"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....


உலக நாடுகளிலேயே எந்த நேரமும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் என்றால் அது சிங்கப்பூர் என்றே சொல்லலாம். தற்போழுது நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஏதோ திடீர் என குதித்துவிட்ட நாடு இல்லை. சிங்கப்பூரும் மற்ற நாடுகளை போல பல படிகளை கடந்துதான் இந்த நிலையை தொட்டுயுள்ளது. இந்த புதிய சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை பெரும் பகுதியை முன்னால் பிரதமரும் இன்று மூத்த அமைச்சருமாய் உள்ள திரு. லீ குவான் யூ வை சாரும்.

சிங்கப்பூர் ஒரு தீவு நகரம். ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஒரு மீன் பிடி நகரமாக இருந்தது. சிங்கப்பூர் நதியை ஒட்டி இருக்கும் இடம் மீன் பிடிப்பதற்கு ஏற்றாற்போல் அழகாகவும், அற்புதமாகவும் அமைந்து இருக்கிறது. ஆனால் இன்று ஒரு மிக பெரிய வர்த்தக மையமாக திகழ பிரித்தானியா காலனித்துவமும் ஒரு காரணம். சிங்கப்பூர் ஒரு சிறந்த வர்த்தக மையமாக திகழ்வதற்கு 1889 ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தை (British East India Company) வழிநடத்திய சார் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) ஒரு வர்த்தக மையத்தை சிங்கப்பூரில் நிறுவினார். இதுதான் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது என்றே சொல்லலாம்.

1942 க்கு முன் சிங்கப்பூர் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதற்கு பின் ஏற்பட்ட ஜப்பானியரின் படையெடுப்பால் சிங்கப்பூர் ஜப்பானியரின் வசம் வந்தது. சிங்கப்பூர் பிரித்தானியாஅரசாட்சி அடிபடையாக கொண்டது. அதனால் அதனை அனைவரும் ஆசியாவின் கிப்ரல்டார் (Gibraltar of the East) என்றே அழைத்தனர். அதிர்ச்சி தரும் விதமாக ஜப்பானியர்கள் தங்களின் காலனித்துவ மற்றும் பேரரசு சாம்ராஜியத்தை எட்டு, ஒன்பது நாட்களிலேயே செயல்படுத்தினர். அதாவது, 1942 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ம தேதி முதல் 1942 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ம் நாள் வரை ஆகும். சிங்கப்பூர் யுத்தத்தில் கிழகத்திய நிறுவன இராணுவம் சரணடைந்தது மிக பெரிய தோல்வி என கருதப்பட்டது. பிரித்தானியா வரலாற்றில் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் தொல்வியுற்றதே மிகபெரிய இழப்பு என சர்ச்சில் (Churchill ) கூறினார். அதற்கு பின் சிங்கப்பூர் ஜப்பானியரின் வசம் இருந்தது..

இன்று நாம் பார்க்கும் சிங்கப்பூர் குடியரசு 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இறையான்மையுள்ள நாடானது. இந்த நாளைதான் சிங்கப்பூர் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். சென்ற 9ம் தேதியில் சிங்கப்பூர் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடியது நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.


1965 ஆகஸ்ட் 9 ம் நாளுக்கு பிறகு உள்நாட்டு குழப்பகளை எல்லாம் சமாளித்து ஒரு புதிய குடியரசாக உருவாக்கியவர் சிங்கப்பூரின் தந்தை என புகழப்படும் திரு. லீ குவான் யூ . இவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த மந்திரம்தான் இன்றைய அளவில் மிக சிறப்பாகவும் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. நாட்டு மக்களிடம் திரு. லீ குவான் யூ " நீங்கள் மற்றவர்களிடம் கனிவாக பழகுங்கள் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் வார்த்தைகளில் நன்றி (Thank you), தயவுசெய்து (Please). மன்னிக்கவும் (Excuse me) சொல்லுங்கள். அதை இன்றுவரை காரணம் கேட்காமல் சிங்கபூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நல்ல பண்புதான் இன்றைய சிங்கப்பூரை உலகில் சிறந்த வர்த்தக தளமாக மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.

ஒரு முறை நான் நண்பர்களுடன் பெங்களூர்க்கு சென்றேன். அங்கு சந்தையில் தோல்பை வாங்க வேண்டும் என்று என் நண்பன் கடைக்கு சென்றான். நானும் கூடவே சென்றேன். "தோல்பை என்ன விலை?" என்று என் நண்பன் கடைக்காரனிடம் கேட்டான். விலையை சொன்னதும் தனது தகுதிக்கு விலை அதிகம் என்று நினைத்து விளகினான். ஆனால் கடைக்காரன் விடுவதாய் இல்லை " என்ன விலைக்கு நீ எடுத்துக்கொள்வாய் சொல்லுங்கள்? " என்று வீம்பு பண்ணினான். வேறு வழியின்றி அந்த தோல்பையை வாங்க வேண்டிதாயிற்று. இந்த நிலைமைதான் அனேக இந்திய நகரங்களில் என்று நினைக்கின்றேன். மக்கள் தொகை அதிகமும் மக்களின் தேவைகள் அதிகமும் இருப்பதால்தான் இவர்களின் வியாபாரம் நடந்துக்கொண்டுள்ளது. இவர்களின் நேர்மைக்காகவோ பண்புக்காகவோ இல்லை. அந்த நிலை இன்று மாறி வருகின்றது என்றாலும் இன்னும் முழுவதும் மாறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் சொல்வதற்கு நிறையவே இருக்கு.

இன்றைக்கும் சிங்கப்பூருக்கு வந்து எல்லா நாட்டவரும் வர்த்தகம் செய்கின்றார்கள் என்றால் இவர்களின் பண்பும் ஒரு காரணம். எந்த ஒரு சிறிய வியபாரமாகட்டும் நன்றி சொல்ல தவறுவதில்லை. அதே போல் விலையில் ஏமாற்றம் என்பது இல்லைவே இல்லை. சிறிய கடையாக இருந்தாலும் விலை வில்லை இருக்கும். ஒரு முறை நான் தங்க செயின் வாங்க சென்றேன். கடையில் உள்ள சீன பெண் என் கழுத்தில் செயினை அவளே போட்டுவிட்டு "உங்களுக்கு அழகாக இருக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள்". என் மனைவி அதை பார்த்துவிட்டு அதிர்ந்தே போய்விட்டாள். அந்த அளவிற்கு வியாபார தந்திரம் என்று சொல்வதைவிட வியாபார கவர்ச்சி என்றே சொல்லலாம். நன்றி சொல்லாத வியாபாரத்தை நான் பார்த்ததே இல்லை.

இந்த பண்புகள் இன்னும் நம் நாடுகளில் வரவில்லை என்பது ஒரு குறைதான் என்றாலும் இதுபோன்ற பழக்கங்களை நாம் இங்கிருந்து எடுத்து செல்வதில் குற்றமில்லையே!.

இப்படிப்பட்ட சிங்கப்பூருக்கு வந்துசெல்ல ஒரு நல்ல வாய்ப்பு மூவருக்கு மணற்கேணி 2009 தருகின்றது. அதைவிட இணைய எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கிகாரம் இருக்கு என்று நிறுபிக்கும் ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றது. நீங்கள் அதற்காக செய்யவேண்டியது ஒரு சிறந்த கருத்தாழமிக்க கட்டுரைகளே!
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

இந்த மணற்கேணி 2009 நண்பர்களின் வேண்டுகோள்கிணங்க கடைசி தேதியும் ஒத்திவைத்துள்ளது. மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பை நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாகவும், தமிழ்வெளி சார்பாகவும் அன்புடன் வேண்டுகின்றேன்...


சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்.
Manarkeni 2009

சிங்கப்பூர் வரலாற்று புகைப்படங்கள் சில கீழேயுள்ளது..










32 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன்

மணற்கேணி 2009.. உங்களை அன்புடன் சிங்கபூர் அழைக்கின்றது

சப்ராஸ் அபூ பக்கர்

சிங்கப்பூர் சுற்றுலா ஜாலியோ ஜாலிங்க.....

படங்கள் அருமையோ அருமைங்க......

ஆ.ஞானசேகரன்

// சப்ராஸ் அபூ பக்கர் said...

சிங்கப்பூர் சுற்றுலா ஜாலியோ ஜாலிங்க.....

படங்கள் அருமையோ அருமைங்க......//

மிக்க நன்றி நண்பா.....

சி.கருணாகரசு

உங்களின் கட்டுரை அருமை.

சிங்கப்பூர்

நத்தைக்கூட்டில்
நான்கண்ட சமுத்திரம்.

இது சிங்கப்பூரைப் பற்றி நான் முன்பே எழுதிய குறுங்கவிதை.

ஆ.ஞானசேகரன்

//சி.கருணாகரசு

உங்களின் கட்டுரை அருமை.

சிங்கப்பூர்

நத்தைக்கூட்டில்
நான்கண்ட சமுத்திரம்.

இது சிங்கப்பூரைப் பற்றி நான் முன்பே எழுதிய குறுங்கவிதை.//

வாங்க நண்பா...
உங்களின் குறுங்கவிதையும் மிக அருமையா இருக்கு..

ஹேமா

நான் பார்த்த இடங்களைக் காண ஆசையா இருக்கு.

முனைவர் கல்பனாசேக்கிழார்

மிக்க மகிழ்ச்சி சேகரன்.........

ஆ.ஞானசேகரன்

// ஹேமா said...

நான் பார்த்த இடங்களைக் காண ஆசையா இருக்கு//

வாருங்கள் ஹேமா..
மணற்கேணிக்கு ஒரு கட்டுரை போடுங்களேன்....

ஆ.ஞானசேகரன்

// முனைவர் சே.கல்பனா said...

மிக்க மகிழ்ச்சி சேகரன்.......//

மிக்க நன்றிங்க
உங்களிடமிருந்து இரண்டு தமிழாய்வு கட்டுரைகளை எதிர்ப்பார்க்கின்றேன்..
நன்றிங்க

கோவி.கண்ணன்

படங்களும், பதிவும் அருமையாக இருக்கிறது.

அப்பாவி முரு

சிங்கையைப் பற்றி அதிகப்படியான, நல்ல தகவகளை தொகுத்துக் கொடுத்துள்ளீர்.

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன்

// கோவி.கண்ணன் said...

படங்களும், பதிவும் அருமையாக இருக்கிறது.//

வணக்கம் கண்ணன் மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன்

// அப்பாவி முரு said...

சிங்கையைப் பற்றி அதிகப்படியான, நல்ல தகவகளை தொகுத்துக் கொடுத்துள்ளீர்.

வாழ்த்துகள்//

வாங்க நண்பரே,...
உங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றிபா

நட்புடன் ஜமால்

தகவல்கள் எனக்கு புதிது நண்பரே

மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன்

// நட்புடன் ஜமால் said...

தகவல்கள் எனக்கு புதிது நண்பரே

மிக்க நன்றி.//
வணக்கம் நண்பா,...
உங்களின் வருகைக்கு மிக்க நன்றிபா

Raju

ஃபோட்டோஸ் அருமை.

ஆ.ஞானசேகரன்

//டக்ளஸ்... said...

ஃபோட்டோஸ் அருமை.//

வணக்கம் நண்பா,..
வருகைக்கு மிக்க நன்றிபா

நையாண்டி நைனா

தயவு செய்து இது போன்ற தகவல்களை இன்னும் அதிகமாக தாருங்கள்.

சிங்கபூரை பற்றி சொன்னதற்கு நன்றி.

தாமதமாக வந்ததிற்கு மன்னியுங்கள்.

ஆ.ஞானசேகரன்

//நையாண்டி நைனா said...

தயவு செய்து இது போன்ற தகவல்களை இன்னும் அதிகமாக தாருங்கள்.

சிங்கபூரை பற்றி சொன்னதற்கு நன்றி.

தாமதமாக வந்ததிற்கு மன்னியுங்கள்.//

வாங்க நைனா,
உங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க..
உங்களின் ஆதரவை மணற்கேணிக்கு தாருங்கள்...

S.A. நவாஸுதீன்

சிங்கபூரைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா.

(சிங்கப்பூர் என்பது சரியா, சிங்கபூர் என்பது சரியா)

ஆ.ஞானசேகரன்

// S.A. நவாஸுதீன் said...

சிங்கபூரைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா.

(சிங்கப்பூர் என்பது சரியா, சிங்கபூர் என்பது சரியா)//

சிங்கப்பூர் என்பதுதான் சரி.. ஆங்கிலத்தில் "ப்" ன் ஒலி வருவதில்லை ஆனால் தமிழில் எழுதுபொழுது சிங்கப்பூர் என்றுதான் எழுத வேண்டும். தவற்றை சரி படுத்திவிட்டேன் நண்பா

மிக்க நன்றிபா

Muniappan Pakkangal

Nice info on singapore & three words Gnanaseharan,people forget these words and their meaning here & so we are not improving.

ஆ.ஞானசேகரன்

//Muniappan Pakkangal said...
Nice info on singapore & three words Gnanaseharan,people forget these words and their meaning here & so we are not improving.//


வணக்கம் சார்..
உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க‌

பா.ராஜாராம்

நல்ல விவரமான பகிர்வு சேகர்.வெற்றியாளர்களுக்கு முன் வாழ்த்தும்.

Anonymous

Can you show me a picture where thamizh has been written on public place by Government

ஆ.ஞானசேகரன்

// பா.ராஜாராம் said...

நல்ல விவரமான பகிர்வு சேகர்.வெற்றியாளர்களுக்கு முன் வாழ்த்தும்.//
மிக்க நன்றி நண்பரே,..
உங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

ஆ.ஞானசேகரன்

// Anonymous said...

Can you show me a picture where thamizh has been written on public place by Government//

வணக்கம் நண்பரே...
இந்த பதிவுக்கு இது தேவையான கேள்வியா என்று தெரியவில்லை... இருப்பினும் சிங்கப்பூரில் பொது இடங்களில் மலாய், சீனமொழி(மேன்ரின்), தமிழும் இருக்கும். அதன் புகைப்படம் தற்பொழுது என் கைவசம் இல்லை. பின்னர் சேர்க்கின்றேன். சிங்கப்பூர் நாணயம் மற்றும் பணத்தில் தமிழ் பொரிக்கப்பட்டு இருக்கும் அதை பின் உள்ள சுட்டியில் பார்க்கவும்..
http://www.sundarraj.com/2008/03/blog-post_28.html

உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா

கிடுகுவேலி

நிச்சயமாக ஞானசேகரன்....அந்த நன்றி சொல்லும் பண்பும்...இன்றைய தினம் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தும் இன்முகமும் அவர்களின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருக்க வேண்டும். சிறிய விடயம். ஆனாலும் நுணுக்கமாக கண்டு இங்கே தந்திருக்கிறீர்கள்....!நன்றிகள் வாழ்த்துக்கள்..!!

ஆ.ஞானசேகரன்

//கதியால்

நிச்சயமாக ஞானசேகரன்....அந்த நன்றி சொல்லும் பண்பும்...இன்றைய தினம் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தும் இன்முகமும் அவர்களின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருக்க வேண்டும். சிறிய விடயம். ஆனாலும் நுணுக்கமாக கண்டு இங்கே தந்திருக்கிறீர்கள்....!நன்றிகள் வாழ்த்துக்கள்..!!//

வணக்கம் கதியால்,..
உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க... அதே போல் உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....

nrispot

In the movie pirates of the caribbean...they show a olden day singapore(set) but looking at that i realised that Singapore has gone through a amazing change in a quick amount of time....and your post confirms that

அத்திவெட்டி ஜோதிபாரதி

நல்ல பல தகவல்கள் பொதிந்த பதிவு!

தொடர்ந்து கலக்குஙள்!

பதிவர் நண்பர்களே, கட்டுரை எழுதி அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளதால் தொடர்ந்து கட்டுட்ரைகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

ஆ.ஞானசேகரன்

//அத்திவெட்டி ஜோதிபாரதி

நல்ல பல தகவல்கள் பொதிந்த பதிவு!

தொடர்ந்து கலக்குஙள்!

பதிவர் நண்பர்களே, கட்டுரை எழுதி அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளதால் தொடர்ந்து கட்டுட்ரைகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!//

வணக்கம் ஜோதிபாரதி மிக்க நன்றிங்க

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP