"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி 2009 - சில நினைவுகள்

சிங்கை வலைப்பதிவர்கள் பெரு முயற்சியால் சென்ற ஆண்டு சிறப்பாக நடத்தப்பட்ட மணற்கேணி கருத்தாய்வு போட்டி..

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டி இணைய உலகில் ஒரு சிறப்பான முயற்சி என்றே நம்புகிறேன், இணைய எழுத்துகள் பொதுவாக மேம்போக்கான எழுத்துக்களாகவும் பொழுது போக்கு எழுத்துகளாகவும் இருப்பதாக கருதப்படுகிறது, அதில் சில உண்மைகளும் உள்ளன, இந்த நிலையில் சிங்கை வலைப்பதிவர்கள் நடத்திய மணற்கேணி போட்டிக்கு 50க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கிடைத்தன, அனைத்தும் சிறப்பான தகவல்களோடு ஆழமான அலசல்களுடன் இருந்த கட்டுரைகள்...

அந்த துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 12 நடுவர்கள் இந்த கட்டுரைகளை ஆராய்ந்து அதில் சில கட்டுரைகளை தேர்ந்தெடுத்தனர், கடைசியாக பிரிவிற்க்கு ஒன்றாக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சிங்கப்பூர் அழைக்கப்பட்டனர், ஒரு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மூவரும் விஐபி களாக வந்திருந்து எங்களை மகிழ்வித்தனர்.

மணற்கேணி 2009 நினைவாக மருத்துவர் ருத்ரன் அவர்களின் ஓவியம் அட்டைப்படமாக அலங்கரிக்க "மணற்கேணி" என்ற சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுதியும் வெளியிடப்பட்டது...

அம்மாதிரியே இவ்வாண்டும் மணற்கேணி 2010 நடைபெற முடிவெடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.... சென்ற முறை மணற்கேணியில் பதிவர்கள் குறைவாகவே கலந்து கொண்டனர், பதிவுலகின் வெளியில் இருந்து பலர் கலந்து கொண்டனர், இம்முறை நிறைய பதிவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்...


மணற்கேணி பற்றி பேச ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை நிறைய அனுபவங்களை எங்களுக்கு கொடுத்துள்ளது....அந்த மணற்கேணி மறக்க முடியாத நினைவுகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... மணற்கேணி வெறும் போட்டி நிகழ்வு மட்டுமல்ல, அது தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வலைப்பதிவர்களுடன் இணைத்த நிகழ்வு, இது மட்டும் நடக்கவில்லையென்றிருந்தால் நான் சில நண்பர்களை பெற்றிருந்திருக்க மாட்டேன்... மணற்கேணி சிங்கைப்பதிவர்கள் 20க்கும் மேற்பட்டோரின்உழைப்பு மற்றும் பணத்தால் ஆனது, ஒவ்வொருவரின் சிறப்பான பங்களிப்பு, அதை நண்பர்கள் ஒருங்கிணைத்த விதம், இதுமுழுக்க முழுக்க எனது பார்வையில் எழுதப்பட்டது... ஒவ்வொருவரும் தானாக முன்வந்த செய்த உழைப்பு, பங்களிப்பு மற்றும் ஒரு சிறு ஈகோவும் இல்லாமல் செய்தது மிக சிறப்பானது, மணற்கேணி-2009 நிறைவு நிகழ்ச்சி ஏற்பாடுகள் கல்யாண வீட்டு களையுடன் இருந்தது, ஒவ்வொருவரும் தானக வேலைகளை இழுத்துப்போட்டு தன் வீட்டு கல்யாண வேலை போல செய்தனர். அளவிட முடியாத ஆனந்தம் அன்று. யார் சொன்னது தமிழர்களுள் ஒற்றுமையில்லையென்று.. இந்த குழுவில் கொள்கை வேறுபாடுகள், கருத்துவேறுபாடுகள், சொந்த பிணக்குகள் உள்ளவர்களும் இருந்தார்கள் ஆனாலும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது... மணற்கேணி நிகழ்வுகளில் நானும் பங்கெடுத்தது எப்போதுமே எனக்கு ஒரு மகிழ்வான நிகழ்வே....



போட்டி நடத்தலாம் என்று முகவை ராம் சிங்கை வலைப்பதிவர் குழுவில் தெரிவிக்க அதைத்தொடர்ந்து என்ன மாதிரி நடத்தலாம் என்று தொடர் கூட்டங்கள் நடந்தன, முதலில் போட்டி எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்த பின் போட்டி தலைப்புகள் தொடர்பான விவாதங்கள் நடந்தன, 50 அளவிலான தலைப்புகள் முன்மொழியப்பட்டு ஒவ்வொன்றையும் விவாதம் செய்து அலசி பின் தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன... இந்த விவாதங்களை ஒலிப்பதிவு செய்திருக்கலாமே என்று தற்போது தோன்றுகிறது அந்த அளவிற்க்கு ஒரு ஒரு தலைப்பும் சிங்கை வலைப்பதிவர்களால் அலசப்பட்டன...

மணற்கேணி பெயர் உருவான விதம், போட்டி அறிவிக்கப்பட்டது, அச்சு ஊடகங்களை அனுகியபோது ஏற்பட்ட அனுபவங்கள், நடுவர்கள் முடிவு செய்தவிதம் மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புகள், சிங்கை வாசகர் வட்ட கூட்டம் மற்றும் அவர்களின் பங்களிப்பு, கவிமாலை நிகழ்வுகள், "மணற்கேணி" புத்தக வெளியீடு, விருது நிகழ்வுகளை வரும் பதிவுகளில் இடுகிறேன்...

மீண்டும் இந்த ஆண்டு மணற்கேணி 2010 என்ற கருத்தாய்வு போட்டி தொடர்பான விவரங்கள் திங்கள் அன்று வெளிவரும்.

சென்ற முறை நிறைய அறிமுகம் மணற்கேணி போட்டிக்கு பதிவர்கள் மத்தியில் இருந்தாலும் நிறைய பதிவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது சற்றே எங்களை லேசாக சோர்வடைய செய்தது... சென்ற முறை இணையத்திற்க்கு வெளியே நாங்கள் விளம்பரம் செய்யவில்லை என்ற போதும் பதிவுலகிற்க்கு/ இணையத்திற்க்கு வெளியிலிருந்து நிறைய கட்டுரைகள் எங்களுக்கு கிடைத்தன, அப்படியென்றால் பதிவர்கள் மணற்கேணி கட்டுரை போட்டி பற்றி வெளியேயும் சொல்லியுள்ளார்கள்.


இம்முறை மணற்கேணி 2010ல் பதிவர்கள் நிறைய கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம், மேலும் இந்த போட்டி பற்றி பலருக்கும் தெரியப்படுத்தி உதவுங்கள்

மணற்கேணி பற்றிய உங்கள் விமர்சனங்கள் மற்றும் எப்படியாக இப்போட்டியில் மாற்றங்கள் செய்தால் மேலும் சிறப்பாக இருக்குமென கருத்துகளை தெரிவியுங்கள்

8 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி

ஞாபகம் வருதே நினைவு மீட்டல் நன்று!

மணற்கேணி-2010 ல் பெருவாரியான பதிவர்கள் பங்கெடுக்க அழைக்கிறோம்!

தேவன் மாயம்

மணற்கேணி ஒரு அருமயான போடடி! வலையுகின் மிகச்சிறவ்த போட்டியும் இதுவே! வல்லமை மிக்க இளைஞர்களால் நடத்தப்படும் இப்போட்டி சிறக்க வாழ்த்துகிறேன்!

ஜெகதீசன்

:)

ஆ.ஞானசேகரன்

2010 இன்னும் சிறப்பாக இருக்கவெண்டும்.....

ஆ.ஞானசேகரன்

2009ல் ஒவ்வொருவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததை நினைவுகூருகின்ரேன்.... இதை இன்னும் கூடுதல் விழாக்கோலமாக இருக்க என் வாழ்த்துகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

கையேடு

மணற்கேணி 2010 - சிறக்க வாழ்த்துக்கள்.

Anonymous

மணற்கேணி 2010 - சிறக்க வாழ்த்துக்கள்.

தருமி

மணற்கேணி 2010 சிறக்க என் வாழ்த்துகள்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP