"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிறப்பு பதிவர் சந்திப்பு - சிங்கப்பூர்

சிங்கப்பூர் பதிவர்களின் சிறப்பு கூட்டம்

மர்ர்ச் 12 (வெள்ளி): குட்டி இந்தியாவில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோவிலில் "தினம் ஒரு திருமந்திரம்" என்ற தலைப்பில் சீரும் சிறப்புமாக ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு நடைபெற்றது.பின்னர் வழங்கப்பட்ட கேசரி, சுண்டல் மற்றும் புளியோதரை பிரசாதங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிங்கைப் பதிவர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் சி.ஈ.ஓ. ஜோஸப் பால்ராஜ் மற்றும் எங்கள் அனைவரின் அன்பு அண்ணண் திரு.கோவி கண்ணண் அவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (சனிக்கிழமை,மார்ச்-13,2010) மாலை 04:30 மணியளவில் சிட்டி ஹால் (பழைய சுப்ரீம் கோர்ட்) எதிரில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சிறப்பு பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

சிங்கைப் பதிவர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


சிறப்பு விருந்தினர்கள்


கேபிள் ஷங்கர்


ஸ்வாமி ஓம்கார்


சிட்டி ஹால், சிங்கப்பூர்

நேரம்:மாலை 04:30
நாள் : 13-03-2010 (சனிக்கிழமை)

6 பின்னூட்டங்கள்:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

இனிதே நடைபெற வாழ்த்துகள்..:)

சுடுதண்ணி

சந்திப்பு சிறக்க இதயங்கனிந்த வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி அறிவிலி :)

அப்பாவி முரு

1+3 க்கு சிற்றுண்டி கொண்டுவரவும்...

அறிவிலி

@அப்பாவி

புரியுது.. ஸ்வாமிக்கு 3, கேபிளுக்கு 1கரெக்டா?

:-))))))

வெற்றி-[க்]-கதிரவன்

சிங்கை பதிவர் சங்க விதிப்படி "கேபிள் சங்கர்" என்று எழுதிருப்பது குற்றச்செயலாகும் ஆகவே "கேபிள் அங்கிள்" என்று மாற்றிவிடவும்

விந்தைமனிதன்

பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும். நான் சென்னையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்கு சிங்கப்பூரில் என் தொழில் சம்பந்தமான் தொடர்புகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தர முடியுமா? என் நிறுவனம் இந்திய அரசு அனுமதி பெற்ற நிறுவனம்.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP