"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

10. சுகாதாரம்: சிங்கப்பூரில் தண்ணீர் பாட்டில், வாட்டர் ஃபில்டர் விற்பதும் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும் ஒன்றுதான். சாதாரணமாக குழாயில் வரும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது. ஏனைய பெரு நகரங்களில் இருக்கும் பிரச்சினையான வாகனப் புகைகளால் காற்று மாசு படுவது என்பது இங்கு அறவே கிடையாது. அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம்.

9. உணவு: எந்த நாட்டினர் வந்தாலும் சிங்கப்பூரில் மிகவும் விரும்பும் ஒரு அம்சம், எல்லா இடங்களிலும் கிடைக்கும் அனைத்து விதமான உணவு வகைகள்தான்.இந்திய, சீன, மலேய, காண்டினென்டல், தாய்லாந்து, ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் உணவகங்கள் கூட உண்டு.

நம்ம ஊர் அன்னலஷ்மி, கோமள விலாஸ், சரவண பவன், அஞ்சப்பர் தவிர சிங்கப்பூர் முழுவதும் பெரும்பாலான ஃபுட் கோர்ட்களில் பரோட்டா, தோசை, பிரியாணி போன்ற உணவுகள் எளிதில் கிடைக்கும்.

8. சாலைகள்: சிங்கப்பூரின் அனைத்து சாலைகளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம்(ஆனா, விட மாட்டாங்க). அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் மேடு பள்ளங்களோ, குழிகளோ, பாதாள சாக்கடை மூடிகளையோ காணக் கிடைக்காது.அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் நிச்சயம் உண்டு.

7. சுத்தம்: ரெயில் வண்டி நிறுத்தமோ, பேருந்து நிலையமோ அல்லது எந்த ஒரு அரசு அலுவலகமோ கழிவறைகள் எல்லாம் அத்தனை சுத்தமாக இருக்கும்."சே..ச்சே... இங்கியா உச்சா போறது" அப்படின்னு நமக்கே வெக்கமா இருக்கும். பேருந்து, கார் நிறுத்துமிடம், வீடுகளுக்கு வெளியில் இருக்கும் பொதுவிடங்கள் மற்றும் புல் தரைகள் ஆகிய அனைத்துமே தும்பு, தூசி இல்லாமல் இருக்கும்.

6. நேர்மை : டாக்ஸி காரர்களில் ஆரம்பித்து, கடைக்காரர்கள்,அரசு அலுவலர்கள் வரை எவரிடமும் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு.தைரியமாக டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து முகவரியை சொன்னால் போதும், நிச்சயமாக அவர் ஊரையெல்லாம் சுற்றி காண்பிக்காமல் சரியான வழியில், சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்துவிடுவார். மீட்டரில் காண்பிக்கும் தொகையை கொடுத்தால் போதும்.

5. பொது போக்குவரத்து: சிங்கப்பூரின் எம்.ஆர்.டி (மாஸ் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் மெட்ரோ ட்ரெயின் சேவையை சிங்கப்பூரின் முதுகெலும்பு என்று கருதலாம். அனைத்து இடங்களுக்கும் எளிதாக, முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட செல்ல முடியும். இந்த எம்.ஆர்.டி நிலையங்களில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் இடங்களுக்கு செல்ல அங்கிருந்தே எல்.ஆர்.டி (லைட் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் சிறிய ட்ரெயின்களோ அல்லது பேருந்துகளோ நிச்சயம் இருக்கும்.

4. பாதுகாப்பு: திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற விஷயங்களை கேள்விப்படுவதே அரிதான விஷயம். இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.அது மட்டுமல்ல தொடர் வண்டி (ட்ரெயின்), பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை.

3. மொழி: சிங்கப்பூரில் மொழி ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆங்கிலம் ஒரளவாவது புரிந்து கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு இடத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் நின்றால் நிச்சயம் ஒரு தமிழரையாவது சந்தித்து விட முடியும். அது மட்டுமல்ல தமிழ் சிங்கப்பூரின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. ஆகவே அரசு சம்பந்தப்பட்ட அறிக்கைகள், தகவல் பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கும்.

2. சுற்றுலா தலங்கள் : சிறிய ஊராக இருந்தாலும் பார்க்க வேண்டியவை ஏராளம். பறவைகள் பூங்கா,மாபெரும் ராட்டினம், மிருகக்காட்சி சாலை, சீனத்தோட்டம், சைனா டவுன், புத்தர் பல் கோவில், நம்ம ஊரு கோவில்கள், லிட்டில் இந்தியா மற்றும் பல. இதைத் தவிர செந்தோசான்னு ஒரு தீவு உண்டு. இங்கே அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்ஃபின் ஷோ, 4 டைமென்ஷன் சினிமா, லேசர் ஷோ ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய விஷயங்கள். முக்கியமாக இரவு 7 மணிக்குமேல் நடக்கும் லேசர் கதிர் காட்சியுடன் கூடிய ம்யூசிகல் பவுண்டன் பார்ப்பவர்கள் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.கீழே ஒரு சாம்பிள்.1. சிங்கைப் பதிவர்கள்: தமிழே மூச்சு, தமிழே உணவு, தமிழே உயிர் என்று தமிழ் இலக்கியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி இன்ன பிறவற்றை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பல அற்புதமான படைப்புகளை வலைப்பூக்களில் தந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். (சே.. ச்சே.. என்ன அப்படி பாக்கறீங்க? மத்தவங்கல்லாம் நல்லா எழுதுவாங்கங்க). விருந்தோம்பல் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்.

அடடே.. எங்க வேகமா கெளம்பிட்டீங்க.சிங்கப்பூருக்கு டிக்கட் வாங்கத்தானே? கொஞ்சம் பொறுங்க. செலவே இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்து மேல சொன்ன விஷயங்கள பாக்கவும் அனுபவிக்கவும் முடியும்.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

21 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி

Me the First

அத்திவெட்டி ஜோதிபாரதி

நல்லா இருக்கு...
நல்ல தகவல்கள்...
சிறப்பாக தொடருங்கள்...

பித்தன்

அறிவிலி கலக்கிட்டேள் போங்கோ....

அப்பாவி முரு

அடப்பாவமே.,

கிராஸ் டாக்காகிப் போச்சே!!!

:(((

அறிவிலி

நன்றி,

அத்திவெட்டி ஜோதிபாரதி,
பித்தன்
அப்பாவி முரு.

இராம்/Raam

// இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.//

ஹி ஹி.... இடுகையிலே எனக்கு ரொம்பவே பிடிச்ச வரி இதுதான்.... :))

குழலி / Kuzhali

//. சுத்தம்: ரெயில் வண்டி நிறுத்தமோ, பேருந்து நிலையமோ அல்லது எந்த ஒரு அரசு அலுவலகமோ கழிவறைகள் எல்லாம் அத்தனை சுத்தமாக இருக்கும்."சே..ச்சே... இங்கியா உச்சா போறது"
//
ஆகா இதை வச்சி ஒரு புல் மீல்ஸ் அட ஒரு முழு பதிவே போடலாம்னு இருந்தேன் :-)

ஆ.ஞானசேகரன்

நல்ல நல்ல தகவல்கள்

Mahesh

//சுற்றுலாத் தளங்கள் // தலங்கள் !!

11. விருந்தோம்பல் : அண்ணன் ஜோசஃப் பால்ராஜ் ஐயங்கார். விவரிக்க முடியாது... அனுபவிக்கணும்.

அறிவிலி

///சுற்றுலாத் தளங்கள் // தலங்கள் !!/

திருத்த்ப்பட்டது, நன்றி

ஜெகதீசன்

:))

ஜோசப் பால்ராஜ்

அருமையா எழுதியிருக்கீங்க அண்ணே.

//11. விருந்தோம்பல் : அண்ணன் ஜோசஃப் பால்ராஜ் ஐயங்கார். விவரிக்க முடியாது... அனுபவிக்கணும். //

புதசெவி

Mahesh

/ஜோசப் பால்ராஜ் said...
அருமையா எழுதியிருக்கீங்க அண்ணே.

//11. விருந்தோம்பல் : அண்ணன் ஜோசஃப் பால்ராஜ் ஐயங்கார். விவரிக்க முடியாது... அனுபவிக்கணும். //

புதசெவி
//

இன்னிக்கு புதன்... புதசெவி.... நாளைக்கு வியாழசெவியா?

அண்ணே உங்க விருந்தோம்பலைப் பத்தி விக்கியும் இன்னும் பலபேரும் எழுதியிருக்காங்க.... எங்களுக்குதான் குடுத்து வெக்கல... போட்டியாளர்களுக்காவது கிடைக்கட்டுமே !!

Anonymous

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கோவி.கண்ணன்

அறிவிலி சிங்கைத் தகவல்கள் அசத்தல்.

’டொன்’ லீ

முதலாவது தான் அசத்தல்..:-)

அறிவிலி

///இராம்/Raam said...
// இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.//

ஹி ஹி.... இடுகையிலே எனக்கு ரொம்பவே பிடிச்ச வரி இதுதான்.... :))///

நல்ல வேளை யாரும் கவனிக்கலையேன்னு பார்த்தேன். நன்றி இராம்.

///ஆகா இதை வச்சி ஒரு புல் மீல்ஸ் அட ஒரு முழு பதிவே போடலாம்னு இருந்தேன் :-)///

அதனால என்னங்க குழலி போடுங்க சாப்ட்றுவோம்.

அறிவிலி

/// ஆ.ஞானசேகரன் said...
நல்ல நல்ல தகவல்கள்///

நன்றி ஞானசேகரன்

//ஜெகதீசன் said...
:))//

:))))

///ஜோசப் பால்ராஜ் said...
அருமையா எழுதியிருக்கீங்க அண்ணே. ///

நன்றி....

///கோவி.கண்ணன் said...
அறிவிலி சிங்கைத் தகவல்கள் அசத்தல்.///

நன்றி.. கோவியார்.


///டொன்’ லீ said...
முதலாவது தான் அசத்தல்..:-)///

1 ஆம் நம்பர்தானே? நன்றி, இதைப் பத்தி யாருமே சொல்லலியேன்னு நெனச்சேன்.

கிறுக்கன்

அந்த காலத்தில மான்,உடும்பு,மிளா,மந்தி கறி எல்லாம் தமிழ்நாட்டில் சகஜம்....

வலசு - வேலணை

//
சிங்கப்பூரில் தண்ணீர் பாட்டில், வாட்டர் ஃபில்டர் விற்பதும் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும் ஒன்றுதான்.
//
உவமானம் கலக்கல்.

//
டாக்ஸி காரர்களில் ஆரம்பித்து, கடைக்காரர்கள்,அரசு அலுவலர்கள் வரை எவரிடமும் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு.தைரியமாக டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து முகவரியை சொன்னால் போதும், நிச்சயமாக அவர் ஊரையெல்லாம் சுற்றி காண்பிக்காமல் சரியான வழியில், சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்துவிடுவார். மீட்டரில் காண்பிக்கும் தொகையை கொடுத்தால் போதும்.
//
பாராட்டப்படவேண்டிய விடயம்

கிரி

// தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது//

நிசமாவா!

//சுற்றுலா தலங்கள் //

இதில் பல இடங்கள் இன்னும் நான் போகவே இல்ல :-((

அறிவிலி நல்லா எழுதி இருக்கீங்க

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP