"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கையில் லேசான நில அதிர்வு !

ஐந்து நிமிடங்களுக்கு முன் சிங்கையில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. எனது இருக்கை லேசாக அசைய .... அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சீனப் பெண் 'ஷேக்கிங்க்....ஷேக்கிங்க்' என்று குரல் எழுப்பினாள்.

ரிக்டர் அளவு விவரம் தெரியவில்லை.

கிட்டதட்ட அது பற்றிய தகவல் இங்கே


இந்தோனிசியா சுமத்திரா தீவு அருகில் அடிக்கடி நில நடுக்கம் / அதிர்வு ஏற்படும், அது சற்று பெரியதாக இருக்கும் போது சிங்கையிலும் உணரப் படும். சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்கிற தகவல் இனிமேல் தான் வெளியாகும்.

எதற்கும் தமிழக கடற்கரைப் பகுதிக்கு செல்பவர்களை தவிர்க்கச் சொல்லுவோம்.

முழுத்தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது

15 பின்னூட்டங்கள்:

அப்பாவி முரு

என்னோட சேரும் ஆடியது.

ஒரு பத்து, பதினைந்து வினாடிகளுக்கு உணர்ந்தேன்

ஜெகதீசன்

http://earthquake.usgs.gov/eqcenter/recenteqsww/Quakes/us2009mfae.php

அப்பாவி முரு

சேர் ஆடவும், உடனே இறங்கி அதைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டேன்.

இப்போது எனது சேர் (பதவி) பாதுகாப்பாக உள்ளது

கோவி.கண்ணன்

//அப்பாவி முரு said...
என்னோட சேரும் ஆடியது.

ஒரு பத்து, பதினைந்து வினாடிகளுக்கு உணர்ந்தேன்
//

வேகமாக ஆடினால் எழுந்து வெளியே ஓடவும். சேர் போனால் பரவாயில்லை
:)

கோவி.கண்ணன்

ஜெகதீசன் said...
http://earthquake.usgs.gov/eqcenter/recenteqsww/Quakes


இதுல விவரம் இருக்கு பாருங்க

Anonymous

பசிபிக்ல ஆரம்பிச்சது இந்தியப்பெருங்கடல் வரைக்கும் வந்திருச்சு.:(
(சில மாசங்கள் முன்னாடி நம்ம ஊர் ஜோசியர்கள் எல்லாம் சுனாமி வரும்னு சொன்னாங்க. பதிவுகள்ல கூட வந்துது. கால கட்டம் சரியா கணிக்கலயோ)

ஜோ/Joe

நான் உணரவில்லை.

பித்தனின் வாக்கு
This comment has been removed by the author.
பித்தனின் வாக்கு

எனக்கு ஒன்னும் தெரியலை. மாலை அலுவலகம் விட்டு வந்தவுடன் என் நண்பன் சொன்னான், நான் கேட்டன் "அப்படியா?"

// அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சீனப் பெண் 'ஷேக்கிங்க்....ஷேக்கிங்க்' என்று குரல் எழுப்பினாள். //
இது சரியாப் படலையே, ஏங்க தலைவா நீங்க கைய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டிங்களா.
&
&
&
அவங்க சேரை ஏன் புடிச்சு ஆட்டினிங்கனு கேட்டன் ஹி ஹி

கோவி.கண்ணன்

//பித்தனின் வாக்கு said...
எனக்கு ஒன்னும் தெரியலை. மாலை அலுவலகம் விட்டு வந்தவுடன் என் நண்பன் சொன்னான், நான் கேட்டன் "அப்படியா?"

அவங்க சேரை ஏன் புடிச்சு ஆட்டினிங்கனு கேட்டன் ஹி ஹி
//

:)

அதுக்குள்ளே பேரை மாற்றியாச்சா

பித்தனின் வாக்கு

ஆமங்க கோவி ஒரிஜினல் பித்தன் பின்னூட்டத்தில் வந்து நாந்தான் பித்தன், நீங்க பேரை மாத்துறிங்களா இல்ல நான் பேரை மாத்துட்டுமானு கேட்டார். நான் போடுற பின்னூட்டத்திற்கு எல்லாம் அவருக்கு ஆட்டோ வருதாம் அதனால சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுத்து நான் மாத்திட்டன். இது சம்பந்தமா நான் உங்களுக்கு தனியாவும், நம்ம சிங்கை குருப்புலயும் ஈ மெயில் கொசு மெயில் எல்லாம் போட்டிருந்தன்.

கோவி.கண்ணன்

//சின்ன அம்மிணி
பசிபிக்ல ஆரம்பிச்சது இந்தியப்பெருங்கடல் வரைக்கும் வந்திருச்சு.:(
(சில மாசங்கள் முன்னாடி நம்ம ஊர் ஜோசியர்கள் எல்லாம் சுனாமி வரும்னு சொன்னாங்க. பதிவுகள்ல கூட வந்துது. கால கட்டம் சரியா கணிக்கலயோ)
//

கலி முத்திவிட்டது !
2012
:)

வடுவூர் குமார்

Toa Payoh & Marina பகுதிகளில் தான் பொதுவாக உணரப்படும் இப்போது ஈசூன் பக்கமே தெரிய ஆரம்பித்துவிட்டதா?

கோவி.கண்ணன்

// வடுவூர் குமார் said...
Toa Payoh & Marina பகுதிகளில் தான் பொதுவாக உணரப்படும் இப்போது ஈசூன் பக்கமே தெரிய ஆரம்பித்துவிட்டதா?

October 1, 2009 1:35 PM
//

பெரிய அதிர்வாக இருந்தால் தான் தீவு முழுவதும் உணரப்படும், இது அப்படித்தான் என்று நினைக்கிறேன்

ISR Selvakumar

ஒரே ஒரு முறை சென்னையில் நான் இதை உணர்ந்திருக்கின்றேன். முதலில் தலை சுற்றல் என்று நினைத்தேன். பின்னர் டிவியை பார்த்துதான் அதை நில நடுக்கம் என்று உண்ர்ந்தேன்.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP