மணற்கேணி நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா
சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் நடைபெறுகின்றது. மாலை 7.00 மணியிலிருந்து 9மணி வரை நடைபெறுகின்றது.
சிங்கப்பூர் வலைப்பதிவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு நூல் "மணற்கேணி" என்ற தலைப்பில் வெளியிடப்படுகின்றது.
வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் பெயரில் இன்று மணற்கேணி 2009 இல் சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன் பின் சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.
இன்றைய நிகழ்ச்சியில் திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றார்கள். மேலும் சிங்கப்பூர்வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
தொடர்புக்கு:
கோவி.கண்ணன் 98767586
குழலி 81165721
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.
1 பின்னூட்டங்கள்:
புத்தகத்தின் ஒரு காப்பியை அனுப்பி வைங்கண்ணே..!
Post a Comment