ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)
சிங்கப்பூர் வந்து சென்றவர்களுக்கு பசுமைமாறா நினைவுகளாக இருப்பது பல இருந்தாலும். என்றுமே அவர்களின் நினைவிக்குள் வருவது சுற்றியுள்ள பசுமைகள்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், பச்சை பாய் விரித்தது போன்ற புள்வெளிகளும். இந்த பசுமைக்கு காரணங்கள் இங்குள்ள இயற்கை சூழல்கள் ஒரு புறமிருக்க அரசும் அதன் கடமையை செய்கின்றது. இங்குள்ள பூக்களை பறிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல பராமிப்பின்றி வளரும் புல் புதர்களுக்கும் அனுமதியும் இல்லை. அப்படி வளரும் இடத்தின் நிர்வாகதிற்கு அபராதம் (தண்டம்) வசூலிக்கப்படும். சிங்கப்பூர் ஏரிக்கரை (Lake side) என்ற இடத்தின் சுற்றியுள்ள இடங்களை சுட்டுதள்ளிய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்......
மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.
அட ஆமாங்க ...........
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........
மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்
போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி
மணற்கேணி குழுவின் வலைப்பூ
அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்
அன்புடன் (சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)
ஆ.ஞானசேகரன்.
எழுதுங்கள்! வெல்லுங்கள்!......
6 பின்னூட்டங்கள்:
வணக்கம்
chinese garden super
ஏரிக்கரைப் பூங்காத்தேஏஏஏ.. வழக்கம் போல உங்கள் படங்கள் வெகு சிறப்பு. ரசித்தேன்.
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
chinese garden super//
மிக்க நன்றி ரமேஷ்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
//முகவை மைந்தன் said...
ஏரிக்கரைப் பூங்காத்தேஏஏஏ.. வழக்கம் போல உங்கள் படங்கள் வெகு சிறப்பு. ரசித்தேன்.//
ம்ம்ம்ம் வணக்கம் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
Post a Comment