"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு அறிவிப்பு !

முறைப்படியான பதிவர் சந்திப்பு நடந்து திங்கள் கடந்துவிட்டது, புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள், வீட்டில் செய்த பலகராங்கள் தின்று நாளாகிவிட்டது என்கிற காரணங்களினால் வருகிற காரிக்(சனிக்)கிழமை சிங்கைப் பதிவர்களின் சந்திப்பு நடத்த பல மனதுகள் ஒன்றாக தீர்மானித்து, நாள், இடம் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 18/ஜூலை/20009

நேரம் : மாலை 4:30 முதல் 7:00 வரை

இடம் : ஜூராங் சென்டரல் பூங்கா

(பூன்லே தொடர் வண்டி நிலையம் - BoonLay MRT Station அருகில்,

Facilities Available : Fitness corner/ stations & Fitness equipments/ exercise station, Grand lawn, Jogging Path/ Running track, Playground, Restroom / Toilets with or without shower facilities, Event Lawn

வரைபடம் தரவிரக்க இணைப்பு : JCP)

நிகழ்ச்சி நிரல்கள் :

* முன்கூட்டி வரும் வருகையாளர்கள் பூங்காவை சுற்றிப் பார்ப்பது

* புதிய பதிவர்களும், அவர்களின் பதிவுகளும் ஒரு சின்ன அறிமுகம்

* சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி குறித்த செயல் திட்டங்கள் பற்றிய விளக்கம்

* சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் இடைவேளை

* சென்ற வாரப் பதிவர் உலகம் - யூசுப் பால்ராஜ் ஐயாங்கார் விவரிக்கிறார்

* சந்திப்புகளை தொடர்ந்து புறக்கணிக்கும் சிங்கை செந்தில் நாதனுக்கு கண்டனத் தீர்மானம்

* அப்பாவி முருவின் அரசியல்/சமூகப் பார்வைகள்

* அமீரகத்தில் இருந்து சிங்கை திரும்பிய அண்ணன் வடுவூர் குமாரின் அனுபவங்கள்

* 7.00 மணிக்கு விடைபெறுதல்

* மீதம் இருப்பவர்களுடன் அருகில் இருக்கும் தேனீர் கடையில் மொக்கை

நிகழ்ச்சித் தலைமை : பதிவர், தமிழ்வெளி திரட்டித் தொடர்பாளர் குழலி மற்றும் பதிவர், தமிழாளர்வளர் முகவை இராம்

நிகழ்ச்சி புகைப்படங்கள் : ஆமத்தூர் ஜெகதீசன் மற்றும் இராம்/Raam

நிகழ்ச்சி தொடக்கம் மற்றும் முடிவுரை : யூசுப் பால் ராஜ் ஐயங்கார்

சந்திப்பு அன்று வழித்தடங்கள் பற்றிய விவரங்களுக்கும், என்ன வகையான சிற்றுண்டி வருகிறது என்று தெரிந்து கொள்ளவும், அழைக்க...

அ.பாஸ்கர் - 9457 6466
அறிவிழி (ராஜேஷ் அண்ணா) - 9856 0742

அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்கப்படுகிறார்கள்

சிங்கைப் பதிவர்கள் குழும சார்பாக
கோவி.கண்ணன்

22 பின்னூட்டங்கள்:

அப்பாவி முரு

//அப்பாவி முருவின் அரசியல்/சமூகப் பார்வைகள்//

எவ்வ்ளோ நேரம் பேசணும்?

கோவி.கண்ணன்

//அப்பாவி முரு said...
//அப்பாவி முருவின் அரசியல்/சமூகப் பார்வைகள்//

எவ்வ்ளோ நேரம் பேசணும்?
//

நிறுத்தச் சொல்லு.....ன்னு குரல் வரும் வரை பேசலாம் :)

iniyavan

தலைவரே,

முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. இப்போதான் என் விசா முடிஞ்சது.

சிங்கை பதிவர் சந்திப்புன்னா, மலேசியாலேர்ந்து நான் வந்து கலந்துக்கக் கூடாதா என்ன?

அடுத்த முறை கொஞ்சம் முன்னாடியே சொல்லவும்.

priyamudanprabu

///
//

நிறுத்தச் சொல்லு.....ன்னு குரல் வரும் வரை பேசலாம் :)
////

ஹ ஹா ஹா

கோவி.கண்ணன்

//'இனியவன்' என். உலகநாதன்
தலைவரே,

முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. இப்போதான் என் விசா முடிஞ்சது.

சிங்கை பதிவர் சந்திப்புன்னா, மலேசியாலேர்ந்து நான் வந்து கலந்துக்கக் கூடாதா என்ன?

அடுத்த முறை கொஞ்சம் முன்னாடியே சொல்லவும்.
//

நீங்கள் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறோம்,

பதிவர் சந்திப்பு அறிவிப்புகள் மூன்று நாட்களுக்கு முன்பு வெளி இடுவது வழக்கமாக இருக்கிறது. ஒருவாரம் முன்பென்றால் மறந்துவிடுவார்கள், அந்த வாரத்தில் வெளி இட்டால் அந்த வாரம் நிகழ்ச்சி இருக்கிறது என்று நினைவு வைத்துக் கொள்வது எளிது.

நிகழ்காலத்தில்...

\\வீட்டில் செய்த பலகராங்கள் தின்று நாளாகிவிட்டது என்கிற காரணங்களினால் வருகிற \\

’தின்று’ என்பதை ’தீர்ந்து’ என அவசரமாக படித்துவிட்டு, பலகாரம் தீர வேண்டியே பதிவர் சந்திப்பு என நினத்து சிரித்துவிட்டேன்.:)))

பதிவர்சந்திப்பு அனைவருக்கும் உபயோகமாக இருக்க வாழ்த்துக்கள்

குப்பன்.யாஹூ

all the best

கோவி.கண்ணன்

//நிகழ்காலத்தில்... said...
\\வீட்டில் செய்த பலகராங்கள் தின்று நாளாகிவிட்டது என்கிற காரணங்களினால் வருகிற \\

’தின்று’ என்பதை ’தீர்ந்து’ என அவசரமாக படித்துவிட்டு, பலகாரம் தீர வேண்டியே பதிவர் சந்திப்பு என நினத்து சிரித்துவிட்டேன்.:)))

பதிவர்சந்திப்பு அனைவருக்கும் உபயோகமாக இருக்க வாழ்த்துக்கள்
//

நன்றி சிவா !

கோவி.கண்ணன்

//குப்பன்_யாஹூ said...
all the best

July 14, 2009 8:02 PM
//

நன்றி !

பிரபாகர்

கண்ணன்,

பதிவுகளை நானும் எழுதி வருகிறேன், கலந்து கொள்ளலாமா? வழிமுறைகளை சொல்லுங்களேன்...

பிரபாகர்.

கோவி.கண்ணன்

//Prabhagar said...
கண்ணன்,

பதிவுகளை நானும் எழுதி வருகிறேன், கலந்து கொள்ளலாமா? வழிமுறைகளை சொல்லுங்களேன்...

பிரபாகர்.
//

பிரபாகர், அனைவருக்குமான அழைப்பு இது, தாங்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்

சென்ஷி

//கோவி.கண்ணன்

//அப்பாவி முரு said...
//அப்பாவி முருவின் அரசியல்/சமூகப் பார்வைகள்//

எவ்வ்ளோ நேரம் பேசணும்?
//

நிறுத்தச் சொல்லு.....ன்னு குரல் வரும் வரை பேசலாம் :)
//

கலக்கல் பதில் :)))

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் !!

அறிவிலி

//Prabhagar
கண்ணன்,

பதிவுகளை நானும் எழுதி வருகிறேன், கலந்து கொள்ளலாமா? வழிமுறைகளை சொல்லுங்களேன்...

பிரபாகர்.//

உங்கள் பதிவை பார்த்தேன், நானே அழைகக வேண்டுமென நினைத்திருந்தேன். அவசியம் கலந்துகொள்ளுங்கள்.

குசும்பன்

இத்தனை முறை கூடிய நீங்க உருப்படியா, குசும்பனை சிங்கபூர் கூப்பிட்டு பாராட்டுவிழா நடத்தனும் என்று என்னைக்காச்சும் தீர்மான நிறைவேற்றினீங்களா??? ம்ம்ம் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல!!!

Starjan (ஸ்டார்ஜன்)

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் !!

வெற்றி-[க்]-கதிரவன்

"கோவியானந்தாவின் குறும்புகள்" என்ற தலைப்பில் பேச எனக்கு அனுமதி வழங்கவேண்டும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி

கோவியாரே,
சனிக்கிழமைதானே...!
சந்திச்சுடுவோம்...!

படம் நிகழ்ச்சி நிரல் எல்லாம் அருமை...!

ரொம்ப நாளாச்சு அந்த பக்கம் வந்து
அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி...!

சி தயாளன்

Pls send me an Airbus, I will come and join too. :-)))

வடுவூர் குமார்

இப்போது தான் பார்க்கிறேன்.வெளியில் போகும் வேலை இருப்பதால் முடிந்தால் வருகிறேன்.

Citiinc

என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
  நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
  மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
  வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
  தொடர்பு: zechkovivan@mail.ru
  அல்லது greskychanosky@post.cz
  வந்து ஒரு வரும் அனைத்து

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP