"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கை தமிழ் பதிவர்கள் – இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம்.

சிங்கைவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு இன்றைய நாள் மிக இனிய நாளாக அமைந்தது என்றால் மிகையாகாது. சிங்கைப் பதிவர்கள் வாராந்திர, மாதாந்திர கூட்டங்களைக் கூட்டி, பல முக்கிய முடிவுகளை எடுத்து, மணற்கேணி, சிங்கை நாதன் அண்ணுக்கான உதவி போன்றவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்ததே…

அந்த வரிசையில் சிங்கையில் வெகுசிறப்புடன் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய ஆரவலர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நமது பதிவுலகத்தினை அறிமுகம் செய்து அவர்கள் அனைவரையும் பதிவர்களாக்கி, தமிழ் வலையுலகினை மென்மேலும் சீர்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்றைய (23 ஆகஸ்ட்) கூட்டத்தினை ஏற்பாடு செய்து, பதிவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பாலமாக இருந்தார் பதிவர் பாண்டித்துரை அவர்கள்.


மிகச்சரியாக மாலை மணி 4.30க்கு அங் மோ கியோ வட்டார நூலகத்தில் உள்ள தக்காளி அறை (TOMOTTO ROOM)-யில் கூட்டம் களைகட்ட ஆரம்பித்தது. கூடி இருந்த மக்களுக்கு முதலில் சுவையான சூடான வடை மற்றும் தேநீர் பரிமாறப்பட்டு அனைவரையும் இருக்கையில் அமரவைத்து கூட்டம் ஆரம்பமானது.

முதலில், கூட்டத்திற்கு இடஉதவி கொடுத்ததோடு மற்றுமில்லாமல் கூட்டம் முடியும் வரை உடனிருந்து உதவிகள் புரிந்த, இணை நூகலர் நிர்மலா அவர்களுக்கு நன்றி தெரிவித்தபின், பதிவர்களின் அறிமுகம் ஆரம்பமானது.
குழலி, கோவிகண்ணன், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, முகவை ராம், ஜெகதீசன், பித்தன் ஜி, ராம் சி.எம், ஞானசேகரன் தங்களையும், தங்களின் பதிவுகளையும் தாங்கள் விரும்பி எழுதும் தலைப்புகளைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவர்கள் இருக்கும் தமிழ் பதிவுலகத்தையும், பத்திற்கும் மேற்பட்ட திரட்டிகளையும் தமிழ் எழுத்து மென்பொருள்களையும், புதிதாக Blogger, Wordpress போன்றவற்றில் எவ்வாறு தளத்தினை ஆரம்பிப்பது என்பது போன்ற தொழில்நுட்பங்கள் மிக எளிதாக செய்முறையாக குழலி, கோவிகண்ணன் அவர்களால் விளக்கப்பட்டது.

இலக்கிய ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அனைத்து பதிவர்களாலும் தங்களின் அனுபங்களையே விளக்கமாக கொடுத்ததும் அனைவரின் முகத்திலும் இலக்கிய ஆர்வத்திற்கும் மேல் இணைய ஆர்வம் முளை விட்டதை கண்கூடாக் கண்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்களிலேயே சிங்கையிலிருந்து இன்னும் பல தரமான பதிவர்கள் நம் உலகினில் நுழையப்போவது உறுதி.

டிஸ்கி 1:
சிங்கைநாதனின் இதயநோயினைப் பற்றியும், அவரின் தற்போதைய உடல்நலத்தினைப் பற்றியும், அவருக்காக பதிவுலகம் இதுவரை சேர்த்துள்ள தொகையினைப் பற்றியும் முழு விளக்கத்தையும் சகபதிவர் ஜோசப் பால்ராஜ் மிகத்தெளிவாகக் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாது, தயக்கமேதும் இல்லாமல் நம் சிங்கைவாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடமும் உதவியினை கேட்டு, பொருளையும் ஆலோசனைகளையும் பெற்று வெற்றியோடு திரும்பியது நம் பதிவர் குழு.

டிஸ்கி 2:
பதிவுலகை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கிய பதிவர்களுக்கு அன்பளிப்பாய் பொக்கிசங்கள், இலக்கிய ஆர்வலர்களால் வழங்கப்பட்டது ...


நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திரு பாண்டித்துரை மற்றும் சிங்கை வாசகர் வட்டக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.

13 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி

அருமை!

அனைவருக்கும் பாராட்டுகள்!

ஜெகதீசன்

நேற்றய மாலை இனியதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது...

பீர் | Peer

சிங்கை சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்...

நிழற்படங்களுக்கு பெயரிட்டிருந்தால் நன்றாக இருக்கும் ;)

அண்ணன் கோ மற்றும் பெரிய அண்ணன் முரு தவிர மற்றவர்களைத் தெரியவில்லை :(

கோவி.கண்ணன்

மிகவும் பயனான மாலைப் பொழுது,

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வாசகர் வட்டக் குழுவினர்களுக்கு நன்றிகள்.

அவர்கள் கொடுத்த பரிசுகள் மற்றும் தேனீர் சிற்றுண்டிகளும் நினைவு கூறத்தக்கவை.

நிகழ்வை ஒருங்கிணைத்து எழுதிய அப்பாவி முருவுக்கு நன்றி !

ஆ.ஞானசேகரன்

அருமை...
நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்தது நல்ல மகிழ்வுதான்

ஸ்வாமி ஓம்கார்

நல்ல பணி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

அறிவிலி

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

மயில்வாகனம் செந்தூரன்.

உவ்விடம் சந்திப்பு நடந்த அன்றைய தினம் காலை இலங்கையிலும் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது...

சிங்கை நாதன் அவர்களின் உடல் நிலை தொடர்பாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது... கிட்டத்தட்ட எண்பதுக்கும் அதிகமான பதிவர்கள் இலங்கையின் சகல பாகங்களிலுமிருந்து வருகை தந்திருந்தார்கள்...

மேலும் சிங்கை நாதன் அவர்களின் உடல்நிலை சீராக இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

///மிகச்சரியாக மாலை மணி 4.30க்கு///
பொதுவாக தமிழர்களிடத்தில் நேர முகாமைத்துவம் இல்லை என்ற கருத்தை இந்த நிகழ்வு உடைத்திருக்கின்றது....

அத்துடன் ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்றைய தினம் Blogger ஆரம்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது...

ஆரோக்கியமான சந்திப்புக்களால் ஒரு சாதனைச் சரித்திரம் படைப்போம்... தொடரட்டும்... இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்....

’டொன்’ லீ

பாராட்டுக்கள்...

க. தங்கமணி பிரபு

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

பழமைபேசி

மகிழ்ச்சியும் பாராட்டுகளும்!

குணா

சிங்கைபூரில் தமிழ் பூவலை பின்னி தரணியிலே தமி்ழ் வளர்க்கும் சிந்தனை சிப்பிகளுக்கு சிரந்தாழ்ந்தி வணக்கம் செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்... பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.. குணா

Anonymous

சிங்கைபூரில் தமிழ் பூவலை பின்னி தரணியிலே தமி்ழ் வளர்க்கும் சிந்தனை சிப்பிகளுக்கு சிரந்தாழ்ந்தி வணக்கம் செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்... பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.. குணா

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP