"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

நீங்க பன்றியா இல்லை குரங்கா?

இப்படி ஒரு கேள்விய நமமள பாத்து கேட்டா நிச்சயமா டென்ஷன் ஆயி உண்மையிலியே நமக்குள்ள இருக்கற மிருகத்த தட்டி எழுப்பிருவோம்.

ஆனா சீனர்களையும் சிங்கப்பூரர்களையும் பாத்து இப்படி கேட்டா, ஆமாம் நான் குரங்குதான் இல்லாட்டி பன்றிதான் அப்படின்னு சந்தோஷமாக சொல்லக்கூடும்.ஏன்னு தெரியணுமா? மேல படிங்க...

கிருஸ்துமஸ்ஸும் ஆங்கில புத்தாண்டும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் சிங்கப்பூரில். மிக அற்புதமான வான வேடிக்கைகளுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
ஆனால் அடுத்த நாளே சீனப் புத்தாண்டுக்கான ஆயத்தங்கள் தொடங்கி விடும். சிங்கப்பூர் மொத்தமும் சிவப்பு சாயம் பூசிக்கொள்ளும். சீனர்களுக்கு சிவப்பு ஒரு புனிதமான நிறம். முன்னொரு காலத்தில் சீனாவை ஒரு ராட்சத மிருகம் (ட்ராகன்) தொந்தரவு செய்து கொண்டிருந்ததாம். அந்த மிருகம் சிவப்பு விளக்கை பார்த்து ஓடி விட்டதால் அந்த வண்ணத்தின் மேல் அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு.







சீன வருடங்கள் எலி, காளை, முயல், பன்றி, பாம்பு, புலி, குதிரை, ஆடு, கரடி, குரங்கு, ராட்சத மிருகம் (Dragon) மற்றும் சேவல் என பன்னிரண்டு பெயர்களுடன் சுழற்சியாக வரும். எலி வருடம் முடிந்து காளை வருடம் நடந்து கொண்டிருக்கிறது.

சீனப்புத்தாண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதகாலத்துக்கு பல்வேறு முக்கியமான நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும்.பல அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு இரண்டு முதல் மூன்று வார காலத்துக்கு விடுமுறை அளித்து விடுவார்கள்.

சைனா டவுனில் நடக்கும் நிகழ்ச்சிகள், சிங்கே ஊர்வலம் மற்றும் மரீனா பேவில் நடக்கும் ஹோங்க்பாவ் நதி விழா (Hong Bao River Festival) ஆகியவை ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடைபெறும் நிகழ்வுகள்.

ஹோங்க்பாவ் நதி விழாவில் மேலே இருக்கும் அனைத்து மிருக பொம்மைகளையும் அழகாக வைத்து அந்தந்த வருடங்களில் பிறந்தவர்களுக்கான இந்த வருட ராசி பலனையும் பக்கத்தில் எழுதி வைத்திருப்பார்கள். குரங்கு வருடத்தில் பிறந்த எனக்கு மண வாழ்வு சுமுமாக இருக்கும் என்றும், முயலான என் மனைவிக்கு மண வாழ்வு பிரச்னைகளை போராடி வெற்றி பெறுவீர்கள் என்றும் எழுதியிருந்தது. (எல்லா ஊர்லயும் இப்பிடித்தானோ...).இபப புரியுதா? ஏன் தங்களை குரங்கு பன்றின்னு ஒத்துக்கறாங்கன்னு. நீங்க என்ன மிருகம்னு தெரிஞ்சிக்க கீழே இருக்கற பட்டியல பாத்துக்கோங்க.



ஒரு பெரிய ராஜா சிலையை நிற்க வைத்து, அதிலிருந்து சிறிது நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கும்படி வைத்திருப்பார்கள். இது மேலே பட வேண்டும் என்பதற்காக பலரும் காத்திருப்பார்கள். வீட்டிலிருந்து வர முடியாதவர்களுக்கு எடுத்துக்கொண்டு போவதற்காக குடை (தலை கீழாக) , பாத்திரம், பக்கெட்டுகளுடன் பலரும் காத்திருப்பார்கள். புனித தண்ணீராம் !!!இதை தவிர சீனாவிலிருந்து வந்திருக்கும் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் தவறாமல் பார்க்க வேண்டியவை.









சிங்கே ஊர்வலமும் மிகவும் பிரசித்தி பெற்ற வருடாந்திர நிகழ்வு. உலகின் பல மூலைகளிலிருந்தும் நாட்டிய மற்றும் பல் வகை திறன் பெற்ற குழுவினர் கலந்து கொள்வார்கள். அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும் வண்ணமிகு ஊர்வலங்களும் இறுதியில் வான வேடிக்கைகளுமாக அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.







இவை தவிர ஆங்காங்கே நடக்கும் சிங்க நடனங்களும், சைனா டவுனில் சாலை அலங்காரங்களும் என ஏகக் கொண்டாட்டம்தான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

3 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன்

அறிவிலி அண்ணா,

படங்கள் கலக்கல்.

பதிவை இன்னும் படிக்கவில்லை

அப்பாவி முரு

பதிவை படிச்சுட்டேன்,

படங்கள் கலக்கல்.

Ezhilan

படங்கள் நன்றாக இருந்தன. படங்களுக்கு நன்றி. மற்ற நாடுகளின் பழக்கங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP