"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மணற்கேணி - 2010 குறித்த அறிவிப்புகள் !

பதிவர்கள் மற்றும் எழுத்து ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 பற்றிய அறிவிப்புகளை இன்று வெளி இடுவதில் பெருமை கொள்கிறோம்.

போட்டித் தலைப்புகள் இங்கே

சென்ற ஆண்டைப் போல் இல்லாமல் இந்த முறை எளிமையான தலைப்புகளில் கட்டுரை தலைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதிக் குவித்து பேராதரவு தந்து போட்டியில் வெற்றிபெருமாறு வாழ்த்துகிறோம்

போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர இறுதி நாள் : நவம்பர் 15, 2010 23:59:59 (இந்திய/இலங்கை நேரம்)

போட்டிகள் இன்று துவங்கி கிட்டதட்ட 40 நாட்கள் நடக்கின்றன. 40 நாட்கள் என்பது கட்டுரைகளின் தலைப்பை ஒட்டி பல்வேறு தகவல்களை திரட்டவும், எழுதிய கட்டுரையை நன்கு சீரமைத்து அனுப்ப போதிய காலம் தான் என்று நினைக்கிறோம். போட்டிக்காலம் சற்று நீட்டிகப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் இருந்தாலும் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை ஆராய்ந்து நீட்டிப்பு மணற்கேணி குழுவினரால் பரீசீலனை செய்யப்படும்.

போட்டி விதிமுறைகள் இங்கே

போட்டியின் விதிமுறைகளில் ஒன்றுத் தவிர்த்து மணற்கேணி - 2009 விதிமுறைகளே பின்பற்றப்படுகிறது.

போட்டி நிறைவு நாளுக்கு 40 நாட்கள் இருக்கிறதே என்று எண்ணாமல் இன்றே கலந்து கொள்வதற்கான முயற்சிக்கு சுழி போடுங்கள், ஏனென்றால் காலம் மிகவும் விரைவானது, ஒவ்வொருக்கும் எதிர்பாராத வேறு சில பணிகளும் இடையே இடையே வந்து சேர்ந்து தடை ஏற்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இணைப்புகள் :

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

மணற்கேணி 2009 சில நினைவுகள் (எழுதியவர் பதிவர் மற்றும் தமிழ்வெளி இணைய தளத்தின் பொறுப்பாளர் நண்பர் திரு குழலி என்கிற பொன்.புருஷோத்தமன்)

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

Manarkeni 2009

21 பின்னூட்டங்கள்:

Anonymous

அடடே! உங்க போட்டி வெற்றி பெற வாழ்த்துகள். கட்டுரைகள் குறைவா வந்தா நீட்டிப்புத் தருவீங்க இல்ல;-)

கோவி.கண்ணன்

//அடடே! உங்க போட்டி வெற்றி பெற வாழ்த்துகள். கட்டுரைகள் குறைவா வந்தா நீட்டிப்புத் தருவீங்க இல்ல;-)//

நன்றி. கட்டுரைகள் (நீளம்) குறைவாக வந்தாலும் நீட்டிப்பு தரமாட்டோம்.

:)

denim

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

ஆ.ஞானசேகரன்

மணற்கேணி வெற்றி பெற வாழ்த்துகள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஜெகதீசன்

சோதனை

Anonymous

denim, சோதனை மேல் சோதனை

அப்பாவி முரு

//மணற்கேணி குழுவின் வலைப்பூ//

-வை கிள்ளினால், இதே பக்கத்துக்குத்தான் வருகிறது.

சரியா?

கையேடு

//
16.மணற்கேணி - 2009 வெற்றியாளர்கள் கலந்துகொள்ள முடியாது. //

1. இந்த விதிப்படி எனது பங்களிப்பு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா.

2. பரிசிற்காக இல்லாவிட்டாலும் பங்களிப்பிற்காக மட்டுமாவது கலந்துகொள்ள அனுமதிக்கலாம்.

ஜெகதீசன்

நன்றி கையேடு..

உங்களது பங்களிப்பு ஏற்கப்படும்.. பரிசுக்காகவும் நீங்கள் கலந்துகொள்ளலாம்..

:)

வெறும்பய

கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் முயற்சி செய்ததில்லை.. இந்த தடவை கலந்து கொள்ள வேண்டியது தான்...

ஜெகதீசன்

நன்றி வெறும்பய!
உங்களது ஆக்கங்களுக்காகக் காத்திருக்கிறோம். வெற்றி பெற வாழ்த்துகள்!
:)

நேசமித்ரன்

குழுவினருக்கு வாழ்த்துகள் .

ஜெகதீசன்

விதிமுறை மாற்றம்:
8. பங்கு பெறுபவர் தன் பெயரை கடவுச்சீட்டில்(Passport) உள்ளபடி (ஆங்கிலத்தில்) கட்டுரையின் முகப்பில் தர வேண்டும். கடவுச்சீட்டு இல்லாதவர்கள் தங்களின் கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் தர இருக்கும் முழுப்பெயர் இணைக்கவும். பரிசு பெற்றவர் அவருக்கு பதிலாக வேறொருவரை பரிந்துரைத்தால் ஏற்க இயலாது.

பெயர் மட்டும் போதும்... பிறந்தநாள் வெற்றியாளர்கள் தெரிவித்தால் போதும்..

நன்றி!

சி.பி.செந்தில்குமார்

அடடே,போட்டியா?கலந்துக்குவோம்.

முகவை மைந்தன்

வாழ்த்துகளுக்கு நன்றி நேசமித்திரன், செந்தில்குமார். கலந்து கொள்ள முயலுங்கள். உங்கள் நண்பர்களிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தருமி

போட்டி நன்கு நடைபெற என் வாழ்த்துகள்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வெற்றி பெறப் போகும் வெற்றியாளர்களுக்கு (பொறாமையோடு)
வாழ்த்துகள்!

ம்ம் .. ம் .. சிங்கப்பூர் !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் . இந்த அறிய வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கும் சிங்கை குழுவிற்கும் என் நன்றிகள் . நானும் எனது கட்டுரையை அனுப்பி வைக்கிறேன் .

முகவை மைந்தன்

வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர். உங்கள் கட்டுரையை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.

ரோஸ்விக்

விளம்பரப்படுத்தியாச்சுண்ணே

http://thisaikaati.blogspot.com/2010/10/manarkeni.html

பட்டாபட்டி..

@denim
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
//


அண்ணே.. தயவு செய்து..இவருக்கே சிங்கப்பூர் டிக்கெட் கொடுத்திடுங்க.. புண்ணியமா போகும்..
( பாவம்.. எல்லா ப்ளாக்ல போயி ஒரே மாறி..ஏதோ சொல்லிக்கிட்டு இருக்காரு..)

cheena (சீனா)

அன்பின் ஜெகதீசன்

பங்கு பெறப் போகும் அனைத்துப் பதிவர்களுக்கும் - அமைப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP