புதிய நோவா கப்பல் !
சிங்கப்பூர் வளர்வது போலவே சிங்கப்பூரின் கட்டிடங்கள் பல்வேறு தொழில் நுட்பங்களில் வளர்ந்துவருகின்றன. புதிதாகக் கட்டப்படும் வணிக வளாகங்கள் அனைத்தும் முழுக்கட்டிடமும் மின்னும் வண்ண ஒளியை ஆடையாக அணிந்து கொண்டு ஆண்டுமுழுவதுமே வரவேற்புக் கொடுக்கின்றன. ஆர்சர்ட் சாலையின் தோற்றமே முழுதும் புதிய வடிவமைப்பு கட்டிடங்களால் மாறி இருக்கிறது. இதைத் தவிர்த்து சிட்டிஹால் மற்றும் ராபிள் ப்ளேஸ் எனப்ப்படும் மைய நகருக்குச் சென்றால் எவரும் நிமிர்ந்து பார்க்க, வியக்கும் வண்ணம் மிகப் பெரிய கப்பல் ஒன்றை தலையில் தாங்கிய மூன்று வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்க விழிகள் விரிய வைக்கின்றன. கட்டிடத்தின் உயரம் ஏறக்குறைய 56 தளங்கள், அந்தக் கட்டிடம் 7 வின்மீன் தகுதி பெற்ற 2500க்கும் மேற்பட்ட அறைகள் உடைய தங்கும் விடுதி அமைந்த பல்நோக்கு வளாகம், அதன் பெயர் மெரினா பே சாண்ட்ஸ். சிங்கப்பூரின் வர்தக பகுதியான ராபிள் ப்ளேசை பார்த்த வண்ணம் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தின் மற்றொரு பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது மேரினா பே சாண்ட்ஸ் வளாகம்.
அந்தப் பகுதியை அடைய மறுபகுதியில் இருந்து ஆற்றின் மீதான தொங்கும் நடை பாலாமும், பேருந்துகள் செல்லக் கூடிய மிகப் பெரிய பாலமும் புதிதாக அமைகப்பட்டுள்ளன. தொங்கு பாலத்தின் மீது ஏறி நடக்கும் போது கீழே செல்லும் படகுகள் மற்றும் மறுபகுதியை பார்வையிட பாலத்தில் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேரினா பே சாண்ட்ஸின் சின்னமாக அமைந்திருக்கும் அந்த பெரிய வளாகத்தின் கீழ் பகுதியில் மிகப் பெரிய சூதாட்ட விடுதியும் பல்வேறு பொது விற்பனைத் தளங்களும், படகு சவாரி செய்யக் கூடிய சிறிய ஓடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளான மையக் கட்டிடத்தின் மேல் பகுதியில் பெரிய கப்பல் போன்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலே சென்றுவர விடுதியில் தங்குபவர்களுக்கு இலவச அனுமதி, பார்வையாளர்களாக வருபவர்களுக்கு 20 வெள்ளிக் கட்டணம்.
56 தளங்களை 30 வினாடிகளில் கடந்துவிடுகிறது மின் தூக்கி. மேலே செல்ல கால்கள் நழுவது போன்றும் வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, இருக்காதா பின்னே... அவ்வளவு உயரம் காற்று, சுற்றிலும் அதைவிட அளவுக்கு குறைவான கட்டிடங்கள், திறந்த விமானத்தில் பயணிப்பது போன்று இருந்தது. மேலே பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கையின் எழில் கொஞ்சும் மேரினா பேராஜ் எனப்படும் புதிய பகுதியை மேலிருந்து நன்கு பார்வை இட முடியும். தொலைவில் கடலை தடுத்து அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு. மறுபக்கம் சிங்கப்பூர் ப்ளையர் எனபடும் மிகப் பெரிய சுழற் சக்கரம். இன்னொரு பக்கம் மெரினா பே எனப்படும் சிங்கப்பூர் ஆற்றின் முகப்பு, அதன் கரையில் அமைந்திருப்பது போன்று உயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு... இவற்றையெல்லாம் பார்வையிட்டு மேல் தளத்தின் அடுத்தப் பகுதிக்குச் சென்றால், வானத்தில் மிதப்பது போன்று அமைக்கப்பட்ட மிகப் பெரிய குளியல் தொட்டி, அங்கிருந்து பார்க்க அந்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தில் கட்டுமானம் வியக்க வைக்கிறது.
மேலும் மெரினா பே சாண்ட்ஸ் குறித்த விக்கித் தகவல்கள்
இவற்றையெல்லாம் நீங்களும் கண்டுகளிக்க வாய்ப்பு உள்ளது, செய்ய வேண்டியது இது தான் மணற்கேணி 2010 போட்டியில் பங்குபெறுங்கள். வெற்றியாளராக வருகை தாருங்கள், தீபாவளி பொதுவிடுமுறையில் தீபாவளி கொண்டாட்டம் போக எழுதுவதற்கு நேரம் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள். சிங்கையில் சந்திப்போம்.
போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
மணற்கேணி 2010
இணைப்பு :
மணற்கேணி குழுவின் போட்டி குறித்து அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்
12 பின்னூட்டங்கள்:
சிங்கப்பூரில் வந்து இறங்கும் போது அழைத்துச் செல்வீர்கள் தானே?
// ஜோதிஜி said...
சிங்கப்பூரில் வந்து இறங்கும் போது அழைத்துச் செல்வீர்கள் தானே?
November 4, 2010 11:06 AM//
மாலையோடு வந்து அழைத்துச்செல்வோம் :)
கோவி அண்ணே : படங்கள் மிக அருமை............
தீபாவளி வாழ்த்துக்கள்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே :-).
மாலையெல்லாம் உண்டா ..?
//தருமி said...
மாலையெல்லாம் உண்டா ..?
November 4, 2010 11:55 AM//
ஒவ்வொரு நாளும் மாலை வருகிறதே :)
//வழிப்போக்கன் - யோகேஷ் said...
கோவி அண்ணே : படங்கள் மிக அருமை............
தீபாவளி வாழ்த்துக்கள்
November 4, 2010 11:51 AM//தங்களுக்கும் தங்கள் இல்லத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
//சிங்கக்குட்டி said...
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே :-).
November 4, 2010 11:55 AM// சொல்லாமல் கொள்ளாமல் வந்து சென்றவர் நீங்கள், அதை நினைத்து ஆடுதோ ! :)
hi kannan sir, Im in singapore,
I want to meet the bloggers. can u send ur no to sgramesh1980@gmail.com?
தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
hi kannan sir, Im in singapore,
I want to meet the bloggers. can u send ur no to sgramesh1980@gmail.com?// திரு இரமேஷ், இந்தவார இறுதியில் சந்திப்புகள் இருக்கும், 9876 7586 இல் தொடர்பு கொள்ளவும்
//வெறும்பய said...
தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....
November 5, 2010 4:18 PM//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !
Post a Comment