"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் மணற்கேணி - 2009 போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை வெல்லுங்கள்-அள்ளுங்கள்!
மணற்கேணி - 2009 போட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும். இதன் பரப்பளவு சுமார் 740 சதுர கிலோ மீட்டர். பெருமளவில் தமிழர்களும் வாழும் அழகிய நாடு, இதைக் கட்டமைத்தது மற்றும் இந்த நாட்டில் வாழும் பல இன மக்களை பேணி காப்பது தலைமைத்துவம், தலைமைத்துவம் மட்டுமே என்றால் அது மிகையாகாது. சிங்கப்பூரில் சீனர்கள்,மலாய்க்காரர்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை பேணி காப்பதிலும் தலை சிறந்து விளங்குகிறது சிங்கப்பூர். சாலட் பவுல் கல்ச்சரை() பெரிதும் நம்பும் இந்த நாட்டின் தலைமை, இலங்கை போன்ற நாடுகளில் மெல்டிங் பொட் கல்ச்சரால்() ஏற்பட்ட தோல்விகளை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. சிங்கையில் எல்லா இடங்களிலும் ஆங்கிலம்,சீனம்,மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் அறிவிப்புகள் செய்வது,பெயர்ப்பலகைகள் வைத்திருப்பது எளிதாகவும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மிளிர்கின்றன.

தமிழர்களுக்கு சிங்கப்பூர் ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடாகத் தெரிவதற்கு இதுவே முதன்மையான காரணம்.

ஐரோப்பிய,அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை விட தினசரி வாழ்க்கையில் எற்படும் செலவினங்கள் அனைவராலும் சமாளிக்கக் கூடியதாக, வருமானத்திற்கு உகந்ததாக இருப்பது சற்று ஆறுதலானது. பெரும்பாலான தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்த பல நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கும் நாடு சிங்கப்பூர் என்பது இன்னொரு சிறப்பான நிலை.

பெரும்பாலனான தமிழர்கள் பணி,பொருள் ஈட்டுதல் மற்றும் வாழ்வியலுக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுப்பதற்கு அது நான்கு மணி நேர விமான பயணம் மட்டுமெ எடுத்துக்கொள்ளும் நாடு. உறவுகளைப் பிரிந்து பொருள் ஈட்டுவதற்காக புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள், உறவுகளுக்கு எதாவது நல்லது,கெட்டது என்றால் உடனே சென்று சேர ஏதுவாக மிக அருகாமையில் உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பாதுகாப்பான நாடு என்பது வெளி நாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்கும், அதனால் பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்கும் பெரிதும் பயன்படுகிறது. எதையும் எளிதாக்கித் தரும் தன்மை, வசதிகளை உருவாக்கிக் கொண்டெ இருப்பது, மாற்றங்களை புகுத்தி எளிமைப்படுத்தி மக்களைப் பழக்குவது, அறிவார்ந்த மக்களை உருவாக்க அன்றாடம் அயராது உழைப்பது போன்றவகள் இந்நாட்டின் வெற்றியின் இரகசியம்.

வரிகளைக் குறைத்து வழிகளைக் கொணரும் வல்லமை படைத்த நாடாக இருப்பதால், எந்த இயற்கை வளங்களும் இல்லாத போதும் தலை நிமிர்ந்து வளர்ந்த நாடுகளில் ஒன்றாக விளங்கி அதன் மக்களைக் காக்க அன்றாடம் பாடுபட முடிகிறது.

தொடரும்...!

Manarkeni 2009

35 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன்

அசத்தலான தொடர்.

//ங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு //

அப்படின்னா என்ன ? புலிப்பாலா ?

ஜெகதீசன்

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி

// கோவி.கண்ணன் said...
அசத்தலான தொடர்.

//ங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு //

அப்படின்னா என்ன ? புலிப்பாலா ?//நன்றி கோவியாரே!

இது ஐயப்பன் சம்பந்தப்பட்டதல்ல.
ஸ்ரீமான் இராமன் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீமான் இராமனுக்கு அணில் உதவியது போல் எனது சிறிய உதவி.
அதுக்காக எனது சட்டைய கிழட்டச் சொல்லி முதுகைக் காட்டச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனா டவுசரை மட்டும் அவுத்துடாதீங்க! ஹி! ஹி!

அத்திவெட்டி ஜோதிபாரதி

// ஜெகதீசன் said...
:)
//

நன்றி சேகு மற்றும் லீ!

கிஷோர்

//பெரும்பாலனான தமிழர்கள் பணி,பொருள் ஈட்டுதல் மற்றும் வாழ்வியலுக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுப்பதற்கு அது நான்கு மணி நேர விமான பயணம் மட்டுமெ எடுத்துக்கொள்ளும் நாடு. உறவுகளைப் பிரிந்து பொருள் ஈட்டுவதற்காக புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள், உறவுகளுக்கு எதாவது நல்லது,கெட்டது என்றால் உடனே சென்று சேர ஏதுவாக மிக அருகாமையில் உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது//

100% உண்மை. நல்ல இடுகை நண்பரே

ஜோசப் பால்ராஜ்

சிங்கப்பூருக்கு ஒரு சிறப்பான அறிமுகம் அளித்துள்ளீர்கள்.
நற்பணிக்கு எம் இனிய வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி

//கிஷோர்
//பெரும்பாலனான தமிழர்கள் பணி,பொருள் ஈட்டுதல் மற்றும் வாழ்வியலுக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுப்பதற்கு அது நான்கு மணி நேர விமான பயணம் மட்டுமெ எடுத்துக்கொள்ளும் நாடு. உறவுகளைப் பிரிந்து பொருள் ஈட்டுவதற்காக புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள், உறவுகளுக்கு எதாவது நல்லது,கெட்டது என்றால் உடனே சென்று சேர ஏதுவாக மிக அருகாமையில் உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது//

100% உண்மை. நல்ல இடுகை நண்பரே//

கருத்துக்கு நன்றி கிஷோர்!

அத்திவெட்டி ஜோதிபாரதி

//சிங்கப்பூருக்கு ஒரு சிறப்பான அறிமுகம் அளித்துள்ளீர்கள்.
நற்பணிக்கு எம் இனிய வாழ்த்துக்கள்.//

நன்றி யூசுப் பாலு ராசு ஐயங்கார்!

’டொன்’ லீ

இனிய அறிமுக ஆரம்பம்..தொடரட்டும் :-)

அகரம்.அமுதா

அருமை அருமை! வாழ்க. தொடர்க தங்களின் கட்டுரையை....

செந்தழல் ரவி

தொடருங்க................

அத்திவெட்டி ஜோதிபாரதி

//’டொன்’ லீ said...
இனிய அறிமுக ஆரம்பம்..தொடரட்டும் :-)//

நன்றி டொன் லீ!
நோர்வேயில் இருந்து சிங்கை திரும்பியாச்சா?

அத்திவெட்டி ஜோதிபாரதி

//அகரம்.அமுதா said...
அருமை அருமை! வாழ்க. தொடர்க தங்களின் கட்டுரையை....//

நன்றி அகரத்தாரே!
ஆளையே காணுமே!

தங்களின் நூல் வெளியீடு எப்போது?

அத்திவெட்டி ஜோதிபாரதி

//செந்தழல் ரவி said...
தொடருங்க................//

தொடர்வோம்.
நன்றி இரவி!

$anjaiGandh!

மார்க்கெட்டிங் சரி இல்லை.. சீயிவோவை மாற்றவும்.. :)

சிங்கை பதிவர்கள் மட்டுமே கமெண்ட் போட்டிருக்காங்க.. 2 பேர் தான் வெளி ஆட்கள் போல.. :)

அத்திவெட்டி ஜோதிபாரதி

//$anjaiGandh! said...
மார்க்கெட்டிங் சரி இல்லை.. சீயிவோவை மாற்றவும்.. :)

சிங்கை பதிவர்கள் மட்டுமே கமெண்ட் போட்டிருக்காங்க.. 2 பேர் தான் வெளி ஆட்கள் போல.. :)//

நன்றி சஞ்சய்!
அது என்ன சீயிவோ!?

திட்டுற மாதிரியும் தெரியுது,
கிளர்ச்சியாளர்கள் மாவோ மாதிரியும் காதுல விழுவுது!
ஆனா ஒன்னும் புடிபடல! :P

சிங்கை பதிவர்கள் ஆவலோடு கலந்துகொள்கிறார்கள்!
மணற்கேணி-2009 விதிப்படி மற்றவர்கள் கலந்து கொள்ள ஊக்கப் படுத்தியே சிங்கை பதிவர்கள் பின்னூட்டமிடுகிறார்கள்!

திகழ்மிளிர்

தொடரட்டும்

அத்திவெட்டி ஜோதிபாரதி

// திகழ்மிளிர் said...
தொடரட்டும்//

நன்றி திகழ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி

அருமை! அருமை!!
நமது நோக்கம் நிறைவேற ஒன்றுபடுவோம்.
வாழ்த்துகள்!

ஆ.ஞானசேகரன்

சிங்கபூருக்கு நல்ல அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.... மேலும் சிங்கபூர் சரக்குக்கு சரியான விளக்கம் தெரியுமா? நண்பா.....

அத்திவெட்டி ஜோதிபாரதி

//ஆ.ஞானசேகரன் said...
சிங்கபூருக்கு நல்ல அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.... மேலும் சிங்கபூர் சரக்குக்கு சரியான விளக்கம் தெரியுமா? நண்பா.....//

நன்றி ஞானம்!
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சரக்கு என்பது ஒரு பொருளையும்(அர்த்தம்), தமிழ் நாட்டில் சரக்கு என்பது வேறு பொருளையும்(அர்த்தம்) தருகிறது என்று தெரியும்.

மேலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழ் நாட்டுப் பதிவர்கள் பெயர்க் காரணத்தை முறையாக விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.

இது நம்ம ஆளு

எதையும் எளிதாக்கித் தரும் தன்மை, வசதிகளை உருவாக்கிக் கொண்டெ இருப்பது, மாற்றங்களை புகுத்தி எளிமைப்படுத்தி மக்களைப் பழக்குவது, அறிவார்ந்த மக்களை உருவாக்க அன்றாடம் அயராது உழைப்பது போன்றவகள் இந்நாட்டின் வெற்றியின் இரகசியம்.

உண்மையான வரிகள்

வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

Suresh Kumar

நன்றி ஞானம்!
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சரக்கு என்பது ஒரு பொருளையும்(அர்த்தம்), தமிழ் நாட்டில் சரக்கு என்பது வேறு பொருளையும்(அர்த்தம்) தருகிறது என்று தெரியும்.

மேலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழ் நாட்டுப் பதிவர்கள் பெயர்க் காரணத்தை முறையாக விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.//////////////////

சிங்கையிலோ மலேசியாவிலோ இருப்பவர்கள் சொன்னால் தானே எங்களை போன்றோருக்கு தெரியும் . உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி

//இது நம்ம ஆளு said...
எதையும் எளிதாக்கித் தரும் தன்மை, வசதிகளை உருவாக்கிக் கொண்டெ இருப்பது, மாற்றங்களை புகுத்தி எளிமைப்படுத்தி மக்களைப் பழக்குவது, அறிவார்ந்த மக்களை உருவாக்க அன்றாடம் அயராது உழைப்பது போன்றவகள் இந்நாட்டின் வெற்றியின் இரகசியம்.

உண்மையான வரிகள்

வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க//

நன்றி இது நம்ம ஆளு,

கண்டிப்பாக உங்கள் வலைதளத்தைப் படிக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி

//Suresh Kumar said...
நன்றி ஞானம்!
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சரக்கு என்பது ஒரு பொருளையும்(அர்த்தம்), தமிழ் நாட்டில் சரக்கு என்பது வேறு பொருளையும்(அர்த்தம்) தருகிறது என்று தெரியும்.

மேலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழ் நாட்டுப் பதிவர்கள் பெயர்க் காரணத்தை முறையாக விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.//////////////////

சிங்கையிலோ மலேசியாவிலோ இருப்பவர்கள் சொன்னால் தானே எங்களை போன்றோருக்கு தெரியும் . உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சுரேஷ்!
சிங்கை மற்றும் மலேசியாவில் இருக்கும் நன்பர்கள் சொல்வார்கள் என்று நம்புகிறேன். ஏன்னா எனக்குத் தெரியாது!

சந்ரு

நல்லதொரு பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்..

அத்திவெட்டி ஜோதிபாரதி

// சந்ரு said...
நல்லதொரு பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்..//

தொடர்வோம்!
நன்றி திரு சந்ரு!

வலசு - வேலணை

தகவல்களுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு.

அத்திவெட்டி ஜோதிபாரதி

//வலசு - வேலணை said...
தகவல்களுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு.//

நன்றி தோழர்!

Anonymous

//ங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு //

அப்படின்னா என்ன ? புலிப்பாலா // - Tiger Beer :)

RAMYA

//
எதையும் எளிதாக்கித் தரும் தன்மை, வசதிகளை உருவாக்கிக் கொண்டெ இருப்பது, மாற்றங்களை புகுத்தி எளிமைப்படுத்தி மக்களைப் பழக்குவது, அறிவார்ந்த மக்களை உருவாக்க அன்றாடம் அயராது உழைப்பது போன்றவகள் இந்நாட்டின் வெற்றியின் இரகசியம்.
//

இந்த வரிகளில் யதார்த்தம் தெரிந்தது சகோதரா!

எல்லாருக்கும் புரியும்படி சிம்பிளா சொல்லி இருக்கீங்க சேவை தொடருக.

தாய்நாட்டில் இருந்து சென்று அயராது உழைக்கும் நம் உடன் பிறப்புகள் நினைவில் வருகிறார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி

//Anonymous said...
//ங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு //

அப்படின்னா என்ன ? புலிப்பாலா // - Tiger Beer :)//

தெரியலீங்ளே ஐயா!

அத்திவெட்டி ஜோதிபாரதி

RAMYA said...
//
எதையும் எளிதாக்கித் தரும் தன்மை, வசதிகளை உருவாக்கிக் கொண்டெ இருப்பது, மாற்றங்களை புகுத்தி எளிமைப்படுத்தி மக்களைப் பழக்குவது, அறிவார்ந்த மக்களை உருவாக்க அன்றாடம் அயராது உழைப்பது போன்றவகள் இந்நாட்டின் வெற்றியின் இரகசியம்.
//

இந்த வரிகளில் யதார்த்தம் தெரிந்தது சகோதரா!

எல்லாருக்கும் புரியும்படி சிம்பிளா சொல்லி இருக்கீங்க சேவை தொடருக.

தாய்நாட்டில் இருந்து சென்று அயராது உழைக்கும் நம் உடன் பிறப்புகள் நினைவில் வருகிறார்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!
கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Jothig

வாழ்ந்தவன் என்ற முறையில் வழி மொழிகின்றேன். உங்கள் கருத்து அக்மார்க் உண்மை, பெரியவர் லீ குவான் யூ ஐயா நலமாக இருக்கிறாரா? http://texlords.wordpress.com

அத்திவெட்டி ஜோதிபாரதி

// Jothig said...
வாழ்ந்தவன் என்ற முறையில் வழி மொழிகின்றேன். உங்கள் கருத்து அக்மார்க் உண்மை, பெரியவர் லீ குவான் யூ ஐயா நலமாக இருக்கிறாரா? http://texlords.wordpress.com//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்!
பெரியவர் லீ குவான் யூ ஐயா நலமாக இருக்கிறார்.

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP