புதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்
இணையத்தில் நடத்தப்படும் மிகப்பெரியதொரு கருத்தாய்வு போட்டி இது... தமிழகத்தில் இதழ்களோ தொலைக்காட்சிகளோ கூட இப்படியானதொரு போட்டியும் அதற்கான பரிசாக மூவரை சிங்கப்பூர் அழைத்து செல்லுவதையும் செய்ததில்லை இதுவரை... முழுக்க முழுக்க சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் உழைப்பிலும் பொருளாலும் நடத்தப்படும் ஒரு முயற்சி இது...
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிடக்கோரி பல்வேறு அச்சு ஊடகங்களில் கேட்டிருந்தோம், இணையத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அப்படி என்னதான் ஒரு மாமியார் - மருமகள் பிரச்சினையோ தெரியவில்லை சென்ற ஆண்டு மணற்கேணி அறிவிப்பு எந்த அச்சு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை... மேலும் நெருங்கி கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறினார்கள், மணற்கேணி அமைப்பா புதுசா இருக்கே யாரு இவங்க, சொல்றதை செய்வாங்களா? ஒழுங்கா போட்டி நடத்தி சிங்கப்பூர் அழைத்து போவாங்களா என்பதில் ஆரம்பித்து நிறைய பதில்கள் கிடைத்தன... சில பத்திரிக்கைகளில் எடிட்டர் மேசை வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டது, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அச்சு ஊடகத்தில் மணற்கேணி போட்டி பற்றிய அறிவிப்பை மேற்கொண்ட எமது பத்திரிக்கை நண்பர்கள்,பதிவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்...
இந்த ஆண்டு முதன்முறையாக எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருக்கும் "புதிய தலைமுறை" பத்திரிக்கையில் மணற்கேணி போட்டி அறிவிப்பு வெளியிடக்கோரியிருந்தோம், விரைவாக அடுத்த இதழிலேயே "புதிய தலைமுறை" இதழில் மணற்கேணி போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவினார்கள். ஆசிரியர் மாலனுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் நிருபர் யுவகிருஷ்ணாவுக்கும் மணற்கேணி அமைப்பின் சார்பாகவும் தமிழ்வெளி நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...
மறந்துடாதிங்க மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31,2010
1 பின்னூட்டங்கள்:
good news . seekiram mudivukkaaka waiting.
Post a Comment