கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!....
கல்லு ஒன்று! மாங்காய் ரெண்டு!....
பள்ளிகூடம் போகும்பொழுது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் உள்ள மாங்காய் மரத்தில் யாரும் பார்க்காவண்ணம் கல்லெறிந்து எடுத்த மாங்காயை பக்குவமாய் கொண்டு வந்த உப்புடன் தொட்டு சாப்பிட்ட ஞாபகம் இல்லாமலா போகும்.
டேய்.. சன்னல் கண்ணாடி இருக்கு பார்த்து கல்லெறிடா என்று சொன்னதும் சரியாக சன்னல் கண்ணாடியை பதம்பார்த்தான் ஒருத்தன். வீட்டுகாரன் விரட்டிவர ஓடி மறைவோம் ஒரு நொடியில்.... அத்தனையும் பால்ய ஞாபகம்.
கல்லெறிந்தது என்னவோ மாங்காவிற்காக ஆனால் உடைந்ததோ கண்ணாடி...
ஆனால் இது அப்படி இல்லை, இன்று உங்களுக்கு கொடுக்கப்படும் கல் மணற்கேணி 2009 (சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி ) .
நீங்கள் எறிய வேண்டியது கருத்தாய்வு மிக்க கட்டுரைகள், கொடுக்கப்பட்ட தலைப்புகளில் நீங்கள் எங்களிடம் எறியவேண்டியது மட்டுமே. மேலும் தொடர்புக்கு அனுகலாம் இங்கே .......
மாங்காய் ஒன்று:
உலகப்படத்தில் பார்த்தால் தெரியும், உலக நடுக்கோட்டில் கச்சிதமாய் அமையப்பெற்ற அற்புதமான சின்ன நாடு சிங்கபூர்.உலகநடுகோட்டின் மத்தியில் இருப்பதால் இயற்கை சீற்றங்களால் எந்த பாதிப்பு இல்லாத அதிசயமான நாடு. சமீபத்தில் வந்த சுனாமி தாக்குதலில் சிறிதும் பாதிக்காத நாடு சிங்கபூர் மட்டுமே என்றால் ஆச்சரியம்தான்.
அதேபோல் 24 மணி நேரமும் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைக்கின்ற ஒரே நாடு சிங்கபூர் என்று சொன்னால் மிகையாகாது. நான் பார்த்த 11 வருடங்களில் ஒரு துளி நேரம் கூட மின் தடை வந்ததே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சுற்றியுள்ள நாடுகளில் பெட்ரோலியம் கிடைத்தாலும் சிங்கபூரில் கிடைக்காதது ஒரு குறைதான். இருப்பினும் இங்கு மின்சாரம் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் 90% எடுக்கப்படுகின்றது. சிங்கபூரில் இயற்கை நதிகள் இல்லை என்றாலும் பக்கத்து நாடுகளில் தண்ணீர் வாங்கியும் மற்றும் கழிவுநீரை குடிநீராக மாற்றும் பிளாண்ட்கள் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்கின்றார்கள்...
சிங்கபூர் சுற்றுலா தளமாக இருக்கும் ஒரு நாடு ஆகவே இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராலம். இந்த கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2009 போட்டியில் வெற்றியடைவதன் மூலம் நிங்கள் அந்த வாய்ப்பை பெறுவீர்கள்....
மாங்காய் இரண்டு:
ஏதோ பொழுதுபோகாமல் இணையத்தில் வெட்டியாக எழுதுபவன் என்ற பார்வைகளிலிருந்து, ஒரு மாற்றம் கொண்டுவரும் வாய்ப்புதான் இந்த மணற்கேணி 2009. இது ஒரு முதல் படி இதன் வெற்றிக்கு பின் பதிவர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் மாங்காய் இரண்டு. வலைப்பதிவு எழுத்தாளர்களால் இப்படிப் பட்ட மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்பதை அலசிய இடுக்கையின் சுட்டி வென்றிடுவீர் எட்டு திக்கும்!....
உங்கள் எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமே? ஆகையால் இந்த அறிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம். இதை நீங்களும் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில்
சிங்கைப் பதிவர்கள் குழுவிற்காக
ஆ.ஞானசேகரன்
சிங்கபூர் பற்றிய காணோளி
18 பின்னூட்டங்கள்:
நானே முதல்!
பதிவு நன்று!
பகிர்வு நன்று!
நல்லா எழுதியிருக்கீங்க.
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பதிவு நன்று!
பகிர்வு நன்று!//
நன்றிங்க ஜோதிபாரதி
// ஜெகதீசன் said...
:))//
வணக்கம் ஜெகதீஸ்சன்
//ஜோசப் பால்ராஜ் said...
நல்லா எழுதியிருக்கீங்க.//
நன்றிங்க அப்படியே நீங்களும் ஒரு இடுகையை போடுங்க
அருமை சகோதரா.. உங்கள் எழுத்துநடை, வார்த்தைக் கோர்வைக்கு கொடுங்கள் கையை.. :)
///LOSHAN
அருமை சகோதரா.. உங்கள் எழுத்துநடை, வார்த்தைக் கோர்வைக்கு கொடுங்கள் கையை.. :)///
மிக்க நன்றி நண்பா
கட்டுரை எழுதி கொடுங்கள் நண்பா!
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
ஒரு பதிவில் நிறைய விடயங்கள்.
தகவல்களுக்கு நன்றி
//வலசு - வேலணை said...
ஒரு பதிவில் நிறைய விடயங்கள்.
தகவல்களுக்கு நன்றி//
மிக்க நன்றி நண்பா
ம்ம்ம்.....நன்றாக இருக்கிறது..!
//கதியால் said...
ம்ம்ம்.....நன்றாக இருக்கிறது..!//
நன்றி நண்பா
நல்ல பகிர்வு
// முனைவர் சே.கல்பனா said...
நல்ல பகிர்வு//
உங்களிடமிருந்து நல்ல கட்டுரைகளை எதிர்ப்பார்கின்றோம்... உங்கள் கல்லூரி மாணவர்களிடம் சொல்லுங்கள் அம்மா... மிக்க நன்றி
அசத்துங்க.
// சி. கருணாகரசு said...
அசத்துங்க.//
மிக்க நன்றி நண்பா
11 வருடமாக இருக்கிறீர்களா!!!
//கிரி said...
11 வருடமாக இருக்கிறீர்களா!!!//
ஆமாங்க கிரி.. செப்டம்பர். 1997 ல் சிங்கபூர் வந்தேன்
Post a Comment