"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

பதிவர்கள் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களின் ஒரு நிமிட நேரம் தந்து உதவுங்கள்

பொதுவாக பதிவர்கள், வாசகர்கள் என நாம் அனைவருமே நம் கல்லூரி மற்றும் தொழில் சார்ந்த மின்னஞ்சல் குழுமங்களில்(E-Groups) இருப்போம்...

பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப துறை சார்ந்த கட்டுரைகள் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவே உள்ளன, தொழில்நுட்பம் சார்ந்த குறைந்த பட்ச தகவல்களுடன் கூடிய அறிமுக கட்டுரைகள் கூட மிக குறைவாகவே உள்ளன.

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி (http://www.tamilveli.com/) இணைய தளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு(கட்டுரை) போட்டி மணற்கேணி 2009 என்பது நீங்கள் முன்பே அறிந்திருக்கலாம்...

தமிழில் துறை சார்ந்த எழுத்துகள்(Technical) குறைவாகவே உள்ளன, அதை நீக்கும் பொறுட்டு "தமிழ் அறிவியல்" பிரிவில் ஒரு தலைப்பு "தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்) "...இவை எந்த பிரிவை சார்ந்த தாக வேண்டுமானாலும் இருக்கலாம், கட்டுமான (civil construction) வேலைகளில் இருப்பவர்கள் இது தொடர்பான ஒரு கட்டுரையையோ, Robotics, software, Mechanical, Aerodynamics, space research என எதைப்பற்றி வேண்டுமானாலும் முடிந்த அளவில் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதலாம்...

தரமான பல கட்டுரைகள் இந்த தலைப்பில் வந்தால் நம் தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல பங்களிப்பாக இருக்கும்.

எனவே பதிவர்கள், வாசகர்கள் இந்த பதிவையோ அல்லது கீழ் கண்ட பத்தியையோ உங்களின் கல்லூரி மற்றும் தொழில் சார்ந்த குழும அஞ்சலில் இட்டு இந்த போட்டியை பலருக்கும் தெரிவித்து உதவுங்கள்

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி (http://www.tamilveli.com) இணைய தளம் இணைந்து நடத்தும் மாபெரும் கருத்தாய்வு(கட்டுரை) போட்டி மணற்கேணி 2009, "அரசியல் சமூகம்", "தமிழ் இலக்கியம்", "தமிழ் அறிவியல்" என்ற மூன்று பிரிவுகளில் பல தலைப்புகளில் இந்த போட்டி நடைபெறுகிறது,

இந்த போட்டியில் பிரிவுக்கு ஒன்றாக மூவருக்கு சென்னை 2 சிங்கப்பூர் சென்று ஒருவாரம் தங்கி சுற்றிபார்க்க பரிசு அளிக்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற பல கட்டுரைகள் தமிழின் பிரபலமான இதழ்களில் வெளி வர உள்ளது... யார் வேண்டுமானாலும் போட்டியில் பங்கெடுக்கலாம்...

தமிழில் துறை சார்ந்த எழுத்துகள்(Technical) குறைவாகவே உள்ளன, அதை நீக்கும் பொறுட்டு "தமிழ் அறிவியல்" பிரிவில் ஒரு தலைப்பு "தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்) "...இவை எந்த பிரிவை சார்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம், கட்டுமான (civil construction) வேலைகளில் இருப்பவர்கள் இது தொடர்பான ஒரு கட்டுரையையோ, Robotics, software, Automobile, Mechanical, Aerodynamics, space research, Microprocessor என எதைப்பற்றி வேண்டுமானாலும் முடிந்த அளவில் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதலாம்...

வேளாண்மை, தமிழ் மருத்துவம் என எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்...

அரசியல் சமூகம் சார்பான பல கட்டுரைகள் சுற்று சூழல் பற்றி என எழுதலாம்




தரமான பல கட்டுரைகள் இந்த தலைப்பில் வந்தால் நம் தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல பங்களிப்பாக இருக்கும். போட்டி முடிவு நாளுக்கும் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் நேரம் உள்ளது.(போட்டி முடிவு தேதி ஆகஸ்ட் 30, 2009)

போட்டி தொடர்பான மேலதிக விவரங்கள்
http://www.sgtamilbloggers.com மற்றும் http://www.tamilveli.com மற்றும் போன்ற தளங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

10 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali

வணக்கம், இந்த வலைப்பதிவும் நம்ம வட்டாரம் தான்

http://singaimurasu.blogspot.com/

தங்க முகுந்தன்

வணக்கம். பார்த்தேன் - போட்டியில் பங்குபற்றுறுமளவிற்கு நாம் இல்லை - எம் எண்ணங்கள் எல்லாமே தவித்துக் கொண்டிருக்கும் எமது மக்கள் மீது! மன்னிக்கவும்.

ஆ.ஞானசேகரன்

//தங்க முகுந்தன்

வணக்கம். பார்த்தேன் - போட்டியில் பங்குபற்றுறுமளவிற்கு நாம் இல்லை - எம் எண்ணங்கள் எல்லாமே தவித்துக் கொண்டிருக்கும் எமது மக்கள் மீது! மன்னிக்கவும்.//

வணக்கம் நண்பா
உங்களின் வலி எங்களுக்கு புரிகின்றது.. என்ன செய்வது என்றுதான் தெரியாமல் விழிக்கின்றோம்.... விடிவு வரும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கின்றது

ஆ.ஞானசேகரன்

குழலி அவர்களுக்கு, கட்டுரைகளை அஞ்சல் வழி கொடுக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் விலாசம் கொடுங்கள்..

அத்திவெட்டி ஜோதிபாரதி

அனைவரும் தங்களது ஆக்கங்களை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க விழைகிறோம்.

பதிவுக்கு நன்றி குழலி...

Radhakrishnan

நிச்சயம் கலந்து கொண்டு சிறப்பித்து விடலாம். மிக்க நன்றி.

Chittoor Murugesan

Sir ,
as an astrologer and consultant I had 1000s of mail ids at my mail box. I had given them in my blog in English. please do the needful to inform about this competition to them through emails

My blog url:
www.sowmyasamaram.blogspot.com

தேவன் மாயம்

போட்டிக்கு அனுப்பும் தேதி ஆகஸ்ட் 15 லிருந்து ஆகஸ்ட் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதுபோல் தெரிகிறதே!!!

கையேடு

திரு. குழலி மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு,

போட்டிக்கு படைப்புகளை அனுப்பும் தேதி ஆகஸ்ட் 30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறதா..

Unknown

ஏன் அறிவியல் பகுதியில் கணிதம்,இயற்பியல் கட்டுரைகள் அனுமதிக்கப்படவில்லை?மேலும் ஏன் ஒரு பிரிவில் ஒரு கட்டுரை தான் அனுப்ப வேண்டுமா?

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP