"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

கோடீஸ்வரனாகலாம் வாங்க!!!

சிங்கை பதிவர்களும், தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் பதிவர்களுக்கான கட்டுரைப் போட்டியினைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.

போட்டியில் வெல்லும் மூவரை, சென்னையிலிருந்து சிங்கைக்கு ஒரு வார காலம் சுற்றுப்பயணமாக அழைத்து வந்து சிறப்பிக்க இருக்கிறோம் (வடிவேல் பாணியில் சொன்னால், கருப்பா இருப்பவங்களை கூப்பிட்டு வந்து ஒரு வாரம் வச்சு அழகு பார்த்தல்).

இதில் விருந்தினர்களுக்கு சிங்கையின் செயற்கை அழகுகளைச் சுற்றிக்காட்டும் பணியினை சிங்கை பதிவர் அறிஞர் பெருமக்கள் ஏற்றுவிட்டார்கள்.

அப்பாவியானதால் எனக்கு எந்த பொறுப்பையும் சங்கம் கொடுக்கவில்லை. சங்கம் விலக்கினாலும், தனி ஒரு மனிதனாக, தமிழனால் சும்மா இருக்க முடியுமா? பொங்கி எழுகிறேன். தனிப் பொறுப்பை நானாவே எடுத்துக் கொள்றேன்.

அது, அது, கட்டுரைப் போட்டியில் வென்று வரும் மூவரையும், கோட்டீஸ்வரனாக்கும் பெரும் முயற்சியை நான் எடுத்துக் கொள்கிறேன். அதற்கு இந்த இடுகையே சாட்சி!!!

(அது எப்பிடின்னா மக்களே, இங்க சிங்கையில் Singapore Pools –ன்னு ஒரு லாட்டரி கடை இருக்கு. அங்க சிங்கப்பூரின் ஐம்பது காசுக்கு TOTO-ல 1ல இருந்து 45க்குள்ள ஆறு நம்பர் இருக்குற ஒரு வரிசை தருவாங்க.

ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் குலுக்கல் நடக்கும். நாம வாங்கி வச்சிருக்கும் ஆறு நம்பரும், குலுக்கலில் ஆறு நம்பரும் அப்படியே வந்தா, நாம கோடீஸ்வரன் தான். ஆமா, முத பரிசு எவ்வ்வ்வ்வ்ளோன்னு தெரியுமா?, S$650K.(நம்ம இந்திய ரூபாய் மதிப்புல கிட்டத்தட்ட ரெண்டு கோடி)

(இப்ப நான் என்ன பண்ணப் போறேன்னா! மூணு பேருக்கும் தனித்தனியா திங்களுக்கு ஒரு டிக்கெட்டும், வியாழனுக்கு ஒரு டிக்கெட்டும் வாங்கித்தரப் போறேன். முதப் பரிசு நமக்கு தான், நம்பிக்கை தானே வாழக்கை)

(இதுல எனக்கு என்ன லாபம்ன்னா, நான் என்னோட சொந்தக்காசுல ஐம்பது செண்ட்டுக்கு ஒரு டிக்கெட் வாங்கித்தரதால முதப் பரிசு கிடைக்கும் நம்ம விருந்தினர், முதப் பரிசுல பாதி, அட அதாங்க ஒரு கோடி ரூபாய் தராமலா போயிருவாங்க?, எனக்கு நம்பிக்கை இருக்கு)

அதனால், தமிழ் பதிவுல அறிஞர் பெருமக்களே கோடீஸ்வரனாகும் மிக மிக எளிய வழிமுறையை நான் சொல்லியதோடு மட்டுமில்லாது, அதன் முழுச் செலவுகளையும்!? நான் ஏற்றுவிட்டேன்.

என்னோடு இரண்டு கோடியை பங்கிட விரும்புவர்கள், செய்ய வேண்டியது என்ன வென்றால் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க... -ல் கலந்து வெல்ல வேண்டியது மட்டுமே!!!


கோடீஸ்வரனாக
நான் ரெடி – நீங்க ரெடியா!!!

13 பின்னூட்டங்கள்:

குசும்பன்

உங்க கூட பங்கா? அப்ப நான் முதலில் கேடிஸ்வரனாகனும்!

அறிவிலி

சூப்பரு... தெறம இருக்கறவங்களுக்கு அதிர்ஷ்டமும் இருக்கான்னு பாத்துருவோம்.

[பி]-[த்]-[த]-[ன்]

-:)

பீர் | Peer

சொந்த செலவில் சிங்கை வந்தாலும் வாங்கி தருவீங்களா, முரு?

அதே டீல் 50 -50.

அப்பாவி முரு

// குசும்பன் said...
உங்க கூட பங்கா? அப்ப நான் முதலில் கேடிஸ்வரனாகனும்!//

கேடிஸ்வரனா அப்பா நாங்க யாரு?

முதல்ல அதான் அப்புறம் தான் இது!!!

*******************************


// அறிவிலி said...
சூப்பரு... தெறம இருக்கறவங்களுக்கு அதிர்ஷ்டமும் இருக்கான்னு பாத்துருவோம்.//

நமக்கும் லாபம் இருக்குல்ல

******************************

[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)

:))))))

***********************************

பீர் | Peer said...
சொந்த செலவில் சிங்கை வந்தாலும் வாங்கி தருவீங்களா, முரு?

அதே டீல் 50 -50.

எண்ணங்ண்ணா சொந்த செலவுல சூன்யமா?

வச்சிடலாம்

:)))))

ஆ.ஞானசேகரன்

டீல் 50 -50.
supper

’டொன்’ லீ

lottery கிடைக்காட்டி உங்க காசில் பங்கு போடுவீங்களோ..? :-)

ஜெகதீசன்

:)

Joe

நான் ஏதோ, எப்படி கடினாமாக உழைத்து பணக்காரன் ஆவது என்று கட்டுரை இருக்கும் என்று பார்க்க வந்தால் ...

நல்லா இருங்கய்யா! நல்லா இருங்க!

கோவி.கண்ணன்

நானும் கோடிஸ்வரனாக வேண்டும் என்று எப்போதாவது 2 வெள்ளிக்கு சீட்டு வாங்குவேன். அப்பறம் அதுக்கு எதுவும் விழுந்ததா இல்லையான்னு பார்க்காமல் கொஞ்ச நாள் பாக்கெட்டில் வைத்திருந்து விட்டு குப்பையில் போட்டுவிடுவேன்

RAMYA

எனக்கு ஒரு கோடி ரூபா வேணும்.

முரு ஏதோ பார்த்து எனக்கு வரமாதிரி சீட்டை குலுக்கச் சொல்லுங்க:))

50/50 டீல் OK.

பிரியமுடன் பிரபு

முரு நான் 25 செண்ட் காசு தந்து பார்ட்ணர் ஆகிடலாமா???

சிவபார்கவி

சொக்கா, பரிசு எனக்கு கிடைக்குமா ..

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP