சிங்கை வாசகர் வட்டம் மற்றும் பதிவர்கள் ஒன்று கூடல் அறிவிப்பு !
சிங்கை நூலக வாசகர் வட்டம் (கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள்) மற்றும் சிங்கைப் பதிவர்கள் ஒன்று கூடல் இந்த ஞாயிற்றுக் கிழமை (23/ஆகஸ்ட்/2009) நடக்க இருக்கிறது,
நிகழ்சிக்கு தலைமை ஏற்பு கவிஞர் பாண்டித்துரை.
நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கை வாசகர் வட்டம்.
நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள்:
இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
நாள்: 23.08.2009 (ஞாயிறு)
நேரம்: மாலை 4.30மணிக்கு
இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம்
தக்காளி அறை (இரண்டாவது தளம்)
இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது.
இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை…..
சிங்கைவாழ் பதிவர்களான
கோவி.கண்ணன் அவர்கள்
குழலி அவர்கள்
அப்பாவி முருகேசன் அவர்கள்
முகவை ராம் அவர்கள்
ஜோசப் பால்ராஜ் அவர்கள்
பதிவர் உலகம், வலைப்பதிவுகள், திரட்டிகள், பதிவர் வட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர்.
அனுமதி இலவசம், பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன் அழைப்பது,
சிங்கை நூலக வாசகர் வட்டம் நண்பர்கள் மற்றும்
சிங்கைப் பதிவர்கள்
12 பின்னூட்டங்கள்:
வாழ்த்துகள் கோவியாரே,
பணி நிமித்தம் அன்று கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்!
இந்தியர்களுக்கான சிறப்பு நூலகம் இது. வாசகர் வட்ட கூட்டங்கள் திங்கள் தோறும் ஒரு ஞாயிறன்று நடைபெறுகிறது. நூலக நிர்வாகமும் போண்டா, வடை தேநீர் தந்து ஊக்குவிக்கிறார்கள் ;-) நன்றாக இருக்கும் என்பது என் பரிந்துரை.
சொந்த அலுவல் காரணமாக சென்னைக்கு வந்துவிட்டதால் அருமையானதொரு வாய்ப்பை இழக்கிறேன்.
சந்திப்பு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
//நன்றாக இருக்கும் என்பது என் பரிந்துரை.//
போண்டா வடை தேநீர் ?
:)
// திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
சொந்த அலுவல் காரணமாக சென்னைக்கு வந்துவிட்டதால் அருமையானதொரு வாய்ப்பை இழக்கிறேன்.
சந்திப்பு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி ஐயா !
போண்டா-டீ மட்டும் கிடைக்காது என்பது எனது நம்பிக்கை!
போண்டா-குளம்பி கிடைத்தால் குடித்து விட்டு வரவும்.
வடையும் கிடைக்கலாம்.
///நிகழ்சிக்கு தலைமை ஏற்பு கவிஞர் பாண்டித்துரை. //
ஆகா கோவியார் என்ன இது சும்மா உல்ல்லாலி தானே
என்னுடைய பணி உங்களை எல்லாம் அங்கு ஒருங்கிணைத்ததே மற்றபடி வாசகர் வட்டத்திற்கு என்று தனிப்பட்ட எந்த தலைமையும் கிடையாது. திருமதி சித்ரா ரமேஸ் மற்றும் திருமதி.முனைவர் ஸ்ரீலெட்சுமி அவர்களின் மேற்பார்வையில் கடந்த ஒரு வருடமாக நடைபெறுகிறது.
குறிப்பு: கடந்த 20 ஆண்டுகளாக வாசகர் வட்டம் நடந்துவருகிறது.
(என்னுடைய எழுத்தின் மாற்றத்திற்கு பெரும் பங்கு வாசகர் வட்டத்திற்கு உண்டு)
பாண்டித்துரை
வாசகர் வட்டம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் பின் வரும் வலைதளத்தை படித்தறியவும்.
http://vasagarvattam.blogspot.com/
வாழ்த்துகள்... வழக்கம்போல நான் திங்கட்கிழமைதான் சிங்கை திரும்புகிறேன்.
செந்தில்நாதன் விரைவில் குணமடைய ஒரு பிரார்த்தனையும் வைத்துக்கொள்ளவும்.
//போண்டா, வடை தேநீர் தந்து ஊக்குவிக்கிறார்கள் ;-) //
ஒரு மணி நேரம் டிராவல் பண்ணி வரணும், வடை சுவையாக இருக்கும் என்று கேரண்டி கொடுத்தால் கண்டிப்பாக வருகிறேன்.
சைடு குறிப்பு : தேனிருக்கு பதிலா காபி வேண்டும். -:)
:-)) என்னால் கலந்து கொள்ள இயலாது..கல்விச்சுமை அதிகமாக உள்ளது...
வாழ்த்துக்கள்
Post a Comment