"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ரிசல்ட்! ரிசல்ட்!! ரிசல்ட் !!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்க காலவிரயம் ஆனது போலவே மணற்கேணி போட்டி முடிவுகளின் நடைமுறைகளிலும் சில தடங்கல் ஏற்பட்டது. அவற்றை விளக்குவதை விட, முதற்கட்டமாக அறிவியல் பிரிவு வெற்றியாளரை அறிவிப்பதில் மகிழ்கிறோம். மற்ற இரு பிரிவுகள் இன்னும் இருவாரங்களுக்குள் அறிவித்துவிடுவோம்.

மணற்கேணி அறிவியல் பிரிவு :

வெற்றியாளர் : திரு லதானந்த்

கட்டுரையாக்கத் தலைப்பு : மரபு சாரா ஆற்றல் வளம்.

அறிவியல் கட்டுரைகளுக்குப் பொருத்தமான சீரான நடையும் வடிவமும் இருப்பது இந்தக் கட்டுரையின் பலம். வெற்று வார்த்தை அலங்காரங்கள், தேய்சொற்கள் ஏதும் இல்லாமல் அறிவியல் / தொழில்நுட்பக் கருத்துக்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளின் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் சுட்டியிருப்பது மற்றுமொரு சிறப்பம்சம் என்று நடுவர்களால் பாராட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது திரு லதானந்த் அவர்களின் கட்டுரை.


வெற்றியாளருக்கான ஒருவார சிங்கப்பூர் சுற்றுலாவிற்கான ஏற்பாட்டுடன் கூடிய சென்னை - சிங்கப்பூர்-சென்னை விமான பயணம் குறித்த விவரம் பின்னர் தொடர்பு கொண்டு அளிக்கப்படும்

வாழ்த்துகள் லதானந்த் ஐயா !

மணற்கேணி 2010 போட்டி குழுவினர்
மற்றும்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP