா? அவனோட பல்லத் தட்டி மொழுக்கட்டையாக்காம விடக்கூடாதுன்னு தொடையைத் தட்டி கிளம்பிட்டேன், அவனோட வீட்டுக்கு.

அதுக்குள்ள அங்க இருக்கிற ஆளுகல்லாம், நடந்தது நடந்து போச்சு. இனி பேசி என்ன புரயோசனம். ஆகுறதப் பாப்போம்ன்னு முடிவெடுத்து அடுத்த கட்ட வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கண்கள் துடி துடிக்க, தோள்கள் தினவெடுக்க, வெறி கொண்ட வேங்கையா உள்ள நுழைஞ்ச என்னப் பார்த்து பயந்த அம்புட்டு சனமும், “இவன் உள்ள போனா சொன்னதை செய்யாம வரமாட்டான், அப்புறம் பல்லுப்போன அண்ணாத்த வெறி வந்து, ஊராளுகளை ஏதாச்சும் செஞ்சுருவான்னு” பயந்துபோயி, என்னைய மறிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஆனா நாம பெறந்து வளந்த்து, முன் வச்ச காலை பின் வைக்காத தமிழ் கூட்டமாச்சே, ஊர்கூடி கெஞ்சுனா மட்டும் கேட்டுறவாப் போறோம்! பத்துபேரையும் திமிரித் தள்ளி விட்டுட்டு தெருவுக்குள்ள போனேன். நிலமை மோசமாகுறதப் பாத்த ஒரு வயசான பெரியவரு வந்து வழிய மறிச்சாரு.

”வழிய விடுங்க தாத்தா”ன்னு வெறியில மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நான் சொல்லவும், உடனே தாத்தா, “என்ன தம்பி, அண்ணாத்தைய பழிவாங்கப்போறியா?” கேட்டவரு என்னோட பதிலுக்கு காக்காம, “தம்பி, உள்ளூரு ஆளுகன்னாலே டாமுக்கு கொஞ்சம் பாசம் அதிகம். நீ போனா சண்டை போட மாட்டாரு, அதனால நீ அண்ணாத்தை பல்லை தட்டுறதா சபத்தை நெறவேத்தணும்னா, நீ சண்டை போட்டு தட்டாத, நீ பொறந்த ஊருல இருந்து யாராச்சும் தைரியமான ஆளைக் கொண்டுவந்து, அண்ணாத்தை கூட நேருக்கு நேர் சண்டை போட்டு பல்லைப் தட்டு பார்க்கலாம்” –ன்னு சவால் விடுற மாதிரியே பேசிட்டாரு.

என்னைய தனிப்பட்ட முறையில் வம்பிழுத்தாலே சும்மா விடமாட்டேன், என்னோட ஊராளுகளையும் சேத்து வம்பிழுத்துட்டாங்க அண்ணாத்தையும், தாத்தாவும். விடுவேனா நானு, ”தாத்தா, என் ஊராளுகளைப் பத்தி தெரியாம பேசிட்ட. நானாச்சும் பல்லை தட்டுறேன்னு சொல்லித்தான் சவால்விட்டேன். பரவாயில்லை, இப்ப என் ஊராளுகளை வச்சு டாமோட பல்லை மட்டுமில்லாம, நகத்தையும் சேர்த்து புடுங்கி தங்கச் செயினுல கோர்த்து கழுத்துல போடுறேனா இல்லையான்னு பாரு”ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன்.

அதனால, இதப் படிக்கிற மறதமிழ் மாந்தர் யாராச்சும் வந்து என்னையும், என்னோட மானத்தையும் காப்பாத்துங்க. அதுக்கு நீங்க ஒரு பைசாக் கூட செலவழிக்க வேண்டாம். அதுக்கு பதிலா, உங்க தெறமையைச் சோதிக்கிற இந்த("சிங்கைப் பதிவர்களும் - தமிழ் வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கருத்தாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இருக்கும் மூன்று பிரிவுகளின் வரும் 29 தலைப்புகளில் ஒன்றைப் பற்றி போட்டி வழிகாட்டுதல் படி கட்டுரையை எழுதி அனுப்புங்க") போட்டியில மட்டும் கலந்து செயிச்சா போதும். மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்.



டாமைப் பத்தி சொல்லாம விட்டுட்டேனே!!


மேல இருக்காரே இவரு தான் நம்ம அண்ணாத்த டாம். வெள்ளைப் புலி வம்சம்., இங்க சிங்கப்பூர் ஜூல பலகாலமா இருக்காரு. அண்ணாத்தை நம்ம வங்கபுலி வம்சத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும் இன்னிக்கி பத்தாயிரம் புலிக்கு ஒரு வெள்ளப் புலி தான் இருக்கு. அம்புட்டு அபூர்வமாகிப் போச்சு.

அதனால் தான் போன வருசம் ஒரு மனுசனையே ஆட்டையப் போட்டுத் தின்ன பின்னாடியும் டாமை ரொம்ப ஜாக்கிரதையா கவணிச்சுக்கிறாங்க சிங்கை ஜூ ஆளுக.

தயவு செய்து போட்டியில் கலந்துகங்க. செயிக்கிற திறமசாலி அண்ணாத்த கூட சண்டை போட்டு என்னோட சவாலையும் செயிச்சுக் குடுங்க மறதமிழர்களே!!


பின் குறிப்பு:-

மேலே உள்ள கதையை, கதையாக எடுத்துக் கொள்ளாமல், மறதமிழர்களுக்கான ("சிங்கைப் பதிவர்களும் - தமிழ் வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கருத்தாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இருக்கும் மூன்று பிரிவுகளின் வரும் 29 தலைப்புகளில் ஒன்றைப் பற்றி போட்டி வழிகாட்டுதல் படி கட்டுரையை எழுதி அனுப்புங்க") போட்டியை கருத்தூன்றி கவனித்து உங்கள் பங்கை சிறப்பாக அளிக்க விரும்பும்....


அப்பாவி முரு

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

10. சுகாதாரம்: சிங்கப்பூரில் தண்ணீர் பாட்டில், வாட்டர் ஃபில்டர் விற்பதும் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும் ஒன்றுதான். சாதாரணமாக குழாயில் வரும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது. ஏனைய பெரு நகரங்களில் இருக்கும் பிரச்சினையான வாகனப் புகைகளால் காற்று மாசு படுவது என்பது இங்கு அறவே கிடையாது. அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம்.

9. உணவு: எந்த நாட்டினர் வந்தாலும் சிங்கப்பூரில் மிகவும் விரும்பும் ஒரு அம்சம், எல்லா இடங்களிலும் கிடைக்கும் அனைத்து விதமான உணவு வகைகள்தான்.இந்திய, சீன, மலேய, காண்டினென்டல், தாய்லாந்து, ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் உணவகங்கள் கூட உண்டு.

நம்ம ஊர் அன்னலஷ்மி, கோமள விலாஸ், சரவண பவன், அஞ்சப்பர் தவிர சிங்கப்பூர் முழுவதும் பெரும்பாலான ஃபுட் கோர்ட்களில் பரோட்டா, தோசை, பிரியாணி போன்ற உணவுகள் எளிதில் கிடைக்கும்.

8. சாலைகள்: சிங்கப்பூரின் அனைத்து சாலைகளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம்(ஆனா, விட மாட்டாங்க). அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் மேடு பள்ளங்களோ, குழிகளோ, பாதாள சாக்கடை மூடிகளையோ காணக் கிடைக்காது.அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் நிச்சயம் உண்டு.

7. சுத்தம்: ரெயில் வண்டி நிறுத்தமோ, பேருந்து நிலையமோ அல்லது எந்த ஒரு அரசு அலுவலகமோ கழிவறைகள் எல்லாம் அத்தனை சுத்தமாக இருக்கும்."சே..ச்சே... இங்கியா உச்சா போறது" அப்படின்னு நமக்கே வெக்கமா இருக்கும். பேருந்து, கார் நிறுத்துமிடம், வீடுகளுக்கு வெளியில் இருக்கும் பொதுவிடங்கள் மற்றும் புல் தரைகள் ஆகிய அனைத்துமே தும்பு, தூசி இல்லாமல் இருக்கும்.

6. நேர்மை : டாக்ஸி காரர்களில் ஆரம்பித்து, கடைக்காரர்கள்,அரசு அலுவலர்கள் வரை எவரிடமும் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு.தைரியமாக டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து முகவரியை சொன்னால் போதும், நிச்சயமாக அவர் ஊரையெல்லாம் சுற்றி காண்பிக்காமல் சரியான வழியில், சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்துவிடுவார். மீட்டரில் காண்பிக்கும் தொகையை கொடுத்தால் போதும்.

5. பொது போக்குவரத்து: சிங்கப்பூரின் எம்.ஆர்.டி (மாஸ் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் மெட்ரோ ட்ரெயின் சேவையை சிங்கப்பூரின் முதுகெலும்பு என்று கருதலாம். அனைத்து இடங்களுக்கும் எளிதாக, முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட செல்ல முடியும். இந்த எம்.ஆர்.டி நிலையங்களில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் இடங்களுக்கு செல்ல அங்கிருந்தே எல்.ஆர்.டி (லைட் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் சிறிய ட்ரெயின்களோ அல்லது பேருந்துகளோ நிச்சயம் இருக்கும்.

4. பாதுகாப்பு: திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற விஷயங்களை கேள்விப்படுவதே அரிதான விஷயம். இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.அது மட்டுமல்ல தொடர் வண்டி (ட்ரெயின்), பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை.

3. மொழி: சிங்கப்பூரில் மொழி ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆங்கிலம் ஒரளவாவது புரிந்து கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு இடத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் நின்றால் நிச்சயம் ஒரு தமிழரையாவது சந்தித்து விட முடியும். அது மட்டுமல்ல தமிழ் சிங்கப்பூரின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. ஆகவே அரசு சம்பந்தப்பட்ட அறிக்கைகள், தகவல் பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கும்.

2. சுற்றுலா தலங்கள் : சிறிய ஊராக இருந்தாலும் பார்க்க வேண்டியவை ஏராளம். பறவைகள் பூங்கா,மாபெரும் ராட்டினம், மிருகக்காட்சி சாலை, சீனத்தோட்டம், சைனா டவுன், புத்தர் பல் கோவில், நம்ம ஊரு கோவில்கள், லிட்டில் இந்தியா மற்றும் பல. இதைத் தவிர செந்தோசான்னு ஒரு தீவு உண்டு. இங்கே அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்ஃபின் ஷோ, 4 டைமென்ஷன் சினிமா, லேசர் ஷோ ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய விஷயங்கள். முக்கியமாக இரவு 7 மணிக்குமேல் நடக்கும் லேசர் கதிர் காட்சியுடன் கூடிய ம்யூசிகல் பவுண்டன் பார்ப்பவர்கள் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.கீழே ஒரு சாம்பிள்.



1. சிங்கைப் பதிவர்கள்: தமிழே மூச்சு, தமிழே உணவு, தமிழே உயிர் என்று தமிழ் இலக்கியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி இன்ன பிறவற்றை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பல அற்புதமான படைப்புகளை வலைப்பூக்களில் தந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். (சே.. ச்சே.. என்ன அப்படி பாக்கறீங்க? மத்தவங்கல்லாம் நல்லா எழுதுவாங்கங்க). விருந்தோம்பல் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்.

அடடே.. எங்க வேகமா கெளம்பிட்டீங்க.சிங்கப்பூருக்கு டிக்கட் வாங்கத்தானே? கொஞ்சம் பொறுங்க. செலவே இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்து மேல சொன்ன விஷயங்கள பாக்கவும் அனுபவிக்கவும் முடியும்.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

நமீதாவை பார்க்கலாமா? நமீதா உயரமென்ன?

நமீதா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்?
1. வாரணம் ஆயிரம்
2. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
3. பிரம்மாண்டம்

தமிழின் உயரமான நடிகை யார்?
1. நயன்தாரா
2. நமீதா
3. நதியா

நமீதாவின் உயரம் என்ன?
பதிவின் கடைசியில் இதற்கு பதில் இருக்கு... ஹலோ ஸ்க்ரோல் பாரை பிடிச்சி இழுக்க போனிங்க அவ்ளோதான் சொல்லிப்புட்டோம் பதிவை படிச்சுப்புட்டு போகனும்.

ஹல்லோ இதென்ன சிங்கை வலைப்பதிவர் குழும வலைப்பதிவா இல்லை நமீதா ஜொள்ளர் வலைப்பதிவா? கேள்விகேட்குறாங்களாமுள்ள கேள்வி, இம்புட்டு வரிகளை படிச்சிட்டோம் இன்னும் ஒரு நமீதா படம் கூட போடாம ராஸ்கல்ஸ் என்ன இது சின்ன புள்ளதனமா..



மீண்டும் மீண்டும் காண தூண்டும் ஒரு சுற்றுலா இடமென்றால் பெரும்பாலும் அவைகள் திருப்பதி, பழனி போன்ற புனித தலங்களாகவே இருக்கும், அடுத்தபடியாக மீண்டும் மீண்டும் காண தூண்டும் இடங்களாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களாகவும் இருந்தாலே மீண்டும் மீண்டும் போக தூண்டும்.

75 ஆண்டுகால தமிழ் திரை வரலாற்றில் கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரி, சில்க் ஸ்மிதா, என்ற பட்டியல் இன்று நயன்தாரா, நமீதா வென்று நீண்டு கொண்டே இருக்கின்றது, கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரி எல்லாம் அந்தகால அட்ராக்ஷன்ஸ் தான் ஆனால் இப்போதும் அதே கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரியை படத்தில் காண்பித்தால் அடபோங்கப்பா என்று போய் கொண்டே இருப்பார்கள்.

நவநாகரிக நகரத்தை ஒரு முறை பார்த்து முடித்துவிட்டால் சலித்துவிடும், புதுப்புது அட்ராக்ஷன்கள் இருக்க வேண்டும், அதுவே சுற்றுலா விரும்பிகளை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கும். சிங்கப்பூர் ஒரு நவ நாகரிக நகரம், நீங்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் அது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும், "உலகம் சுற்றும் வாலிபன்" மஞ்சுளா காலத்தில்(எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மன்னிக்க) பெரிய சுடுமண் பொம்மைகளாலான டைகர் பாம் கார்டன் என்னும் ஹாப்பர் விலா ஒரு முக்கிய அட்ராக்ஷன் என்றால் நமீதா காலத்தில் சிங்கப்பூரின் கடைக்குட்டியாம் சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation Wheel ஒரு முக்கியமான சுற்றி பார்க்கும் இடம்.




சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான(150 மீட்டர் விட்டம், கட்டித்தோடு சேர்த்து 165 மீட்டர் உயரம்) சக்கரம், சிங்கப்பூரின் மெரினா சென்டரில் (Marina Center) உள்ளது... பலருக்கும் உயரமான ஜெயண்ட் வீல் சக்கர ராட்டினத்தில் ஏறி கர கரவென சுற்றுவதற்கு பயந்து கொண்டே இதற்கு வரமாட்டோம் என்பார்கள், ஆனால் இது கர கரவென வேகமாக சுற்றாது, ஒரு சுற்று சுற்றி முடிக்க 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.




சிங்கப்பூர் ப்ளையரில் ஏறுவதற்கு போவதே ஒரு வானூர்தி பயனத்தை நினைவு படுத்துவது போல இருக்கும், இந்த சக்கரத்தில் மொத்தம் 28 குளிர்சாதன வசதியுடைய உருளைகள்(capsuels) உள்ளன ஒவ்வொரு உருளையிலும் 28 பேர் வரை பயணிக்கலாம்.






சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறிய பின் சில நிமிடங்களில் ஒரு பெரிய வியப்பு உங்களுக்காக காத்திருக்கும், சிங்கப்பூர் நகரின் எழில் மிகு தோற்றம் உயரத்திலிருந்து பார்க்கும் போது சொர்க்கமாக தோன்றும், ஒரு பக்கம் சிங்கப்பூர் நகரின் நெடிந்துயர்ந்த கட்டிடங்கள், இன்னொரு புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் அந்த கடலில் ஆங்காங்கே தீவுகள் கடலெங்கும் மிதக்கும் கப்பல்கள் என புதிய உலகு அங்கே விரிந்திருக்கும். மேலிருந்து பார்க்கும் போது அருகில் உள்ள ஒரு மேம்பாலம் தெரியும், அந்த மேம்பாலம் எத்தனை அடுக்குகளாக எத்தனை சாலைகளை இணைக்கிறது என்று பார்த்தால் நிச்சயம் அது உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

சிங்கப்பூர் ப்ளையரிலிருந்து 45 கிலோமீட்டர் தூரம் வரை பார்க்க இயலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவை காணலாம்.

இந்தியாவை இங்கே இணை வைத்து பேசுகிறேன் என்பதற்கு மன்னிக்கவும், நண்பரின் திருமணத்திற்கு வந்து பின் நானும் நண்பர்களும் சென்னையில் உள்ள MGM ற்கு சென்றோம், அங்கிருந்த ஒரு குடை ராட்டினத்தில் ஏறினே, ஒரு இரும்பு சங்கிலி தொங்குகிறது, அதில் ஒரு தட்டு மாதிரி இணைக்கப்பட்டுள்ளது, எந்த விதமான பாதுகாப்பும் அதில் இல்லை, ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல் ஆர்வமாக போய் அதில் ஏறிகொண்டேன், அதி வேகத்தில் சுற்ற ஆரம்பிக்க அந்த இரும்பு சங்கிலி மட்டுமே ஒற்றை ஆதாரம், அதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டியது தான், கொஞ்சம் தவறினாலும் அங்கிருந்து தூக்கியெறியப்படுவது நிச்சயம், குடலே புரண்டு வாய் வழியாக வருவது போலிருந்தது, உயிரை கையில் பிடித்துகொண்டு என்பதை அன்று அனுபவித்தேன். அடுத்த ஒரு வாரத்தில் இம்மாதிரியான ராட்டினத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு ஒருவர் காயம் என்று பத்திரிக்கையில் படித்தேன், சில மாதங்களுக்கு முன்பு கூட இம்மாதிரி நடந்து ஒரு பெண் மரணமடைந்தார் என்றும் அறிந்தேன்.

சிங்கப்பூரில் பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது, லாப நட்ட கணக்கெல்லாம் அதன் பின் தான், வேலையிடத்திலிருந்து விளையாட்டு வரை பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது. பாதுகாப்பிற்காக என்ன விலையையும் தர தயாராக உள்ளது சிங்கப்பூர்.

2008 டிசம்பர் 23ம் நாள் சிங்கப்பூர் ஃப்ளையர் சுற்றுவது நின்று விட்டது, 173 பேர் அப்போது உருளைகளில் இருந்தனர், இதில் குளிர்சாதன வசதி நின்று போனது, சில மணி நேரங்களில் பிரச்சினை சரி செய்யப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், அந்த நேரத்தில் உள்ளிருந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது, ஆனால் அதன் பின் சிங்கப்பூர் ப்ளையர் நிறுத்தப்பட்டது, மாற்று ஏற்பாடுகள் எல்லாம் செய்யபட்டு ஜனவரி 26 2009 அன்று தான் மீண்டும் சிங்கப்பூர் ப்ளையர் தன் சேவையை தொடங்கியது.

உபரி ஜெனரேட்டர், பிற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு செலவான தொகை மூன்று மில்லியன் சிங்கப்பூர் டாலர், அதாவது முப்பது இலட்சம் டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்பில் 93 கோடிகள், அதன் பின்பே சிங்கப்பூர் ஃப்ளையர் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ப்ளையர் சென்று பார்க்க சரியான நேரம் 6.00 லிருந்து 7.00 மணி வரை, இந்த நேரத்தில் நீங்கள் பகல் பொழுதையும் இருட்டும் பொழுதையும் உயரத்திலிருந்து ரசிக்கலாம்.

ஒருவருக்கு அனுமதி சீட்டின் விலை 28 சிங்கப்பூர் வெள்ளிகள் என நினைக்கிறேன். சிங்கப்பூர் ப்ளையரின் இணைய தளம் இங்கே

என்னங்க சிங்கப்பூர் நமீதாவை பார்க்கனுமா? சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

மச்சான் நமீதாவின் உயரம் 5 அடி 11 அங்குலம்...

ஹல்லோ மிஷ்டர் எங்களுக்கு எதுக்கு நமீதா மச்சான் ஒசரம், நீங்க நமீதா ஒசரத்தை மட்டும் சொல்லுங்க, அவங்க மச்சான் ஒசரமெல்லாம் எங்களுக்கு தேவையில்லை...

மான் கறி சுவைக்க விருப்பமா ?

"இந்தியாவில், தமிழ்நாட்டில், ப்ளூ க்ராஸ் ஆளுங்களிடம் சென்று 'நான் மான் கறி தின்றேன்' என்று உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா ?"

"ஏன் இந்த கொல வெறி ? ஒரு இந்தி நடிகர் மானை சுட்டுவிட்டு, ஒரு ஆண்டு களி திண்ண மாதிரி என்னையும் திங்க வைக்க சதித் திட்டமா ?" ன்னு முந்திக் கொண்டு கேட்காதிங்க.

சிங்கையில் மான் கறி கிடைக்கும், முஸ்தபா பேர் அங்காடியில் மான் கறி விற்கிறார்கள். நம்ம முகவை இராம் குமாரிடம் கேட்டால் அதன் சுவையைச் சொல்லுவார். ஒரு கிலோ மான் கறி சிங்கை வெள்ளி 22 முதல் 30 வெள்ளி வரை விற்குது. நம் இந்திய ரூபாய்க்கு 700ரூபாய் இருக்கும்.



"ஆஹா...! விமானப் பயணச் சீட்டு எடுக்கக் கிளம்பிட்டிங்களா ? கைக் காசை செலவு செய்ய வேண்டாம். நாங்கள் அன்போடு உங்களுக்கு பயணச் சீட்டும் சிங்கையில் ஒருவாரம் தங்கும் இடமும் ஏற்பாடு செய்கிறோம். "


"எதுக்கு அதையெல்லாம் நீங்கள் செய்யனும் ? போன ஜென்மத்து பந்தமா ?"

"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன், அப்படி இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு நாங்கள் சிங்கை சென்று திரும்பும் பயணச் சீட்டும் ஒருவார தங்குமிடம், சிங்கையின் சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும்"

"சிங்கைப் பதிவர்களும் - தமிழ் வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கருத்தாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இருக்கும் மூன்று பிரிவுகளின் வரும் 29 தலைப்புகளில் ஒன்றைப் பற்றி போட்டி வழிகாட்டுதல் படி கட்டுரையை எழுதி அனுப்புங்க"

உங்கள் கட்டுரை சிறப்பானதாக தேர்ந்தெடுக்கப் பட்டால், சிங்கைக்கு வந்து மான் கறி சாப்பிடலாம்"

"மான் கறி கிடைக்கும்னு சொல்றிங்க .......சரி, யார் சமைத்துத் தருவது ?"

"அதுகெல்லாம் ஆளுங்க இருக்காங்க... மான் கறி 65 அறிவிப்புடன் உணவகங்களே இருக்கு கவலைப் படாதிங்க...... அதுமட்டுமா ? ஆமை, முதலைக் கறி கூட கிடைக்கும்.....ஹலோ ஓடாதிங்க.....அப்படியெல்லாம் உங்களை சோதிக்க மாட்டோம்"

***

"அவர் ஓடியதை விடுங்க எனக்கு சொல்லுங்க....நான் உயிர்களிடத்து அன்பு செலுத்தும் ஜீவ காருண்யம் போற்றுபவன்...போட்டியில் கலந்து வெற்றிபெற்றால் நானும் மான்கறி திங்க வேண்டும் என்று வற்புறுத்துவிங்களா ?"

"உங்களை வற்புறுத்த மாட்டோம், உங்க பங்கை சிங்கைப் பதிவர்களே பகிர்ந்து கொள்வாங்க, உங்களுக்காக அறுசுவை சைவ உணவுகளுக்கு கோமளவிலாஸ், ஆனந்தபவன், நம்ம இராஜகோபால் அண்ணாச்சியின் சரவண பவன், முருகன் இட்லி, பெங்களூர் சாகர் இன்னும் பலப் பல சைவ உணவகங்கள் இருக்கிறது."

"நான் கூட சைவம் தாங்க,......நம்புங்க...."

***

"இப்ப சொல்லுங்க... சிங்கை வந்துவிட்டு சென்ற பிறகு இந்தியாவில், தமிழ்நாட்டில், ப்ளூ க்ராஸ் ஆளுங்களிடம் சென்று 'நான் மான் கறி தின்றேன்' என்று உங்களால் தைரியமாக சொல்ல முடியும் தானே ?"


மணற்கேணி - 2009 தொடர்பில்
அன்புடன்
கோவியார் (எ) கோவி.கண்ணன்

என் கேள்விக்கென்ன பதில்? - மணற்கேணி அகேகே FAQ

கருத்தாய்வு போட்டி குறித்த கட்டுரையாளர்களின் சில கேள்விகளுக்கான விளக்கங்கள் !
போட்டி குறித்த அறிவிப்பின் தொடர்பில், போட்டி விதிமுறைகளின் படி போட்டியின் தலைப்புகளுக்கு கட்டுரை அனுப்புவது பற்றி சில கேள்விகள் மின் அஞ்சலுக்கு வந்திருக்கிறது.

1. போட்டி விதிமுறைகளின் படி ஒருவர் எத்தனை கருத்தாய்வு கட்டுரைகளை அனுப்ப முடியும் ?
சமூகம் மற்றும் அரசியல், அறிவியல், தமிழ் என்று மூன்று பிரிவுகளில் மொத்தம் 29 தலைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது, கட்டுரையாளர்கள் 29 தலைப்புகளிலும் தலைப்புக்கு ஒன்றாக 29 கட்டுரைகள் அனுப்பலாம். பிரிவுகள் தலைப்புகளை வகைப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருக்கிறது. உதாரணம் 'பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்' - இந்த தலைப்பில் ஒன்று, 'இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள் ' - இதில் ஒன்று என உங்களுக்கு எத்தனை தலைப்புகளில் எழுதும் ஆர்வம் இருக்கிறதோ, தலைப்புக்கு ஒன்றாக போட்டியில் கொடுத்திருக்கும் 29 தலைப்புகளிலும் எழுதலாம். போட்டியாளர் ஒரே ஒரு தலைப்பில் மட்டும் எழுத விருப்பம் கொண்டிருத்தால் அந்த தலைப்பில் ஒரே ஒரு கட்டுரை எழுதி அனுப்பலாம்.

2. போட்டிக் கட்டுரையை எழுதி அனுப்பிய பிறகு பதிவில் வெளி இடலாமா ?
போட்டி கட்டுரையை அனுப்ப முடிவு நாள் விதி முறையில் சொல்லப்பட்டு இருக்கிறது. போட்டி நடத்தும் அமைப்பு போட்டி குறித்த செயல்பாடுகள்
அ) போட்டி இறுதி நாள் வரை கட்டுரைகளைப் பெறுதல்
ஆ) கட்டுரையாளர்கள் அனுப்பி வைத்த கட்டுரைகளை தொகுத்து மூன்று பிரிவுகளுக்குமான தனித் தனி நடுவர் குழுக்களுக்கு அனுப்பி வைத்தல்.
இ) போட்டி முடிவுகளை அறிவித்தல்
ஈ) பரிசளிக்கும் நிகழ்வு.

போட்டிக்கு கட்டுரை அனுப்பும் இறுதி நாளுக்கு பிறகு கட்டுரையாளர்கள் போட்டிக்கு எழுதிய கட்டுரைகளை தங்கள் தளங்களில் வெளி இடலாம். போட்டிக்கு கட்டுரைகளைப் பெறும் காலக் கெடுவிற்குள் கட்டுரைகளை வெளி இட்டால், எழுத ஆர்வம் இருப்பவர்கள் அதே தலைப்பில் எழுதும் போது வெளி இடப்பட்ட கட்டுரைகளின் தகவலை ஒட்டி எழுத நேரிடலாம், அல்லது மேலும் மாறுபட்ட வகையில் எழுதி முன்பு எழுதியவரின் கட்டுரைகளின் தகவல்கள் ஒன்றுமே இல்லை என்பது காட்டிவிட்டால், வெளி இட்டவருக்கு தேவையற்ற மனச் சோர்வு ஏற்படும். கட்டுரைகளின் தரம் என்பது அது உள்ளடக்கிய தகவல் பொருள் தன்மையில் இருக்கிறது என்பதால் பலவேறுபட்ட தகவல்களைப் பெற வேண்டும் என்பதே போட்டி நடத்துபவர்களின் நோக்கம். போட்டி அமைப்பின் ஆ) செயல்பட்டின் போது கட்டுரைகளை இணைய தளங்களில் / வலைப்பதிவுகளில் வெளி இடலாம் .

3. போட்டிக்கு எழுதும் போது எந்த எழுத்துருவை பயன்படுத்தி கட்டுரைகளை அனுப்புவது ?
தமிழ் இணையப்பக்கங்களின் 90 விழுக்காடு ஒருங்குறி எனப்படும் யுனிகோடு எழுத்துருவுக்கு மாறி இருக்கிறார்கள், தமிழ் எழுத்துருவை பொதுப்படுத்துவது இணைய தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று என்ற கருத்தியலுக்கு ஊக்கம் கொடுக்கும் வண்ணம் ஒருங்குறியில் எழுதுவதற்கு பரிந்துரை செய்கிறோம். ஒருங்குறியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த வலியுறுத்தலும் இல்லை. சிலர் மற்ற எழுத்துருக்களை பயன்படுத்திப் பழகி இருப்பார்கள், அவர்களுக்கு கட்டுரை எழுதும் ஆர்வம் இருந்து ஒருங்குறியில் எழுதத் தெரியாவிட்டாலும், அவர் அறிந்திருக்கும் எழுத்துருவிலேயே தட்டச்சு செய்து அனுப்பினால் போதுமானது. கட்டுரை அனுப்பும் அனைவரும் என்ன வகையான எழுத்துரு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை கட்டுரையின் கடைசி பத்திக்கு பிறகு குறிப்பிட்டால் கட்டுரைகளை ஒழுங்கு படுத்த போட்டிக் குழுவிற்கு பயனாக இருக்கும்.

4. இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் இருக்கும் பதிவர்கள் கலந்து கொள்ளலாமா?

சிங்கப்பூர் தவிர வேறு எந்த நாட்டில் இருப்பவர்களும் போட்டி விதிமுறைகளுக்குட்பட்டு கலந்து கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கே பின்னூட்டத்தில் கேட்கலாம்.

நினைவூட்டல் : சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு அறிவிப்பு !

முறைப்படியான பதிவர் சந்திப்பு நடந்து திங்கள் கடந்துவிட்டது, புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள், வீட்டில் செய்த பலகராங்கள் தின்று நாளாகிவிட்டது என்கிற காரணங்களினால் வருகிற காரிக்(சனிக்)கிழமை சிங்கைப் பதிவர்களின் சந்திப்பு நடத்த பல மனதுகள் ஒன்றாக தீர்மானித்து, நாள், இடம் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 18/ஜூலை/20009


நேரம் : மாலை 4:30 முதல் 7:00 வரை

இடம் : ஜூராங் சென்டரல் பூங்கா

(பூன்லே தொடர் வண்டி நிலையம் - BoonLay MRT Station அருகில்,

Facilities Available : Fitness corner/ stations & Fitness equipments/ exercise station, Grand lawn, Jogging Path/ Running track, Playground, Restroom / Toilets with or without shower facilities, Event Lawn

வரைபடம் தரவிரக்க இணைப்பு : JCP)







நிகழ்ச்சி நிரல்கள் :

* முன்கூட்டி வரும் வருகையாளர்கள் பூங்காவை சுற்றிப் பார்ப்பது

* புதிய பதிவர்களும், அவர்களின் பதிவுகளும் ஒரு சின்ன அறிமுகம்

* சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி குறித்த செயல் திட்டங்கள் பற்றிய விளக்கம்

* சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் இடைவேளை

* சென்ற வாரப் பதிவர் உலகம் - யூசுப் பால்ராஜ் ஐயாங்கார் விவரிக்கிறார்

* சந்திப்புகளை தொடர்ந்து புறக்கணிக்கும் சிங்கை செந்தில் நாதனுக்கு கண்டனத் தீர்மானம்

* அப்பாவி முருவின் அரசியல்/சமூகப் பார்வைகள்

* அமீரகத்தில் இருந்து சிங்கை திரும்பிய அண்ணன் வடுவூர் குமாரின் அனுபவங்கள்

* 7.00 மணிக்கு விடைபெறுதல்

* மீதம் இருப்பவர்களுடன் அருகில் இருக்கும் தேனீர் கடையில் மொக்கை

நிகழ்ச்சித் தலைமை : பதிவர், தமிழ்வெளி திரட்டித் தொடர்பாளர் குழலி மற்றும் பதிவர், தமிழாளர்வளர் முகவை இராம்

நிகழ்ச்சி புகைப்படங்கள் : ஆமத்தூர் ஜெகதீசன் மற்றும் இராம்/Raam

நிகழ்ச்சி தொடக்கம் மற்றும் முடிவுரை : யூசுப் பால் ராஜ் ஐயங்கார்

சந்திப்பு அன்று வழித்தடங்கள் பற்றிய விவரங்களுக்கும், என்ன வகையான சிற்றுண்டி வருகிறது என்று தெரிந்து கொள்ளவும், அழைக்க...

அ.பாஸ்கர் - 9457 6466
அறிவிழி (ராஜேஷ் அண்ணா) - 9856 0742

பதிவர்கள், வலைப்பதிவு வாசிப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்கப்படுகிறார்கள்

சிங்கைப் பதிவர்கள் குழும சார்பாக
கோவி.கண்ணன்

சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு அறிவிப்பு !

முறைப்படியான பதிவர் சந்திப்பு நடந்து திங்கள் கடந்துவிட்டது, புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள், வீட்டில் செய்த பலகராங்கள் தின்று நாளாகிவிட்டது என்கிற காரணங்களினால் வருகிற காரிக்(சனிக்)கிழமை சிங்கைப் பதிவர்களின் சந்திப்பு நடத்த பல மனதுகள் ஒன்றாக தீர்மானித்து, நாள், இடம் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 18/ஜூலை/20009


நேரம் : மாலை 4:30 முதல் 7:00 வரை

இடம் : ஜூராங் சென்டரல் பூங்கா

(பூன்லே தொடர் வண்டி நிலையம் - BoonLay MRT Station அருகில்,

Facilities Available : Fitness corner/ stations & Fitness equipments/ exercise station, Grand lawn, Jogging Path/ Running track, Playground, Restroom / Toilets with or without shower facilities, Event Lawn

வரைபடம் தரவிரக்க இணைப்பு : JCP)







நிகழ்ச்சி நிரல்கள் :

* முன்கூட்டி வரும் வருகையாளர்கள் பூங்காவை சுற்றிப் பார்ப்பது

* புதிய பதிவர்களும், அவர்களின் பதிவுகளும் ஒரு சின்ன அறிமுகம்

* சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி குறித்த செயல் திட்டங்கள் பற்றிய விளக்கம்

* சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் இடைவேளை

* சென்ற வாரப் பதிவர் உலகம் - யூசுப் பால்ராஜ் ஐயாங்கார் விவரிக்கிறார்

* சந்திப்புகளை தொடர்ந்து புறக்கணிக்கும் சிங்கை செந்தில் நாதனுக்கு கண்டனத் தீர்மானம்

* அப்பாவி முருவின் அரசியல்/சமூகப் பார்வைகள்

* அமீரகத்தில் இருந்து சிங்கை திரும்பிய அண்ணன் வடுவூர் குமாரின் அனுபவங்கள்

* 7.00 மணிக்கு விடைபெறுதல்

* மீதம் இருப்பவர்களுடன் அருகில் இருக்கும் தேனீர் கடையில் மொக்கை

நிகழ்ச்சித் தலைமை : பதிவர், தமிழ்வெளி திரட்டித் தொடர்பாளர் குழலி மற்றும் பதிவர், தமிழாளர்வளர் முகவை இராம்

நிகழ்ச்சி புகைப்படங்கள் : ஆமத்தூர் ஜெகதீசன் மற்றும் இராம்/Raam

நிகழ்ச்சி தொடக்கம் மற்றும் முடிவுரை : யூசுப் பால் ராஜ் ஐயங்கார்

சந்திப்பு அன்று வழித்தடங்கள் பற்றிய விவரங்களுக்கும், என்ன வகையான சிற்றுண்டி வருகிறது என்று தெரிந்து கொள்ளவும், அழைக்க...

அ.பாஸ்கர் - 9457 6466
அறிவிழி (ராஜேஷ் அண்ணா) - 9856 0742

அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்கப்படுகிறார்கள்

சிங்கைப் பதிவர்கள் குழும சார்பாக
கோவி.கண்ணன்

நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

1. முத்தம்
2. கிஸ்
3. பர்ஸ் / பை

இதற்கான விடையை நாம் கடைசியில் பார்க்கலாம்... ஹலோ எக்சூச்மி பதிவை ஸ்க்ரோளை பிடித்து இழுத்து கீழே போவதற்கு முன் கொஞ்சம் பதிவையும் படியுங்க...






சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம் தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய வானூர்திகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், டூரிஸ்ட் விசா எனப்படும் விசிட் விசா, இது தொடர்பான நடைமுறை விதிகள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர் டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சென்னை 2 சிங்கப்பூர்...

நண்பர்கள் வெளிநாடு செல்லும் பொது ஸ்வெட்டர் எல்லாம் தாங்காது Thermal wear அப்போதே 5000 ரூபாய் கொடுத்து வாங்கியதை பார்த்து ஆனைக்கு அர்ரம்னா பூனைக்கு புர்ரம் அப்படிங்கற மாதிரி மேலாளரிடம் போய் முதன்முதலில் சிங்கப்பூர் அலுவலகவேலையாக வரும் முன் எங்கள் அலுவலக மேலாளரிடம் போய் ஸ்வெட்டர், Thermal wear லாம் எத்தனை வாங்க வேண்டுமென்றேன், ஏற இறங்க பார்த்தார்.

சிங்கப்பூர் சென்னை கிளைமேட் என்றார் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், அடடே நூடுல்ஸ்ன்னவுடனே ஞாபகம் வருது, சிங்கப்பூர்ல விதம் விதமா நூடுல்ஸ் சாப்பிடலாம், ம் நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இங்கே வந்து அதே மாதிரி நூடுல்ஸ் என்று நினைத்தால் அவ்ளோதான்...


நூடுல்ஸ் பத்தி பேசிக்கிட்டே பாருங்க மீனம்பாக்கம் கெளம்ப லேட்டாயிரும், வானூர்தி கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்னாலேயே வானூர்தி நிலையத்தில் இருப்பது நல்லது. மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையத்திலேயே உணவுகிடைக்கும், நிலையத்தின் உள்ளே அடையாறு ஆனந்தபவன் இனிப்பகம் இருக்கு, புத்தகக்கடை இருக்கு ஆனால் எல்லாம் கொள்ளை விலை.

ஹலோ ஹலோ என்ன பாக்கெட்ல, சிகரெட் பாக்கெட்டா?, பேக்கிங்கில எதுவும் சிகரெட் பாக்கெட்டுங்க இருக்கா? ப்ளீஸ் தயவு செய்து எடுத்து வெளியில போட்டுறுங்க, சென்னை 2 சிங்கப்பூர் வானூர்தியில் புகைப்பிடிக்க அனுமதியில்லை, மேலும் சிங்கப்பூரில் வெளியூரிலிருந்து எடுத்து வரும் சிகரெட்டுகளுக்கு அனுமதியில்லை, அதற்கு முறையாக சுங்கவரி கட்டி தான் பயன்படுத்த வேண்டும், அப்படியே ஏமாற்றி கொண்டு வந்தாலும் சிங்கப்பூரின் உள்ளே விற்பனையாகும் அத்தனை சிகரெட்டுகளிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் SDPC என்று அச்சாகியிருக்கும், அப்படியில்லாத சிகரெட்டுகளை புகைப்பதும் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் குற்றம்.

உங்கள் பைகளை சோதனை முடித்து போட்டுவிட்டு கையில் வைத்திருக்க விரும்பும் பையை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பயணச்சீட்டை தந்து போர்டிங் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே ஒரு விண்ணப்ப படிவம் தருவார்கள் அதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..

தெரியாத யாராவது எதையாவது கொடுத்து சிங்கப்பூரில் இதை கொடுத்துடுங்க உங்களுக்கு காசு தரேன், அல்லது ரொம்ப பாவமாக உங்களுக்கு பேக்கேஜ் வெயிட் கம்மியா தானே இருக்கு என் பேக்கேஜை உங்களுடையதில் போட்டுக்கொள்ளுங்க பைசா தரேன் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுங்கள்...

நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...

சிங்கப்பூரில் போதைபொருள் கடத்தலுக்கு மரணதண்டனை, வாய்தா, அப்புறம் வாய்தாவுக்கு வாய்தா முன் ஜாமீன் பின் ஜாமீன் என்றெல்லாம் கிடையாது, போதைப்பொருள் கடத்தினால் விரைவாக கேசை 'முடித்து' விடுவார்கள்... எனவே மிகுந்த எச்சரிக்கை.

ஹலோ அங்கே என்ன பாக்குறிங்க "மெய்புல அறைகூவலர்"னு எழுதியிருப்பதா ஹா ஹா physically chllange என்பதைத்தான் தமிழ்'படுத்தி' இருக்கிறாங்க...

திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...

ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும், நாலு பேர் வந்து நம்ம போற வண்டியில திடீர்னு காத்து பத்தலைன்னா ஆக்சிஜன் மூடியை மூஞ்சில வச்சிக்கிங்க, கடலுக்குள்ள விழபோச்சின்னா இப்புடி தான் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கனும் அதுல இப்படித்தான் காத்து ஊதனும்னு பயமுறுத்துவாங்க...

ஒரு வெள்ளை அட்டை கொடுப்பாங்க, அதை நிரப்பிடுங்க, முக்கியமா எங்க தங்கப்போறிங்க அப்படிங்கறதை நிரப்பிடுங்க, இந்த வெள்ளை அட்டை முக்கியம் திரும்ப சிங்கப்பூரை விட்டு கிளம்பும்போது இந்த வெள்ளை அட்டையை கேட்பாங்க, அப்புறம் வண்டி கிளம்பிய பிறகு கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்துலயே சிங்கப்பூர் வந்துரும்... கொஞ்சம் கண் அசருங்க..

ஓகே சிங்கப்பூர் வந்தாச்சி, நம்ம ரிட்டர்ன் டிக்கெட், வெள்ளை அட்டை, பாஸ்போர்ட் கொடுத்தால் அங்கிருக்கும் அலுவலர் நமக்கு எத்தனை நாள் தங்கலாமென அனுமதி தருவார், அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே விசிட் பாஸ்ல் தங்க இயலும், அவர்கள் கொடுத்திருக்கும் நாட்களை நாம் Immigiration checkpoint Authority என்ற துறையில் நம் தங்கும் அனுமதி நாட்களை நீட்டிக்கொள்ளலாம், நம்ம பேக்கேஜை எடுத்துவிட்டு வாருங்கள் சிங்கப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது, இன்னும் ஏழு நாள்... பல இடங்கள் சிங்கப்பூரில் சுற்றி பார்க்கலாம்... காத்திருங்கள்...

சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்.. சுற்றுலாவோடு தமிழும் தமிழர்களையும் தமிழறிஞர்களையும் சந்திக்கலாம்... போட்டி தொடர்பான விபரங்கள் இங்கே

நடந்தது, கேட்டதில் உண்மை...

நடந்தது, கேட்டதில் உண்மை...




மணற்கேணி 2009 சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி


டிரிங் டிரிங் டிரிங்....... அலைபேசியின் ஓசை ஒலிக்கின்றது..

நான்: "ஹெலோ சொல்லரசன் நான் ஞானசேகரன் பேசுரேன்ங்க"

சொல்லரசன்: "யாரு சாமானியன் ஞானசேகரனா? வணக்கம் ஞானசேகரன் எப்படி இருக்கிங்க? சிங்கபூர் வாழ்க்கை எப்படி போகுது?"

நான்: "ம்ம்ம் நல்லா இருக்கேன் சொல்லரசன் என்ன பதிவு பக்கம் ஆளே காணாம்..? சமிபத்தில் சாதியை பற்றி நல்லாவே எழுதியிருந்தீங்க சொல்லரசன். பாரதி பாட்டை மாற்றில்லவா எழுதியிருந்தீங்க ஞாயமான ஆதங்கம்தான் நண்பா. "

சொல்லரசன்: "ஆமங்க எல்லாம் என் பையனை பள்ளியில சேர்க்கும்போது ஏற்பட்ட மன உழச்சல்தான்ங்க."

நான்: "எங்க போனாரு ஆதவா ஏன் பதிவை தொடராம வச்சு இருக்காரு? நான் கேட்டேனு சொல்லுங்க நண்பா. "

சொல்லரன்: "ஆதவா ஒரே குழப்பத்தில் இருக்காராம், அதுதான் கொஞ்ச நாள் பதிவை நிறுத்தி வச்சுயிருக்கார். அப்பறம் தேவன் சார் மற்றும் கார்த்திகைப் பண்டியனை பார்த்தேன் நண்பா, நாங்க எல்லாம் சிங்கபூர் வரலாமுனு இருக்கோம். நீங்களேல்லாம் உதவியா இருக்கமாட்டீங்களா? நீங்க,. கோவி கண்ணன் எல்லாம் இருக்காங்க அதுதான் ஒரு திட்டம் இருக்கு என்ன சொல்லுரீங்க ஞானசேகரன்"

நான்: "ஓ தாராளமா வாங்க நண்பா, நாங்க இருக்கோம். நாங்களே இல்லாடியும் சிங்கபூர் சுற்றிப்பார்க்க எந்த வித குழப்பங்கள் வராது நண்பா. அந்த அளவிற்கு MRT (Mass Rapid Transit ) சிஸ்டம் வச்சுயிருக்காங்க. அதனால தாரளமா வாங்க நாங்க இருக்கின்றோம். "

சொல்லரசன்: "அப்படிங்களா! இங்க சென்னை
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் (Channai Mass Rapid Transit System, MRTS) இன்னும் திட்டத்திலேயே இருக்கு, அதலெல்லாம் பார்க்க எத்தனை நாட்கள் ஆகுமோ.."

நான்: " அதல்லாம் காலத்தின் கட்டாயம் கூடிய விரைவில வந்துவிடும் நண்பா. இங்குள்ள MRT பற்றி ஒரு MMS அனுப்புறேன் பாருங்களே"



சொல்லரசன்: " வாவ்வ்வ் நல்லா அழகா இருக்கே இப்பவே வரவேண்டும் போல இருக்கே நண்பர் வாசு கூட சிங்கபூர் வரனும் சொன்னாரு, அப்பறம் நையாண்டி நைனா, சக்கரை சுரேஷ் , ராம், தம்பிஅன்பு, அன்புமணி எல்லாருகிட்டையும் கேட்கனும் நண்பா"

நான்: "ஆமா ஆமா நண்பர் உழவன், ரம்யா அக்கா, தமிழரசி,சக்தி, நண்பர் சுரேஷ் குமார் இப்படி எல்லோரும் வந்தா நல்லாதான் இருக்கும் சொல்லரசன். அப்பறம்
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி நடக்குதே கலந்துகிட்டு வெற்றி பெறும் மூன்று பேருக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்.. நீங்களும் கலந்து கொள்ளுங்க நண்பா, தமிழ் மேல் ஆர்வமுள்ள அணைவரும் கலந்துகொள்ளலாம். "

சொல்லரசன்: "ஓ ஆமா நானும் பார்த்தேன் இதெல்லாம் ஒரு அரசியலுனு நினைக்கின்றேன் ஞானசேகரன்"

நான்: "நண்பா அப்படியெல்லாம் இல்லங்க பதிவர்களின் ஒரு சவாலாக எடுத்து செய்கின்றோம். பொது ஊடகங்களுக்கு பதிவர்களின் படைப்புகள் கொண்டு செல்லவேண்டும் என்ற முதல் முயற்சி தான் நண்பா. இத பத்தி நானும் என் பதிவில் எழுதி இருக்கேன் பாருங்க(
வென்றிடுவீர் எட்டு திக்கும்!.... ) நீங்களெல்லாம் கலந்துகொள்ளதான் வேண்டும். நமது நண்பர்களிடமும் எடுத்து சொல்லுங்க நண்பா. போட்டியை பற்றி முழு விவரங்களை மணற்கேணி 2009 ல் பாருங்க நண்பா..."

Manarkeni 2009


சொல்லரசன்:" நீங்க இவ்வளவு அழகா சொன்னபிறகு கலந்துகொள்ளாம இருந்துடுவோமா? இதோ அதற்கான செய்திகளை சேகரிக்க போகின்றேன் நண்பா"

நான்: "ரொம்ப மகிழ்ச்சி சொல்லரசன் சிங்கபூரில் சந்திக்கலாம் அலைபேசி பில்லு எகிர்ருது நான் கட் பன்னிகிறேன் நண்பா......"

சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்

விரைகணை போட்டி வெற்றியாளர்கள் !

1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்

பின் குறிப்பு :
இதில் ஒரு சிலர் பகுதியளவே கணித்திருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டு முதலில் அனுப்பியதாலும், சரியாக கணித்தாலும் போட்டி முடிவு நேரத்துக்கு பின்பும் மனம் தளராமல் அனுப்பிய ஒருவரும் வெற்றியாளர் பட்டியலில் உள்ளனர்.

வெற்றியாளர்களுக்கு பரிசு தொடர்பாக மின்மடல் அனுப்பப்படும்

மேலும் விவரங்கள் இங்கே !

எனது கட்டுரையை குழுப்பதிவில் கவனமின்மையால் வெளி இட்டுவிட்டேன், அது இங்கே இருக்கிறது
(கோவி.கண்ணன்)

விரைகணை வெற்றியாளர்கள் அறிவிப்பு !

தமிழ்வெளி நடத்திய 'இவை என்ன சொல்லுங்கள்?' புதிருக்கான விடையாக 'சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டி' என்று ஓரளவு ஊகித்து விடை கூறியவர்களுக்கான பரிசு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியாளர் எட்டு பேர் யார் யார் என்ற தகவல் தமிழ்வெளியில் வெளி இடப்பட்டுள்ளது விவரம் அறிய இந்தப் பக்கத்துக்குச் செல்லுங்கள்

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல இந்த இடுகையின் பின்னூட்ட பெட்டியைத் தட்டுங்கள்.

சிங்கைப் பதிவர்கள் தமிழ்வெளி இணைந்து நடத்தும் 'மணற்கேணி 2009' கருத்தாய்வுப் போட்டி தொடங்கிவிட்டது. போட்டித் தலைப்புகள் இங்கே. விதிமுறைகளை ஏற்று போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன, தொடர்ந்து எங்கள் இணையப் பக்கத்தை கண்காணித்து வாருங்கள்.

சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
கோவி.கண்ணன்

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை வெல்லுங்கள்-அள்ளுங்கள்!
மணற்கேணி - 2009 போட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும். இதன் பரப்பளவு சுமார் 740 சதுர கிலோ மீட்டர். பெருமளவில் தமிழர்களும் வாழும் அழகிய நாடு, இதைக் கட்டமைத்தது மற்றும் இந்த நாட்டில் வாழும் பல இன மக்களை பேணி காப்பது தலைமைத்துவம், தலைமைத்துவம் மட்டுமே என்றால் அது மிகையாகாது. சிங்கப்பூரில் சீனர்கள்,மலாய்க்காரர்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை பேணி காப்பதிலும் தலை சிறந்து விளங்குகிறது சிங்கப்பூர். சாலட் பவுல் கல்ச்சரை() பெரிதும் நம்பும் இந்த நாட்டின் தலைமை, இலங்கை போன்ற நாடுகளில் மெல்டிங் பொட் கல்ச்சரால்() ஏற்பட்ட தோல்விகளை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. சிங்கையில் எல்லா இடங்களிலும் ஆங்கிலம்,சீனம்,மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் அறிவிப்புகள் செய்வது,பெயர்ப்பலகைகள் வைத்திருப்பது எளிதாகவும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மிளிர்கின்றன.

தமிழர்களுக்கு சிங்கப்பூர் ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடாகத் தெரிவதற்கு இதுவே முதன்மையான காரணம்.

ஐரோப்பிய,அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை விட தினசரி வாழ்க்கையில் எற்படும் செலவினங்கள் அனைவராலும் சமாளிக்கக் கூடியதாக, வருமானத்திற்கு உகந்ததாக இருப்பது சற்று ஆறுதலானது. பெரும்பாலான தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்த பல நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கும் நாடு சிங்கப்பூர் என்பது இன்னொரு சிறப்பான நிலை.

பெரும்பாலனான தமிழர்கள் பணி,பொருள் ஈட்டுதல் மற்றும் வாழ்வியலுக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுப்பதற்கு அது நான்கு மணி நேர விமான பயணம் மட்டுமெ எடுத்துக்கொள்ளும் நாடு. உறவுகளைப் பிரிந்து பொருள் ஈட்டுவதற்காக புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள், உறவுகளுக்கு எதாவது நல்லது,கெட்டது என்றால் உடனே சென்று சேர ஏதுவாக மிக அருகாமையில் உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பாதுகாப்பான நாடு என்பது வெளி நாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்கும், அதனால் பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்கும் பெரிதும் பயன்படுகிறது. எதையும் எளிதாக்கித் தரும் தன்மை, வசதிகளை உருவாக்கிக் கொண்டெ இருப்பது, மாற்றங்களை புகுத்தி எளிமைப்படுத்தி மக்களைப் பழக்குவது, அறிவார்ந்த மக்களை உருவாக்க அன்றாடம் அயராது உழைப்பது போன்றவகள் இந்நாட்டின் வெற்றியின் இரகசியம்.

வரிகளைக் குறைத்து வழிகளைக் கொணரும் வல்லமை படைத்த நாடாக இருப்பதால், எந்த இயற்கை வளங்களும் இல்லாத போதும் தலை நிமிர்ந்து வளர்ந்த நாடுகளில் ஒன்றாக விளங்கி அதன் மக்களைக் காக்க அன்றாடம் பாடுபட முடிகிறது.

தொடரும்...!

Manarkeni 2009

அறிமுகம் ! சிங்கப்பூர் தமிழ் பதிவர்கள் குழு !



தமிழால் இணைந்தோம் - மொழி தரும் பயனை உணராத இனங்களே இல்லை. ஒரு மனிதனின் எந்த ஒரு அடையாளமும் தொலைந்து போனாலும், அவன் தனது அடையாளம் கான அவனுடன் இருப்பது அவன் பேசும் மொழி அவனை மீட்டுவிடும். தமிழகத்தில் அல்லது வெறெங்கு பிறந்திருந்தாலும் நம் அடையாளம் தாய் மொழி. எந்த ஒரு உறவும் இல்லாமல், எந்த வயதினராக பால் வேறுபாடின்றி நம்மால் ஒருங்கிணைய தாய்மொழி பாலம் அமைக்கிறது.

தமிழகம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு பகுதியில் பிறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என இன்றைய தேதியில் சாதி வேறுபாடு துறந்து இணைய முடிகிறதென்றால் தாய் மொழி இணைய வழி பெற்றும் தரும் பெரும் நன்மைகளில் அதுவும் ஒன்று. வலைப்பதிவாளராக இருக்கும் ஒருவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார் என்று நினைக்க முடிகிறது. தனியெருவராக துணை ஏதுமின்றி எந்த நாட்டிலாவது தனித்து இருந்தால் இணையவழி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தனிமையை போக்கிக் கொள்ள முடிகிறது.

வலையில் எழுதுவது பொழுது போக்கு, சுய அரிப்பு என்பதைத் தாண்டிய பயன் என்றால் நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஒருவருக்கு கொருவர் முடிந்த எல்லைக்குள் இருந்து உதவிக் கொள்ள முடிகிறது. இவை தமிழால் கிடைத்த பலனின்றி வேரென்ன சொல்ல முடியும். தமிழருக்குள்ளே இருக்கும் மாபெரும் பிளவு சாதி, அதனைப் பொருட்படுத்தாது இணைகிறோம், அடுத்த பிளவு மதம் அதனை துரும்பைப் போல் எண்ணி தொலைவில் வைத்துவிட்டு இணைகிறோம்.

நட்புக்கும் பதிவில் எழுதுவதற்கும் தொடர்பில்லை என்பதை பதிவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டவர்களுடன் பழகுகிறோம் என்பதற்காக தனது எண்ணங்களை சுறுக்கிக் கொண்டு எழுத்தில் தடைகற்களை எவரும் விதைத்துக் கொள்வதில்லை. ஒருவரின் நட்பு வேறு, தனிமனித தாக்குதல் இல்லாவிட்டால் ஒருவரின் எழுத்தும் எண்ணமும் பிறருடன் ஒப்பிடும் போது வேறு, இதைப் பெருவாரியான பதிவர்கள் புரிந்து கொண்டுள்ளதால் மாறுபட்ட எண்ணங்கள் கொண்டோருடன் நெருக்கமாக பழகுகிறார்கள்.

இந்த எண்ணங்களின் அடிப்படையில் சிங்கையில் வசிக்கும், சிங்கைக்கு புலம் பெயர்ந்தும், சிங்கையில் தற்காலிகமாக வேலை செய்தும், சிங்கை நிலை குடியாளர்களுமான பதிவர்கள் ஒண்றினைந்துள்ளோம். எங்களது முயற்சியாக மணற்கேணி - 2009 ஒரு தொடக்கம்........எங்களது நட்பும்......இலக்கிய பயணமும் தொடரும். சிங்கைப் பற்றிய பதிவர்கள் அறிந்து வரும் செய்திகள், தகவல்கள், சிங்கைத் தொடர்புடைய நிகழ்வுகளில் பதிவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் இந்த வலைப்பூக்களின் மூலம் வரும்.

எங்களது இணையப்பக்கம் சிங்கை தமிழ் வலைப்பதிவர்கள் குழு

நன்றி
சிங்கப்பூர் தமிழ் பதிவர்கள் குழுவுக்காக
ஜெகதீசன்
Manarkeni 2009

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP