மறதமிழர்கள் தேவை!!!
கொஞ்சநாளுக்கு முன்னாடி தமிழரோட வீரத்தை பழிச்சுப் பேசுன ஆளோட நான் செஞ்ச சவாலைப் பத்தி சொல்லுறேன். தெளிவாப் படிச்சு புரிஞ்சுக்கிட்டு, உங்க தெறமைய நிருபிச்சு நம்ம மானத்த காப்பாத்துங்க உலகத் தமிழ் மக்களே.
எங்க ஊருல டாம், டாம்ன்னு வெள்ளையா, தடியா ஒரு ஆளு இருக்காரு. அண்ணாத்த செம அஜால் – குஜால் பார்ட்டி. தெனமும் மூணு நேரமும் கறிக்கஞ்சி தான், நெனச்ச நேரத்துக்கு குளிக்க வீட்டுக்குள்ளயே நீச்சல் குளமும், வாக்கிங் போறதுக்குன்னு வீட்டுக்குள்ளயே பாதை, தனிமை போரடிக்காம இருக்க ’ஜோடி’ ஆளுன்னு சகல வசதியுமா, சுகமா வாழுறாரு நம்ம அண்ணாத்த.
என்ன தான் நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும், அது வெளிய ஓடும்ன்ன கதையா, நம்ம அண்ணாத்தைய சொகுசா வச்சிருந்தாலும் ஒரு நாள் அவரோட வேலையக் காட்டிட்டாரு.
வேலைக்கே போகாத அண்ணாத்தைக்கு தெனமும் ஃப்ரியா சோறு குடுக்குற ஆளு, ஒரு நாள் தெரிஞ்சோ, தெரியாமலோ நம்ம அண்ணாத்தையோட பெட்ரூமுக்குள்ள வந்துட்டாரு. அண்ணாத்தைக்கு கொஞ்சமாவது நன்றி விசுவாசம் இருந்திருக்கலாமா இல்லையா? “அடடா, நமக்கு பசிக்கிறப்ப எல்லாம் கறிக்கஞ்சி ஊத்துன ஆளாச்சே, தடம் மாறி வந்துட்டான் போலிருக்கு. வந்தமாதிரியே வெளிய போகட்டும்”-ன்னு விட்டிருந்தா நல்லவன், நாமலும் பாராட்டலாம்.
ஆனா, இந்த கெட்ட புத்தி புடிச்ச டாம் அண்ணாத்த என்ன பண்ணுனாரு தெரியுமா? சோறு போட்டவனையே கூறு போட்டுட்டான்யா, கூறு போட்டுட்டான். கூட இருந்த கூட்டாளிகளுக்குக் கூட தெரியாம தனியாளாவே ஒக்காந்து சோலிய முடிச்சிட்டுத்தான் எந்திரிச்சுப் போயிட்டானாம்.
ஊர்க்காரங்க எல்லாம் ஓடி வந்து அந்த ஈனங்கெட்ட பயலோட வேலையச் சொல்லி, எங்கிட்ட வந்து அழுகுது. இதைக் கேட்டதும், எனக்கு இருப்புக் கொள்ளல. பச்ச துரோகம் இல்லையா? அசந்த நேரமாப் பாத்து அடிச்சு, அடுப்புல போட்டவனை சும்மா விடலாமா? அவனோட பல்லத் தட்டி மொழுக்கட்டையாக்காம விடக்கூடாதுன்னு தொடையைத் தட்டி கிளம்பிட்டேன், அவனோட வீட்டுக்கு.
அதுக்குள்ள அங்க இருக்கிற ஆளுகல்லாம், நடந்தது நடந்து போச்சு. இனி பேசி என்ன புரயோசனம். ஆகுறதப் பாப்போம்ன்னு முடிவெடுத்து அடுத்த கட்ட வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கண்கள் துடி துடிக்க, தோள்கள் தினவெடுக்க, வெறி கொண்ட வேங்கையா உள்ள நுழைஞ்ச என்னப் பார்த்து பயந்த அம்புட்டு சனமும், “இவன் உள்ள போனா சொன்னதை செய்யாம வரமாட்டான், அப்புறம் பல்லுப்போன அண்ணாத்த வெறி வந்து, ஊராளுகளை ஏதாச்சும் செஞ்சுருவான்னு” பயந்துபோயி, என்னைய மறிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.
ஆனா நாம பெறந்து வளந்த்து, முன் வச்ச காலை பின் வைக்காத தமிழ் கூட்டமாச்சே, ஊர்கூடி கெஞ்சுனா மட்டும் கேட்டுறவாப் போறோம்! பத்துபேரையும் திமிரித் தள்ளி விட்டுட்டு தெருவுக்குள்ள போனேன். நிலமை மோசமாகுறதப் பாத்த ஒரு வயசான பெரியவரு வந்து வழிய மறிச்சாரு.
”வழிய விடுங்க தாத்தா”ன்னு வெறியில மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நான் சொல்லவும், உடனே தாத்தா, “என்ன தம்பி, அண்ணாத்தைய பழிவாங்கப்போறியா?” கேட்டவரு என்னோட பதிலுக்கு காக்காம, “தம்பி, உள்ளூரு ஆளுகன்னாலே டாமுக்கு கொஞ்சம் பாசம் அதிகம். நீ போனா சண்டை போட மாட்டாரு, அதனால நீ அண்ணாத்தை பல்லை தட்டுறதா சபத்தை நெறவேத்தணும்னா, நீ சண்டை போட்டு தட்டாத, நீ பொறந்த ஊருல இருந்து யாராச்சும் தைரியமான ஆளைக் கொண்டுவந்து, அண்ணாத்தை கூட நேருக்கு நேர் சண்டை போட்டு பல்லைப் தட்டு பார்க்கலாம்” –ன்னு சவால் விடுற மாதிரியே பேசிட்டாரு.
என்னைய தனிப்பட்ட முறையில் வம்பிழுத்தாலே சும்மா விடமாட்டேன், என்னோட ஊராளுகளையும் சேத்து வம்பிழுத்துட்டாங்க அண்ணாத்தையும், தாத்தாவும். விடுவேனா நானு, ”தாத்தா, என் ஊராளுகளைப் பத்தி தெரியாம பேசிட்ட. நானாச்சும் பல்லை தட்டுறேன்னு சொல்லித்தான் சவால்விட்டேன். பரவாயில்லை, இப்ப என் ஊராளுகளை வச்சு டாமோட பல்லை மட்டுமில்லாம, நகத்தையும் சேர்த்து புடுங்கி தங்கச் செயினுல கோர்த்து கழுத்துல போடுறேனா இல்லையான்னு பாரு”ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன்.
அதனால, இதப் படிக்கிற மறதமிழ் மாந்தர் யாராச்சும் வந்து என்னையும், என்னோட மானத்தையும் காப்பாத்துங்க. அதுக்கு நீங்க ஒரு பைசாக் கூட செலவழிக்க வேண்டாம். அதுக்கு பதிலா, உங்க தெறமையைச் சோதிக்கிற இந்த("சிங்கைப் பதிவர்களும் - தமிழ் வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கருத்தாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இருக்கும் மூன்று பிரிவுகளின் வரும் 29 தலைப்புகளில் ஒன்றைப் பற்றி போட்டி வழிகாட்டுதல் படி கட்டுரையை எழுதி அனுப்புங்க") போட்டியில மட்டும் கலந்து செயிச்சா போதும். மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்.
டாமைப் பத்தி சொல்லாம விட்டுட்டேனே!!

மேல இருக்காரே இவரு தான் நம்ம அண்ணாத்த டாம். வெள்ளைப் புலி வம்சம்., இங்க சிங்கப்பூர் ஜூல பலகாலமா இருக்காரு. அண்ணாத்தை நம்ம வங்கபுலி வம்சத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும் இன்னிக்கி பத்தாயிரம் புலிக்கு ஒரு வெள்ளப் புலி தான் இருக்கு. அம்புட்டு அபூர்வமாகிப் போச்சு.
அதனால் தான் போன வருசம் ஒரு மனுசனையே ஆட்டையப் போட்டுத் தின்ன பின்னாடியும் டாமை ரொம்ப ஜாக்கிரதையா கவணிச்சுக்கிறாங்க சிங்கை ஜூ ஆளுக.
தயவு செய்து போட்டியில் கலந்துகங்க. செயிக்கிற திறமசாலி அண்ணாத்த கூட சண்டை போட்டு என்னோட சவாலையும் செயிச்சுக் குடுங்க மறதமிழர்களே!!
பின் குறிப்பு:-
மேலே உள்ள கதையை, கதையாக எடுத்துக் கொள்ளாமல், மறதமிழர்களுக்கான ("சிங்கைப் பதிவர்களும் - தமிழ் வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 கருத்தாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு, அதில் இருக்கும் மூன்று பிரிவுகளின் வரும் 29 தலைப்புகளில் ஒன்றைப் பற்றி போட்டி வழிகாட்டுதல் படி கட்டுரையை எழுதி அனுப்புங்க") போட்டியை கருத்தூன்றி கவனித்து உங்கள் பங்கை சிறப்பாக அளிக்க விரும்பும்....
அப்பாவி முரு
17 பின்னூட்டங்கள்:
அடப்பாவிகளா நல்லா கெளப்புறாங்கய்யா புலியை ஸாரி கிலியை
யோவ் என்னாய்யா இப்படி கேன்வாஸ் பண்ரீங்க - ஒருத்தர் என்னன்னா மான் கறி சாப்பிட வாங்கன்றாரு -நீ என்னன்னா டாம் கூட சண்ட போட வரச் சொல்ற - ம்ம்ம்ம்
நல்லாருக்கு கத -
நன்னா இருக்கு...
மக்கள் பயப்படாம நாம பாத்துக்குவோம்...
பல்லை மட்டும் புடுங்கய்யா!
நல்லா இருக்கு. நம்ம ரெண்டு பேரு இடுகையும் ஒரே நேரத்துல பப்ளிஷ் ஆயிருக்கு போல...Good....
புலிய வேட்டையாடி அதோடப் பல்லப் புடுங்கி தாயம் விளையாடுர பயபுள்ளைக
நம்ம மதுரைக் காரங்கெ
உங்க டாமி மட்டுமல்ல போட்டில கலந்து ஜெயிச்சு உங்க மானத்தையும் காப்பாயிங்க நம்புங்க
//cheena (சீனா)
யோவ் என்னாய்யா இப்படி கேன்வாஸ் பண்ரீங்க - ஒருத்தர் என்னன்னா மான் கறி சாப்பிட வாங்கன்றாரு -நீ என்னன்னா டாம் கூட சண்ட போட வரச் சொல்ற - ம்ம்ம்ம்
நல்லாருக்கு கத -//
எப்படியும் உங்கள் கட்டுரை எங்களுக்கு வந்துசேரனும் அம்புட்டுதான்
டீடயிலு எக்கச்சக்காமா இருந்தாலும்
படிக்க படிக்க பீதியை கிளப்பிடுச்சு.
மெதுவா ரொம்ப மெதுவாதான் அடுத்த பாரா படிச்சிகிட்டு போனேன்.
அப்பா நல்ல வேளை முரு எங்கேயும் போய் மாட்டிக்கலைன்னு புரிஞ்சிது.
இந்த கதை உண்மையிலேயே போட்டிக்கா? பயந்து வருதே :))
கண்டிப்பா நீங்க ஜெய்ச்சிடுவீங்க.
மிரட்டி கேட்டு இருக்கீங்க பரிசை :-)
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!!
இது எழுதினது முருதானே?
நீங்க தானே போட்டியிலே கலந்துக்கறீங்க?
திடீர்னு சந்தேகம் வந்திடுச்சு.
புளி கொட்டை எடுத்ததா கொட்டை எடுக்காததா. ஒ சாரி நீங்க வெள்ளை புலியை சொல்றீங்களா!!!. மன்னிக்கவும்.
நன்றி குழலி...
நன்றி சீனா அய்யா
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி
நன்றி வால்பையன்
நன்றி அறிவிலி
நன்றி வேடிக்கை மனிதன்
நன்றி ஆ. ஞானசேகரன்
நன்றி ரம்யா...(//நீங்க தானே போட்டியிலே கலந்துக்கறீங்க?//, கதை கேட்டது ரம்யா, உங்களையெல்லாம் கலந்துக்க சொல்லித்தான் எழுதியிருக்கேன்)
நன்றி சரவணா பவன்
ஹா ஹா ஹா
இப்புடி பீதியை கிளம்பினா
மக்கள் கிளம்புவாங்களா ...
அப்பாவி தம்பி,
தாய்குலங்கள் வெற்றி பெற்றால் முறத்தோடு வரச் சொல்லனுமா ?
விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தனும் போல !
:)
சூப்பர்
அப்போ வெற்றி பெறப்போறவங்க கலக்கப்போறாங்க என்றுமட்டும் தெரியிது.... வெற்றி பெறப்போறவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்கலாமா...
:)
மறத் தமிம் ஆண்கள் வெறுங்கையுடனும், வீர தமிழ் பெண்கள் முறத்துடனும் வீறுகொண்டு வருவீர்னு சொல்றீங்க. அப்ப அந்த வெள்ளப் புலி நிலம?
நல்லா எழுதியிருக்கீங்க முரு. ஆனா விரும்புற வீரர்கள் மட்டும் புலியை அடக்க முயற்சிக்கலாம்னு சொல்லிருங்க. அப்பறம் கட்டாயம் புலியை அடக்கியே ஆகணுமோன்னு வரமா போயிடப்போறாங்க.
//குழலி / Kuzhali
அடப்பாவிகளா நல்லா கெளப்புறாங்கய்யா புலியை ஸாரி கிலியை//
:-))))
Post a Comment