"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

செந்தில்நாதனுக்கு இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது !

நல்லிதயம் கொண்ட அன்பானவர்களே,


நமக்கு நன்கு அறிமுகம் ஆகியுள்ள சிங்கை செந்தில் நாதனுக்கு, இன்று காலை சிங்கை நேரப்படி 10.00 மணிக்கு (இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு) இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நுண்கிருமி (வைரஸ்) காய்சலால் நலிவுற்ற செந்திலின் இதயம், துடிப்பு எண்ணிக்கையைக் குறைக்க மூச்சு திணறலில் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துக் கொண்டிருந்தார், பிறகு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் வரை சமாளித்து வந்தார், பின்பு பேஸ் மேக்கரிலும் இதயச் செயல்பாடுகள் குறைய ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, மாற்று இதய சிகிச்சை தான் ஒரே வழி மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால் தற்காலிகத் தீர்வாக மின்கலம் மூலம் இயங்கும் செயற்கைக் கருவி வழியாக இதயம் செய்யும் இரத்த ஓட்ட செயல்பாடுகள் சீராக்கப்பட்டது. உடல் நிலையும் நன்கு தேறி வர ஒராண்டுகாலமாக பகுதி நேரமாக பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து செந்திலைத் தொடர்பு கொண்டு மாற்று இதயம் கிடைத்துள்ளதாகவும், இன்று காலை 10:00 மணிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை ஏழுமணிக்கு மருத்துவமனையில் செந்தில் சேர்ந்துள்ளார், முதல் நிலை மருத்துவ சோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளது. 10: 00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.

நல்லிதயங்களே, செந்திலின் இதய சிகிச்சை நல்லமுறையில் நடந்து, விரைவில் நலம் பெற உங்களுக்கு தெரிந்த வகையில் வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் செய்யுங்கள்.

கூடவே செந்திலின் இதயமாகச் செயல்படப் போகின்ற அந்த முகம் தெரியாத (மூளைச் சாவு) கொடையாளியின் ஆன்ம சாந்திக்கும், அவரின் இல்லத்தினரின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.

39 பின்னூட்டங்கள்:

மாணவன்

நண்பர் செந்தில்நாதன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று விரைவில் நலமுடன் குணமடைய எனது ஆத்மபூர்வமான பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துக்களும்...

பகிர்ந்துகொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமம்

துளசி கோபால்

அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் வெற்றிகரமாக நடைபெற வேணும். நம் சிங்கைநாதன் பூரணநலம் அடையவேணுமென்று பிரார்த்திக் கொள்கின்றேன்.


இதயம் கொடுத்த முகம்தெரியாத அன்பரின் குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

cheena (சீனா)

//அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் வெற்றிகரமாக நடைபெற வேணும். நம் சிங்கைநாதன் பூரணநலம் அடையவேணுமென்று பிரார்த்திக் கொள்கின்றேன்.


இதயம் கொடுத்த முகம்தெரியாத அன்பரின் குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றிகள். //
ரிப்பீட்டே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பயணமும் எண்ணங்களும்

அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடைபெறவும் விரைவில் நலமுடன் குணமடைய எமது பிரார்த்தனைகள்.

T.V.ராதாகிருஷ்ணன்

அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் வெற்றிகரமாக நடைபெற வேணும். நம் சிங்கைநாதன் பூரணநலம் அடையவேணுமென்று பிரார்த்திக் கொள்கின்றேன்.

ராமலக்ஷ்மி

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற என் பிரார்த்தனைகளும்.

//கொடையாளியின் ஆன்ம சாந்திக்கும், அவரின் இல்லத்தினரின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்ளுங்கள்.//

நிச்சயமாக. பகிர்வுக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார்

ப்ரார்த்தனைகளும் ஆசியும்....

கவிதா | Kavitha

பிராத்தனைகள்..

அவருக்கு இதயம் கொடுத்த செய்த குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

ஈரோடு கதிர்

செந்தில் நாதன் நலம் பெறவும்

இதயம் அளித்தவரின் ஆன்மா சாந்தியடைவும், இதயம் அளித்தவரின் குடும்பம் புண்ணியம் அடையவும் பிரார்த்தனைகள்

Anonymous

We wish to get well soon and gratitude to the man who donates

Renga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நண்பர் செந்தில்நாதன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று விரைவில் நலமுடன் குணமடைய எனது ஆத்மபூர்வமான பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துக்களும்...

குசும்பன்

நல்லபடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

நட்புடன் ஜமால்

எங்களது பிரார்த்தனைகளும் ...

கவிதை காதலன்

நண்பருக்கு வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இனியவன்

நல்ல உள்ளம் கொண்டவர். கடவுள் அவரை கைவிடமாட்டர்.

Seshadri/dubai

Get Well soon Senthil.

Sesha

மாதேவி

அறுவை சிகிச்சை வெற்றியடைந்து விரைவில் நலன் பெற பிரார்த்திக்கின்றேன்.

HVL

சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)

I pray the almighty for mr. senthil's health.

வடுவூர் குமார்

நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்

சி. கருணாகரசு

திரு செந்தில் நாதன் அவர்கள் குணம் பெறவும்....
இதயத்தை இடம் பாற்றி சென்ற அந்த ஆத்த்மா அமைதியடையவும் நான் நம்பும் கடவுளை வேண்டி கொள்கிறேன்.

இதயத்தை தானம் தர சம்மதித்த அந்த குடும்பத்தினருக்கு என் பணிவான கனிவான நன்றிகள்.

அமர பாரதி

நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்

அமுதா கிருஷ்ணா

பூரண நலம் பெற பிராத்தனை செய்வோம்.

Rex

சகோதரர் செந்தில் பூரண நலம் பெறவும், இதயம் தானமளித்த அன்பரின் குடும்பத்தார் நீண்ட மன அமைதி பெறவும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

ராஜ நடராஜன்

நலம் பெற வேண்டுகிறேன்.

பதிவுலக நண்பர்களின் பங்களிப்புக்கு பாராட்டுக்கள்.

தருமி

//இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.//

நல்ல ஒரு மனிதருக்கு நல்ல புதிய இதயம் வாழ்வளிக்க வாழ்த்துகள்

venkat

செந்தில் நாதன் நலம் பெற விரைவில் நலமுடன் குணமடைய எமது பிரார்த்தனைகள்.

காவேரி கணேஷ்

நல் இதயம் துடிக்கட்டும்

ஆ.ஞானசேகரன்

//இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.//

நல்ல இதயம் நன்றாக நலம்பெற வாழ்த்துகள்... கொடையாளி நண்பரை வணங்குவோம்.....

Avargal Unmaigal

அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடைபெறவும் விரைவில் நலமுடன் குணமடைய எனது பிரார்த்தனைகள்.

Arun Ambie

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றிடவும், செந்தில்நாதன் பூரண குணமடையவும் என் பிரார்த்தனைகள்.

அண்ணாகண்ணன்

செந்தில்நாதன் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.

Mahesh

எமது ப்ரார்த்தனைகளும்.....

யோகன் பாரிஸ்(Johan-Paris)

யாவும் நல்லபடி நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
அவருக்குத் துணையாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி!

துளசி கோபால்

மூன்று வாரங்களுக்கு முன் நம்ம செந்தில்நாதனை சிங்கையில் சந்திச்சேன். உடல் நலம் தேறி வருகிறார்.

அனைவரின் அன்புக்கும் நன்றி என்றார்.

Murugeswari Rajavel

செந்தில்நாதன் விரைவில் நலம் பெற
வாழ்த்துக்கள்.

சுந்தரவடிவேல்

செந்தில் நலம்பெற வாழ்த்துவோம்!

அறிவன்#11802717200764379909

நலமுடன் திரும்ப வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்..

Samy

Waiting for Senthil's new blogs. God bless Senthil.Samy

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP