"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி 2010 போட்டிகள் - முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும், மணற்கேணி 2009 போட்டியைத் தொடர்ந்து மணற்கேணி 2010 அறிவித்திருந்தோம், அறிவிப்பின் படி போட்டிக்கான கட்டுரைகள் பெறும் இறுதி நாள் இன்று (நவம்பர் 15) என்று அறிவிக்கபட்டு இருந்தது. நேற்றுவரை குறைந்தது பத்து வெவ்வேறு மின் அஞ்சல்கள் போட்டியின் இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டுகோள் வைத்து வந்தன. நீட்டிப்பதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணற்கேணி குழுவினர் ஒன்று கூடி வரும் டிசம்பர் 31 வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.

இதன் படி மணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.

எழுத்தார்கவலர்களும், பதிவர்களும் இந்த நீட்டிப்பை நல்வாய்ப்பாக பெற்று போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம்

சுட்டி:

முதல் மூன்று பரிசுகளாக மூவருக்கு சென்னை - சிங்கப்பூர் ஒருவார சுற்றுலா,

போட்டி விவரம், தலைப்புகள், பரிசு விவரங்களுக்கு மணற்கேணி - 2010 இணைய தளம்அன்புடன்
மணற்கேணி - 2010

4 பின்னூட்டங்கள்:

முகவை மைந்தன்

//குறைந்தது பத்து வெவ்வேறு மின் அஞ்சல்கள்//
பத்துப் பேரா இருந்தாலும், பங்கு பெறும் ஆர்வமிருந்தா தள்ளி வைக்கலாம் தான். இதுவரை போட்டிக்கு கட்டுரை அனுப்பியவர்கள், தங்கள் ஆக்கங்களை மெருக்கேத்தி அனுப்பலாமான்னும் சொல்லிருங்க.

வரவேற்கிறேன் :-)

ஆ.ஞானசேகரன்

நல்லது....

தேவன் மாயம்

நல்ல அறிவிப்பு! இது இன்னும் பலர் எழுத வழிவகுக்கும்!

தேவன் மாயம்

இந்தச் செய்தி இன்னும் பலரைச் சென்றடையவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP