"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது (மறுபதிப்பு)

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா (மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

3 பின்னூட்டங்கள்:

HVL

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

ஆ.ஞானசேகரன்

//HVL said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!//

நன்றி HVL

palaniappan

அன்புள்ள நண்பர்களுக்கு

மணற்கேணி வலைப்பதிவுப் போட்டியில் கலந்து கொண்டமைக்காகத் தாங்கள் அனுப்பி வைத்த புத்தகப் பரிசில் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நல்ல அரிய புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து அனுப்பி வைத்துள்ளீர்கள்

மணற்கேணி நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளன்பு நன்றிகள்.

தமிழகத்துப் பெருமாள் நாமங்களுள் ஒன்று சொன்ன வ்ண்ணம் செய்த பெருமாள் என்பதாகும். இதே நாமம் சிங்கப்புர் வலையன்பர்களுக்கும் உரியதாகட்டும்.

நம் நட்பு தொடரட்டு்ம்.

மு. பழனியப்பன்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP