அறிமுகம் ! சிங்கப்பூர் தமிழ் பதிவர்கள் குழு !
தமிழால் இணைந்தோம் - மொழி தரும் பயனை உணராத இனங்களே இல்லை. ஒரு மனிதனின் எந்த ஒரு அடையாளமும் தொலைந்து போனாலும், அவன் தனது அடையாளம் கான அவனுடன் இருப்பது அவன் பேசும் மொழி அவனை மீட்டுவிடும். தமிழகத்தில் அல்லது வெறெங்கு பிறந்திருந்தாலும் நம் அடையாளம் தாய் மொழி. எந்த ஒரு உறவும் இல்லாமல், எந்த வயதினராக பால் வேறுபாடின்றி நம்மால் ஒருங்கிணைய தாய்மொழி பாலம் அமைக்கிறது.
தமிழகம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு பகுதியில் பிறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என இன்றைய தேதியில் சாதி வேறுபாடு துறந்து இணைய முடிகிறதென்றால் தாய் மொழி இணைய வழி பெற்றும் தரும் பெரும் நன்மைகளில் அதுவும் ஒன்று. வலைப்பதிவாளராக இருக்கும் ஒருவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார் என்று நினைக்க முடிகிறது. தனியெருவராக துணை ஏதுமின்றி எந்த நாட்டிலாவது தனித்து இருந்தால் இணையவழி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தனிமையை போக்கிக் கொள்ள முடிகிறது.
வலையில் எழுதுவது பொழுது போக்கு, சுய அரிப்பு என்பதைத் தாண்டிய பயன் என்றால் நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஒருவருக்கு கொருவர் முடிந்த எல்லைக்குள் இருந்து உதவிக் கொள்ள முடிகிறது. இவை தமிழால் கிடைத்த பலனின்றி வேரென்ன சொல்ல முடியும். தமிழருக்குள்ளே இருக்கும் மாபெரும் பிளவு சாதி, அதனைப் பொருட்படுத்தாது இணைகிறோம், அடுத்த பிளவு மதம் அதனை துரும்பைப் போல் எண்ணி தொலைவில் வைத்துவிட்டு இணைகிறோம்.
நட்புக்கும் பதிவில் எழுதுவதற்கும் தொடர்பில்லை என்பதை பதிவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டவர்களுடன் பழகுகிறோம் என்பதற்காக தனது எண்ணங்களை சுறுக்கிக் கொண்டு எழுத்தில் தடைகற்களை எவரும் விதைத்துக் கொள்வதில்லை. ஒருவரின் நட்பு வேறு, தனிமனித தாக்குதல் இல்லாவிட்டால் ஒருவரின் எழுத்தும் எண்ணமும் பிறருடன் ஒப்பிடும் போது வேறு, இதைப் பெருவாரியான பதிவர்கள் புரிந்து கொண்டுள்ளதால் மாறுபட்ட எண்ணங்கள் கொண்டோருடன் நெருக்கமாக பழகுகிறார்கள்.
இந்த எண்ணங்களின் அடிப்படையில் சிங்கையில் வசிக்கும், சிங்கைக்கு புலம் பெயர்ந்தும், சிங்கையில் தற்காலிகமாக வேலை செய்தும், சிங்கை நிலை குடியாளர்களுமான பதிவர்கள் ஒண்றினைந்துள்ளோம். எங்களது முயற்சியாக மணற்கேணி - 2009 ஒரு தொடக்கம்........எங்களது நட்பும்......இலக்கிய பயணமும் தொடரும். சிங்கைப் பற்றிய பதிவர்கள் அறிந்து வரும் செய்திகள், தகவல்கள், சிங்கைத் தொடர்புடைய நிகழ்வுகளில் பதிவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் இந்த வலைப்பூக்களின் மூலம் வரும்.
எங்களது இணையப்பக்கம் சிங்கை தமிழ் வலைப்பதிவர்கள் குழு
நன்றி
சிங்கப்பூர் தமிழ் பதிவர்கள் குழுவுக்காக
ஜெகதீசன்
21 பின்னூட்டங்கள்:
வாழ்த்துகள் !
நல்ல முயற்சி!
ஆக்கங்களைப் பெற்று ஊக்கப் படுத்துவோம்!
சோதனை
சிங்கைப் பதிவர்களுக்கான வலைவீடு வந்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி.
//சோதனை//
ஏன் சோதனை? எதுக்கு சோதனை யாருக்கு சோதனை?
கும்மி தொடக்கம் ;-)
சேகு வின் முயற்சி
வெற்றி பெற்றால் சிங்கைப் பயணம்
சேகு வேறா நாம் வேறா
தொடர்ந்து ஒரு தமிழனின் குரல்கள் ஒலிக்கட்டும்!
எனது ஓட்டு தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டது!
உலக வரலாற்றில் முதன் முறையாக.....!
இயக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விருப்பமிருப்பின் நாண்சிங்கை பதிவர்களும் இணைந்து கொள்ளலாமா ??
//அ.மு.செய்யது
இயக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விருப்பமிருப்பின் நாண்சிங்கை பதிவர்களும் இணைந்து கொள்ளலாமா ??
//
நீங்கள் சிங்கையில் இருப்பவரெனில் நிச்சயமாக கலந்துகொள்ளலாம், உங்களை ஜிடாக்கில் தொடர்பு கொண்டுள்ளேன்... சிங்கையில் இருக்கும் பதிவர் யாரும் கலந்து கொண்டு உதவலாம்.
நன்றி
இன்றும் போல் என்றும் இணைந்து செயல்பட உறுதி எடுப்போம்.
முதல் பதிவை மிகச்சிறப்பாக வெளியிட்ட ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.
இணைய வரலாற்றில் முதல்முறையாக பதிவர்கள் குழுமத்திற்கென ஒரு தனி வலைப் பூ. சிங்கைப் பதிவர்களில் நானும் ஒருவன் என்பதே எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.
வாழ்த்துகள்!!
:-)
//ஜோசப் பால்ராஜ்
இன்றும் போல் என்றும் இணைந்து செயல்பட உறுதி எடுப்போம்.
முதல் பதிவை மிகச்சிறப்பாக வெளியிட்ட ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.
இணைய வரலாற்றில் முதல்முறையாக பதிவர்கள் குழுமத்திற்கென ஒரு தனி வலைப் பூ. சிங்கைப் பதிவர்களில் நானும் ஒருவன் என்பதே எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.//
வழிமொழிகிறேன் :-)
வாழ்த்துகள்
நல்லதொரு முயறசி.
வாழ்த்துக்கள்
தங்கள் முயற்சி வெல்க
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
தொட்டனைத்தூறும் மணற்கேணி!
இனிய வாழ்த்து(க்)கள்.
அப்பப்போ 'விஸிட்டிங்' பதிவரா நானும் வரட்டா? :-))))
மிக நல்ல முயற்சி... நன்றி ஜெகதீசன் !!
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
Post a Comment