"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 அடுத்தது என்ன ?

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய "மணற்கேணி - 2009" கருத்தாய்வுப் போட்டியில் மிக ஆர்வமுடன் பங்கேற்று கட்டுரைகள் அனுப்பிய அனைவரையும் மணற்கேணிக் குழு மிகவும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது

இன்று முதல் கட்டுரை அனுப்பியவர்கள் அந்தக் கட்டுரைகளை தங்களது வலைத்தளத்தில் வெளி இடலாம்.

போட்டி முடிவுகள் நவம்பர் திங்கள் இறுதிக்கு முன் வெளி ஆகிவிடும். கிடைத்திருப்பது அனைத்துமே சிறப்பான கட்டுரைகள் ஆகையால் அவற்றை சீர்த்துக்கிப் பார்த்து மதிப்பீடு செய்யும் தகுதியானவர்கள் மூலம் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பெண்கள் இடப்படும்.

போட்டியின் முதல் மூன்று பரிசுகள் தவிர்த்து அனைத்துக் கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்க மணற்கேணிக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதை இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

50 கட்டுரைகள் வரை கிடைத்த அனைத்துமே மிகவும் தரமானவை என்பதால் போட்டியின் நோக்கம் மிகச் சரியாக நிறைவேறி இருப்பதுடன், பங்கேற்றப் பதிவர்களின் உழைப்பும் அதில் அடங்கி இருந்ததிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம்.

இந்த வரவேற்பு எங்கள் குழுவை அடுத்த ஆண்டு மேலும் மற்றொரு மாறுபட்ட போட்டி நடத்த ஊக்கப்படுத்தி இருப்பதையும் இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டியில் இணைந்து செயல்பட்ட தமிழ்வெளி இணையதளம் மூலம் கிடைத்த விளம்பரங்கள் போட்டி பற்றி மிக முழுமையான தகவல்களை பரப்புவதற்கு வழிவகை ஏற்படுத்தி நல்ல பயனளித்துள்ளது. பல்வேறு திரட்டிகள் இது போல் பதிவர்களுடன் இணைந்து செயல்படும் போது திரட்டிகளுக்கும் பதிவர்களுக்குமிடையேயான ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் மேலும் வளரும் என்பது மெய்ப்பட்டு இருக்கிறது.

மணற்கேணி - 2009 தொடர்பான விளம்பரங்களை வெளியிட்ட அனைத்துத் திரட்டிகள், இணைய இதழ்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், அந்த விளம்பரங்கள் தமிழ்வெளி மூலம் தங்கள் பதிவுகளில் இணைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட பதிவர்கள் பலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணித் தொடர்பான தகவல்கள், செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பாராட்டியவர்கள், படித்தவர்கள் மற்றும் இது பற்றிய இடுகைகள் வெளிட்டவர்கள் அங்கு பின்னூட்டமிட்டு ஆதரித்த அனைவருக்கும் நன்றிக் கூறிக் கொள்கிறோம்.

கேட்டவுடன் மணற்கேணி - 2009 இலச்சினை செய்து கொடுத்த பதிவர் நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் அறிவித்தப் பிறகு.....அடுத்தப் போட்டி அறிவுப்பு உங்களுக்காக, உங்களைத் தேடி வரும்.

போட்டியில் பங்கு பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த அறிவிப்புகளில் வெளிவரும்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !

22 பின்னூட்டங்கள்:

SurveySan

கட்டுரைகள் எல்லாம் எங்கே சாரே?

கோவி.கண்ணன்

//SurveySan said...
கட்டுரைகள் எல்லாம் எங்கே சாரே?

October 1, 2009 1:50 PM
//

கட்டுரைகள் அனுப்பியவர்கள் அவரவர் வலைப்பக்கத்தில் வெளியிடுவார்கள்

அறிவிலி

//அனைத்துக் கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் அளிக்க மணற்கேணிக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதை இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்//

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

கிருஷ்ண மூர்த்தி S

அவரவர் பக்கங்களில் வெளியிடுவது தவிர,மொத்தமும் ஒரே வலைப்பூவில் படிக்கக் கிடைத்தால், படிக்க வருகிற என்னைப் போன்ற வாசகர்களுக்கு உதவியாக இருக்குமே!

குறைந்த பட்சம், இந்தப் பதிவிலேயே, ஒவ்வொருவராகத் தங்கள் வலையில் ஏற்றிய பிறகு, இணைப்பை இங்கே அறியக் கொடுத்தால் கூட உதவியாக இருக்கும்.

கொஞ்சம் முடியுமா என்று பாருங்கள்!

குழலி / Kuzhali

//குறைந்த பட்சம், இந்தப் பதிவிலேயே, ஒவ்வொருவராகத் தங்கள் வலையில் ஏற்றிய பிறகு, இணைப்பை இங்கே அறியக் கொடுத்தால் கூட உதவியாக இருக்கும்.

கொஞ்சம் முடியுமா என்று பாருங்கள்!

//
நல்ல ஆலோசனை, அனைத்து கட்டுரைகளும் இணைப்புகளும் தொகுத்து வெளியிடலாம்...
நன்றி

ஆ.ஞானசேகரன்

அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !

ஆ.ஞானசேகரன்

கையேடு

கட்டுரையின் முதல் பகுதி - http://kaiyedu.blogspot.com/2009/10/2009-1.html

இரண்டாம் பகுதி -

http://kaiyedu.blogspot.com/2009/10/2009-2.html

RamG

//குறைந்த பட்சம், இந்தப் பதிவிலேயே, ஒவ்வொருவராகத் தங்கள் வலையில் ஏற்றிய பிறகு, இணைப்பை இங்கே அறியக் கொடுத்தால் கூட உதவியாக இருக்கும்.

கொஞ்சம் முடியுமா என்று பாருங்கள்!

//

நன்றி !




http://tele-gram.blogspot.com/2009/10/blog-post.html

தமிழ்

போட்டியில் கலந்து கொண்ட அனைவரின் ஆக்கங்களையுமோ, அவர்களின் வலைத்தள முகவரியையோ வெளியிட்டால் மற்றவர்களின் கருத்துகளையும் படிக்க வசதியாக இருக்கும்!
குறைந்த பட்சம் பங்குபெற்றவர்களின் பெயர் பட்டியலாவது வெளியிட்டால் உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

யார் யார் கலந்து கொண்டனர் என்பது கூட தெரியாமல், எப்படி அவர்களின் வலைப்பூக்களைக் கண்டறிவது??

- முகில்

பீர் | Peer

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த போட்டியிலும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டா? ;)

அன்புடன் அருணா

ஹையா.....நவம்பர் கடைசி எப்போ வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?????????????

Anonymous

கோவி,

50 கட்டுரைகளைப் படிக்க 50 வலைப்பூக்களுக்குச் செல்வதை விட 50 ம் ஒரே இடத்தில் படிக்கக் கிடைப்பது நலம்.

குறைந்தபட்சம் யாரார் எழுதியிருக்கிறார்கள் என்ற பட்டியலையாவது (சுட்டியுடன்) வெளியிடுங்கள். தேடிப் படிக்க வசதியாக இருக்கும்.

காவிரிமைந்தன்

நவம்பர் திங்கள் முடிந்து விட்டதே !

முடிவுகளுக்காகவும்,
போட்டிக்கு வந்த கட்டுரைகளைப்
படிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

எப்போது வெளியிடப்போகிறீர்கள்
நண்பர்களே ?

முருக.கவி

போட்டியின் முடிவை எப்பொழுது வெளியிடுவீர்கள்?

savukkadi chandrakantha

சிங்கைப் பதிவர்கள் குழுமம்
சுறுசுறுப்பாகப் பணியாற்றும் ஒரு குழு என்று நினைத்திருந்தேன்.

ஆனால் இத்தனை இடுகைகளுக்கும்
(14) எந்த பதிலையும் காணோமே !

வருகின்ற மின்னஞ்சல்களை யாராவது
படிக்கவாவது செய்கிறீர்களா இல்லையா? யாராவது இவற்றிற்கு
பொறுப்பேற்றுக்கொண்டு உரிய
நேரத்தில் பதில் அளிக்க வேண்டாமா ?

மின்னஞ்சல் அனுப்புகிறவர்களை
இப்படி அவமதிக்கலாமா ?

ஆரம்பத்தில் விளம்பரம் செய்யும்போது இருந்த
வேகம் இப்போது எங்கே
போயிற்று ?

- வருந்துகிறேன் .

கோவி.கண்ணன்

// savukkadi chandrakantha said...

சிங்கைப் பதிவர்கள் குழுமம்
சுறுசுறுப்பாகப் பணியாற்றும் ஒரு குழு என்று நினைத்திருந்தேன்.

ஆனால் இத்தனை இடுகைகளுக்கும்
(14) எந்த பதிலையும் காணோமே !

வருகின்ற மின்னஞ்சல்களை யாராவது
படிக்கவாவது செய்கிறீர்களா இல்லையா? யாராவது இவற்றிற்கு
பொறுப்பேற்றுக்கொண்டு உரிய
நேரத்தில் பதில் அளிக்க வேண்டாமா ?

மின்னஞ்சல் அனுப்புகிறவர்களை
இப்படி அவமதிக்கலாமா ?

ஆரம்பத்தில் விளம்பரம் செய்யும்போது இருந்த
வேகம் இப்போது எங்கே
போயிற்று ?

- வருந்துகிறேன் .//

திரு சந்திரகாந்தா மன்னிக்கவும்.

மணற்கேணிக் கட்டுரைகள் நடுவர்களுக்கு அனுப்பப் பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். நடுவர்கள் இதை ஒரு உதவியாக செய்கிறார்கள் என்பதால் நாம் அவர்களுக்கு உரிய நேரம் கொடுத்து காத்திருக்கிறோம். சில நடுவர்கள் முடிவுகளைக் கொடுத்துவிட்டார்கள். அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் வந்துவிடும்.

******

சிங்கைப் பதிவர்கள் குழுவாக சிங்கை சார்ந்த தகவல்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்வார்கள். மற்றபடி அவரவர் தனிப்பட்ட இடுகைகளை அவரவர் பதிவில் போட்டு வருகிறார்கள்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன்

// வடகரை வேலன் said...

கோவி,

50 கட்டுரைகளைப் படிக்க 50 வலைப்பூக்களுக்குச் செல்வதை விட 50 ம் ஒரே இடத்தில் படிக்கக் கிடைப்பது நலம்.

குறைந்தபட்சம் யாரார் எழுதியிருக்கிறார்கள் என்ற பட்டியலையாவது (சுட்டியுடன்) வெளியிடுங்கள். தேடிப் படிக்க வசதியாக இருக்கும்.

November 1, 2009 4:13 AM//

போட்டிக் அனுப்பிய பதிவர்களை இடுகைகளை வெளி இடச் சொல்லி இருந்தோம். ஒரு சிலர் வெளி இட்டார்கள்.

கட்டுரைகள் அனைத்தும் தனித்தளத்தில் தொகுக்கப்பட்டு வெளி இடலுக்கு காத்திருக்கிறது. விரைவில்.

தாமததிற்கு மன்னிக்கவும் அண்ணாச்சி !

கோவி.கண்ணன்

//காவிரிமைந்தன் said...

நவம்பர் திங்கள் முடிந்து விட்டதே !

முடிவுகளுக்காகவும்,
போட்டிக்கு வந்த கட்டுரைகளைப்
படிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
//

2010 ஜனவரி முதல்வாரத்தில் முடிவுகள் வெளி ஆகிவிடும் !

எப்போது வெளியிடப்போகிறீர்கள்
நண்பர்களே ?

// December 4, 2009 11:25 PM
Delete
Blogger முருக.கவி said...

போட்டியின் முடிவை எப்பொழுது வெளியிடுவீர்கள்?//

மிக்க நன்றி, 2010 ஜனவரி முதல் வாரத்தில் வெளி ஆகிவிடும்

savukkadi chandrakantha

நன்றி கோவி.கண்ணன்,

உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி.
இதைத்தான் வேண்டினேன்.

இனி கட்டுரைத்தொகுப்பிற்காகவும்,
முடிவுகளுக்காகவும்,
ஆவலுடன் காத்திருப்போம்.

palaniappan

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் அறிவித்தப் பிறகு.....அடுத்தப் போட்டி அறிவுப்பு உங்களுக்காக, உங்களைத் தேடி வரும்.

போட்டியில் பங்கு பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த அறிவிப்புகளில் வெளிவரும்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி !

when?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

savukkadi chandrakantha

நண்பர்களே

இன்னுமா புத்தாண்டு பிறக்கவில்லை
உங்களுக்கு ?

இயலாத பொறுப்புக்களை ஏன்
ஏற்றுக்கொள்கிறீர்கள் ?

சிங்கை தமிழ்ப் பதிவர்கள்

மன்னிக்கவும் இன்னும் இரண்டு நடுவர்களிடமிருந்து எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை, அதற்காக காத்திருக்கிறோம்...

சிறந்த கட்டுரைகள் அதற்கான தகுதியான நடுவர்கள் அந்தந்த துறையில் சிறந்த புலமை பெற்றவர்கள் வழியாக முடிபு செய்யப்படவேண்டுமென்றதாலேயே அதற்கான தகுதி வாய்ந்த நடுவர்களிடம் அளித்துள்ளோம்...

கடைசி கட்ட முடிவுகளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்... முதல்முறையாக செய்கிறோம்... சில காலதாமதங்கள் நிகழ்ந்துள்ளன... மன்னிக்கவும்...

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP