தமிழ்மணம் 2010 போட்டி வெற்றிக்கு- சில குறிப்புகள் !
என்னதான் வலைப்பூன்னு வலைபதிவைக் குறிப்பிட்டாலும் வெளம்பரம் இல்லை என்றால் காகிதப்பூ தான். தமிழ்மணம் விருதில் பலர் பதிவுகளை பரிந்துரைத்திருப்பீர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு 1500 பதிவர்களுக்கு மேல் பங்கு பெறும் நிகழ்வாக அமைந்திருக்கிறது தமிழ்மணம் 2010 போட்டி, குழுவாக இயங்கும் பதிவர்களுக்குள் அந்த குழுவின் தலைகளுக்கு எப்படியேனும் வாக்குகள் கிடைத்துவிடும், எந்தக் குழுவிலும் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் ஏனெனில் பதிவின் உள்ளடக்கத்தின் தரத்திற்குக் கிடைக்காத வாக்குகள் 'இவர்' எழுதி இருக்கிறார் என்பதற்காகக் கிடைப்பது உண்டு. இது சமுகக் குறைபாடு இல்லை, நடைமுறைதான். போட்டியில் கலந்து கொள்ளும் 1500 இடுகைகளையும் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு.
போட்டிகள் கலந்து கொள்வது வெற்றிப் படிகட்டில் ஏறுவதன் முயற்சி, கலந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கை நழுவி விடும், பரிசு சீட்டு வாங்கியவரில் யாரோ ஒருவருக்கு முதல்பரிசு, பரிசு சீட்டே வாங்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது இல்லையா ? வெற்றியாளவர்கள் அனைவரும் முயற்சி செய்து அதை அடைந்தவர்கள், வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாது முயற்சி செய்வது வெற்றியின் படிநிலை.
நீங்கள் தமிழ்மணம் 2010 போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதைத் தெரியப்படுத்தி, உங்கள் போட்டி இடுகையை சுட்டிக்காட்டி வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம், பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கப் போகிறார்கள். விளம்பரம் இல்லாமல் விற்பனைகள் இல்லை. இது எந்த ஒரு போட்டிக் களத்திற்கும் பொருந்தும்.
முதல்படியாக தமிழ்மணம் 2010 போட்டில் கலந்து கொண்டவர்கள், அடுத்தபடி ஏற வாக்களிக்கக் கேட்கலாமே.
*********
சிங்கைப் பதிவர்கள் / தமிழ்வெளி இணையதளம் சார்பாக நடத்தபடும் மணற்கேணி - 2010 தேதி நீட்டிக்கப்பட்டு வரும் டிசம்பர் 31 வரை கட்டுரைகள் பெறப்படுகின்றன. சென்ற ஆண்டு மூன்று பதிவர்களைத் தேர்ந்தெடுத்து சிங்கைக்கு அழைத்து சிறப்பு செய்தோம். இந்த ஆண்டு அப்படி வரப்போகிறவர்கள் நீங்களாகக் கூட இருக்கலாம். போட்டி முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. இதுவரை அறிந்திடாவிடில் போட்டிப் பற்றிய முழு விவரமும் இங்கே இருக்கிறது. கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.
அன்புடன்
மணற்கேணி - 2010
3 பின்னூட்டங்கள்:
/மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு./
இந்த நம்பிக்கையில்தான் கலந்துக்கிறது!!!
கண்ணன் அநியாயத்திற்கு ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கீங்க. செந்தில் தான் மார்க்கெட்டிங் என்ற கலை பற்றி அதிகமாக எழுதுகிறார் பேசுகிறார். ஆனால் உங்களின் புரிந்துணர்வு, என்னைப் போன்றவர்களுக்கு ........ ம்ம்ம்ம்.....
பேசமா என்னை உங்க சிஷ்யனா ஏத்துக்குவீயளா?
நித்யானந்தா கேட்ட தட்சணை மாதிரி எதுவும் ஏடாகூடாமா கேட்கக்கூடாது?
//கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.//
நாங்களும் வெற்றியாளர்களை தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளோம்....
உங்களின் இந்த பொன்னான பணி இனிதே நடைபெற வாழ்த்துக்களும் நன்றிகளும்...
Post a Comment