நமீதாவை பார்க்கலாமா? நமீதா உயரமென்ன?
நமீதா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்?
1. வாரணம் ஆயிரம்
2. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
3. பிரம்மாண்டம்
தமிழின் உயரமான நடிகை யார்?
1. நயன்தாரா
2. நமீதா
3. நதியா
நமீதாவின் உயரம் என்ன?
பதிவின் கடைசியில் இதற்கு பதில் இருக்கு... ஹலோ ஸ்க்ரோல் பாரை பிடிச்சி இழுக்க போனிங்க அவ்ளோதான் சொல்லிப்புட்டோம் பதிவை படிச்சுப்புட்டு போகனும்.
ஹல்லோ இதென்ன சிங்கை வலைப்பதிவர் குழும வலைப்பதிவா இல்லை நமீதா ஜொள்ளர் வலைப்பதிவா? கேள்விகேட்குறாங்களாமுள்ள கேள்வி, இம்புட்டு வரிகளை படிச்சிட்டோம் இன்னும் ஒரு நமீதா படம் கூட போடாம ராஸ்கல்ஸ் என்ன இது சின்ன புள்ளதனமா..
மீண்டும் மீண்டும் காண தூண்டும் ஒரு சுற்றுலா இடமென்றால் பெரும்பாலும் அவைகள் திருப்பதி, பழனி போன்ற புனித தலங்களாகவே இருக்கும், அடுத்தபடியாக மீண்டும் மீண்டும் காண தூண்டும் இடங்களாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களாகவும் இருந்தாலே மீண்டும் மீண்டும் போக தூண்டும்.
75 ஆண்டுகால தமிழ் திரை வரலாற்றில் கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரி, சில்க் ஸ்மிதா, என்ற பட்டியல் இன்று நயன்தாரா, நமீதா வென்று நீண்டு கொண்டே இருக்கின்றது, கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரி எல்லாம் அந்தகால அட்ராக்ஷன்ஸ் தான் ஆனால் இப்போதும் அதே கே.ஆர்.செல்லம், டி.ஆர் ராஜகுமாரியை படத்தில் காண்பித்தால் அடபோங்கப்பா என்று போய் கொண்டே இருப்பார்கள்.
நவநாகரிக நகரத்தை ஒரு முறை பார்த்து முடித்துவிட்டால் சலித்துவிடும், புதுப்புது அட்ராக்ஷன்கள் இருக்க வேண்டும், அதுவே சுற்றுலா விரும்பிகளை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கும். சிங்கப்பூர் ஒரு நவ நாகரிக நகரம், நீங்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் அது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும், "உலகம் சுற்றும் வாலிபன்" மஞ்சுளா காலத்தில்(எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மன்னிக்க) பெரிய சுடுமண் பொம்மைகளாலான டைகர் பாம் கார்டன் என்னும் ஹாப்பர் விலா ஒரு முக்கிய அட்ராக்ஷன் என்றால் நமீதா காலத்தில் சிங்கப்பூரின் கடைக்குட்டியாம் சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation Wheel ஒரு முக்கியமான சுற்றி பார்க்கும் இடம்.
சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான(150 மீட்டர் விட்டம், கட்டித்தோடு சேர்த்து 165 மீட்டர் உயரம்) சக்கரம், சிங்கப்பூரின் மெரினா சென்டரில் (Marina Center) உள்ளது... பலருக்கும் உயரமான ஜெயண்ட் வீல் சக்கர ராட்டினத்தில் ஏறி கர கரவென சுற்றுவதற்கு பயந்து கொண்டே இதற்கு வரமாட்டோம் என்பார்கள், ஆனால் இது கர கரவென வேகமாக சுற்றாது, ஒரு சுற்று சுற்றி முடிக்க 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
சிங்கப்பூர் ப்ளையரில் ஏறுவதற்கு போவதே ஒரு வானூர்தி பயனத்தை நினைவு படுத்துவது போல இருக்கும், இந்த சக்கரத்தில் மொத்தம் 28 குளிர்சாதன வசதியுடைய உருளைகள்(capsuels) உள்ளன ஒவ்வொரு உருளையிலும் 28 பேர் வரை பயணிக்கலாம்.
சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறிய பின் சில நிமிடங்களில் ஒரு பெரிய வியப்பு உங்களுக்காக காத்திருக்கும், சிங்கப்பூர் நகரின் எழில் மிகு தோற்றம் உயரத்திலிருந்து பார்க்கும் போது சொர்க்கமாக தோன்றும், ஒரு பக்கம் சிங்கப்பூர் நகரின் நெடிந்துயர்ந்த கட்டிடங்கள், இன்னொரு புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் அந்த கடலில் ஆங்காங்கே தீவுகள் கடலெங்கும் மிதக்கும் கப்பல்கள் என புதிய உலகு அங்கே விரிந்திருக்கும். மேலிருந்து பார்க்கும் போது அருகில் உள்ள ஒரு மேம்பாலம் தெரியும், அந்த மேம்பாலம் எத்தனை அடுக்குகளாக எத்தனை சாலைகளை இணைக்கிறது என்று பார்த்தால் நிச்சயம் அது உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.
சிங்கப்பூர் ப்ளையரிலிருந்து 45 கிலோமீட்டர் தூரம் வரை பார்க்க இயலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவை காணலாம்.
இந்தியாவை இங்கே இணை வைத்து பேசுகிறேன் என்பதற்கு மன்னிக்கவும், நண்பரின் திருமணத்திற்கு வந்து பின் நானும் நண்பர்களும் சென்னையில் உள்ள MGM ற்கு சென்றோம், அங்கிருந்த ஒரு குடை ராட்டினத்தில் ஏறினே, ஒரு இரும்பு சங்கிலி தொங்குகிறது, அதில் ஒரு தட்டு மாதிரி இணைக்கப்பட்டுள்ளது, எந்த விதமான பாதுகாப்பும் அதில் இல்லை, ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல் ஆர்வமாக போய் அதில் ஏறிகொண்டேன், அதி வேகத்தில் சுற்ற ஆரம்பிக்க அந்த இரும்பு சங்கிலி மட்டுமே ஒற்றை ஆதாரம், அதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டியது தான், கொஞ்சம் தவறினாலும் அங்கிருந்து தூக்கியெறியப்படுவது நிச்சயம், குடலே புரண்டு வாய் வழியாக வருவது போலிருந்தது, உயிரை கையில் பிடித்துகொண்டு என்பதை அன்று அனுபவித்தேன். அடுத்த ஒரு வாரத்தில் இம்மாதிரியான ராட்டினத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு ஒருவர் காயம் என்று பத்திரிக்கையில் படித்தேன், சில மாதங்களுக்கு முன்பு கூட இம்மாதிரி நடந்து ஒரு பெண் மரணமடைந்தார் என்றும் அறிந்தேன்.
சிங்கப்பூரில் பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது, லாப நட்ட கணக்கெல்லாம் அதன் பின் தான், வேலையிடத்திலிருந்து விளையாட்டு வரை பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது. பாதுகாப்பிற்காக என்ன விலையையும் தர தயாராக உள்ளது சிங்கப்பூர்.
2008 டிசம்பர் 23ம் நாள் சிங்கப்பூர் ஃப்ளையர் சுற்றுவது நின்று விட்டது, 173 பேர் அப்போது உருளைகளில் இருந்தனர், இதில் குளிர்சாதன வசதி நின்று போனது, சில மணி நேரங்களில் பிரச்சினை சரி செய்யப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், அந்த நேரத்தில் உள்ளிருந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது, ஆனால் அதன் பின் சிங்கப்பூர் ப்ளையர் நிறுத்தப்பட்டது, மாற்று ஏற்பாடுகள் எல்லாம் செய்யபட்டு ஜனவரி 26 2009 அன்று தான் மீண்டும் சிங்கப்பூர் ப்ளையர் தன் சேவையை தொடங்கியது.
உபரி ஜெனரேட்டர், பிற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு செலவான தொகை மூன்று மில்லியன் சிங்கப்பூர் டாலர், அதாவது முப்பது இலட்சம் டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்பில் 93 கோடிகள், அதன் பின்பே சிங்கப்பூர் ஃப்ளையர் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ப்ளையர் சென்று பார்க்க சரியான நேரம் 6.00 லிருந்து 7.00 மணி வரை, இந்த நேரத்தில் நீங்கள் பகல் பொழுதையும் இருட்டும் பொழுதையும் உயரத்திலிருந்து ரசிக்கலாம்.
ஒருவருக்கு அனுமதி சீட்டின் விலை 28 சிங்கப்பூர் வெள்ளிகள் என நினைக்கிறேன். சிங்கப்பூர் ப்ளையரின் இணைய தளம் இங்கே
என்னங்க சிங்கப்பூர் நமீதாவை பார்க்கனுமா? சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...
மச்சான் நமீதாவின் உயரம் 5 அடி 11 அங்குலம்...
ஹல்லோ மிஷ்டர் எங்களுக்கு எதுக்கு நமீதா மச்சான் ஒசரம், நீங்க நமீதா ஒசரத்தை மட்டும் சொல்லுங்க, அவங்க மச்சான் ஒசரமெல்லாம் எங்களுக்கு தேவையில்லை...
19 பின்னூட்டங்கள்:
நல்லா கெளப்புறாய்ங்க பீதிய...
சிங்கப்பூர் ப்ளையர் பற்றி இவ்வளவு விவரங்களா ? தலையைச் சுற்றுது தல.
இன்னும் ஏறிப் பார்க்கல. எனக்கு உயரம் ஒரு அச்சமாகவும் இருக்கு.
//கோவி.கண்ணன் said...
சிங்கப்பூர் ப்ளையர் பற்றி இவ்வளவு விவரங்களா ? தலையைச் சுற்றுது தல.
இன்னும் ஏறிப் பார்க்கல. எனக்கு உயரம் ஒரு அச்சமாகவும் இருக்கு.//
சும்மா பயப்படாம ஏறுங்க கோவியாரே...!
மேல போட்டிருக்கிற ஐட்டத்தையும், கீழே போட்டிருக்கிற ஐட்டத்தையும் விட நடுவில் போட்டிருக்கிற, எழுதியிருக்கிற ஐட்டம் நன்று...!
நல்ல பதிவு...!
புதிய செய்திகள்...
//கோவி.கண்ணன் said...
சிங்கப்பூர் ப்ளையர் பற்றி இவ்வளவு விவரங்களா ? தலையைச் சுற்றுது தல.
இன்னும் ஏறிப் பார்க்கல. எனக்கு உயரம் ஒரு அச்சமாகவும் இருக்கு.
//
அப்போ ஓகே வெற்றியாளர்களை சிங்கப்பூர் ஃப்ளையருக்கு கூப்பிட்டு போக ஒரு ஆள் ரெடி
நானும் இன்னும் போகல........
//ஜெகதீசன் said...
நானும் இன்னும் போகல........//
ம்ம்ம் எங்க போகல....?
பிளையருக்கா?
சிங்கை செல்ல இருப்பவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!
//சிங்கப்பூர் ப்ளையரிலிருந்து 45 கிலோமீட்டர் தூரம் வரை பார்க்க இயலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவை காணலாம்//
Two in One!
:))))
நல்ல பயனுள்ள தகவல்கள்.
சிங்கபூர் ப்ளையர் பற்றி இத்தனை விவரங்களா... இன்னும் நானும் ஏறி பார்க்கல
ஒருமுறை சாரு தனது தளத்தில் எழுதியிருந்தார்!
நமீதா அருகில் நின்றால் சாருவின் முகத்து நேரா! சீ!.. போங்க வெட்கமா இருக்கு!
//வால்பையன்
ஒருமுறை சாரு தனது தளத்தில் எழுதியிருந்தார்!
நமீதா அருகில் நின்றால் சாருவின் முகத்து நேரா! சீ!.. போங்க வெட்கமா இருக்கு!
//
நோ நோ...
என்ன என்னமோ கமெண்ட் போட கை துடிக்குது, இது சரியான களம் இல்லை என்பதால் பேசாமல் போகிறேன்!
நான் ஏற்கெனவே போயிருக்கிறேன்.
- ப்ளையருக்குதான்.வேற ஏதாவது நெனச்சுக்க கூடாது.
///குழலி / Kuzhali
//கோவி.கண்ணன் said...
சிங்கப்பூர் ப்ளையர் பற்றி இவ்வளவு விவரங்களா ? தலையைச் சுற்றுது தல. இன்னும் ஏறிப் பார்க்கல. எனக்கு உயரம் ஒரு அச்சமாகவும் இருக்கு.//
அப்போ ஓகே வெற்றியாளர்களை சிங்கப்பூர் ஃப்ளையருக்கு கூப்பிட்டு போக ஒரு ஆள் ரெடி///
அப்போ நான் வரலை.. வர மாட்டேன்..! எனக்கென்ன தலையெழுத்தா இது..?
சிங்கப்பூர்ல எனக்கு ஆகுற செலவை கணக்குப் பண்ணி எனக்கு அனுப்பிருங்க..!
//அறிவிலி
நான் ஏற்கெனவே போயிருக்கிறேன்.
- ப்ளையருக்குதான்.வேற ஏதாவது நெனச்சுக்க கூடாது
//
ஆகா பல மீனிங் இருக்கும் போல இதில்
Hi kuzhali,
there is big difference in title and matter... any way all the best.
//Anonymous
Hi kuzhali,
there is big difference in title and matter... any way all the best.
//
நாம என்னைக்கு டைட்டிலுக்கு மேட்டருக்கும் தொடர்பா எழுதியிருக்கோம்.. டைட்டில் எல்லாம் பிக்கப் பண்னதான்
Post a Comment