"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

வராது ஆனால் வரும் !

மணற்கேணி முடிவுகள் வருமா ? வராதா ? போட்டி நடக்கிறதா ? இல்லையா ? என்று தத்தமுக்குள் பதிவர்கள் பந்தயம் கட்டிய தாக அறிந்தோம், இன்னும் சிலர் மணற்கேணி 2009 என்கிற தலைப்பையே கூட மறந்திருப்பார்கள். பதிவர்கள் அனைவரிடத்திலும் இதன் காலம் தாழ்த்துதல் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் தாழ்ந்தற்கு சில காரணங்கள் உண்டு, குறிப்பாக சிறப்பான நடுவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் ஒப்புதல் பெறவும் காலம் நீண்டது.

மணற்கேணி போட்டிக்கு 50 கட்டுரைகள் வரையில் வந்தது. 90 விழுக்காடு கருத்து செறிவுடன் எதிர்பார்த்ததை விட சிறப்பான உழைப்பை எழுத்தில் காட்டி இருந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குழு மின் அஞ்சலுக்கு வந்த மின் அஞ்சல்களுக்கு, பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் கூற முடியவில்லை, அந்த மின் அஞ்சல்களை நாள் தோறும் தொடர்பில் இருக்கும் மற்ற மின் அஞ்சல்களுடன் இணைத்திருக்காததால் உடனடியாக மின் அஞ்சல்களை வாசிக்க முடியாமல் போய் விட்டது. வருந்துகிறோம்.

மணற்கேணி போட்டி குறித்து கேள்வி எழுப்பிய பின்னூட்டங்கள் தானாகவே வெளியாகி இருந்ததால் கேள்விகளை உடனுக்குடன் படிப்பதற்கு வாய்பில்லாமல் போய் விட்டிருந்தது. மட்டுறுத்தல் வைத்திருந்தால் வெளி இடும் போதே அதற்கான பதிலும் சொல்லி இருக்க முடியும். இந்த போட்டியை நடத்தும் அனைவருமே பகுதி நேரமாக செய்வதாலும், முதல் முறையாக இவ்வாறான போட்டி நடத்துவதாலும் போதிய துய்ப்புகளை இதில் தான் கற்றுக் கொள்கிறோம். அடுத்து நடத்தும் போட்டிகளில் இந்த குறைகளை களைந்துவிட்டு சிறப்பாக செயல்படுவோம் என்கிற உறுதி கூறுகிறோம்.

போட்டி முடிவுகள்:

அரசியல், அறிவியல் மற்றும் இலக்கியம் இவற்றில் அறிவியல் பிரிவு நடுவர்களால் அறிவியல் பிரிவுக்கு வந்த கட்டுரைகளில் பரிசு பெரும் கட்டுரை முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் போட்டியில் வெற்றியாளர் பற்றிய முடிவு வரும் புதன் கிழமை 10/பி/2010 (தேதி குறிப்பிட்டாகவிட்டது சத்தியமாக சொல்லிவிடுவோம்)
அறிவிக்கப்படும்

இலக்கியப் போட்டியின் முடிவு வரும் 12/பிப்/2010 அன்று அறிவிக்கப்படும்

அரசியல் பிரிவு பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.

போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு

2 பின்னூட்டங்கள்:

அப்பாவி முரு

//போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு//

பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் பரிசு உண்டு தானே?

என் வீட்டு அலமாரியில் இடத்தை ஒதுக்கி வைக்கிறேன்...

அத்திவெட்டி ஜோதிபாரதி

ம்ம்ம்!

பராக்! பராக்!!

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP