"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 அறிவியல் பிரிவு வெற்றியாளர் அறிவிப்பு.

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் சிங்கைப் பதிவர்கள் சார்பாக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டிக்கு வந்திருந்த ஒவ்வொரு படைப்பும், போட்டியாளர்களின் தீவிர உழைப்பை பறைசாற்றியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அந்தளவுக்கு அத்தனை படைப்புகளும் சிறப்பாக இருந்தன. இத்தனை கடினப்பட்டு போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு நாங்கள் செய்யும் பெரிய மரியாதை,அந்தப் படைப்புகளை தகுதிவாய்ந்த நடுவர்களிடம் கொடுத்து மதிப்பிடுவது தான் என்பதில் சிங்கைப் பதிவர்கள் அனைவரும் உறுதியாய் இருந்தனர்.

அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகள் அனைத்தும் சிங்கையில் அறிவியல் ஆராய்சியாளர்களாக பணிபுரியும் தமிழார்வம் மிக்க நடுவர்களால் மதிப்பிடப்பட்டது. மொத்தம் ஐந்து ஆராய்சியாளர்கள் தங்களது கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவில் இந்தப் பணியை செய்து முடித்துள்ளார்கள். இதுவே காலதாமதத்திற்கான மிக முக்கிய காரணம். போட்டியாளர்களையும், மற்றவர்களையும் மிக நீண்ட காலம் காக்க வைத்தமைக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மணற்கேணி 2009 போட்டியின் அறிவியல் பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்பு

தலைப்பு: நவீனகால நுண்ணோக்கிகள்

எழுதியவர்: இரா.இரஞ்சித்

வலைதள முகவரி: http://kaiyedu.blogspot.com


வெற்றி பெற்ற இரஞ்சித் அவர்களுக்கு சிங்கைப் பதிவர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலக்கிய பிரிவின் வெற்றியாளர் அறிவிப்பு வரும் வெள்ளியன்று வெளியாகும்.


23 பின்னூட்டங்கள்:

ஜெகதீசன்

வாழ்த்துகள் இரஞ்சித்!

அத்திவெட்டி ஜோதிபாரதி

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரஞ்சித்!

சிறப்பான ஆக்கம்!

கோவி.கண்ணன்

பதிவர் திரு கையேடு அவர்களுக்கு பாராட்டுகள்.

சந்தனமுல்லை

கையேடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால்

வாழ்த்துகள்!

தமிழ் பிரியன்

வாழ்த்துக்கள்! சிங்கை பதிவர் குழுமத்திற்கும், வெற்றி பெற்ற்வர்களுக்கும்... :)

அறிவிலி

வாழ்த்துகள் திரு.ரஞ்சித்.

ஆ.ஞானசேகரன்

வாழ்த்துகள் நண்பர்.. இரா.இரஞ்சித்

ஆ.ஞானசேகரன்

சிங்கப்பூர்ப் தமிழ்ப் பதிவர்களுக்கு சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

ஆ.ஞானசேகரன்

அடுத்த பிரிவு வெற்றியாளர்களை அவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம்......

Sangkavi

வாழ்த்துகள் இரஞ்சித்....

Anonymous

வாழ்த்துகள் இரஞ்சித்!

ஜோ/Joe

வாழ்த்துகள்!

கையேடு

நெகிழ்ச்சியாக உள்ளது..
போட்டியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

நன்றி..

குசும்பன்

வாழ்த்துக்கள்! இரஞ்சித்!

கையேடு

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

போட்டிக்கு வந்த மற்ற அறிவியல் கட்டுரைகள் பற்றியும் பின்னர் வெளியிடுவீர்கள்னு நம்புறேன்..

ஜெகதீசன்

கையேடு,
அனைத்துக் கட்டுரைகளுக்குமான சுட்டி தமிழ்வெளி முகப்பில் இருக்கிறது..
நன்றி.

ஜெகதீசன்

அறிவியல் பிரிவு கட்டுரைகள்:
http://www.tamilveli.com/mk2009/?cat=4

henry J

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

cheena (சீனா)

வாழ்த்துகள் இரஞ்சித்

அன்புடன் அருணா

அனைவருக்கும் பூங்கொத்து!

இய‌ற்கை

வாழ்த்துகள்

Mukilarasi

மணற்கேணி-2009 போட்டியில் வெற்றிப் பெற்ற மூன்று வெற்றியாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!!

-முகிலரசி&தமிழரசன்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP