"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி வெற்றியாளர்கள் சிங்கை வருகை மற்றும் இன்றைய நிகழ்ச்சிகள்


சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர். அதில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் இன்று காலை சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் வந்திறங்கினர், அவர்களை சிங்கை வலைப்பதிவர்கள் வரவேற்றனர்.

இன்று (சனிக்கிழமை மே 22 அன்று மாலை 5மணி அளவில் வாசகர் வட்டத்தில் சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் வெற்றியாளர் கட்டுரைகளின் மீதான திறனாய்வு கலந்துரையாடல் நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் உள்ள பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம் : தக்காளி அறை(Tomato Room) அங் மோக்கியா நூலகம்
நேரம் : மாலை 5:00 மணி
நாள் : சனிக்கிழமை, மே 22 - 2010


அரசியல் / சமூகம் பிரிவில் திரு.தருமி அவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் கட்டுரை முதலிடம் பிடித்தது

தமிழ் அறிவியில் பிரிவில் திரு.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம் அவர்களும்

தமிழ் இலக்கியம் பிரிவில் திரு.பிரபாகர் அவர்களின் தமிழர் இசை தொடர்பான கட்டுரையும் வெற்றிபெற்றனர்

மணற்கேணி 2009 போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

4 பின்னூட்டங்கள்:

CINEMA GALLARY

ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html

நட்புடன் ஜமால்

அனைவருக்கும் வாழ்த்துகள்

கொல்லான்

எப்படியோ, எனக்கு மட்டும் சொல்லாம நடத்திட்டீங்க.
சரி சரி....
வாழ்த்துக்கள்.

உஜிலாதேவி

வாழ்த்துக்கள்.

http://ujiladevi.blogspot.com/

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP